Friday, March 8, 2013
Thursday, March 7, 2013
ஈசனின் ஐந்து முகங்கள்
ஆன்மஜோதி, அருட்ஜோதி, சிவஜோதி என்ற
இம்மூன்றும் ஒன்று சேர்ந்ததே சிவலிங்கம்.
லிங்கத்தின் அடிவட்டம் ஆன்மஜோதி,
சிவலிங்கத்தைச் சூழ்ந்துள்ள ஆவுடையார் அருட்ஜோதி,
மேல்நோக்கி இருக்கும் சிவலிங்கம் சிவஜோதி.
இந்த மூன்றும் சேர்ந்துதான், சிவலிங்கமாய் காட்சி அளிக்கிறது.

சிவனுக்கும்
பொதுவாக ஐந்து முகங்கள். அவை ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம்,
சத்யோஜாதம் ஆகும். இவையன்றி அதோமுகம் என்னும் கீழ்நோக்கிய முகமும் உண்டு.
மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள திருவழுவூரில் அருள்புரிகிறார், வீரட்டேஸ்வரர்.
ஈசனின் ஐந்து முகங்களும் இத்தலத்தில் ஐந்து தீர்த்தங்களாக அமைந்துள்ளன. மேற்கில் சத்யோஜாதம், வடக்கில் வாமதேவம், கிழக்கில் தத்புருஷம், தெற்கில் அகோரம், கோயிலின் நடுவில் பெருமானுக்கும் நந்திதேவருக்கும் இடையே ஈசானம் என்னும் சிவபாதாள கங்கை. இவை பிரம்ம தேவரால் உண்டாக்கப்பட்டவை என்பதால், பஞ்ச பிரம்ம மகா புண்ணிய தீர்த்தங்கள் என அழைக்கப்படுகின்றன.

சிவலிங்கம்
Egapatha Murthy ஏகபாத மூர்த்தி
உலகின் முதல்வர் முதன்மையானவராவர். இவர் அனைத்துக் காலங்களிலும்,
எல்லாவுலகமும் தன் திருவடியின் கீழ் இருப்பதால் இவரை நாம் ஏகபாத மூர்த்தி
என்கிறோம்.இவர் எத்தனை ஊழிக்காலங்கள் வந்தாலும் அனைத்தும் இவரிடமே
ஆரம்பிக்கின்றன, இவரிடமே முடிகின்றன.
ஏகபாத மூர்த்திக்கு
செந்தாமரை அர்ச்சனையுடன், நைவேத்தியமாக சர்க்கரைப் பொங்கல் திங்கள்தோறும்
கொடுத்து, நெய்தீபம் ஏற்றினால் திருமணம் விரைவில் கூடிவரும், குழந்தை
பாக்கியம் கிடைக்கும், தடையில்லா செயல் நடைபெறும். மும்மலம் அழியும்.
இவரைத் தரிசிக்க நாம் செல்ல வேண்டியத்தலம் தப்பளாம் புலியூர் ஆகும். — at Adipureesar Temple, Tiruvotriyur, Chennai .
உலகின் முதல்வர் முதன்மையானவராவர். இவர் அனைத்துக் காலங்களிலும், எல்லாவுலகமும் தன் திருவடியின் கீழ் இருப்பதால் இவரை நாம் ஏகபாத மூர்த்தி என்கிறோம்.இவர் எத்தனை ஊழிக்காலங்கள் வந்தாலும் அனைத்தும் இவரிடமே ஆரம்பிக்கின்றன, இவரிடமே முடிகின்றன.
ஏகபாத மூர்த்திக்கு செந்தாமரை அர்ச்சனையுடன், நைவேத்தியமாக சர்க்கரைப் பொங்கல் திங்கள்தோறும் கொடுத்து, நெய்தீபம் ஏற்றினால் திருமணம் விரைவில் கூடிவரும், குழந்தை பாக்கியம் கிடைக்கும், தடையில்லா செயல் நடைபெறும். மும்மலம் அழியும்.
இவரைத் தரிசிக்க நாம் செல்ல வேண்டியத்தலம் தப்பளாம் புலியூர் ஆகும். — at Adipureesar Temple, Tiruvotriyur, Chennai .
ஆப்கானிஸ்தானை ஆண்ட ஆதித் தமிழர்கள்
![]() |
| அசோக சக்கரவர்த்தியின் கண்டஹார் கல்வெட்டு (கி.மு. 250 ) |
ஆப்கானிஸ்தானில், கி.மு. 250 ல் செதுக்கப்பட்ட அசோகரின்
கல்வெட்டு. இந்தக் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்ட இடம் : கண்டஹார்! ஆமாம்,
ஆப்கானிஸ்தானில் உள்ள கண்டஹார் நகரம் தான். இறுதியாக, கம்யூனிஸ்டுகள்
ஆப்கானிஸ்தானை ஆண்ட காலம் வரையில், இந்தக் கல்வெட்டு காபுல்
அருங்காட்சியகத்தில் வைக்கப் பட்டிருந்தது. இஸ்லாமிய கடும்போக்காளர்களின்
ஆட்சி ஏற்பட்ட குழப்பகரமான காலப்பகுதியில் காணாமல் போய்விட்டது.
ஆப்கானிஸ்தானில்
கண்டெடுக்கப்பட்ட அசோக சக்கரவர்த்தியின் கல்வெட்டுகளில், பிரஜைகளின்
நன்னடத்தையை குறிக்கும் அறிவுரைகள் எழுதப் பட்டுள்ளன. இதிலே நாம் கவனிக்க
வேண்டிய விடயம், கல்வெட்டில் பயன்படுத்தப் பட்டுள்ள தொடர்பாடல் மொழி. அசோக
சக்கரவர்த்தியின் ஆட்சின் கீழ் இருந்த இந்திய சாம்ராஜ்யத்தில், அந்தந்த
மாநில மக்களின் பிரதான மொழிகளில் கல்வெட்டுகள் எழுதப் பட்டன. ஆப்கானிஸ்தானில்
பல இடங்களில் கண்டெடுக்கப் பட்ட கல்வெட்டுகளில், கிரேக்கம், அராமி ஆகிய
இரண்டு மொழிகள் மட்டுமே பயன்படுத்தப் பட்டுள்ளன. கண்டஹார் நகருக்கு வடக்கே
இருந்த பகுதிகளில், கிரேக்க காலனிகள் உருவாகி, அது கிரேக்கர்களின் நாடாக
இருந்தது. அதனால் கிரேக்க மொழியில் எழுதப் பட்டது.
