சித்தர்களின் அடிப்படையில்
48 அருட்கலைகள்,
9 கடவுட்கலைகள்,
9 தெய்வீகக் கலைகள்,
9 நோய்க் கலைகள்,
9 பேய்க்கலைகள்,
9
தேய் கலைகள் என்று எண்ணற்ற கலைகளும், பலவகைப்பட்ட சாத்திறங்களும்,
தோத்திறங்களும், மந்திறங்களும், வழிபாட்டு
முறைகளும் உருவாக்கப்
பட்டிருக்கின்றன.
இவற்றின் செயலகங்களாக ஆதியில்
108 திருப்பதிகள்,
243 சத்தி பீடங்கள்,
1008
சிவாலயங்கள் படைக்கப் பட்டன. கால வேகத்தாலும், கருத்து வளர்ச்சியாலும்,
தேவையாலும் 48 வகைப்பட்ட வழிபாட்டு நிலையங்கள் தோற்றுவிக்கப் பட்டன. இவை
காலந்தோறும் தோன்றிய அருளாளர்களால் நூற்றுக்கும் மேற்பட்ட வகைகளாக வளர்ந்து
விட்டன. அருளாளர்களும் காலங்கள் தோறும் தங்கள் தங்களுடைய பத்தி நிலைகள்,
சத்தி நிலைகள், சித்தி நிலைகள், முத்தி நிலைகள் முதலியவைகளுக்கேற்பத்
தங்களுடைய அநுபவங்களைப் பத்தி இலக்கியங்களாகப் படைத்திருக்கிறார்கள். ஆயகலைகள் அறுபத்தி நான்கு -சித்தர்கள் ஆயகலைகள் அறுபத்தி நான்கில் (சிலவற்றை தவிர) சிறந்து விளங்கியிருக்கின்றனர். அறுபத்தி நான்கிலும் சிறந்து விளங்கியதாக கூட கருத்துகள் நிலவுகின்றன. இக்கூற்று எந்தளவுக்கு உண்மை என தெரியவில்லை.ஆனால் ஒவ்வொறு சித்தரும் ஒரு கலையிலாவது சிறந்து விளங்கியிருக்கின்றனர். போகர் என்னும் சித்தர் சிற்பங்களை வடிப்பதில் வல்லவராக திகந்திருக்கிறார், பாம்பாட்டி சித்தர் விஷமுறிவு மருத்துவதுறையிலும், அகத்தியர் முதலானோர் எழுத்தாற்றல் கலையிலும் சிறந்து விளங்கி உள்ளதற்கான குறிப்புகள் கிடைக்கின்றன.
சரி அறுபத்தினான்கு கலைகள் என்னென்ன? என்று தெரிந்தால் தானே நாம் ஒரு முடிவுக்கு வர இயலும். அதற்காக இங்கே பட்டியல். இந்த பட்டியலும் காலத்திற்கு ஏற்றாற் போல மாறுபட்டுள்ளது. முதல் பட்டியல் -
1. எழுத்திலக்கணம் (அக்கரவிலக்கணம்);
2. எழுத்தாற்றல் (லிகிதம்);
3. கணிதம்;
4. மறைநூல் (வேதம்);
5. தொன்மம் (புராணம்);
6. இலக்கணம் (வியாகரணம்);
7. நயனூல் (நீதி சாத்திரம்);
8. கணியம் (சோதிட சாத்திரம்);
9. அறநூல் (தரும சாத்திரம்);
10. ஓகநூல் (யோக சாத்திரம்);
11. மந்திர நூல் (மந்திர சாத்திரம்);
12. நிமித்திக நூல் (சகுன சாத்திரம்);
13. கம்மிய நூல் (சிற்ப சாத்திரம்);
14. மருத்துவ நூல் ( வைத்திய சாத்திரம்);
15. உறுப்பமைவு நூல் (உருவ சாத்திரம்);
16. மறவனப்பு (இதிகாசம்);
17. வனப்பு;
18. அணிநூல் (அலங்காரம்);
19. மதுரமொழிவு (மதுரபாடணம்);
20. நாடகம்;
21. நடம்;
22. ஒலிநுட்ப அறிவு (சத்தப் பிரமம்);
23. யாழ் (வீணை);
24. குழல்;
25. மதங்கம் (மிருதங்கம்);
26. தாளம்;
27. விற்பயிற்சி (அத்திரவித்தை);
