Tuesday, August 20, 2013

திருவோணம்



  
இருபத்தேழு நட்சத்திரங்களின் வரிசையில் இருபத்ரெண்டாவது இடத்தை பெறுவது திருவோண நட்சத்திரமாகும். திரு என்ற அடைமொழியுடன் விளங்கும். இதன் நட்சத்திராதிபதி சந்திர பகவானாவார். இது மகர ராசிக்குரிய நட்சத்திரமாகும். உடலில் தொடை, தொடை எலும்பு சுரப்பிகள், முட்டிகள் போன்றவற்றை ஆளுமை செய்கின்றன. இது ஒரு ஆண் நட்சத்திரமாக கருதப்படுகிறது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதல் எழுத்துக்கள் ஜீ, ஜே, ஜோ, கா ஆகியவை தொடர் எழுத்துக்கள் க,கா,கி,கீ ஆகியவை.
குண அமைப்பு;
   
திருவோண நட்சத்திராதிபதி சந்திரன் என்பதால் விதவிதமான வாசனை பொருட்களை விரும்பி பூசிக் கொள்வார்கள்.  அடிக்கடி கோபப்பட்டாலும் உடனடியாக சாந்தமடைவார்கள். தூய்மையான ஆடை  அணிவதில் அதிக விருப்பம் இருக்கும். தனக்கென தனிக் கொள்கை உடையவர்கள். எதிலும் மிகவும் கவனமுடன் செயல்படுவார்கள். கருமியாக இருந்தாலும் வாடிய பயிரை கண்ட போது வருந்திய வல்லல் போல எதிரிக்கும் உதவும் பரந்த மனம் இருக்கும். யாருடைய மனதையும் புண் படுத்தாமல் இதமாக பேசி பழகுவார்கள். ஒணத்தில் பிறந்தவன் கோணத்தை ஆள்வான் என்பதற்கேற்ப எந்த இடத்தில் இருந்தாலும் அந்த இடத்தில் பெயர் புகழை பெறுவார்கள். எந்தவொரு உயிருக்கும் தீங்கிழைக்க மாட்டார்கள். நல்ல நீதிமான்கள், பசியை பொருத்து கொள்ள முடியாது. பாலால் ஆன இனிப்பு பொருட்களை விரும்பி உண்பார்கள். அழகான உடல்வாகும் எப்பொழுதும் புன்னகையுடன் விளங்கும் முகமும் இருக்கும் இல்லையென்று சொல்லாமல் தன்னால் முடிந்த உதவிகளை செய்வார்கள். நவீன ரக ஆடைகளையே விரும்பி அணிவார்கள்.
குடும்பம்;
     
திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பெண்களால் மதிக்கப்படுபவர்களாக இருப்பார்கள். மனைவி மீதும் தாயின் மீதும் அதிக பாசம் இருக்கும். பழி பாவத்திற்கு அஞ்சி நடப்பார்கள். 16 வயது முதல் 23 வயது வரை தேவையற்ற நட்பால் பாதை மாறக் கூடிய சூழ்நிலைகள் ஏற்படும் என்றாலும் எதையும் சமாளித்து முன்னேற்ற மடைவார்கள். நீண்ட தலை முடியும், அழகிய முகமும் இருக்கும். சில நேரங்களில் முன்னுக்கு முரணாக பேசுவதால் சிறு சிறு பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். ஆடை ஆபரணங்களை விரும்பி அணிவார்கள். மனைவிக்கு பயந்து நடப்பதுடன் அவள் மீது அதிக பாசமும் வைத்திருப்பார்கள், பிள்ளைகள் மீது அதிக அன்பும் அக்கறையும் காட்டுவார்கள். நவீன ரக வீட்டு பொருட்களை வாங்கி சேர்ப்பார்கள். குடும்பத்தின் ஆதரவை பெற்று சீரும் சிறப்பாக வாழ்வார்கள் உறவினர்களையும் நேசிப்பார்கள்.
தொழில்;
     
திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடின உழைப்பால் முன்னேறி வெற்றி வாகை சூடுவார்கள். மக்களை நேசிப்பவராகவும், சமூக நலப் பணிகளில் ஈடுபாடு உள்ளவராகவும் இருப்பார்கள். புலவராகவும் பண்டிதர்களாகவும் சிறந்து விளங்குவார்கள். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி புதிய தொழில் நுட்ப சாதனங்கள் வாங்கி பிரம்மாண்டமாக தொழில் நடத்துவார்கள். சிறு வயதிலிருந்தே இசை, ஒவியம் நாட்டியம் போன்றவற்றில் ஈடுபாடு அதிகம் இருக்கும். கலைஞர்களையும் ஊக்குவிப்பார்கள். 24 வயதிலிருந்து நல்ல மாற்றங்களும் வசதியான வேலை, நல்ல சம்பாத்தியம் கிடைக்கும். மற்றவர்கள் வியக்கும்படி வாழ்வில் முன்னேறுவார்கள். பலர் முனைவர் பட்டம் பெற்று மொழி ஆராய்ச்சி அகழ்வராய்ச்சி,  கல்வெட்டு ஆராய்ச்சி போன்றவற்றிலும் தொழிலதிபர், வங்கி பணி, எழுத்தாளர் பேராசியர்களாகவும் ஜொலிப்பார்கள்.

நோய்;
     
திருவோண நட்சத்திரகாரர்களுக்கு அடிக்கடி உடல் நிலையில் ஜல தொடர்புடைய பாதிப்புகள் சிறுநீரக கோளாறு உண்டாகும். மனக்குழப்பங்களால் மனநிலை பாதிக்கப்பட்டு மனநிம்மதி குறையும். சிலருக்கு பரம்பரை வியாதிகளான சர்க்கரை வியாதி ரத்த அழுத்த சம்மந்தப்பட்ட நோய்கள் உண்டாகும்.