அப்படியானால்
அராமி மொழி? ஹீபுரு, அரபு மொழிகளுக்கு நெருக்கமான, இயேசு கிறிஸ்து
பேசிய அராமி மொழி, ஒரு காலத்தில் மேற்காசிய நாடுகளின் சர்வதேச மொழியாக
இருந்தது. பாலஸ்தீனம் முதல், பாகிஸ்தான் வரையில் அராமிய மொழி பேசத் தெரிந்த
மக்கள் வாழ்ந்தார்கள். அவர்கள் யார்? திராவிடர்களா? ஆப்கானிஸ்தானில்,
பஷ்டூன் மக்கள் வாழும் பிரதேசத்தை பற்றி, புராதன கால கிரேக்கர்களும்,
ஈரானியர்களும் எழுதி வைத்துள்ளனர்.
"அந்த
மக்கள் இடுப்பில் ஒரு துண்டு மட்டுமே ஆடையாக அணிந்திருந்தனர். மார்புப்
பகுதியை மூடுவதில்லை. காலில் செருப்பு அணிந்திருந்தார்கள். அவர்களது
வாள்கள் நீளமானவை என்பதால், வாளின் உறையில் தொங்கும் பட்டியை, தோளில்
மாட்டி இருப்பார்கள்..." என்று அந்த புராதன கிரேக்க, ஈரானிய வரலாற்றுக் குறிப்புகளில் எழுதப் பட்டுள்ளது (கி.மு. 450). (ஆதாரம்: Afghanistan, Een geschiedenis, Willem Vogelsang) ஆப்கானிஸ்தானின் ஆதிவாசிகள் பற்றிய குறிப்புகள், பண்டைய
தமிழர்களின், அல்லது திராவிடர்களின் தோற்றத்தை நினைவுபடுத்துகின்றது.
ஆப்கானிஸ்தானின் பூர்வகுடிகள், தமிழர்களின் முன்னோர்களாக இருந்திருக்கலாம்.
இங்கே
நாங்கள் கவனிக்க வேண்டிய இன்னொரு விடயம், தற்போது ஆப்கானிஸ்தானில் வாழும்
இனங்கள் பேசும் மொழிகள். இன்று ஆப்கானிஸ்தானில் யாரும், கிரேக்க அல்லது
அராமிய மொழி பேசுவதில்லை. (அராமி மொழி ஏறக்குறைய அழிந்து விட்டது.
இன்றைய சிரியாவில் மட்டும் சில ஆயிரம் பேர் பேசுகின்றனர்.) பெரும்பான்மை இன
மக்கள் பேசும் பஷ்டூன் மொழி, ஈரானின் பார்சி மொழிக்கும், இந்தியாவின்
இந்தி மொழிக்கும் இடைப்பட்டது. இந்தோ-ஈரானிய மொழிக் குடும்பத்தை சேர்ந்த
மொழி. பஷ்டூன் இன மூதாதையர்கள், வடக்கே இருந்து குடிபெயர்ந்து வந்தவர்கள்
என்பதை, அந்த மக்களே ஒத்துக் கொள்கின்றனர். அதாவது, அவர்களது சரித்திர
சான்றுகள் யாவும், கி.மு. இரண்டாம் நூற்றாண்டுக்கு பிந்தியவை தான்.
அப்படியானால், பஷ்டூன் மக்கள் ஆரியர்களா? ஆமாம்!
ஆப்கானிஸ்தான்
தேசிய விமான சேவையின் பெயர்: "ஆரியானா". அதன் அர்த்தம், "ஆரியர்கள்"
என்பது தான்! ரிக் வேதத்தில் "ஆர்ய வர்த்தம்" என்று அழைக்கப் பட்ட நாடு,
பண்டைய ஆப்கானிஸ்தான் தான். மகாபாரதத்தில் "காந்தர்வர்கள்" என்ற இன
மக்களின் குறிப்புகள் வருகின்றன. காந்தர்வர்கள் என்பது, காந்தார நாட்டை
சேர்ந்த மக்களை குறிக்கும். இன்றைய கண்டஹார் நகரின் பழைய பெயர், காந்தாரம்!
கண்டஹார் என்பது, அங்கு குடியேறிய ஆரியர்களால் ஆரியமயமாக்கப் பட்ட இடப் பெயர் ஆகும். இன்று பஷ்டூன் மக்கள் வாழும் பிரதேசத்தில், ஒரு காலத்தில் சக்திவாய்ந்த காந்தார தேசம் இருந்தது. காந்தர்வ மக்கள், இன்றைய பஷ்டூன் மக்கள் அல்ல. காந்தர்வ மக்கள், பௌத்த மதத்தையும், இந்து மதத்தையும் பின்பற்றினார்கள். இந்து மதம் என்றால், எந்த இந்து மதம்? ஆரியர்களின் இந்து மதமா? அல்லது திராவிடர்களின் இந்து மதமா? இரண்டும் ஒன்றல்ல. இரண்டுக்கும் இடையிலான வேறுபாடு, ஆப்கானிஸ்தானில் தான் தோன்றியது.

வாழ்ந்த திராவிட மக்களுடன், ஆரியர்களான பஷ்டூன் மக்களின் இனக்கலப்பு
நடந்துள்ளது. அது இரண்டு வகையில் நடந்திருக்கலாம். ஒன்று, கலப்பு மண
உறவுகளின் விளைவாக உருவான புதிய இனம். இரண்டாவது, தாய்மொழியை மறந்து
விட்டு, ஆக்கிரமிப்பாளர்களின் மொழியை ஏற்றுக் கொள்ளுதல். ஏதோ ஒரு வகையில்,
ஆரியர்களான பஷ்டூன் மக்களின் மொழி, அந்தப் பிரதேசத்தில் நிலைத்து விட்டது.
