Tuesday, July 3, 2018

மனிதன் எப்படி வாழ வேண்டும்

கீதாசார்யனின் சத்யோபதேசம்

ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என ஶ்ரீ கிருஷ்ணன் அருளியதை பற்றிய அழகான அருமையான பதிவு இது,

கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு ஏன் கீதையை உபதேசித்தார்?
என்பதை விளக்கும் நிகழ்வு.

குருஷேத்திரப் போர் முடிந்து ஒரு நாள் இருவரும் துவாரகையில் நகர் வலம் போகின்றனர்.

அப்போது அர்ஜுனன் மனதில்
நம்மை ஏன் கீதை உபதேசம்  செய்ய தேர்ந்தெடுத்தார் என சந்தேகம் தோன்றுகிறது .

பலராமரிடம் சொல்லி இருக்கலாம்.
தாய் யசோதை இல்லை தேவகி இடம் சொல்லி இருக்கலாம்.

ராதை,பாமா, ருக்மணியிடம் சொல்லி இருக்கலாம்.?
ஏன் என்னிடம் சொன்னார்.?
காரணம் என்ன?!?!?!
யோசித்த அர்ஜுனன்
கிருஷ்ண பரமாத்மாவிடம் கேட்கிறார்.

         .
" கண்ணா கீதா உபதேசத்திற்கு ஏன் என்னை தேர்ந்தெடுத்தீர்கள்.
பிதாமகர் பீஷ்மரிடம் சொல்லி இருக்கலாம். தத்துவ உபதேசங்களுக்குத் தகுதி வாய்ந்தவர் அவர்.

ஒரு வேளை, அவர் எதிர்முகாமில் இருப்பதால் அவரைத் தவிர்த்தது நியாயமாக இருக்கலாம்.

ஆனால் அண்ணன் தருமன் இருக்கிறாரே அவரைவிட கீதையைக் கேட்கப் பொருத்தமானவர் வேறு யார் இருக்க முடியும்?

மூத்தவர், தரும நீதிகளை உணர்ந்தவர்.
அவரை ஏன் நீங்கள் புறக்கணித்தீர்கள் ?

அண்ணன் பீமன் வெறும் பலசாலி மட்டுமல்ல; மிகச் சிறந்த பக்திமானும்கூட பூஜா நியமங்களை ஒழுங்காகச் செய்து வருபவர்.

இப்படி நல்லவர்களை எல்லாம் விட்டுவிட்டு, உலக சுகங்களில் அதிக நாட்டமுள்ளவனும், உணர்ச்சிவசப்பட்டு பல தவறுகளை அடிக்கடி செய்துவிடுபவனும்,

ஆத்திரக்காரனுமான என்னைப் போய்
கீதை போன்ற புனித உபதேசங்களைக் கேட்கத் தகுதி உள்ளவனாக  கருதியிருக்கிறீர்களே, இது எவ்வகையில் நியாயம்?   என நேரடியாக கண்ணபிரானிடமே கேட்டு விடுகிறார்.

அர்ஜுனனின் இந்தச் சந்தேகத்தைக் கேட்டதும் கண்ணபிரான் அவரது சந்தேகத்திற்கு இவ்வாறு பதிலளிக்கிறார்.

அர்ஜுனா !
நீ என்னோடு நெருங்கிப் பழகுபவன்.
என் மீது தோழமை கலந்த அன்புடன் இருப்பவன் என்பதால் நான் உனக்கு கீதையைச் சொல்லவில்லை.

நீ நினைப்பதுபோல் பிதாமகர் பீஷ்மரை அறங்கள் அனைத்துமுணர்ந்த ஒரு மகாத்மாவாக என்னால் கருதமுடியவில்லை. சாஸ்திரங்கள் உணர்வதால் மட்டும் ஒரு மனிதனுக்கு சிறப்பு வந்துவிடாது; கடைப்பிடித்தால்தான் சிறப்பு.

கௌரவர்கள் அதர்மம் புரிகிறார்கள் என்பதறிந்தும் பீஷ்மர் அவர்கள் பக்கமே இருக்கிறார்.

அதேசமயம் பாண்டவர்களை தனியே பார்க்க நேரும்போது தர்மம் வெல்ல ஆசிர்வதிப்பதாகவும் கூறுகிறார்.
இது இரட்டை வேடம்.

ஒரே சமயத்தில் இரண்டு குதிரைகளில் சவாரி செய்வது சாத்தியமற்றது.
எண்ணம், சொல், செயல் இவை ஒன்றாக எவனிடம் இணைந்திருக்கிறதோ அவனே உத்தமன்.

பீஷ்மர் அப்படிப்பட்டவராக இல்லை.

தர்மர் கீதை கேட்கத் தகுதியானவர் என்பது உன் எண்ணம். அவர் நல்லவர்தான்.ஆனால் முன்யோசனை இல்லாதவர்.

தவறு செய்துவிட்டுப் பிறகு வருந்திக்கொண்டிருப்பது அவர் இயல்பு. தர்மர் நீதியையும் தருமத்தையும் கடைப்பிடிப்பவர் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால்,
அவரால் தக்க நேரத்தில் தன் கடமை என்னவென்று உணர இயலவில்லை.