திசைப் பலன்கள்;
      திருவோண நட்சத்திரதிபதி சந்திரன் என்பதால் முதல் திசையாக வரும் சந்திர திசையின் மொத்த காலங்கள் 10 வருடங்கள் என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு மீதமுள்ள தசா புக்திகளைப் பற்றி அறியலாம். இத்திசை காலங்களில் சிறு சிறு ஜல தொடர்புடைய பாதிப்புகளும், தாய்க்கு சோதனைகளும் உண்டாகும்.
      இரண்டாவதாக வரும் செவ்வாய் திசையின் மொத்த காலங்கள் 7 வருடங்கள் நடைபெறும். செவ்வாய் பலம் பெற்று அமைந்திருந்தால் கல்வியில் முன்னேற்றம் குடும்பத்தில் சுபிட்சமும் ஏற்படும். பலமிழந்திருந்தால் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றும்.
     
மூன்றாவதாக வரும் ராகு திசை காலங்கள் மொத்தம் 18 வருடங்களாகும். இக்காலங்கள் ஏற்ற இறக்க மானப் பலன்களைப் பெற முடியும். கல்வியில் தடைகளுக்குப் பின் முன்னேற்றம் உண்டாகும்.
     
நான்காவதாக வரும் குரு திசை காலங்கள் சாதனைகள் பல செய்ய வைக்கும். பொருளாதார மேம்படும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை ஏற்படும். உற்றார் உறவினர்களும் சாதகமாக இருப்பார்கள். வாழ்க்கையில் உயர்வடைவார்கள்.
     
ஐந்தாவதாக வரும் சனி திசை காலங்கள் சாதனைகளை செய்ய வைக்கும். சமுதாயத்தில் உயர்வும் மக்களிடையே நற்பெயரும் உண்டாகும்.
செய்ய வேண்டிய  நல்ல காரியங்கள்
     
திருவோண நட்சத்திரத்தில் பெண் பார்த்தல், தாலிக்கு பொன் உருக்குதல், விவாகம், பூ முடித்தல், சீமந்தம், குழந்தைக்கு பெயரிட்டு தொட்டிலிடுதல், மொட்டையடித்து காது குத்துதல்,புதிய ஆடை ஆபரணம் அணிதல் போன்றவை நல்லது. வங்கியில் சேமிப்பு  தொடங்குதல் மாடு ஆடு வாங்குதல், குளம், கிணறு வெட்டுதல், வாசற்கால் வைத்தல், நவகிரக சாந்தி செய்தல், புதுமனை புகுதல், விதை விதைத்தல், விருந்துண்ணல், புனித யாத்திரை செல்லுதல், உபநயனம் செய்தல் கல்வி, நாட்டியம் ஆகியவற்றை கற்க தொடங்குதல் போன்றவை நற்பலனை உண்டாக்கும்.

விருட்சம்;
   
திருவோண நட்சத்திரத்தின் ஸ்தல விருட்சம் பாலுள்ள எருக்கு மரம். இம்மரமுள்ள ஸ்தலங்களில் வழிபாடு செய்வது நல்லது. இந்த நட்சத்திரத்தை செப்டம்பர் மாதம் இரவு 9.30 மணிக்கு மேல் உச்சியில்  காணலாம்.

பரிகார ஸ்தலங்கள்
திருமுல்லைவாயில்;
     சென்னைக்கு மேற்க்கில் ஆவடியை ஒட்டியுள்ள ஸ்தலம் மாசில மணீசுவரர்&கொடியிடை நாயகி அருள் பாலிக்கும் எருக்கல் செடியை தல விருட்சமாக கொண்ட ஸ்தலம்
எருக்கத்தம் புலியும்;
      கடலூர் மாவட்டம் விருதாசலத்திற்கு தெற்கே 12 கி.மீ தொலைவிலுள்ள ராஜேந்திர பட்டினம் என்ற எருக்கத்தம் புலியூரில் நீல கண்டேசு வரும் நீலமலர் கண்ணி அம்பிகையும் அருள் பாலிக்கும் திருத்தலம்.

கூறவேண்டிய மந்திரம்
      சாந்தாகாரம் சதுர்ஹஸ்தம்
    ச்ரவண நட்சத்திர வல்லடம்
      விஷணும் கமலபத்ராஷம்
      தீயா யேத் கருட வாகனம்

பொருந்தாத  நட்சத்திரங்கள்
      ரோகிணி, திருவாதிரை, அஸ்தம், சுவாதி, சதயம் போன்ற நட்சத்திரங்கள் பொருந்தாது.

பூராடம்



இருபத்தேழு நட்சத்திரங்களின் வரிசையில் இருபதாவது இடத்தை பெறுவது பூராட நட்சத்திரமாகும். இதன் அதிபதி சுக்கிர பகவானாவார். இது ஒரு பெண் நட்சத்திரமாக கருதப்படுகிறது. பூராட நட்சத்திரம் தனுசு ராசிக்குரியதாகும். இது உடல் பாகத்தில் தொடை, இடுப்பு, நரம்பு போன்றவற்றை ஆளுமை செய்கிறது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதலெழுத்துக்கள் பூ, த, ப, டா ஆகியவை தொடர் எழுத்துக்கள் ஸ, எ, ஏ ஆகியவையாகும்.
குண அமைப்பு;
     