தமிழர்களின் தேசிய அரசியல் போன்று, பஷ்டூன் மக்களின் தேசியமும், மொழியை அடிப்படையாக கொண்டது, என்பது இங்கே குறிப்பிடத் தக்கது. ஒரு பஷ்டூ தனது மொழியை பேசத் தெரியாமல், வேறொரு அந்நிய மொழியை பேசினால், அவன் பஷ்டூன் இனத்தை சேர்ந்தவனாக கருதப் பட மாட்டான். 19 ம் நூற்றாண்டில் வாழ்ந்த, பஷ்டூன் இனத்தை சேர்ந்த ஷா மன்னர், பார்சி மொழியை தாய்மொழியாக கொண்டிருந்ததால், பெரியதொரு கலவரம் வெடித்தது. அதன் பிறகு தான், ஆப்கானிஸ்தான் தலைநகரம், கண்டஹாரில் இருந்து காபுலுக்கு இடம் மாறியது.

இன்னமும் திராவிட இனங்கள் இருக்கின்றனவா? ஆம்! "பிராஹுய்" (Brahui) என்ற,
திராவிட மொழிக் குடும்பத்தை சேர்ந்த, மொழி ஒன்றை பேசும் மக்கள் இன்னமும்
வாழ்கின்றனர். அவர்கள், ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் பல இடங்களில்
சிதறிப் போயுள்ளனர். மேலும், பலுச்சி மொழி பேசும் மக்கள், ஒரு காலத்தில்
பிராஹுய் மொழி பேசியிருக்கலாம். அதனை நிரூபிக்கும் வகையில், இரண்டு
இனங்களினதும் கலாச்சாரங்கள் ஒன்றாக உள்ளன. பலுச்சி ஒரு இந்தோ-ஈரானிய மொழி
என்பது மட்டுமே வித்தியாசம். "திராவிடர்களான" பலுச்சி, பிராஹுய் மக்கள்
இன்று இஸ்லாத்தை பின்பற்றுகின்றனர். ஆனால், இஸ்லாம் என்பது, 1500
ஆண்டுகளுக்கு முன்னர், அரேபியாவில் தோன்றிய புதிய மதம் என்பது குறிப்பிடத்
தக்கது.
இவர்களை விட, "பாஷை" என்றொரு வித்தியாசமான மொழி பேசும் மக்கள் வாழ்கின்றனர். பாஷை மக்கள் தம்மை பஷ்டூனியருடன் அடையாள படுத்திக் கொள்கின்றனர். ஆனால், தனித்துவமான கலாச்சாரத்தை கொண்டவர்கள். பாஷை இன மக்கள் மத்தியில், கருப்பு நிற மேனியை கொண்ட, அல்லது தென்னிந்தியர்கள் போல தோற்றமளிக்கும் பலரை காணலாம். (எல்லோரும் அப்படி அல்ல.)

வடக்கு
ஆப்கானிஸ்தானில், காபுல் நகருக்கு கிழக்கே, பாகிஸ்தான் எல்லையோரம்,
"நூரிஸ்தான்" மாகாணம் உள்ளது. அவர்கள் தனித்துவமான, "நூரிஸ்தானி" மொழி
பேசுகின்றனர். பார்சி, பஷ்டூன், உருது ஆகிய இந்தோ-ஈரானிய மொழிகளுடன்
சம்பந்தமில்லாத தனித்துவமான மொழி அது. ஆனால், அவர்கள் பார்ப்பதற்கு வெள்ளை
இனத்தவர் போன்று தோற்றமளிக்கின்றனர். அந்த மக்களுக்கு, நூரிஸ்தானி என்ற
பெயர் வரக் காரணம் ஒரு தனிக்கதை.
19 ம் நூற்றாண்டு வரையில், நூரிஸ்தானி மக்கள் "இந்துக்களாக" இருந்தார்கள். (இன்று மிகத் தீவிரமான இஸ்லாமிய மதப் பற்றாளர்கள். ரஷ்ய படைகளினால் ஆக்கிரமிக்கப் பட முடியாமல் இருந்த, ஒரேயொரு மாகாணம் அது தான்.) வேத கால இந்துக் கடவுளரான, இந்திரன், வருணன், அக்கினி போன்ற தெய்வங்களை வணங்கி வந்தார்கள். பிற்காலத்தில் அவர்கள் முஸ்லிம்களாக மாறிவிட்டாலும், பாரம்பரிய வேத கால இந்துக் கலாச்சாரங்களை இன்னமும் பின்பற்றி வருகின்றனர். 19 ம் நூற்றாண்டு வரையில் அந்த மாகாணம், "காபிர்ஸ்தான்" என்ற பெயரில் அழைக்கப் பட்டது. இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பின்னர், அது நூரிஸ்தான் என்று மாற்றப் பட்டது.

ஒரு
காலத்தில், தெற்கு ஈரானில் இருந்த, "ஈழம்" அல்லது "எலம்" (Elam) என்ற,
திராவிடர்களின் ராஜ்யத்தை சேர்ந்த மட்பாண்டங்கள், ஆப்கானிஸ்தானில் பல
இடங்களில் கண்டெடுக்கப் பட்டன. அது அந்தக் காலத்தில் இருந்த, வர்த்தகத்
தொடர்பை எடுத்துக் காட்டுகின்றது. ஆனால், அதை மட்டுமே வைத்துக் கொண்டு,
ஆப்கானிஸ்தானில் வாழ்ந்த திராவிடர்கள் எல்லாம், கறுப்பின மக்கள் என்று
நாங்கள் அறுதியிட்டுக் கூற முடியாது. உண்மையில், ஆரியர், திராவிடர் என்று,
மக்களை இன அடிப்படையில் பிரித்துப் பார்க்க முடியாது.