பீமனைப் பற்றிச் சொன்னால்
பீமன் அளவற்ற பலசாலி. பக்திமானும்கூட. ஆனால் அவனிடம் மனோபலமும் இல்லை;

அறிவு பலமும் இல்லை. வீண் கோபத்தில் அவன் விளைவித்த விபரீதங்கள் அநேகம்.

அர்ஜுனா ! நீ இவர்களைப் போன்றவனல்ல மகாவீரன்.
அதிநுட்பம் வாய்ந்த அஸ்திர வித்தை
பல கற்றவன் என்ற போதும்கூட
நீ முன் யோசனை உள்ளவனாய் இருக்கிறாய்.

அதுதான் உன் தனிச்சிறப்பு.

இதோ பார், உன்னைவிட வயதான,
அறிவிலும் பெரியவர்களான பலரையும் மதித்து நீ இத்தனை வாதிக்கிறாய்.

என்னிடம். களத்திலே நின்றபோதும் உற்றார், உறவினர் மதிப்பிற்குரிய பெரியோர்களையெல்லாம் எப்படிக் கொல்வது – தேவைதானா இந்த யுத்தமும் இழப்பும் என்றெல்லாம் நீ யோசித்தாய்.

அத்தனை பேரையும் இழந்து அரசாட்சியைப் பெறுவதால் என்ன பெருமை இருக்க முடியும் என்று கலங்கினாய்.

பிச்சை எடுத்து வாழவும் நான் தயார் என்று என்னிடம் கூறினாய். நீ பதவி வெறியனல்ல.

பழைய விரோதங்களுக்குப் பழி வாங்க வேண்டுமென்று முன்பு நினைத்திருந்தபோதும்,
களத்தில் அவர்களை மன்னித்து போரே வேண்டாம் என்று எண்ணுகிற உள்ளம் உன்னிடம் இருக்கிறது.

ஓரளவு நீதி எது அநீதி எது என்று சிந்திக்கிறனாகவே நீ எந்த தருணத்திலும் இருந்திருக்கிறாய்.

இதெல்லாம்தான் நான் உனக்கு கீதையை உபதேசிக்கக் காரணங்கள்.

நீதியான வழியில் நடக்க அனைத்தையும் தியாகம் செய்யும் மனவலிமையும் தேவை. தன்னுடைய புனிதமான கடமையை உணர்பவனுக்குத்தான் கீதை கேட்கும் தகுதி உண்டு.

இப்போது புரிகிறதா அர்ஜுனா,
நான் உனக்கு கீதை சொல்லக் காரணம் தனிச்சலுகை எதுவுமல்ல; தகுதிச் சிறப்புதான் காரணம் என்றார்.

ஒருவருடைய தகுதி என்பது.....

நியாய அநியாயங்களை சமமாக பாவிக்கும் திறன்,

சூழ்நிலைக்கு தகுந்தவாறு முடிவெடுக்கும் புத்தி சாதுர்யம்,

எந்த சூழ்நிலையிலும் தன் சுய உணர்வுகளை கட்டுப்படுத்தும் தன்மை,

என் குடும்பம் ,என் உடைமை என யோசிக்காமல் அனைவரையும் ஒன்று போல் நேசிக்கும் மனபாங்கு

இந்த தனிப்பட்டதகுதிச் சிறப்புதான் கண்ணபிரான் அர்ஜூனனுக்கு கீதையை உபதேசிக்க காரணம். ..
        
நாமும் இத்தகைய நற் பண்புகளை வளர்த்துக்கொண்டு கண்ண பிரான் அன்பை பெறுவோமாக.

ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணமஸ்து

வேதத்தில் ராமனைப் பற்றி?

ஒரு முறை ஸ்ரீ மடத்தில் தங்கியிருந்த ஒரு பக்தர் பெரியவா விடம் அடுத்த நாள் அதிகாலையில் ஊர் திரும்புவதாக் கூறி உத்தரவு கேட்டு நின்றார்.. பிரசாதமும் அருள வேண்டினார்...

இவர் அடுத்த நாள் காலை என்று சொன்னது ஸ்ரீ ராம நவமி..

உடனே பெரியவா, " நாளைக்கு ராம நவமி யாச்சே! வந்தது வந்தே, ஒண்ணு இங்கேயே மடத்திலே ராமர் பூஜைக்கு இருந்துட்டு போ.. இல்லாட்டா இன்னைக்கு சாயங்காலமே ரயில் பிடிச்சு நாளைக்கு ஊருக்குப் போய் ஆத்துல பூஜை பண்ணு.. அதுவும் இல்லாம, இங்கேயும் இல்லாம, நாளைக் காலம்பர போகணும் னு சொன்னா எப்படி? " என்று கேட்டார்..