28. பொன் நோட்டம் (கனக பரீட்சை);
29. தேர்ப்பயிற்சி (ரத ப்ரீட்சை);
30. யானையேற்றம் (கச பரீட்சை);
31. குதிரையேற்றம் (அசுவ பரீட்சை);
32. மணிநோட்டம் (ரத்தின பரீட்சை);
33. நிலத்து நூல்/மண்ணியல் (பூமி பரீட்சை);
34. போர்ப்பயிற்சி (சங்கிராமவிலக்கணம்);
35. மல்லம் (மல்ல யுத்தம்);
36. கவர்ச்சி (ஆகருடணம்);
37. ஓட்டுகை (உச்சாடணம்);
38. நட்புப் பிரிப்பு (வித்துவேடணம்);
39. காமநூல் (மதன சாத்திரம்);
40. மயக்குநூல் (மோகனம்);
41. வசியம் (வசீகரணம்);
42. இதளியம் (ரசவாதம்);
43. இன்னிசைப் பயிற்சி (காந்தருவ வாதம்);
44. பிறவுயிர் மொழியறிகை (பைபீல வாதம்);
45. மகிழுறுத்தம் (கவுத்துக வாதம்);
46. நாடிப்பயிற்சி (தாது வாதம்);
47. கலுழம் (காருடம்);
48. இழப்பறிகை (நட்டம்);
49. மறைத்ததையறிதல் (முஷ்டி);
50. வான்புகவு (ஆகாயப் பிரவேசம்);
51. வான்செலவு (ஆகாய கமனம்);
52. கூடுவிட்டுக் கூடுபாய்தல் (பரகாயப் பிரவேசம்);
53. தன்னுருக் கரத்தல் (அதிருசியம்);
54. மாயச்செய்கை (இந்திரசாலம்);
55. பெருமாயச்செய்கை (மகேந்திரசாலம்);
56. அழற்கட்டு (அக்கினித் தம்பனம்);
57. நீர்க்கட்டு (சலத்தம்பனம்);
58. வளிக்கட்டு (வாயுத்தம்பனம்);
59. கண்கட்டு (திருட்டித்தம்பனம்);
60. நாவுக்கட்டு (வாக்குத்தம்பனம்);
61. விந்துக்கட்டு (சுக்கிலத்தம்பனம்);
62. புதையற்கட்டு (கனனத்தம்பனம்);
63. வாட்கட்டு (கட்கத்தம்பனம்);
64 சூனியம் (அவத்தைப் பிரயோகம்).
வேறொரு பட்டியல்
1. பாட்டு (கீதம்);
2. இன்னியம் (வாத்தியம்);
3. நடம் (நிருத்தம்);
4. ஓவியம்;
5. இலைப்பொட்டுக் (பத்திர திலகம்) கத்தரிக்கை;
6. பல்வகை யரிசி பூக்களாற் கோலம் வைத்தல்;
7. பூவமளியமைக்கை;
8. ஆடையுடை பற்களுக்கு வண்ணமமைக்கை;
9. பள்ளியறையிலும் குடிப்பறையிலும் மணி பதிக்கை;
10. படுக்கையமைக்கை;
11. நீரலை அல்லது நீர்க்கிண்ண இசை (ஜலதரங்கம்);
12. நீர்வாரி யடிக்கை;
13. உள்வரி (வேடங்கொள்கை);
14. மாலைதொடுக்கை;
15. மாலை முதலியன் அணிகை;
16. ஆடையணிகளாற் சுவடிக்கை;
17. சங்கு முதலியவற்றாற் காதணியமக்கை;
18. விரை கூட்டுகை;
19. அணிகலன் புனைகை;
20. மாயச்செய்கை (இந்திரசாலம்);
21. குசுமாரரின் காமநூல் நெறி (கௌசுமாரம்);
22. கைவிரைவு (ஹஸ்தலாவகம்);
23. மடைநூலறிவு (பாகசாத்திர வுணர்ச்சி);
24. தையல்வேலை;
25. நூல்கொண்டு காட்டும் வேடிக்கை;
26. வீணை யுடுக்கைப் பயிற்சி (வீணை டமருகப் பயிற்சி);
27. விடுகதை (பிரேளிகை);
28. ஈற்றெழுத்துப் பாப் பாடுகை;
29. நெருட்டுச் சொற்றொடரமக்கை;
30. சுவைத்தோன்றப் பண்ணுடன் வசிக்கை;
31. நாடகம் உரைநடை (வசனம்) யிவற்றினுணர்ச்சி;