"ஆரியர்கள்
என்றால் வெள்ளையர்கள், திராவிடர்கள் என்றால் கருப்பர்கள்" என்ற,
கருப்பு-வெள்ளை பாகுபாடு, எல்லா இடங்களிலும் பொருந்தாது. "ஆரிய கலாச்சாரம்,
திராவிட கலாச்சாரம்" என்று நாங்கள் பாகுபடுத்தலாம். ஆரியர்களின் வருகைக்கு
முன்னர், ஆப்கானிஸ்தானில் திராவிடர் கலாச்சாரம் ஆதிக்கம் செலுத்தியது.
அந்தப் பகுதியில் வாழ்ந்த வெள்ளையின மக்களும் அதனை பின்பற்றி
வந்தனர். சில நூறாண்டுகளுக்குப் பின்னர், அந்த இடத்தில் ஆரிய கலாச்சாரம்
ஆதிக்கம் செலுத்த தொடங்கியதும், அங்கு வாழ்ந்த கறுப்பின மக்களும் அதனை
பின்பற்றி வந்தனர்.
தெற்காசியாவில்,
இன்றைய ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வட இந்திய பகுதிகளில் வாழ்ந்த ஒரு
முக்கியமான இனத்தவர்கள் பற்றி, நாம் அதிக கவனம் செலுத்துவதில்லை.
"யூதர்கள் (ஹீபுருக்கள்), பாலஸ்தீனத்தில் மட்டுமல்ல, தெற்காசியாவிலும்
பெரும்பான்மையாக வாழ்ந்தனர்," என்று நான் சொன்னால், இன்று யாரும் நம்ப
மாட்டார்கள். நாங்கள் இப்போதும், ஐரோப்பியரின் மூளையை பொருத்திக்
கொண்டு சிந்திப்பதால், எமது கடந்த கால வரலாற்றையே மறந்து விட்டோம்.
ஐரோப்பியர்களோ, தங்களது தேச, இன நலன்களை மையமாக கொண்டு தான்,
அனைத்தையும் ஆராய்கிறார்கள். 3000 வருடங்களுக்கு முன்னர், ஹீபுரூ மக்கள்
யூத மதத்தை பின்பற்றவில்லை. ஆனால், யூதர்களின் புனித மொழியான ஹீபுருவுக்கு
நெருக்கமான அராமிய மொழி பேசினார்கள். யூத மதம் கூட, சரதூசர் என்ற
(ஈரானிய) தீர்க்கதரிசியின் மத தத்துவங்களை உள்வாங்கிக் கொண்ட புதிய மதமாக
உருவெடுத்திருந்தது.
ஒரு
காலத்தில், பாகிஸ்தானில் இருந்து பாலஸ்தீனம் வரையில், அராமி மொழி பேசப்
பட்டு வந்தது. அந்தப் பகுதியில் வாழ்ந்த எல்லோரும் அராமியை தாய்மொழியாக
கொண்டிருக்கவில்லை. ஆனால், சர்வதேச மொழியாக தெரிந்து வைத்திருந்தனர்.
ஹீபுரு மொழி பேசிய யூதர்கள், அரேமி வம்சாவளியினர் தான். அராமி, ஹீபுரு
மொழிகளை, தமிழ், மலையாளத்துடன் ஒப்பிடலாம். 19 ம் நூற்றாண்டு வரையில்,
ஆப்கானிஸ்தானில் இலட்சக் கணக்கான யூதர்கள் வாழ்ந்தார்கள்.
1836
ம் ஆண்டு, ஆப்கானிஸ்தானை ஆண்ட மன்னர் தோஸ்த் மொஹமட் கான், இஸ்லாமிய மதத்தை
அரச மதமாக்கி, கடுமையான மத சட்டங்களை அமுல்படுத்தினார். மது பாவனை தடை
செய்யப் பட்டது. இதனால், ஆப்கானிஸ்தானில் வாழ்ந்த பெருந்தொகையான யூதர்கள்
வெளியேறி விட்டனர். அன்று அவர்கள் பாலஸ்தீனா செல்லவில்லை. அருகில் இருந்த
மத்திய ஆசிய நாடுகளுக்கு குடிபெயர்ந்தார்கள். 20 ம் நூற்றாண்டில், இஸ்ரேல்
ஸ்தாபிக்கப் பட்ட பின்னர், எஞ்சியிருந்த ஆப்கான் யூதர்களும் வெளியேறி
விட்டார்கள்.
ஆப்கானிஸ்தானில் வாழ்ந்த யூதர்கள் எப்படியான தோற்றத்துடன் இருந்திருப்பார்கள்? இது சம்பந்தமான பழைய புகைப்படங்கள், ஆம்ஸ்டர்டாம் நகரில் உள்ள யூத கலாச்சார-வரலாற்று அருங்காட்சியகத்தில் வைக்கப் பட்டுள்ளன. அந்தப் படத்தில் இருக்கும் யாரும், வெள்ளையின ஐரோப்பியராக தோற்றம் அளிக்கவில்லை. மாறாக, இந்தியர்களை போன்ற முகச் சாயலை கொண்டிருந்தனர். ஆப்கானிஸ்தானில் வாழ்ந்த ஹீபுருக்கள், அல்லது அரேமியர்கள், தென்னிந்திய திராவிடர்களின் மூதாதையராக இருந்திருக்கலாம். இன்றைக்கும் ஒரே மாதிரியான சொற்கள், தமிழிலும், ஹீபுருவிலும் காணப் படுகின்றன.
நீரெட்டி முத்து
நீரெட்டி முத்து மரத்தின் கொட்டையிலிருந்து எண்ணெய் எடுப்பார்கள். அந்த எண்ணெய் மஞ்சள் நிறத்தில் இருக்கும். அந்த எண்ணெயை ஆரம்ப தோழு நோய் உள்ளவர்கள் இதை மேல் பூச்சாகப் பூசினால் நோய் குணமடைவதைக் காணலாம். இந்த எண்ணெய் தோல் சம்பந்தமான எல்லா நோய்களையும் குணமாக்க வல்லது.