அந்தப் பக்தர் யாரிடம் பேசுகிறோம் என்பதை மறந்தவராய் ஸ்ரீ பெரியவாளிடம்," நான் வேதத்தில் சொல்லி இருக்கிறதை மட்டுமே பண்ணுவேன்... வேதம் தானே நமக்கு எல்லாம்? வேதத்திலே ராமனைப் பற்றியோ, கிருஷ்ணனைப் பற்றியோ எங்கே இருக்கு? வேதம் ஏற்பட்டு எத்தனையோ காலம் கழிச்சுப் பொறந்து அதைப் பின்பற்றியவா தானே அவாளும்? அதனால் ராமர், கிருஷ்ணர் சமாசாரமெல்லாம் நான் எடுத்துக்கிறதில்லை.. ராம நவமியும் பண்றதில்லே.. ராமர் படமும் ஆத்திலே கிடையாது " என்று சற்று அதிகப் பிரசங்கமாகவே சொல்லி நின்றார்...

புரு புரு புருவென்று ஒரு வேகம் ஏற எதிரே பேசுவது கருணாசாகரரா என்று வியப்புறுமாறு ஸ்ரீ பெரியவா விளாச ஆரம்பித்து விட்டார்..

" ஓஹோ! வேதத்திலே இல்லாத எந்த ஒண்ணும் நீ பண்றதில்லையாக்கும்... சரி அப்ப கார்த்தால எழுந்த உடனே டூத் பேஸ்ட், அப்புறம் காபி இதெல்லாம் வேதத்திலே இருக்கா? சோப்பு தேய்ச்சுண்டு குளிக்கறியே, அந்த சோப்பைப் பத்தி வேதத்திலே இருக்கா? உன் ஆம்படையாள் கிரைண்டர்லே அரைச்சு, ஃப்ரிட்ஜில வைச்சு சாப்பிடுறாயே, கிரைண்டர், குக்கர் வேதத்திலே சொல்லியிருக்கா? எல்லாத்தையும் விட ஆபிஸ் னு ஜீவனம் செய்யறதுக்கு போறயே சூட் போட்டுண்டு, அது வேதத்தில இருக்கா?

வேதத்திலே பிராமண ஜாதிக்காரனை ஆபிஸ் உத்யோகம் பார்க்கச் சொல்லிருக்கா? ஆபீஸூக்கு ஸ்கூட்டரோ, பஸ்ஸோ பிடிச்சு போறயே, அந்த வாகனாதிகள் எந்த வேதத்திலே இருக்கு? " என்று ஆரம்பித்து மின் விளக்கு, மின் விசிறி, சினிமா, கிரிக்கெட் என்று அந்த நபரின் அத்தனை அனுபவத்தையும் அடுக்கி அவையெல்லாம் வேதத்தில் இருக்கிறதா எனத் தொடர்ந்து கேட்டார்..

முடிவாக, " வேதத்திலே எங்கேயும் ஒரு அத்வைத சன்யாசி மடம் னு ஒண்ணு வைச்சுண்டு, 'பப்ளிக்' பூஜை பண்ணின்டு, பூஜை பிரசாதம் குடுக்கலாம் னு இருக்கிறதா தெரியலேன்னு கூட உன்னை மாதிரி மேதைகள் ஆராய்ச்சி பண்ணிப் பேசலாம்.. அதனால் நீ இப்ப என் கிட்ட கேக்கற பிரசாதமே வேதத்திலே சொல்லாதது தான் னு ஆகறது.. போய்ட்டு வா " என்றாரே பார்க்கலாம், இந்த விதண்டாவாதி ஆடிப் போய் விட்டார்..

பரமேஸ்வரரிடம் இத்தனையளவு தன் அர்த்தமற்ற வாதத்தை எடுத்துரைத்து விட்டோமே, அவர் சர்வ வல்லமை பெற்ற மா பெரும் தவ சேஷ்டர் அல்லவா என்பதை உணர்ந்தவராய் தடாலென்று விழுந்து, தண்ட நமஸ்காரம் செய்து தன்னை மன்னித்து நல்லறிவு தர வேண்டி நின்றார்..

மகான் மேலும் பேசலானார்... இப்போது பெருமானின் பேச்சில் குளுமை மிகுந்திருந்தது..

" வேத காலத்திற்குப் பின்னாலும், வேதத்தில் கூறியுள்ளவைகளை அனுசரித்தே அந்த விருட்சத்தின் புதுப் புது கிளைகளாக அனேக சம்பிரதாயங்கள் வளர்ந்து விட்டன.. அவையெல்லாமும் நாம் வேதமாகப் போற்றி அனுசரிக்க வேண்டியவைகளே... வேதத்திலே சொல்லாத உப கரணங்களைப் பிற்காலத்தில் கண்டு பிடிச்சுண்டே வந்திருக்கா..

அத்யயனம், பூஜை, ஜபம், தியானம் முதலான அனுஷ்டானங்கள் பண்றதைப் பத்தி மட்டும் வேதத்திலே சொல்லி நிறுத்திடலை... காலை எழுந்ததும் பல் தேச்சுக்கறது, ஸ்நானம் பண்றது, சாப்பிடறது, ஸ்வதர்ம கர்மா பண்ணி சம்பாதிப்பது, வாழ்க்கை நடத்த அங்கே, இங்கே பிரயாணம் பண்றது, கொஞ்சம் உல்லாசமாயிருக்கிறது எல்லாம் வேதத்திலே சொல்லப்பட்டு அனுமதிச்சிருக்கிற காரியங்கள் தான்...