பூராட நட்சத்திராதிபதி சுக்கிர பகவான் என்பதால் வாசனை திரவியங்கள் மீது அதிக ஆசை வைத்திருப்பார்கள். ஆடை ஆபரணங்களை அணிவதிலும் ஆர்வம் இருக்கும். தங்களுடைய கனிவான பார்வையால் அனைவரையும் தன் வசம் வைத்திருப்பார்கள். பூராடம் போராடும் என்ற கூற்றிற்கேற்ப எந்த பிரச்சனைகளை கண்டும் பயப்படாமல் எப்பாடு பட்டாலும் நினைத்ததை நினைத்தபடி நிறைவேற்றுவார்கள். மந்திரியோ மண் சுமப்பவனோ எந்த பாகுபாடு பார்க்காமல் பழகுவார்கள். சூதுவாது இல்லாமல் பேசுவார்கள். தலை முடி முதல் கால் நகம் வரை அழகு படுத்துவார்கள். எந்த வொரு விஷயத்தையும் எளிதில் கிரகித்து கொள்ளும் ஆற்றல் கொண்டவர்கள். ஆத்திரத்திலும், ஆவேசத்திலும் கூட ஒரு நளினம் இருக்கும். பூராடத்தில் நூலாடாது என்ற பழமொழி இருந்தாலும் இது தவறானதாகும். பெண்களுக்கு மாங்கல்ய பலம் இருக்காது என்று கூறுவார்கள். ஆனால் நூல் என்பதை பாட நூலாக கருத்தில் கொள்ள வேண்டும். அதாவது சிறு வயதில் கல்வியில் ஆர்வம் இல்லாமல் இருந்தாலும், போக போக சரியாகி விடும்.

குடும்பம்;
     
பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சரியான ஜாதக பொருத்தம் பார்த்து திருமணம் செய்வதே நல்லது. சிலருக்கு மறுமண அமைப்பு கொண்டிருப்பார்கள். பிள்ளைகளின் மீது அதிக பாசம் இருக்கும். அவர்களுக்காக வாழ்க்கை துணையையே ஒதுக்கி விடுவார்கள்.  சுவையான உணவை விரும்பி உண்பார்கள். தாய் மீது அதிக பாசம் வைத்திருப்பார்கள். பொய் சொல்லாதவர்கள். பெற்றோரின் ஆசைகளை தடையின்றி பூர்த்தி செய்வார்கள். நண்பர்களை தங்கள் பக்கம் வைத்திருப்பார்கள். பூராடம் நூலாடாது என்பதற்கும் மணவாழ்க்கைக்கும் சம்மந்தம் இல்லை. அமைதியை அதிகம் விரும்புவதால் பூக்கள், அருவிகள் மற்றும் பசுமையை கண்டால் மனதை பறி கொடுப்பார்கள் உற்றார் உறவினர்களிடம் மனம் விட்டு பேசுவார்கள். அனைவரையும் முழுமையாக நம்பினாலும் அனுபவத்திற்கு பிறகு சரியாகி விடும்.

தொழில்;
     
பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கண்ணால் பார்த்ததை கையால் வரையும் ஆற்றல் கொண்டவர்கள், யோகம் தியானம் போன்றவற்றிலும், தற்காப்பு கலைகளிலும் ஆர்வம் இருக்கும். கணக்கு வணிகவியல், பொது மேலாண்மை, துப்பறிதல், நீதி, மக்கள் தொடர்பு, பேஷன் டெக்னாலஜி, தொலை தொடர்பு, சற்று சூழல் ஆகிய துறைகளில் சம்பாதிக்கும் யோகத்தைப் பெறுவார்கள். சுய மரியாதையும், சுதந்திரத்தை விரும்பவராகவும் இருப்பதால் தன்னுடைய சொந்த விஷயங்களில் தலையிடாத நிறுவனங்களில் மட்டுமே பணிபுரிவார்கள். ஏற்ற தாழ்வு பார்க்காமல் அனைவரிடமும் அன்பாக பழகி அனைத்து திறமைகளையும் வெளிபடுத்தி செய்யும் தொழிலில் முன்னேற்றம் அடைவார்கள். அயல் நாடுகளுக்கு சென்று சம்பாதிக்கும் யோகமும் உண்டு. அரசியலிலும் செல்வாக்கு அதிகரிக்கும்.
நோய்கள்;
     
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தைராய்ட், சிறுநீரகக் கல் வயிற்றுப் புண், கீல் முட்டு வாதம், சர்க்கரை வியாதி ஆகியவை உண்டாகும். ஜீரண கோளாறு, வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும்.
திசை பலன்கள்;
     
பூராட நட்சத்திரதில் பிறந்தவர்களின் நட்சத்திராதிபதி சுக்கிரன் என்பதால் முதல் திசையாக வரும் சுக்கிர திசை 20 வருட காலங்களாகும். என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு மீதமுள்ள தசா புக்திகளைப் பற்றி அறியலாம். இளம் வயதிலேயே சுக்கிர திசை வருவதால் சுக்கிரன் பலம் பெற்றிருந்தால் வாழ்வில் சுபிட்சம், கல்வியில் மேன்மை, சுகவாழ்வு சொகுசு வாழ்வு யாவும் உண்டாகும். சுக்கிரன் பலமிழந்திருந்தால் வாழ்வில் நிறைய பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும், சுக வாழ்வு பாதிப்படையும்.
     
இரண்டாவதாக வரும் சூரிய திசை காலங்கள் 6 வருடமாகும். இத்திசையில் சிறு சிறு உஷ்ண சம்மந்தம்ப் பட்ட பாதிப்புகள் ஏற்பட்டாலும், கல்வியில் முன்னேற்றமும் குடும்பத்தில் சுபிட்சமும் உண்டாகும். பேச்சாற்றல் ஏற்படும்.
     
மூன்றாவதாக வரும் சந்திர திசையில் குடும்பத்தில் தேவையற்ற மனக் குழப்பங்கள் தோன்றி மறையும். தாய்க்கு சிறு சிறு பாதிப்புகள் உண்டாகும்.
     
நான்காவதாக வரும் ராகு திசை 18 வருடங்கள் நடைபெறும். இத்திசை காலங்களில் முற்பாதி முன்னேற்றத்தையும், பிற்பாதியில் கண்டங்களையும் உண்டாக்கும். எதிலும் கவனம் தேவை. மாரக திசையாக அமையும்.