லீகோடர்மா’ என்ற நோயைக் குணப்படுத்தும். இது மன அழுத்தத்தைக் குறைக்கும். உடலில் ஏற்படும் புடைத்த கட்டிகளை குணப்படுத்தும். ஆராத குடல் புண்களை குணப்படுத்த வல்லது. வயிற்றுப் புழுக்களை வெளியேற்றும். நாட்பட்ட புண்கள் குணமடையும். வாதம், சுழுக்கு, நெஞ்சுவலி, கண்நோய் ஆகியவற்றைக் குணப்படுத்தும் டானிக்காகப் பயன் படுத்தப் படுகிறது.
இந்த மரத்தின் வேர் மற்றும் காய்ந்த இலைகளையும் சேர்த்து ஊரவைத்து கசாயமாக்கி உட்கொள்ளும் போது மலேரியா நோய் குணமாகும். சுண்ட வைத்து அடிச் சாற்றைத் தலைக்கு இட்டால் முடி உதிர்வதைத் தடுக்கும். இதன் பூவிலிருந்து நறுமணத்தைப் பிரித்தெடுத்து வாசனைப் பொருட்கள் தயார் செய்கிறார்கள்.
தண்ணீர்
தண்ணீரையும், மனித உடலையும் தனித்தனியாக பிரிக்க முடியாது. மனித உடலில்
தண்ணீர் என்பது அவ்வளவு முக்கியமானது. தண்ணீர் தான் ஜீரணத்துக்கு
உதவுகிறது. வியர்வையை வெளியேற்றுகிறது. உடலின் பல பகுதிகளுக்கு சத்துக்களை
எடுத்துச் செல்கிறது.
உடலின் சேரும் திட மற்றும் திரவக் கழிவுனை வெறியேற்றவும், உடலின் வெப்பநிலையை ஒரே சீராக வைத்துக் கொள்ளவும் தண்ணீர் அவசியம். நமது உடலின் மொத்த எடையில் 60 சதவீதம் அளவிற்கு இருப்பது தண்ணீரில் தான். இதில் இருந்து 5 முதல் 10 சதவீதம் நீர் உடலில் இருந்து வெறியேறினாலே மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
இதுவே 15 முதல் 20 சதவீதம் வரை தண்ணீர் இழப்பு ஏற்பட்டால் மரணம் வந்து சேரலாம். ஒரு மனிதன் சாப்பிடாமல் கூட சிறிது நாட்களை ஒட்டலாம். தண்ணீர் குடிக்காமல் 3 நாட்களுக்கு மேல் தாக்குபிடிக்கமுடியாது. உடலில் உள்ள அனைத்து திசுக்களுக்கு ஒரு காதுகாப்பு போர்வை போலவும். மெத்தை போன்றும் தண்ணீர் செயாற்றுகிறது. உடலின் அனைத்து திசுக்களுக்கும் ரத்தத்தின் அடிப்படைக்கும் மூட்டு இணைப்புகளில் உள்ள திரவம்,தண்ணீர்,கோழைவடிதல் போன்றவற்றுக்கும் தண்ணீரே காரணமாக திகழ்கிறது.
உடல் உறுப்புகள் முறைப்படி செயல்படுவதற்கும் உராய்வு எண்ணெய் போன்று தண்ணீர் செயலாற்றுகிறது. நம்முடைய தோலை மென்மையாகவும், மிருதுவாகவும் வைத்துக்கொள்வதற்கும் உடலில் உள்ள தண்ணீரே பங்காற்றுகிறது.
வயது முதிர்வடையும் போது தோலில் ஏற்படும் சுருக்கங்களுக்கு உடலில் உள்ள தண்ணீரின் அளவு குறைவதே காரணம். ஆகவே தான் பிறக்கும் குழந்தைகளின் உடல்களில் 75 முதல் 80 சதவீதம் அளவுக்கு தண்ணீர் இருப்பதால் குழந்தைகளின் தோல் மென்மையானதாக காணப்படுகிறது.
அதுவே 65-70 வயதான முதியோருக்கு உடலில் தண்ணீர் 50 சதவீதமாக குறைவதால் சுருக்கங்கள் காணப்படுகின்றன. தண்ணீர் குறைவின் காரணமாகவே எலும்பு இணைப்புகளில் பாதிப்பு ஏற்படுவதும் முதுமையில் நிகழ்கிறது. மனித உடலுக்கு தினமும் சராசரியாக 6 முதல் 8 டம்ளர் வரையிலான தண்ணீர் கட்டாயம் தேவை.

சித்த மருத்துத்தில் பூவரசம் பூக்கள்
பூவரசம் மரத்தில் இதய வடிவ இலைகளின் நடுவே மஞ்சள் வர்ணத்தில் பூத்துக்குலுங்கும் பூவரச மரத்தின் பூக்கள் எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இந்த மலர்கள் உண்பதற்கு உகந்தவை என்று சித்தமருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பொதுவாக இந்த இலைகளை விஷத்தை போக்கும் வல்லமை உடையதால் இதனை பூச்சிக்கடி மற்றும் விஷ வண்டுகடிகளுக்கு மருந்தாக இந்த பூக்களை சித்த மருத்துவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
நீர் பாதியாக சுண்டும் போது இறக்கி வடிகட்டி காலை மாலை வேளைக்கு இரண்டு அவுன்ஸ் குடிக்கவேண்டும். தொடர்ந்து மூன்று நாட்களுக்கு தினமும் இதுபோல புதிதாக கஷாயம் தயாரித்து குடித்து வரவேண்டும். பின்னர் மூன்று நாட்கள் இடைவெளி விட்டு, மறுபடியில் மூன்று நாட்கள் சாப்பிடவேண்டும். இதனால் விஷக்கடி மூலம் ஏற்பட்ட ஊறல், தடிப்பு, அரிப்பு, மயக்கம், சோம்பல் போன்றவை நீங்கும். சொறி, சிரங்கு சொறி சிரங்கினால் அவதிப் படுபவர்கள் பூவரசம் பூவை அரைத்து அவற்றின்மீது பூசிவர தோல் மென்மையாகும், சொறி சிரங்கு குணமடையும். விஷக்கடி குணமாகும் பூச்சிக்கடி, வண்டுக்கடி, காணாக்கடி போன்ற பூச்சிகள் கடித்து அதனால் தோலில் ஊறல் நோய் ஏற்படும். அவர்கள் பூவரசம் பூ 25 கிராம் எடுத்து நசுக்கி, பழகிய மண்சட்டியில் போட்டு, 200 மில்லிலிட்டர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இந்த கஷாயம் உட்கொள்ளும் போது எண்ணெய், கடுகு தாளிக்காமல் சாப்பிடவேண்டும். மீன், கருவாடு சேர்க்கக் கூடாது. மூட்டு வீக்கம் வயதான காலத்தில் மூட்டுப் பகுதியில் நீர் கோர்த்து வீக்கத்தால் அவதிப்படுபவர்கள், பூவரசம் பூவுடன் சமஅளவு, காய் பட்டை, எடுத்து அரைத்து நல்ல எண்ணெயில் சேர்த்துக் காய்ச்சி, மூட்டு வீக்கங்கள் மேல் பூசிவர வீக்கம் குணமடையும்….
