Monday, March 11, 2013

சிவனுக்கு சிறப்புமிக்க பதினோரு பெயர்கள்



சிவனுக்கு ஏராளமான நாமங்கள் (பெயர்கள்) இருந்தாலும், சில பெயர்கள் மிகவும் சிறப்பு மிக்கவை. சிவ தரிசனத்தின்போதும், விரத காலங்களிலும் இந்த பெயர்களை உச்சரிப்பதன் மூலம் நம் பாவ வினைகள் நீங்குவதாக சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. சிவனுக்கு 11 சிறப்பு பெயர்கள் உள்ளன. இந்த பெயர்களை சிவராத்திரி தினத்தன்று சிவனை வழிபடும் நேரத்தில் பயபக்தியுடன் சொன்னால் நம் தீவினைகள் அகலும் என்பது நம்பிக்கை. சக்தி மிகுந்த 11 பெயர்கள்:
பவன், ருத்திரன், மிருடன், ஈசானன், தாணு, சம்பு, சருவன், உக்கிரன், பர்க்கன், பரமேஸ்வரன், மகாதேவன் ஆகியவையே அந்த 11 பெயர்கள் ஆகும். ‘பவன் என்னை ஆட்கொண்டு அருள்வாய்.. ருத்திரன் என்னை ஆட்கொண்டு அருள்வாய்..’ என ஒவ்வொரு பெயராக உச்சரித்து மனமுருக வேண்டினால், நம் பாவ வினைகள், தீவினைகள் அனைத்தும் நீங்கி நல்வாழ்வு கிடைக்கும்.

நோய்களை தீர்க்கும் கரும்புச்சாறு

சிவராத்திரியன்று அனைத்து சிவன் கோயில்களிலும் அபிஷேக, ஆராதனைகள் மிக சிறப்பாக, விமரிசையாக நடக்கும். சிவன் அபிஷேக பிரியன். அவருக்கு தினமும் அபிஷேகம் நடந்தாலும் சிவராத்திரி அபிஷேகத்துக்கு தனி மகத்துவம் உண்டு. இந்த அபிஷேகத்தில் கலந்துகொள்வதுடன், அபிஷேகத்துக்கு தேவையான பால், தயிர், சந்தனம், பழங்கள், பச்சைக் கற்பூரம், தேன், பன்னீர், வில்வ இலை போன்றவற்றை வாங்கித் தரலாம். இன்றைய தினம் கரும்புச்சாறு அபிஷேகம் மிக முக்கியமானதும், சிறப்பானதும் ஆகும். அபிஷேகத்துக்கு கரும்புச்சாறு வாங்கித் தந்தால் தடைகள், தோஷங்கள், உடல் உபாதைகள் நீங்கும் என்பது ஐதீகம்.

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...