விருட்சம்;
     
பூராட நட்சத்திர காரர்களின் ஸ்தல விருச்சம் பாலுள்ள வஞ்சி அல்லது நாவல் மரமாகும். இந்த நட்சத்திரத்தை மீன லக்னம்  உதயமாகி ஒன்றரை நாழிகை கடந்த பின்னர் வானத்தில் காண முடியும் ஆகஸ்ட் மாதத்தில் இரவு 10 மணியளவில் தென்படும்.

செய்ய வேண்டிய நற்காரியங்கள்
      ஆடு மாடு கன்று வாங்குதல், வண்டி வாகனம் வாங்குதல், ஆடை ஆபரணம் வாங்குதல், கடன்களை பைசல் செய்தல், மருந்து உண்ணுதல், பரிகார பூஜை செய்வது, கிணறு குளம் வெட்டுதல் போன்றவற்றை செய்யலாம்.

வழிபாட்டு ஸ்தலங்கள்
சிதம்பரம்;
      கடலூர் மாவட்டத்திலுள்ள திருத்தலம், பஞ்ச பூத ஸ்தலங்களில் ஆகாயத்தை குறிக்கும். சிதம்பர ரகசியம் இங்கே விஷேசம், சபாநாயகராக அருள் பாலிக்கும் இறைவனோடு அன்னை சிவ காம சுந்தரியும் அருள் பாலிக்கிறார். பழமையும் பெருமையும் நிறைந்த புண்ணிய ஸ்தலம்.
நகர்;
      திருச்சி மாவட்டம் லால்குடிக்கு அருகில் உள்ள திருத்தலம் அப்பிரதீசுவரர் அருளாசி செய்யும் அற்புத ஸ்தலம்.
கடுவெளி;
      தஞ்சை மாவட்டம் திருவை யாருக்கு வடக்கில் 3.கி.மீ தொலைவில் கொள்ளிடம் ஆற்றின் தென் கரையில் உள்ளது. ஆகாச புரீசுவரர் அருள் புரியும் ஸ்தலம்.

கூற வேண்டிய மந்திரம்
     
ஓம் பஸ்சிமேசாய வித்ம ஹே
      பாசஹஸ்தாய தீமஹி
      தந்நோ வருண ப்ரசோதயாத்!!

பொருந்தாத நட்சத்திரங்கள்

      பரணி, பூசம், பூரம், அனுஷம், உத்திரட்டாதி ஆகியவை பூராட நட்சத்திரத்திற்கு பொருந்தாது.

மூலம்


இருபத்தேழு நட்சத்திரங்களின் வரிசையில் பத்தொன்பதாவது இடத்தை பெறுவது மூல நட்சத்திரமாகும். இதன் அதிபதி கேது பகவானாவார். இது ஒரு பெண் நட்சத்திரமாக கருதப்படுகிறது. மூலம் தனுசு ராசிக்குரியதாகும். இது இடுப்பு, தொடை, நரம்புகள் போன்றவற்றை ஆளுமை செய்கிறது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதல் எழுத்துக்கள் யே. யோ, பா, பீ ஆகியவையாகும். தொடர் எழுத்துக்கள் பு, யூ ஆகியவையாகும்.
குண அமைப்பு;
     
மூல நட்சத்திராதிபதி கேது பகவானாவார். இது வாயு புத்திரான ஸ்ரீ ஆஞ்சநேயரின் அவதார நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இல்லறம் மற்றும் ஆன்மீகத்திற்குரிய காரியங்களை தவறாமல் ஒழுங்காக செய்வார்கள். ஒழுக்க சீலர்கள் கம்பீரமான தோற்றமும், தெய்வ பக்தியும் எந்த பிரச்சனைகளையும் தைரியத்துடன் எதிர் கொள்ளும் நெஞ்சுரமும் கொண்டவர்கள். கேது சாரத்திலும், குருபகவானின் ராசியிலும் பிறந்திருப்பதால் மத சம்பிரதாயங்களிலும் ஆன்மீக தெய்வீக காரியங்களிலும் ஈடுபாடு அதிகமிருக்கும். ஆண் மூலம் அரசாளும் பெண் மூலம் நிர்மூலம் என்ற பழமொழி அல்ல. வீண் பழிமொழி என்று சொல்லாம். ஆனி மூலம் அரசாளும் அதாவது ஆனி மாதத்தில் மூல நட்சத்திரத்தில் பிறந்து  சந்திரனை குருபார்வை செய்தால் நற்பலன்கள் தேடி வரும். பின் மூலம் நிர்மூலம் என்பது சந்திரனை பாவ கிரகங்கள் பார்வை செய்வதால் உண்டாவது. எனவே  மாமனாருக்கு ஆகாது என பெண்களை ஒதுக்கி வைக்க வேண்டாம். சிறு வயதிலேயே நல்ல உடல் வாகும் பேச்சு திறமையும் சிறப்பாக இருக்கும்.
குடும்பம்;
     
சிறு வயதில் கேது திசை வருவதால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பும் குடும்பத்தில் பிரச்சனைகளும் உண்டாகும் என்றாலும் வளர வளர குடும்பம் செழிக்கும் பெரியோர் தாய் தந்தை போன்றவர்களிடம் மரியாதை பாசமும் அதிகமிருக்கும். மற்றவர்களிடம் எதிர் கேள்வி கேட்டதில் இவர்களுக்கு நிகர் யாருமில்லை. திருமண வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். கல்லூரி பருவத்தில் நிகழ்ந்த காதல் சம்பவங்கள் அடிக்கடி மனதில் நிழலாகும். பிள்ளைகளை திட்டமிட்டு வளர்த்து படிக்க வைப்பார்கள். இவர்களுக்குள் உறங்கி கொண்டிருக்கும் மிருகத்தை தட்டி எழுப்பாமலிருப்பது அனைவருக்கும் நல்லது. பலர் வயதான காலத்தில் மண வாழ்க்கையை துறந்து துறவறத்தில் நாட்டம் கொள்வார்கள். கோயில்கள், சித்தபீடங்கள், தியான மண்டபங்களை தேடிப் போய் சரணடைவார்கள்.
தொழில்;
     
மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மருத்துவம், சட்டம், ஆர்க்கி டெக்சர், கட்டடம் கட்டுதல், ஏரோனாட்டிக்ஸ் ஆகிய துறைகளில் சிறந்து விளங்குவார்கள். பலர் இராணுவம், காவல் துறை போன்றவற்றில் உயர் பதவிகளை வகிப்பார்கள். பீரங்கி, ஏவுகணை போன்ற போர் தளவாடங்களை கையாள்வதில் கை தேர்ந்தவர்கள். நாட்டை பாதுகாக்கும் பாதுகாவலர்கள் என்று மூல நட்சத்திர காரர்களை கூறலாம். கொடி நாள், குடியரசு தினம், சுதந்திர தினம் என வந்து விட்டால் மனதில் உற்சாகம் கொள்வார்கள். பணபுரியம் நிறுவனங்களுக்கு மிகவும் விசுவாசத்துடனும், சுறுசுறுப்புடனும் பணிபுரிவார்கள். மூத்த அதிகாரிகளுக்கும், கடைநிலை ஊழியர்களுக்கும் இடையே பாலமாக விளங்குவார்கள். தனது பதவிகளுக்கு ஏதாவது பங்கம் ஏற்பட்டால் எவ்வளவு பெரிய பதவியாக இருந்தாலும் ஒரு நிமிடத்தில் தூக்கி எறிவார்கள். நல்ல அதிகாரமிக்க பதவிகளை வகிப்பார்கள். ஒய்வு பெற்ற பின்பும் சும்மா இருக்க மாட்டார்கள். சிலர் சுய தொழில் தொடங்குவார்கள். ஏற்றுமதி இறக்குமதி கெமிக்கல் ஷிப்பிங்  கிளியரன்ஸ், ரியல் எஸ்டேட், கல்குவாரி, மருத்துவ கம்பெனி போன்றவற்றால் சிறந்த லாபம் கிட்டும்.
நோய்கள்;
     
மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பைல்ஸ், கல்லீரலீல் பாதிப்பு நுரையிரலில் பாதிப்பு, இடுப்பு வலி, அஜீரண கோளாறு போன்றவை ஏற்பட்டு மருத்துவ செலவினை உண்டாக்கும்.
திசை பலன்கள்;
     
மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கேது திசை முதல் திசையாக வரும். இதன் மொத்த வருட காலங்கள் 7 என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு மீதுமுள்ள தசா புக்திகளை அறியலாம். இத்திசை காலங்களில் உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகளும், கல்வியில் மந்த நிலையும், தாய்க்கு பிரச்சனைகளும் உண்டாகும்.
     
இரண்டாவது திசையாக வரும் சுக்கிர திசை இருபது வருடங்கள் நடைபெறும். இளம் வயதில் சுக்கிர திசை வருவதால் சுக்கிரன் பலம் பெற்றிருந்தால் குடும்பத்தில் சுபிட்சமும், சுகவாழ்வும், சொகுசு வாழ்வும் உண்டாகும்.  இளம் வயதிலேயே திருமணம் நடைபெறும் செல்வம் செல்வாக்கும் பெருகும்.
     
மூன்றாவதாக வரும் சூரிய திசை 6 வருடங்களும் நான்காவதாக வரும் சந்திர திசை 10வருடங்களும் நடைபெறும் என்பதால் இத்திசை காலங்களில் நன்மை தீமை கலந்த பலன்களைப் பெற்று வாழ்வில் முன்னேற்றமடைய முடியும். உடலில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மறையும்.
     
மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் திசை ஐந்தாவது திசையாகும். செவ்வாய் திசை 7 வருடங்கள் நடைபெறும் என்றாலும் இது மாரக திசையாகும். செவ்வாய் பலம்பெற்று சுபர் பார்வையுடனிருந்தால் வாழ்வில் முன்னேற்றம் குடும்பத்தில் சுபிட்சமும், சுகவாழ்வும், சொகுசு வாழ்வும் உண்டாகும்.  .
ஸ்தல விருட்சம்;
     
மூல நட்சத்திர காரர்களின் ஸ்தல விருட்சம் பாலுள்ள மாமரமாகும். இம்மரமுள்ள ஸ்தலங்களை வழிபாடு செய்வதால் நற்பலன்கள் உண்டாகும். இந்த நட்சத்திரத்தினை ஜீலை மாதத்தில்  கும்ப லக்னம் உதயமாகி 4 மணி நேரம் கழித்து நள்ளிரவில் விண்ணில் சுடர் விடுவதை காணலாம்.

வழிபாட்டு ஸ்தலங்கள்
பொழிச்சலூர்; 
     சென்னைக்கு தெற்கில் பல்லாவரத்துக்கு மேற்கில் 3.கி.மீ தொலைவிலுள்ள அகஸ்தீசுவரர்&ஆனந்தவல்லி அருள் பாலிக்கும் ஸ்தலம்.
திருமாந்துறை;
     திருச்சி மாவட்டம் லால்குடிக்கு மேற்கில் 5.கி.மீ தொலைவில் உள்ள வடக்கரை மாந்துறை எனப்படும் ஆம்ரவன ஈஸ்வரர் அன்னை அழகம்மை ஆலயம்.
மயிலாடுதுறை;
      மயூரநாதர் அபயாம்பிகையுடன் அருள் பாலிக்கும் ஸ்தலம்.
குலசேகர பட்டினம்;
      திருச்செந்தூருக்கு 14 கி.மீ தொலைவிலுள்ள விஜய காசி கொண்ட பாண்டீஸ்சுவரர்&அறம் வளர்த்த நாயகி அருள் புரியும் திருத் ஸ்தலம்.
அச்சாள் புரம்;
      சீர்காழிக்கு அருகிலுள்ள சிவலோகத்தியாகேசர் அருள் புரியும் ஸ்தலம்.
பாமணி;
      பாதாளேச்சுரம் எனப்படும் இத்தலம் மன்னார் குடியிலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது. சர்ப தோஷம் நீக்கும் ஆலயமாகும். மூலவர் கருவறையில் புற்று உள்ளது.