32. குறித்தபடி பாடுகை (ஸமஸ்யாபூரணம்);
33. பிரம்பு முத்தலியவற்றாற் கட்டில் பின்னுதல்;
34. கதிரில் நூல் சுற்றுகை;
35. மரவேலை;
36. மனைநூல் (வாஸ்து வித்தை);
37. காசு, மணி நோட்டம் (நாணய ரத்னங்களின் பரிசோதனை);
38. நாடிப்பயிற்சி (தாதுவாதம்);
39. மணிக்கு நிறமமைக்கையும் மணியின் பிறப்பிட மறிகையும்;
40. தோட்டவேலை;
41. தகர்ப்போர் சேவற்போர் முதலிய விலங்கு பறவைப்போர்;
42. கிளி நாகணங்கட்குப் பேச்சுப் பயிற்றுவகை;
43. உடம்பு பிடிக்கையும் எண்ணைய் தேய்க்கையும்;
44. குழூவுக்குறி (சங்கேதாக்ஷரங்களமத்துப் பேசுகை);
45. மருமமொழி (ரகசிய பாஷை);
46. நாட்டுமொழி யறிவு (தெசபாஷை யுணர்ச்சி);
47. பூத்தேர் (புஷ்பரதம்) அமக்கை;
48. முற்குறி (நிமித்தம்) அமைக்கை;
49. பொறியமைக்கை;
50. ஒருகாலிற் கொள்கை (ஏகசந்தக்கிராகித்வம்);
51. இருகாலிற் கொள்கை (துவிசந்தக்கிராகித்வம்);
52. பிதிர்ப்பா (கவி) விடுக்கை;
53. வனப்பு (காவியம்) இயற்றுகை;
54. உரிச்சொல்லறிவு (நிகண்டுணர்ச்சி);
55. யாப்பறிவு;
56. அணியறிவு (அலங்காரவுணர்ச்சி);
57. மாயக்கலை (சாலவித்தை);
58. ஆடையணியுந் திறமை (உடுத்தலிற் சாமர்த்தியம்);
59. சூதாட்டம்;
60. சொக்கட்டான்;
61. பாவை (பொம்மை), பந்து முதலியன வைத்தாடுகை;
62. யானயேற்றம், குதிரையேற்றம் பயிற்சி;
63. படக்கலப் பயிற்சி;
64. உடற் (தேகப்) பயிற்சி (சது.).போர் பயிற்சிகள், யானையேற்றம்,குதிரையேற்றம் போன்ற மன்னர்கள் செய்யக்கூடிய கலைகளில் சித்தர்கள் தேர்ச்சி பெற்றிருப்பது சந்தேகமே. சில சித்தர்கள் மன்ன்னாக இருந்து பின் சித்தர்களாக மாறியவர்கள் என்பதனை நாம் மறக்க கூடாது. ஆனால் அழற்கட்டு (அக்கினித் தம்பனம்), நீர்க்கட்டு (சலத்தம்பனம்), வளிக்கட்டு(வாயுத்தம்பனம்), கண்கட்டு (திருட்டித்தம்பனம்), நாவுக்கட்டு (வாக்குத்தம்பனம்), விந்துக்கட்டு (சுக்கிலத்தம்பனம்),புதையற்கட்டு(கனனத்தம்பனம்),வாட்கட்டு (கட்கத்தம்பனம்),சூனியம் போன்றவற்றில் தேர்ந்திருப்பதற்கான வழிகள் உண்டு. சித்தர்களைப் பற்றிய செவிவழிச் செய்திகள் இதை உறுதி படுத்துகின்றன
Subscribe to:
Post Comments (Atom)
"நகர்ப்புற நக்சல்" (Urban Naxal)
செயல்பாடுகள் மற்றும் சட்டப் பின்னணி 1. அறிமுகம் மற்றும் சொல்லாடலின் தோற்றம் "நகர்ப்புற நக்சல்" (Urban Naxal) என்பது இந்திய அ...
-
பீடம் அமைத்து கும்பம் வைத்து செய்யப்படும் எந்த பூஜை முறைக்கும் பிராண பிரதிஸ்டை செய...
-
Ancient Sacred Chants AUM. In chapter 17 of Bhagwadgita, one of the most sacred texts of the Hindus. Lord Krishna has said that the word...
No comments:
Post a Comment