"ஆனா அந்தக் கார்யங்களை நடத்த அன்னிக்கிருந்த உபகரணம் போய், இன்னிக்கு வேறே வந்திருக்கலாம்.. அன்னிக்கு குதிரை மேலேயோ, மாட்டு வண்டியிலோ பிரயாணம் பண்ணினான்னா, இன்னிக்கு ஸ்கூட்டர், எலக்ட்ரிக் டிரெயின் னு வந்தாச்சு.. வேதத்திலே சொல்லவில்லை என்பதற்காக இவைகளைத் தள்ளுபடி செய்ய வேண்டியதில்லை...

"பிராமணன் வைதிகத் தொழிலை விட்டுட்டு ஆபிஸ், கம்பெனி னு உத்யோகம் பார்க்கறது எல்லாம் சந்தர்ப்பக் கொடுமையாலே தவிர்க்க முடியாத அநாசாரமாயிடுத்து.. ஆனாலும் என்ன பண்ணலாம்? பெரிய உத்யோகம் பண்ணி வாரி, வாரிக் குவிச்சி இன்னும் அதிகமாச் சேர்க்கணும் னு பறக்காம பகவான் கிட்டே மன்னிப்பு கேட்டுண்டு வாழ்க்கையோட அத்யாவசியத் தேவைக்கு மட்டும் சம்பாதிக்கணும்.. நேரம் கிடைக்கும் போது வேத அத்யனங்களையும், அனுஷ்டானங்களையும் பண்ண ஆரம்பிக்கணும்.. ரிடையர் ஆனப்புறம் வேதத்துக்கே வாழ்க்கையை அர்ப்பணம் பண்ணனும்...

"ராம நவமி, கோகுலாஷ்டமி, ஹரி கதை, பஜனை எல்லாம் வேத வழியிலே நாம் சேர்க்கிறதுக்கு ரொம்ப ஒத்தாசை பண்றவை தான்... இந்த மாதிரியானவைகளுக்கு வேதம் தான் மூலம்.. நமக்கெல்லாம் உற்சாகப்படுத்தற இது மாதிரி சமாசாரங்களும் மனசுக்கு ரஞ்ஜகமான முறையில வேத வழிக்கு, கொண்டு சேர்ப்பவை தான்.. வாஜபேயி யாகத்திலேர்ந்து, நாம சங்கீர்த்தனம் வரை ஒரே சனாதன தர்மத்தின் வேரிலிருந்து தோன்றிய கிளைகள் தான்...

"நீயும் ஸ்ரீ ராம நவமி பூஜை மாதிரி சின்னதா ஆரம்பிச்சு வாஜபேயி ஆகிற வரைக்கும் மேலே மேலே அபிவிருத்தியாவாயாக! நாளைக்கு இங்கேயே வழக்கமாக மடத்து பூஜையோட, ராமர் பூஜையும் பாரு.. ரெண்டு பிரசாதமும் தரேன்.. சந்தோஷமாகப் போய்ட்டு வா.."

தாயினும் மேலான அன்புடன் ஸ்ரீ பெரியவா இப்படி ஒரு நீண்ட பிரசங்கத்தில் எதிரே இருந்த பக்தருக்கு மட்டுமின்றி எல்லோருக்கும் மனதில் படிகிற மாதிரியான அருளுரை தந்து அனுக்ரஹித்தார்...

விதண்டாவாதம் செய்த அந்தப் பக்தர் உருகிப் போய் உண்மை விளங்கப் பெற்றவராய் பெருமானை நமஸ்கரித்து எழுந்தார்.. அவர் மனம் தெளிந்திருந்தது...

பரமேஸ்வரா... பெரியவா சரணம் சரணம்!

கர்ம வினை

ஒரு அரசன் அந்தணர்களுக்கு ஒரு நாள் உணவளித்துக் கொண்டிருக்கையில் வானில் ஒரு கழுகு, தனக்கு இரையாக பாம்பு ஒன்றை தன் கால்களில் பற்றிக் கொண்டு அவ்வழியே பறந்து சென்றது.

பாம்பின் வாயிலிருந்து சில துளி விஷம் அரசன் வைத்திருந்த உணவுப் பாத்திரத்தில் விழுந்து விட்டது.

அரசன் அந்த உணவை ஒரு அந்தணருக்கு அளிக்க, அதை உண்ட மறு கணமே அவர் இறந்து போனார்.

அரசன் மிகவும் வருத்தம் அடைந்தான்.

கர்மாக்களுக்கான வினைகளை நிர்ணயிக்கும் சித்திரகுப்தனுக்கு இந்த கர்மவினையை யாருக்குக் கொடுப்பது என்று குழப்பமாகிவிட்டது.