செய்ய வேண்டிய நற்காரியங்கள்
      
மூல நட்சத்திரத்தில திருமணம் செய்தல், கிரக பிரவேசம், வண்டி வாகனம் வாங்குதல், பயணம் மேற்கொள்வது, விதை விதைப்பது, குழந்தைக்கு பெயர் வைப்பது, பரிகார பூஜை செய்வது, மருந்துண்பது தானியம் வாங்குவது நல்லது.
சொல்ல வேண்டிய மந்திரம்
ஓம் தத் புருஷாய வித்மஹே
      வாயு புத்ராய தீமஹி
      தன்னோ மாருதி ப்ரசோயாத்
பொருந்தாத நட்சத்திரங்கள்
      அஸ்வினி, ஆயில்யம், மகம், கேட்டை, ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் பொருந்தாது.

கேட்டை


இருபத்தேழு நட்சத்திரங்களில் பதினெட்டாவது இடத்தை பெறுவது கேட்டை நட்சத்திரமாகும். இதன் அதிபதி புதன் பகவானாவார். இது ஒரு பெண் நட்சத்திரமாக கருதப்படுகிறது. இந்த நட்சத்திரம் விருச்சிக ராசிக்குரியதாகும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதல் எழுத்துக்கள் நே, ய, இ, யூ தொடர் எழுத்துக்கள் நே, கை ஆகியவை.

குண அமைப்பு;
     
கேட்டையில் பிறந்தவர்கள் கோட்டை கட்டினாலும் கட்டும், கேட்டை ஏற்படுத்தினாலும் ஏற்படுத்தும் என்ற பழமொழி உண்டு. இது அவரவர் விதிக்கேற்ப அமைந்த கிரக நிலைகளின் படி அமையும் கேட்டையின் நட்சத்திராதிபதி புதன் பகவான் என்பதால்  வருங்காலத்தைப் பற்றி முன் கூட்டியே அறியும் திறன் இருக்கும். தான தர்மங்கள் செய்வார்கள். நட்பு வட்டாரங்கள் நிறைய  இருப்பார்கள். யாருடைய துணையும் இல்லாமல் தன்னுடைய சொந்த முயற்சியால் முன்னேற்றம் பெறுவார்கள். தந்திரம், சத்தியம், கடவுள் வழிபாடு நல்ல அறிவு, நீண்ட உடல்வாகு, அவநம்பிக்கை, பொய்மை போன்றவை நிறைய  இருக்கும். நீர் நிலைகளில் குளிப்பதில் அதிக ஆர்வமும், நொறுக்கு தீனி தின்பதில் அதிக விருப்பமும் கொண்டவர்கள். ஆரம்பத்தில் வெகுளியாக இருந்தாலும் விவேகியாகவும் மாறுவார்கள். செய்த நன்றியை மறவாதவர்கள். சண்டை சச்சரவுகளை விரும்பாமல் சமானத்திற்காக அதிகம் பாடுபடுவார்கள். நல்ல நுண்ணுறிவும் பேச்சு திறனும், மற்றவர்களின் மன நிலையை அறிந்து பேசும் திறமை சாலியாகவும், எடுக்கும் காரியங்களை சுறுசுறுப்பாக செய்து  முடிப்பவர்களாகவும், புத்தகங்கள் நிறைய படித்து அறிவை வளர்த்து கொள்பவர்களாகவும் இருப்பார்கள். ஆண்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்தால் தோஷமில்லை. பெண்ணாக இருந்தால் திருமணத்திற்கு பின் மூத்த மைத்துனருக்கு ஆகாது என்பது சாஸ்திர விதி.

குடும்பம்;
     
கேட்டை நட்சத்திரத்தில் பிறப்பவர்கள் நல்ல குடும்பத்தில் பிறந்து வளர கூடிய யோகம் கொண்டவர்கள். பாரம்பரிய மிக்க குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதால் நற்குணங்கள் நிறைய இருக்கும். தர்மம் தலை காக்கும் என்ற நம்பிக்கையுடையவர்களாதலால் நிறைய தான தர்மங்களை செய்வார்கள். முன் கோபியாக இருந்தாலும் மலர்ந்த முகமும் இனிமையான புன்னகையும் கொண்டவர்கள். மனைவி பிள்ளைகள் மீது அதிக அக்கறையும் உடன் பிறப்புகளிடையே நிறைய பாசமும் வைத்திருப்பார்கள். இவர்களுடைய இனம், உற்றார் உறவினர்களை பற்றி பெருமையாக பேசி கொண்டிருப்பார்கள். செல்வம் சேர்ப்பதில் அலாதி பிரியம் இருக்கும். நிறைய பேருக்கு  காதல் திருமணமே நடைபெறும். உயர்ந்த இடத்தில் மட்டுமே சிநேகிதம் வைத்து கொள்வார்கள். இருப்பதை வைத்து திருப்தி அடைவார்கள்.