தசநாடிகள் / தச வாயுக்கள்
தசநாடிகளின் சுற்று.
சூரியகலை - வலது கால் பெருவிரல் முதல் இடது நாசி.
சந்திரகலை - இடது கால் பெருவிரல் முதல் வலது நாசி.
சுழிமுனை - மூலாதரத்தில ஆரம்பித்து எல்லா நாடிகளுக்கு நடு நாடியாகும்.
சிங்குவை - மூலாதரம் தொடங்கி உள் நாக்கிலே நன்று விழுங்கச் செய்வது.
புருடன் - மூலாதரம் தொடங்கி வலது கண் வரை நிற்பது.
காந்தாரி - மூலாதரம் தொடங்கி இடதுகண் வரை நற்பது.
அத்தி - மூலாதரம் தொடங்கி வலது காது வரை நிற்பது.
அலம்புடை - மூலாதரம் தொடங்கி இடது காது வரை நிற்பது.
சங்கினி - மூலாதரம் தொடங்கி குறியின் அளவு நிற்கும்.
குரு - மூலாதரத்திலிருந்து அபானத்தில் நிறுகும்.

நமது
உடலில் 72000 நாடிகள் தசநாடியில் சூரியகலை, சந்திரகலை, சுழிமுனை, முக்கிய
நாடிகளாகும் ஆக வாதம் மலத்தில் பித்தம் நீரில் சிலேத்மம் - விந்தில்..
1. இருகண்புருவ மத்தியில் எல்லா நாடிக்கும் ஆதாரமாக உள்ளது சுழிமுனை.
2. இடது மூக்கு துவாரம் வரை - சூரியகலை.
3. வலது மூக்கின் வரை - சந்திரக் கலை.
4. வலது கண்ணின் வரை - புருடன்.
5. இடது கண்ணின் வரை - காந்தாரி.
6. வலது காது வரை - அத்தி.
7. இடது காது வரை - அலம்புடை.
8. மூலாதலத்திலிருந்து - சங்கினி.
9. உள் நாக்கு முடியும் வரை - சிங்குவை.
10. அபான வரை - குரு.
2. இடது மூக்கு துவாரம் வரை - சூரியகலை.
3. வலது மூக்கின் வரை - சந்திரக் கலை.
4. வலது கண்ணின் வரை - புருடன்.
5. இடது கண்ணின் வரை - காந்தாரி.
6. வலது காது வரை - அத்தி.
7. இடது காது வரை - அலம்புடை.
8. மூலாதலத்திலிருந்து - சங்கினி.
9. உள் நாக்கு முடியும் வரை - சிங்குவை.
10. அபான வரை - குரு.
தச வாயுக்களின் சுற்று.
1. உயிர் காற்று. (பிராணன்)
2. மலக்காற்று. (அபானன்)
3. தொழில் காற்று. (வியானன்)
4. ஒலிக்காற்று. (உதானன்)
5. நிரவுக்காற்று.( சமானன்)
6. தும்மல் காற்று. (நாகன்)
7. விழிக்காற்று. (கூர்மன்)
8. கொட்டாவிக் காற்று. (கிருகரன்)
9. இமைக் காற்று. (தேவதத்தன்)
10. வீங்கற் காற்று. ( தனசெயன்)
பிராணன் - மூலாதரத்தில் ஆரம்பித்து மூக்கு வழியாக மூச்சு விடல், பூச உதவமு குரல்வளையில் உள்ளது. கை,கால்களை வேலை செய்ய பெரு விரல் உள்ளது.
அபானன் - சுவாதிட்டானத்தில் இருந்து வெளிப்பட்டு மலத்தை கீழ் நோக்கி தள்ளும், ஆசனவாயை சுருக்கும். அன்னத்தை சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்க்கும்.குறியில் காம வேகத்தை உண்டு பண்ணும்.
வியானன் - தோளிலிருந்து எல்லா நரம்பிலும் அசையும் அசையாபொருளில் உருப்புக்களைநீட்ட மடக்க உணர்ச்சிகளை அறியவும் உணவின் சாரத்தை கொடுத்து உடலைக்காக்கும்.
உதானன் - உணவின் சாரத்தை கொண்டு செல்லும் உடலை எழுந்து நிற்க உதவும். மேல் நோக்கி இயங்கும் வாயு.
சமானன் - நாபியிலிருந்து கால் வரை பரவும் வாயுக்களை அதிகப்படாமல் சரி செய்யும், உண்ட உணவு செரித்தவுடன் எல்லா இடங்களுக்கும் அனுப்புகிறது.
நாகன் - அறிவை வளர்க்கும், கண்களை திறப்பதற்கும், மயிர் சிலிர்க்க, இமை மூட வேலை செய்யும். வாந்தி எடுத்தால் துப்புதல் ஆகிய வேலை செய்யும்.