கழுகிற்கா, பாம்பிற்கா அல்லது அரசனுக்கா?  கழுகு அதன் இரையைத் தூக்கிக் கொண்டு சென்றது அது அதன் தவறு இல்லை.  விஷம் இறந்துபோன பாம்பின் வாயிலிருந்து வழிந்தது அது பாம்பின் குற்றம் இல்லை.  அரசனுக்கும் உணவில் பாம்பின் விஷம் கலந்தது தெரியாது. அது அவனும் அறியாமல் நடந்த விஷயம்.

இதுபற்றி எமதருமனிடமே கேட்கலாம் என்று எமனிடம் சென்று தன் குழப்பத்தைக் கூறினான்.

சித்திரகுப்தன் கூறியதைக் கேட்ட எமதர்மன், சற்று நேர சிந்தனைக்குப் பிறகு, இதற்கான விடை விரைவில் கிடைக்கும் அதுவரை பொறுமையாக இரு என அறிவுறுத்தினான்.

ஒரு சில நாட்கள் கழித்து அரசன் உதவி நாடிச் சென்ற சில அந்தணர்கள் அரண்மணைக்கு வழி தெரியாமல், சாலையோரம் வியாபாரம் செய்து கொண்டிருந்த பெண்மணி ஒருவரிடம் வழி கேட்டார்கள்.

அப்பெண்மணியும் அவர்களுக்கு சரியான பாதையை  கூறியதோடு நில்லாமல்
*இந்த அரசன் அந்தணர்களைக் கொல்பவன் சற்று எச்சரிக்கையாக இருங்கள்* என்றும் கூறினாள்.

இந்த வார்த்தைகளை அவள் கூறி முடித்ததும், சித்திரகுப்தனுக்கு தெளிவு பிறந்து விட்டது. *அந்தணரைக் கொன்ற  கர்மாவின் வினை முழுவதும் இந்தப் பெண்மணிக்கே சேரும்* என்று.

*காரணம்*

_மற்றவர்கள் மீது பழி சுமத்தும் போது அதில் உண்மை இருந்தாலும் அவர்கள் செய்த கர்ம வினையில் பாதி, பழி சுமத்துபவருக்கு வந்து சேர்ந்துவிடும்._

உண்மையை உணராமல் அபாண்டமாக பழி சுமத்துவோருக்கு அந்த கர்மவினை முழுவதும் சேரும்.

எனவே, மற்றவர்கள் பற்றி பேசும் போது எச்சரிக்கையுடன் பேச வேண்டும்.

ஸ்ரீமத் பாஹவதத்திலிருந்து

Sunday, July 1, 2018

மண்ணில் நல்ல வண்ணம் வாழ


ஏகநாதர் மகாராஷ்டிரத்தில் அவதரித்த மகான். அவரிடம் ஒரு பக்தர் வந்து "சுவாமி, உங்களால் எப்படி புனித வாழ்வு
வாழ முடிகிறது? சிறு பாவம்கூடச் செய்யாமல் எப்படி இருக்க முடிகிறது?” என்று கேட்டார் சிந்தனையில் ஆழ்ந்தார் ஏகநாதர் பிறகு , 

எண்ணைப் பற்றிய கவலையை விடு . உன்னைப் பற்றி கவலைப்படு இன்னும் ஒரு வாரத்தில் உனக்கு மரணம் வரும . இன்னும ஆறே நாட்கள் தான் உனக்கு வாழ்வு, வண்டியதைச் செய என்றார்

பக்தர் நடுநடுங்கிப் போய் வீட்டிற்கு விரைந்தார் குடும்பத்துக்கு வேண்டிய ஏற்பாடுகளை அவசரம் அவசரமாகச் செய்தார். இதே கவலையில் காய்ச்சலாகப் படுத்துவிட்டார். சிறு துன்பம் கூட பிறருக்குச் செய்யத்
துனியவில்லை . சதா சர்வகாலமும் ஆண்டவேைய தியானம் செய்து கொண்டிருந்தார்

ஆறாவது நாள் ஏகநாதர் பக்தரைப் பார்க்க வந்தார். பக்கர் அவர் பாதங்களைத் தொட்டு வணங்கினார். பெரியவர் கேட்டார் ‘அன்பனே! இந்த ஆறு நாட்களும் எவ்வளவு பாவம்
செய்திருப்பாய்?
பாவமா? அதற்கு நேரமே இல்லையே! மரண பயம் என்னை பாவ வழிக்குப் போகவிடவில்லை . கடமைகளை
அவசரம் அவசரமாக முடிக்கவே நேரம்
போதவில்லையே சுவாமி' என்றார் பக்தர்
'மரணம் ஒவ்வொரு கணமும் நம்மை
நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டால் போதும்' நாம் பாவம் செய்ய வாய்ப்பில்லை என்றார் ஏகநாதர்

பக்தருக்கு அப்போதுதான் உண்மை புரிந்தது

Saturday, June 30, 2018

நமது வரலாறு

கல்லணை :-

உலகிலுள்ள அணைகளுக்கு முன்னோடியான கல்லணை கட்டப்பட்டு ஈராயிரம் ஆண்டுகள் முடியப் போகும் நிலையிலும், நொடிக்கு இரண்டு இலக்கம் கன அடி நீர் செல்லும் காவேரியை, கரைபுரண்டோடும் காட்டாற்றை தடுத்து கரிகாலன் அணை கட்டிய தொழில் நுட்பத்தை , இன்றைய ஆங்கில அறிவியலாளர்களால் கண்டறிய இயலவில்லை. கரிகாலன் என்ன ஆங்கில அறிவை பெற்றா கல்லணையை கட்டினான் ?