தொழில்;
     
கேட்டை நட்சத்திரத்தில் பிறந்த பலர் கதாசிரியர்களாகவும், பத்திரிகை நிருபர்களாகவும், மனோ தத்துவ நிபுணர்களாகவும், நடிகர் நடிகைகளாகவும், கட்டிட காண்டிராக்டர்களாகவும், அழகுகலை நிபுணர்களாகவும் பிரதிபலிப்பார்கள். புகைப்படம் எடுக்கும் துறை கம்பியூட்டர் துறை, எல்.ஐ.சி, அரசு வங்கி , தனியார் நிதி நிறுவனம் போன்றவற்றிலும் பணிபுரிவார்கள். கடலில் மூழ்கி முத்தெடுப்பதிலும் ஆர்வம் இருக்கும். பல இடங்களில் சிறந்த ஆலோசகர்களாகவும் இருப்பார்கள். சம்பாதிப்பதில் அதிக ஆர்வம் உடையவர்கள். 22 வயது வரை கொஞ்சம் கஷ்டப்பட்டாலும் தன் கையே தனக்குதவி என சுய உழைப்பில் செல்வம் சேர்ப்பார்கள். தனக்கென ஒரு புதிய ராஜாங்கத்தை அமைத்து கொள்வார்கள். 46 வயது முதல் 56 வயது வரை ஜீவன ரீதியாக சம்பாதிக்கும் யோகம் நிறைய உண்டாகும்.

நோய்கள்;
     
கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிறப்பிலேயே நல்ல ஆரோக்கியம் பெற்றவர்களாக இருப்பார்கள் என்றாலும் தோள் விலா எலும்புகளில் வலிமையும், நரம்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளும் உண்டாகும்.

திசை பலன்கள்;
     
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முதல் திசையாக வரும் புதன் திசையின் மொத்த காலங்கள் 17 வருடங்கள் என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு மீதமுள்ள தசா புக்திகளைப் பற்றி அறியலாம். புதன் பலம் பெற்று சுபர் சேர்க்கை பார்வையுடனிருந்தால் நல்ல அறிவாற்றல் கல்வியில் மேன்மை, பேச்சாற்றலால் மற்றவர்களை கவரும் அமைப்பு கொடுக்கும். புதன் பலமிருந்திருந்தால் அடிக்கடி உடல் நல பாதிப்புகள், ஞாபக சக்தி குறைவு கல்வியில் மந்த நிலை ஏற்படும். செல்வம் செல்வாக்கு குறையும்.
     
இரண்டாவதாக வரும் கேது திசை 7 வருடங்கள் நடைபெறும். இக்காலங்களில் கல்வியில் சற்று மந்த நிலையை கொடுக்கும். உடல் ஆரோக்கியமும் அடிக்கடி பாதிப்படைந்து ஞாபக சக்தி குறையும். 
     
மூன்றாவதாக வரும் சுக்கிர திசை  20 வருடங்கள் நடைபெறும். இத்திசை காலங்களில் சுக்கிரன் பலம் பெற்றிருந்தால் நற்பலன்களும், குடும்பத்தில் சுபிட்சமும் உண்டாகும். இல்லையெனில் மணவாழ்க்கையில் பிரச்சனைகளும், பொருளாதார நெருக்கடிகளும் ஏற்படும்.
     
நான்காவதாக வரும் சூரிய திசை 6 வருடமும் ஐந்தாவதாக வரும் சந்திர திசை 10 வருடமும் நடைபெறும். இத்திசைகளின் காலங்களிலும் கிரகங்கள் பலம் பெற்றிருந்தால் நற்பலன்களையும், பலமிழந்திருந்தால் நன்மை தீமை கலந்த பலன்களையும் பெற முடியும். 6வதாக வரும் ராகு திசை மாரக திசையாக கூறப்படுகிறது.

ஸ்தல மரம்;
     
கேட்டை நட்சத்திர காரர்களுக்கு உரிய மரம் பாலுள்ள பராய் மரமாகும். இம்மரமுள்ள ஸ்தலங்களில் வழிபாடு செய்தால் நற்பலன் உண்டாகும். இந்த நட்சத்திரத்தை கும்ப ராசி உதயமாகி 1----&3/4 நாழிகை அளவில் இரவு 11 முதல் 12 மணி வரை வானத்தில் காண முடியும்.
செய்ய வேண்டிய நற்காரியங்கள்
     
ஆடு மாடு வாங்கி விற்றல்,  பழைய ஆபரணங்களை மாற்றுதல், வழக்களை பேசி தீர்தல், குளம் கிணறு வெட்டுதல், இயந்திரங்கள் செய்தல், சூளைக்கு இடுதல், சுரங்கம் தோன்றுதல், வாகனங்கள் வாங்குதல் கடன் வாங்குதல் போன்றவற்றை செய்யலாம்.
வழிபாட்டு ஸ்தலங்கள்;
வழுவூர்;
     மயிலாடு துறைக்கு தெற்கே 8 கி.மீ தொலைவிலுள்ள மூகமோசனம், ஞானாம்ருத தீர்தம் இரண்டும் தனி சிறப்பு கொண்டவை. ஈசனர் கீர்த்தி வாசன் என்ற திருநாமத்தை கொண்டுள்ளார். கஜ சம்ஹார மூர்த்தி தரிசனத்தை இங்கு மட்டுமே காண முடியும். அமாவாசை நாளில் இங்கு மக்கள் கூட்டம் அதிகமிருக்கும் வில்லேந்திய சனிஸ்வரனையும் இங்கு காணலாம்
பிச்சாண்டார் கோயில்;
     திருச்சிக்கு வடக்கில் 6 கி.மீ தொலைவில் உள்ளது. பிச்சாண்டார் மேற்கு முகமாகவும், புருஷோத்தம பெருமாள் கிழக்கு முகமாகவும், பிரம்மா வடக்கு நோக்கியும் அருள் பாலிக்கின்றனர். சரஸ்வதி தேவிக்கும் இங்கே தனி ஸ்தலம் உண்டு

செய்ய வேண்டிய மந்திரம்
     ஓம் பூவராஹாய வித்மஹே
     வஜ்ர ருபாய தீமஹி
     தன்னோ வராஹ ப்ரசோதயாத்
கேட்டை நட்சத்திரத்திற்கு பொருந்தாத நட்சத்திரங்கள்
    
 அஸ்வினி, ஆயில்யம், மகம், மூலம் ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் பொருந்தாது.

