துன்பம் நீங்கி இன்பம் பெற பைரவர் வழிபாடு சிவபெருமானின் பஞ்ச
குமாரர்களில் கணபதி, முருகன், வீரபத்திரர், ஐயனார் மற்றும் பைரவரும்
ஒருவர்.
பைரவர் என்பது வடமொழிச் சொல்லாகும். இதற்கு மிகவும்
பயங்கரமானவர் என்பது பொருளாகும். எதிரிகளுக்கு பயம் தந்து தன்னை
நாடுபவர்களுக்கு அருள் செய்வதால் இவருக்கும் பைரவர் என்பது
பெயராயிற்று.நவக்கிரக தோஷங்கள் நீங்க சதுர்கால பைரவருக்கு செவ்வரளி பூவால் 9
வாரங்கள் ஸ்கஸ்ரநாமா அர்ச்சனை செய்ய வேண்டும்.
குழந்தைப்பேறு கிட்ட தம்பதியர் ஆறு தேய்பிறை அஷ்டமிகளில் சிவப்பு நிறப் பூக்களால் ஸ்கஸ்ரநாமா அர்ச்சனை செய்ய வேண்டும்.
வறுமை
நீங்க வளர்பிறை அஷ்டமிகளில் மாலை நேரத்தில் வில்வம் மற்றும் வாசனை
மலர்களால் அஷ்டோத்திரமே ஸ்கஸ்ரநாமமோ அர்ச்சனை செய்யது 11 பைரவ தீபங்கள்
ஏற்ற வேண்டும். அஷ்டமிகளில் தொடர்ந்து வழிபடவேண்டும்.
இழந்த
சொத்தைத் திரும்பப் பெற 11 அஷ்டமிகள் பைரவ தீபங்கள் ஏற்ற வேண்டும் மிளகை
சிறு மூட்டையாகக் கட்டி நெய் அல்லதி நல்லெண்ணை இட்டு தீபம் ஏற்றுவது பைரவ
தீபமாகும்.
சனி தோஷம் நீங்க பைரவருக்கு 9 சனிக்கிழமைகள் சிவப்பு நிறப் பூக்களால்அர்ச்சனை செய்யது 4 பைரவ தீபங்கள் ஏற்ற வேண்டும்.
திருமணத் தடை நீங்க ஞாயிறு இராகு காலத்தில் திருநீறு அபிஷேகம் செய்து மிளகு வடை மாலை சாத்தி அர்ச்சனை செய்ய வேண்டும்.
பகைபயம்
நீங்க 9 முறை பைரவருக்கு அர்ச்சனை செய்யது வசதிக்கு ஏற்ப நிவேதனங்கள்
செய்ய வேண்டும். இப்படி 9 கிழமைகள் செய்தால் வியாபார நஷ்டம் விலகும்,
எல்லாத் தொல்லைகளும் அகலும்.
தீரா நோய்கள் தீர பைரவ ஹோமமும், அபிஷேகமும் செய்ய வேண்டும். அந்த அபிஷேக தீர்த்தத்தை உட்கொள்ள பிணிகள் தீரும்.
செல்வம்
செழிக்க வளர்பிறை அஷ்டமிகளில் சதுர்கால பைரவருக்கு சொர்ணபுஷ்பம் அல்லது
108 காசுகளால் அர்ச்சிக்க வேண்டும். அந்தக்காசுகளை அலுவலகம் அல்லது
வீட்டில் பணப் பெட்டியில் வைக்க செல்வம் செழிக்கும்.
தினந்தோறும் காலையில் " ஓம் ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷணபைரவாய நமஹ "என்று ஜெபிப்பது நல்லது
Subscribe to:
Post Comments (Atom)
முத்துசாமி தீட்சிதர்
மிகபெரும் பக்திமான்களை, நாயன்மார் ஆழ்வார் வழிவந்த அதிதீவிர பக்தர்களை ஒருவலையில் ஞான சித்தர்களை வெறும் சங்கீத மும்மூர்த்திகள் என அடக்கிவிட்ட ...
-
இது புதனின் நட்சத்திரம். 1. கார்த்திகை 2. மிருகசீரிஷம் 3. புனர்பூசம் 4. பூரம் 5. சித்திரை 6. சுவாதி 7. விசாகம் 8. அனுஷம் 9. திருவோணம் 10. அவ...
-
கந்தர்வ ராஜாய காயத்ரி மந்திரம் ஓம் கந்தர்வராஜாய வித்மஹே களத்ரதோஷ நிவர்த்தகாய தீமஹி தந்நோ யக்ஷ: ப்ரசோதயாத் கீழ்க்காணும் மந்திரங்களைய...
No comments:
Post a Comment