மாமல்லபுரம் :-

கடற் சீற்றத்திற்கு இடையே, கடற்கரையோரமாக 1400 ஆண்டுகளுக்கு முன் பெரும் பாறை ஒன்றின் முகப்பை மட்டும் பட்டையாகச் செதுக்கி, அதன் பின் உள்நோக்கி குடைந்த வகையில் உருவாக்கப்பட்டவையே மாமல்லபுரம் குடைவரைக் கோயில்கள். மாமல்லபுரத்தின் உச்சி கோபுரம் மட்டும் 60 அடி. கோபுரத்தை தாங்கும் வகையில் முதலில் தூண்கள் செதுக்கப்பட்டன. மாமல்லபுரத்தை உலக வழி தோன்றல் சின்னமாக யுனேசுகா அறிவித்துள்ளது. நரசிம்ம பல்லவன் என்ன ஆங்கிலம் பயின்றனா ?

அங்கோர்வாட்_கோயில் :-

உலகின் மிகப் பெரிய கோயிலை இரண்டாம் சூரிய வர்மன் என்ற தமிழ் மன்னன் கம்போடியாவை கைப்பற்றிய போது அங்கு உள்ள அங்கோர்வாட் என்ற இடத்தில் இக்கோயிலை கட்டியுள்ளான். இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்களிலேயே இது தான் மிகப் பெரியது.

திரும்பிய திசை எல்லாம் சிற்பங்கள். இந்த கோயிலின் நான்கு பக்க சுற்று சுவர்களும் முறையே 3.6 கிலோ மீட்டர்கள் நீளமுடையவை. 40 ஆண்டுகளில் இது கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இன்றைக்கு இருக்ககூடிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் கூட 300 ஆண்டுகள் ஆகும். இக்கோயிலின் முழு உருவத்தை காண வானத்தில் 1000 அடிக்கு மேல் சென்று அங்கிருந்து பார்த்தால் மட்டுமே இதை முழுமையாக காண முடியும். இதை முழுமையாக ஒளிப்படம் எடுக்க முடியும் .இதன் முழு கட்டிடமும் அப்போது தான் பதிவாகும்.

கடல்_நடுவே_ராமேசுவரம் :-

கடலுக்கு நடுவே உள்ள ராமேசுவரம் தீவில் மலைகளோ பாறைகளோ கிடையாது. ராமேசுவரம் கோயில் 1500 ஆண்டு பழமையானது . 1212 மிகப் பெரிய தூண்கள், 590 அடி நீளம் 435 அடி அகலம் கொண்ட உலகின் மிகப் பெரிய நடை மண்டபம், மற்றும் கற்கோயிலை எவ்வாறு உருவாகியிருக்க முடியும். பெரும் பாறைகளை பாம்பனிலிருந்து கடற் கடந்து எவ்வாறு ராமேசுவரம் கொண்டு சென்றிருக்க முடியும் என்பதை ஆங்கிலம் பயின்ற அறிவாளிகள் கண்டறிந்து சொல்லட்டும்.

தஞ்சாவூர்_பெருவுடையார்_கற்கோயில்:-

கற்களே கிடைக்காத காவேரி சமவெளி பகுதியில் 66 மீட்டர் உயரம், 15 தளங்கள் கொண்ட தஞ்சாவூர் பெருவுடையார் கற்கோயிலை இராஜ இராஜ சோழன் எவ்வாறு கட்டினான் என்பது புரியாத புதிர். கோயிலின் கடை கால் வெறும் 5 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது. புவி ஈர்ப்பு மையத்தை கண்டறிந்து அதற்கேற்ப வெற்றிட அமைப்பில் கட்டப்பட்ட அறிவியல் நுட்பம் கொண்டது. சுமார் 80 ஆயிரம் கிலோ எடை கொண்ட ஒற்றை கல்லை எவ்வாறு கோயிலின் உச்சியில் நிறுவியிருக்க முடியும். பாறையின் மேல் வரும் அழுத்தம் குறித்த சோதனைகளை ஆயிரம் ஆண்டுக்கும் முன்பே தமிழர்கள் கண்டறிந்துள்ளனர். அதன் அடிப்படையிலேயே ஒற்றை கல்லை உச்சியில் நிறுவி சிற்பிகள் கோயிலை உருவாகிள்ளனர். கோயில் முழுவதும் ஒரே தன்மையான செந்நிறக் கற்களால் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதை இந்திய வழி தோன்றல் சின்னமாக யுனேசுகா அறிவித்துள்ளது. ஆங்கில வழியில் பயின்றவர்களாலும், அவர்களது அறிவியல் தொழில் நுட்பத்தாலும் இன்றளவும் கண்டறிய இயலவில்லை. இராஜ இராஜ சோழன் என்ன ஆங்கிலம் கற்றவனா?