கூர்மன் - மனதில் கிளம்பி, கண் இமை, கொட்டாவி, வாய் மூட, கண்திறந்து மூட, கண்ணீர் வர வேலை செய்யும்.
கிருகரன் - நாக்கில் கசிவு, நாசி கசிவு உண்டுபண்ணும், பசி வர வைக்கும், செயல் புரிய, தும்மல் இருமலை உண்டு பண்ண.
தேவதத்தன் - சோம்பல், தூங்கி எழுகையில் அயர்ச்சி, தாக்குதல், கண்களை அசைத்தல், சண்டையிடுதல், தர்க்கம் பேசல்.
தனஞ்செயன் - மூக்கிலிருந்து உடல் முழுதும் வீக்கம் பண்ணும், காதில் கடல் அலை இரைச்சல் போல் இரைத்தல், இறந்த மூன்றாம் நாள் தலை வழியாகவெழியே செல்லுதல்.
ஆறு ஆதாரத்தின் பங்கு.
1. மூலாதாரம்.
2. சுவாதிட்டானம்.
3. மணிப்பூரகம்.
4. அனாகதம்.
5. விசுத்தி.
6. ஆக்கினை.
(1) மனம் சித்தமாக நெற்றி புருவ மத்தியில் உள்ளது. இதுவே ஆங்ஞை அல்லது ஆக்கினை என்கின்றோம்.
(2) ஆகாய தத்துவத்தில் சக்கரம் விசுத்தி கழுத்தில் உள்ளது.
(3) வாயு தத்துவத்தில் அநாவிரதம் மார்பு பகுதியில் உள்ளது.
(4) அக்கினி தத்துவத்தில் மணிபூரகம் வயிற்று பக்கத்தில் உள்ளது.
(5) நீர் தத்திவத்தில் அவாதித்தனம் குறிபகுதியில் உள்ளது.
(6) பூமிதத்துவத்தில் மூலாதாரம் குத பகுதியில் உள்ளது
Friday, March 1, 2013
யானையின் தமிழ் பெயர்கள்
வேறு
எந்த மொழிலும் இல்லாத சிறப்பு தமிழ் மொழிக்கு உண்டு என்பதற்கு இதை விட
வேறு சான்று தேவை இல்லை. யானை என்ற ஒரு விலங்கை தமிழர்கள் எத்தனை விதமாக
அழைத்துள்ளனர். வியக்க வைக்கும் தமிழர்களின் அறிவுத் திறன். இத்தனைப் பெயர்களுக்கு இடம் கொடுக்கும் தமிழ் மொழியின் செம்மைத் திறன் !
யானையின் தமிழ்ப்பெயர்கள்
யானை/ஏனை (கரியது)
வேழம் (வெள்ளை யானை)
களிறு
களபம்
மாதங்கம்
கைம்மா (துதிக்கையுடைய விலங்கு)
உம்பர்
உம்பல் (உயர்ந்தது)
அஞ்சனாவதி
அரசுவா
அல்லியன்
அறுபடை
ஆம்பல்
ஆனை
இபம்
இரதி
குஞ்சரம்
இருள்
தும்பு
வல்விலங்கு
தூங்கல்
தோல்
கறையடி (உரல் போன்ற பாதத்தை உடையது)
எறும்பி
பெருமா (பெரிய விலங்கு)
வாரணம் (சங்கு போன்ற தலையை உடையது அல்லது புல்லை வாரிப்போடுவது)
புழைக்கை/பூட்கை (துளையுள்ள கையை உடையது)
ஒருத்தல்
ஓங்கல் (மலைபோன்றது)
நாக
பொங்கடி (பெரிய பாதத்தை உடையது)
கும்பி
தும்பி (துளையுள்ள கையை உடையது)
நால்வாய் (தொங்குகின்ற வாயை உடையது)
குஞ்சரம் (திரண்டது)
கரேணு
உவா (திரண்டது)
கரி (கரியது)
கள்வன் (கரியது)
கொம்பன்
கயம்
சிந்துரம்
வயமா
புகர்முகம் (முகத்தில் புள்ளியுள்ளது)
தந்தி
மதாவளம்
தந்தாவளம்
கைம்மலை (கையை உடைய மலை போன்றது)
வழுவை (உருண்டு திரண்டது)
மந்தமா
மருண்மா
மதகயம்
போதகம்
யூதநாதன் (யானைக்கூட்டத்துத் தலையானையின் பெயர்)
மதோற்கடம்(மதகயத்தின் பெயர்)
கடகம் (யானைத்திரளின்/கூட்டத்தின் பெயர்)
பெண் யானையின் பெயர்கள்
பிடி
அதவை
வடவை
கரிணி
அத்தினி
யானைக்கன்றின் பெயர்கள்(இளமைப் பெயர்கள்)
கயந்தலை
போதகம்
துடியடி
களபம்
கயமுனி
யானையின் தமிழ்ப்பெயர்கள்
யானை/ஏனை (கரியது)
வேழம் (வெள்ளை யானை)
களிறு
களபம்
மாதங்கம்
கைம்மா (துதிக்கையுடைய விலங்கு)
உம்பர்
உம்பல் (உயர்ந்தது)
அஞ்சனாவதி
அரசுவா
அல்லியன்
அறுபடை
ஆம்பல்
ஆனை
இபம்
இரதி
குஞ்சரம்
இருள்
தும்பு
வல்விலங்கு
தூங்கல்
தோல்
கறையடி (உரல் போன்ற பாதத்தை உடையது)
எறும்பி
பெருமா (பெரிய விலங்கு)
வாரணம் (சங்கு போன்ற தலையை உடையது அல்லது புல்லை வாரிப்போடுவது)
புழைக்கை/பூட்கை (துளையுள்ள கையை உடையது)
ஒருத்தல்
ஓங்கல் (மலைபோன்றது)
நாக
பொங்கடி (பெரிய பாதத்தை உடையது)
கும்பி
தும்பி (துளையுள்ள கையை உடையது)
நால்வாய் (தொங்குகின்ற வாயை உடையது)
குஞ்சரம் (திரண்டது)
கரேணு
உவா (திரண்டது)
கரி (கரியது)
கள்வன் (கரியது)
கொம்பன்
கயம்
சிந்துரம்
வயமா
புகர்முகம் (முகத்தில் புள்ளியுள்ளது)
தந்தி
மதாவளம்
தந்தாவளம்
கைம்மலை (கையை உடைய மலை போன்றது)
வழுவை (உருண்டு திரண்டது)
மந்தமா
மருண்மா
மதகயம்
போதகம்
யூதநாதன் (யானைக்கூட்டத்துத் தலையானையின் பெயர்)
மதோற்கடம்(மதகயத்தின் பெயர்)
கடகம் (யானைத்திரளின்/கூட்டத்தின் பெயர்)
பெண் யானையின் பெயர்கள்
பிடி
அதவை
வடவை
கரிணி
அத்தினி
யானைக்கன்றின் பெயர்கள்(இளமைப் பெயர்கள்)
கயந்தலை
போதகம்
துடியடி
களபம்
கயமுனி
சிவலிங்கம்
ஆன்மஜோதி, அருட்ஜோதி, சிவஜோதி என்ற
இம்மூன்றும் ஒன்று சேர்ந்ததே சிவலிங்கம்.
