Thursday, March 7, 2013

சித்த மருத்துத்தில் பூவரசம் பூக்கள்

Rash, scabies rash portia the famous flower Awadhi portia grind them sensitive skin, scabies rash recovery. Insect bites, bee bite healing, vantukkati, kanakkati biting insects such as seborrheic disease of the skin. Take 25 grams of crushed flower puvaracam, Familiar in mancatti, nirvittu 200 milliliter sterilized.
                  பூவரசம் மரத்தில் இதய வடிவ இலைகளின் நடுவே மஞ்சள் வர்ணத்தில் பூத்துக்குலுங்கும் பூவரச மரத்தின் பூக்கள் எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இந்த மலர்கள் உண்பதற்கு உகந்தவை என்று சித்தமருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பொதுவாக இந்த இலைகளை  விஷத்தை போக்கும் வல்லமை உடையதால் இதனை பூச்சிக்கடி மற்றும் விஷ வண்டுகடிகளுக்கு மருந்தாக இந்த பூக்களை சித்த மருத்துவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
நீர் பாதியாக சுண்டும் போது இறக்கி வடிகட்டி காலை மாலை வேளைக்கு இரண்டு அவுன்ஸ் குடிக்கவேண்டும். தொடர்ந்து மூன்று நாட்களுக்கு தினமும் இதுபோல புதிதாக கஷாயம் தயாரித்து குடித்து வரவேண்டும். பின்னர் மூன்று நாட்கள் இடைவெளி விட்டு, மறுபடியில் மூன்று நாட்கள் சாப்பிடவேண்டும். இதனால் விஷக்கடி மூலம் ஏற்பட்ட ஊறல், தடிப்பு, அரிப்பு, மயக்கம், சோம்பல் போன்றவை நீங்கும். சொறி, சிரங்கு சொறி சிரங்கினால் அவதிப் படுபவர்கள் பூவரசம் பூவை அரைத்து அவற்றின்மீது பூசிவர தோல் மென்மையாகும், சொறி சிரங்கு குணமடையும். விஷக்கடி குணமாகும் பூச்சிக்கடி, வண்டுக்கடி, காணாக்கடி போன்ற பூச்சிகள் கடித்து அதனால் தோலில் ஊறல் நோய் ஏற்படும். அவர்கள் பூவரசம் பூ 25 கிராம் எடுத்து நசுக்கி, பழகிய மண்சட்டியில் போட்டு, 200 மில்லிலிட்டர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இந்த கஷாயம் உட்கொள்ளும் போது எண்ணெய், கடுகு தாளிக்காமல் சாப்பிடவேண்டும். மீன், கருவாடு சேர்க்கக் கூடாது. மூட்டு வீக்கம் வயதான காலத்தில் மூட்டுப் பகுதியில் நீர் கோர்த்து வீக்கத்தால் அவதிப்படுபவர்கள், பூவரசம் பூவுடன் சமஅளவு, காய் பட்டை, எடுத்து அரைத்து நல்ல எண்ணெயில் சேர்த்துக் காய்ச்சி, மூட்டு வீக்கங்கள் மேல் பூசிவர வீக்கம் குணமடையும்….

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...