தொல்காப்பியமும் #திருக்குறளும் :-

5000 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்ட தொல்காப்பியமே, உலகில் உள்ள மொழிகளின் இலக்கண நூல்களுக்கு முன்னோடியாக விளங்குகிறது. தமிழ் நாட்டின் எல்லைகளை வரையறைத்து கூறியுள்ளது. ஓருயிர் முதல் ஆறறிவு உயிர் வரை பகுத்து கூறியுள்ளது. பன்னெடுங்காலத்திற்கு முன் இயற்றப்பட்ட இலக்கண நூல் அகத்தியம் என்று குறிப்பிடுவதன் மூலமாக தமிழில் தொன்மைக்கு சான்றாக இருக்கிறது.

2000 ஆண்டுக்கு முன் இயற்றப்பட்ட உலக பொது மறையான திருக்குறள் உலகின் 26 மொழிகளில் வெளிவந்துள்ளது.ஆங்கிலத்தில் 40 பேர் மொழி பெயர்த்துள்ளனர். தமிழ் மொழியின் சிறப்பை அறிந்த ஆங்கில மொழி அறிவு பெற்றவர்கள் தமிழ் மொழியை போற்றி கை கூப்பி வணங்குகின்றனர். இது போன்ற சொற்செழுமை வாய்ந்த நூல்களை ஆங்கிலத்தில் இயற்ற முடியமா ?எல்லா உறவு முறைகளுக்கும் ஆண்டி அங்கிள் என்றும் விளிக்கும் ஆங்கிலத்தில் இது சாத்தியமா? தமிழர்கள் சிந்திக்க வேண்டும் ?

அணு :-

அணுவின் அணுவினை ஆயிரங் கூறிட்டு
அணுவின் அணுவினை ...அணுகவல்லார்க்கு
அணுவின் அணுவினை அணுகலுமாமே"
-ஆசான் திருமூலர்
சித்தர்களின் அறிவியலின்படி எண்ணிலாடங்கா கோடி அண்டங்கள், பேரண்டங்கள், தோன்றுவதற்கு மூல காரணமாக விளங்கி எல்லாப் படைப்புக்கும் அடிப்படையாக இருப்பது ஒரு அணு ஆற்றல். ஒரணுவை ஆயிரங்கூறாக்கினால் கிடைக்கும் அளவற்ற ஆற்றலையே சித்தர்களும் ஞானிகளும் பரமாணு என்று சொல்கிறார்கள். பரமாணு என்பது பிரிக்க முடியாத அணு என்பது பொருள். அந்தப் பரமணுவே பரந்து விரிந்து கிடக்கின்ற அண்ட பேரண்டங்களை இயக்கிக் கொண்டிருக்கின்றது என்பதை பல்லாயிரம் ஆண்டுகளு க்கு முன்பே கண்டறிந்து கூறியவர்கள் சித்தர்கள். அணுவை சுற்றி மின் காந்தம் அமைத்திருப்பதை கண்டறிந்து கூறியவர்கள் சித்தர்கள். அவ்வை பாட்டியும் அணுவைத் துளைத்து................... என்று பாடி உள்ளார்.

சித்தர்கள் :-

சித்தர்கள் என்பவர்கள் மருத்துவர்கள், அறிவியலாளர்கள் ,மக்களை நல்வழிப்படுத்தும் சான்றோர்கள். நூறு ஆண்டுகள் கடந்து வாழும் சூத்திரத்தை கண்டறிந்தவர்கள். அவர்கள் கண்டறிந்த சித்த மருத்துவ முறையை நாம் மதிக்கக் தவறி விட்டோம். தீராத நோய்களுக்கெல்லாம் சித்த மருத்துவத்தில் தீர்வு உண்டு. கடந்த ஆண்டு டெங்கு காய்ச்சலுக்கு சிறந்த மருந்து சித்த மருத்துவ முறையே என தமிழக அரசு அறிவித்த பொழுதே தமிழர்கள் அதன் பயனை சிறப்பை முழுமையாக உணர்ந்தனர். இத்தகைய சித்த மருத்துவ முறையை சித்தர்கள் ஓலை சுவடிகளில் தங்களது தாய் மொழியான தமிழிலேயே எழுதி வைத்துள்ளனர்.

வானியல்_அறிஞர்கள் :-

பூமி உருண்டை என்றும், சூரியனை சுற்றியே ஒன்பது கோள்கள் வலம் வருகின்றன என்றும், அதைத் தொடர்ந்து நிகழும் கும்மிருட்டு, முழுநிலவு மற்றும் பருவ மாற்றங்கள் என அனைத்தையும் அன்றே கணித்த வானியல் வல்லுனர்கள் தமிழர்களே! சிவன் கோவிலுக்கு சென்றால் அங்கே ஒன்பது கிரகங்களை நன்றாக கவனியுங்கள். அந்த சிலைகளின்மேல் கட்டப்பட்டுள்ள துணிகளின் நிறம் கோள்களின் நிறத்தை அடிப்படையாக கொண்டே இருக்கும். தமிழர்கள் என்றோ கண்டுபிடித்ததை ஆங்கில அறிவு பெற்றவர்கள் இன்று கண்டறிந்து கூறுவதை நாம் உயர்வாக மதிக்கிறோம்.

