Thursday, June 18, 2020

அகத்தியரின் சீடர்கள்

அதங்கோட்டு ஆசான்
துராலிங்கன்
செம்பூண்சேய்
வையாபிகன்
வாய்ப்பிகன்
பனம்பாரன்
கழாரம்பமன்
அநவிநயன்
பெரிய காக்கைபாடினி
நத்தத்தன்
சிகண்டி
தொல்காப்பியன்
ஆகிய 12 பேரும் அகத்தியரின் சீடர்கள் ஆவர் இவர்கள் 12 பேரும் சேர்ந்து "பன்னிரு படலம்" என்னும் நூலை எழுதினார்கள் இந்த செய்தியை புறப்பொருள் வெண்பாமாலை குறிப்பிடுகிறது.
அகத்தியர் சித்த வைத்தியத்திற்கு செய்த பணி சிறப்பானது. பல நோய்களுக்கும் மருத்துவ சந்தேகங்களுக்கும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளார். அகத்தியர் பெயரில் வெளியாகியுள்ள சமரச நிலை ஞானம் என்னும் நூலில் உடம்பில் உள்ள முக்கியமான நரம்பு முடிச்சுகள் பற்றிய விளக்கம் காணப்படுகிறது. அகத்தியர் ஐந்து சாஸ்திரங்கள் என்னும் நூலில், பதினெட்டு வகையான மனநோய் பற்றியும் அதற்குரிய மருத்துவம் பற்றியும் விளக்கப்பட்டிருக்கின்றன. அகத்தியர் அஷ்ட மாசத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் தோஷங்கள் பற்றியும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

பகத்சிங்

பிரிட்டிசாருக்கு எதிரான கடைசிகட்ட சுதந்திரபோரில் ஜாலியன் வாலாபாக் சம்பவம் கொடுமையானது, அங்கிருந்து எத்தனையோ தேசாபிமானிகள் போராட கிளம்பினார்க...