லிங்கத்தின் அடிவட்டம் ஆன்மஜோதி,
சிவலிங்கத்தைச் சூழ்ந்துள்ள ஆவுடையார் அருட்ஜோதி,
மேல்நோக்கி இருக்கும் சிவலிங்கம் சிவஜோதி.
இந்த மூன்றும் சேர்ந்துதான், சிவலிங்கமாய் காட்சி அளிக்கிறது.
ஆன்மஜோதி, அருட்ஜோதி, சிவஜோதி என்ற
இம்மூன்றும் ஒன்று சேர்ந்ததே சிவலிங்கம்.
லிங்கத்தின் அடிவட்டம் ஆன்மஜோதி,
சிவலிங்கத்தைச் சூழ்ந்துள்ள ஆவுடையார் அருட்ஜோதி,
மேல்நோக்கி இருக்கும் சிவலிங்கம் சிவஜோதி.
இந்த மூன்றும் சேர்ந்துதான், சிவலிங்கமாய் காட்சி அளிக்கிறது.
சிவனின் பஞ்ச முகங்கள்-
ஈசானம் [சதாசிவம்]
தற்புருடம் [மகேஸ்வரன்]
அகோரம் [ருத்ரா]
வாமதேவம் [விஷ்ணு]
சத்யோசாதம் [பிரம்மா]
சதாசிவ மூர்த்தம், ஐந்து முகங்கள்,
பத்து கரங்களுடன் அருள் பாலிப்பார்.
இவ்வைந்து வடிவங்களும் "நமசிவாய"
எனும் ஐந்தெழுத்தின் வடிவாக உள்ளனர்.
சத்யோசாதம்-
பஞ்சாட்சரத்தின் முதல் எழுத்தான
"ந"வடிவாக விளங்குகிறார்.
தங்க நிறத்துடன், குண்டலம் அணிந்து இருப்பார்.
பஞ்சபூதங்களில் நிலம் முழுவதும் நிறைந்து இருப்பார்.
உயிர்களின் வினைகளை நீக்கி,
நற்பயன்களை தருவார்.
வாம தேவம்-
பஞ்சாட்சரத்தின் இரண்டாவது எழுத்தான
"ம" வடிவாக விளங்குகிறார்.
குங்குமம் போன்ற செம்மை நிறத்திலிருப்பார்.
பஞ்சபூதங்களில் நீரின் மத்தியில் இருப்பார்.
பதிமூன்று கலைகளுடன்
உமாதேவியுடன் காட்சி அளிக்கிறார்.
உயிர்களின் பாவங்களை நீக்கி,
அருள் புரிகிறார்.
அகோரம்-
பஞ்சாட்சரத்தின் மூன்றாவது எழுத்தான
"சி " வடிவாக விளங்குகிறார்.
கருத்த பெரிய வடிவுடையவர்.
பஞ்சபூதங்களில் அக்கினியின் மத்தியில் இருப்பார்.
எட்டு கலைகளுடன்
அகோரேசி என்று பெயருடைய
உமாதேவியுடன் காட்சி அளிக்கிறார்.
உயிர்களின் பாவங்களை சுட்டெரிக்கிறார்.
தற்புருடம் -
பஞ்சாட்சரத்தின் நான்காவது எழுத்தான
"வ" வடிவாக விளங்குகிறார்.
பால சூரியனைப் போன்று பிரகாசிப்பார்.
பஞ்சபூதங்களில் வாயுவின் மத்தியில் இருப்பார்.
நான்கு கலைகளுடன் காட்சி அளிக்கிறார்.
உயிர்களின் மனமயக்கத்தை நீக்கி,
நற்பயன்களை தருவார்.
ஈசானம்-
பஞ்சாட்சரத்தின் ஐந்தாவது எழுத்தான
"ய" வடிவாக விளங்குகிறார்.
கோடி சூரியனைப் போன்று பிரகாசிப்பார்.
பஞ்சபூதங்களில்ஆகாயத்தின் மத்தியில் இருப்பார்.
ஐந்து கலைகளுடன் காட்சி அளிக்கிறார்.

Subscribe to:
Posts (Atom)
"நகர்ப்புற நக்சல்" (Urban Naxal)
செயல்பாடுகள் மற்றும் சட்டப் பின்னணி 1. அறிமுகம் மற்றும் சொல்லாடலின் தோற்றம் "நகர்ப்புற நக்சல்" (Urban Naxal) என்பது இந்திய அ...
-
பீடம் அமைத்து கும்பம் வைத்து செய்யப்படும் எந்த பூஜை முறைக்கும் பிராண பிரதிஸ்டை செய...
-
Ancient Sacred Chants AUM. In chapter 17 of Bhagwadgita, one of the most sacred texts of the Hindus. Lord Krishna has said that the word...