பூம்புகார் .......உலகின் தொன்மையான நகரம் :-

9500 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட கடற்கோளில் மூழ்கிய நகரம் பூம்புகார் ஆகும். கிறித்து பிறப்பதற்கு 7500 ஆண்டு முந்தைய நகரம் இதுவாகும். அதாவது 9500 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட கடல் கோளில் மூழ்கின. பூம்புகாரும் குசராத்தின் காம்பேவும் அரப்பா, மொகஞ்சதரோ நாகரிகங்களை விடப் பழமையானவை ஆகும். பூம்புகார் நகர் கடலில் மூழ்கியுள்ளதை ஆங்கிலேயே அறிஞர் கிரகாம் குக் என்பவர் காணொளி, ஒளிபடச் சான்றுகளுடன் உலக நாடுகளுக்கு நிரூபித்தார். அதில் மண் கல்லான கருவிகள், மனித எலும்புகள், வீட்டுச் சுவர்கள், பாத்திரங்கள், ஆபரணங்கள், வீட்டு முற்றங்கள் ஆகியவை காணப்படுகின்றன.

உலகை_கட்டி_ஆண்ட_தமிழன்:-

கடற் வழியே படை எடுத்து சென்று உலகை கட்டி ஆண்ட அருள்மொழித்தேவன் அறிமுகப்படுதியதே உலகம் முழுவதும் சனநாயகம் என்று போற்றி புகழும், மக்கள் வாக்களித்து தலைவனை தேர்ந்தெடுக்கும் குட வோலை முறையை அறிமுகப்படுத்தியவன் பேரரசன் அருள் மொழித் தேவனே.. வெற்றி பெற்ற நாடுகளில் எல்லாம் அம்மக்களை அடிமைபடுத்தாது சிறப்பான ஆட்சி புரிந்து, அம்மக்களை விடுதலையோடு வாழ வைத்தவன் தமிழனே.

அத்தகைய உயரிய பண்பாடு ஒழுக்க நெறிகளோடு வாழ்ந்தவர்கள் தமிழர்கள் என்பது நிரூபனமாகிறது. இவ்வளவும் நமது பாட்டன் முப்பாட்டனின் பெருமைகள். நாம் இவற்றை பாதுகாப்பு அழியாமல் காப்பாற்றினாலே போதும். இவையணைத்தும் நான் படித்து ரசித்தவையே உங்களது மேலான பார்வைக்கும் பதிந்திருக்கிறேன். நிறைய பகிருங்கள்.. நமது வரலாற்றை நமக்கு அடுத்துவரும் தலைமுறையினர் தெரிந்து கொள்ளவும் நமது முன்னோர்கள் எவ்வளவு சிறப்பான வாழ்க்கையினை வாழ்ந்துள்ளார்.

ராவணனிடம் உபதேசம் கேட்டா ராமன்.


போரில் ராமனால் வீழ்த்தப்பட்ட ராவணன் மரணத் தருவாயில் இருந்தபோது, ராமன் பவ்யமாக அவன் காலடியில் நின்று," இலங்கேஸ்வரா.. தங்கள் ஞானம் தங்களோடு அழிந்துவிடக்கூடாது. நீங்கள் எனக்கு உபதேசிப்பதன்மூலம், அதை இந்த உலகம் அறிந்து பயன்பெற வேண்டும். எனக்கு உபதேசியுங்கள் என்று வேண்டி நின்றான்..!

ராவணன் உபதேசித்தான்..

1.உன் சாரதியிடமோ, வாயிற்காப்போனிடமோ, சகோதரனிடமோ பகை கொள்ளாதே. உடனிருந்தே கொல்வார்கள்.

2. தொடர்ந்து நீ வெற்றிவாகை சூடினாலும், எப்போதும் வெல்வோம் என்று எண்ணாதே.

3. உன் குற்றங்களை சுட்டிக் காட்டும் நண்பனை நம்பு.

4. நான், அனுமனை சிறியவன் என்று எடை போட்டதுபோல், எதிரியை எப்போதும் எளியவன் என்று எடைபோட்டுவிடாதே.

5. வானின் நட்சத்திரங்களை வளைக்க முடியும் என்று நம்பாதே. அவை நம் வழிகாட்டிகள்.

6. இறைவனை விரும்பினாலும், மறுத்தாலும் முழுமையாகச் செய்.

ராமன் வணங்கி உபதேசங்களை பெற்றுக் கொண்டான்.

எதிரியைக்கூட வணங்கி உபதேசம் பெற்றது எவ்வளவு உயர்ந்த பண்பு

"நகர்ப்புற நக்சல்" (Urban Naxal)

செயல்பாடுகள் மற்றும் சட்டப் பின்னணி ​1. அறிமுகம் மற்றும் சொல்லாடலின் தோற்றம் ​ "நகர்ப்புற நக்சல்" (Urban Naxal) என்பது இந்திய அ...