அனுஷம்


     
இருபத்தேழு நட்சத்திரங்களின் வரிசையில் பதினேழாவது இடத்தை பெறுவது அனுஷ நட்சத்திரமாகும். இதன் அதிபதி சனி பகவானாவார். இது ஒரு ஆண் நட்சத்திரமாக கருதப்படுகிறது. இந்த நட்சத்திரம் விருச்சிக ராசிக்கு சொந்த மானதாகும். இது உடலில் சிறுநீர்ப்பை, பிறப்புறுப்பு, குதம், இடுப்பு பகுதி எலும்புகள் போன்றவற்றை ஆளுமை செய்கின்றது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதலெழுத்துக்கள் ந,நி,நு,நே ஆகியவை தொடர் எழுத்துக்கள் நா,நீ,நூ ஆகியவை.
குணஅமைப்பு;
அனுஷ நட்சத்திராதிபதி சனி பகவான் என்பதால் எப்பொழுதும் மாறுபட்ட மனநிலையை கொண்டிருப்பார்கள். எறும்புக்கும் தீமை நினைக்க மாட்டார்கள் என்றாலும் கொண்ட கொள்கைக்காக ஆயுதம் ஏந்தவும் தயங்க மாட்டார்கள். பலருக்கு சுமை தாங்கியாக விளங்கினாலும், தங்களுடைய மனக் குறைகளை யாருடனும் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள். யார் தவறு செய்தாலும் நெற்றி கண் திறப்பினும் குற்றம் குற்றமே என தயங்காமல் எடுத்துரைப்பார்கள். அழகான கூந்தலும் விசாலமான கூந்தலும் இவர்களுக்கு அழகு சேர்ப்பதால் அமையும். சட்டென கடின வார்த்தைகளை பேசினாலும் உடனே அதை சரி செய்து விடுவார்கள். கருமியாகவும் இருப்பார்கள். இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன் என்ற கூற்றுப்படி பூமியில் இருக்கும் போதே புண்ணிய காரியங்களை செய்து சமுதாயத்தின் முன்னேற்றமடைவார்கள். எல்லா விஷயங்களையும் தெரிந்து வைத்திருப்பார்கள். பசியை பொறுக்க மாட்டார்கள்.  இரவு பகல் பாராது உழைப்பார்கள். ஜாதி, மதம், இனம் இவற்றையெல்லாம் கடந்து அனைவரிடத்திலும் அன்பாக பழகுவார்கள் கவர்ச்சியான தோற்றத்தால் அனைவரையும் கவர்ந்திமுப்பார்கள். பேச்சில் வித்தகர்கள். தெளிவாக பேசுவார்கள். தாம்பூல பிரியர்கள்.

குடும்பம்;
அனுஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குடும்பத்தின் மீது அதிக  பாசம் கொண்டவர்கள். மனைவிக்கு மரியாதை கொடுப்பார்கள். பெற்றோரை பேணி காப்பார்கள். உடன் பிறந்தவர்களுக்காக எதையும் விட்டு கொடுப்பார்கள். பெரியவர்களிடம் மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பார்கள். செல்வம் செல்வாக்கு அசையும் அசையா சொத்துக்கள் யாவும் சிறப்பாக அமையும். எல்லாரிடத்திலும் நட்பாக பழகுவதால் உற்றார் உறவினர்களின் ஆதரவைப் பெறுவார்கள் ஆழ்ந்த சிந்தனையில் எப்பொழுதும் முழ்கியிருப்பார்கள். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு அமையும். சிறு வயதில் கஷ்டப்பட்டாலும் 29 வயதிலிருந்து நல்ல முன்னேற்றம் உண்டாகும். 40 முதல் 60 வயது வரை பொற்காலமாக அமையும். தன்னுடைய தாராள மனப்பான்மையை எப்பொழுதும் வீட்டில் தம்பட்டம் அடித்துக் கொண்டிருப்பார்கள்.

தொழில்;
     
அனுஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எடுக்கும் காரியங்களில் வெற்றி பெறுவதற்காக இரவு பகல் பாராமல் உழைப்பார்கள். பலர் நாட்டிய பேரொளிகளாகவும், சிறந்த பாடகர் மற்றும் வசனகர்த்தாவாகவும் இருப்பார்கள். வாய் பேச்சில் வித்தகர்கள். மருத்துவம், வங்கி, காவல் துறை, தீயணைப்பு துறை, உளவுத்துறை போன்றவற்றில் பணிபுரிவார்கள். ஒரு சிலர் கட்டிட கலை, காண்டிராக்ட் போன்றவற்றிலும் பணிபுரிவார்கள். பலராலும் பாராட்டப்படக் கூடிய அரிய பெரிய காரியங்களை செய்து பெரிய பதவிகளை வகிப்பார்கள். மக்கள் செல்வாக்கால் நாடாளுமன்றம், சட்டமன்றம் போன்றவற்றிலும் இடம் பெறும் வாய்ப்பு அமையும். சமுதாயத்தில் புகழ் பெருமை, செல்வம் செல்வாக்கு யாவும் தேடி வரும். தொழிலாளர்களுக்காக போராடுவதால் தொழில் சங்க தலைவராக இருப்பார்கள்.

நோய்கள்;
அனுஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உடலில் இடது கண் நரம்புகள் மற்றும் தலை நரம்புகளில் பாதிப்பு ஏற்படும். தலைவலியும், வயிற்றில் பிரச்சனையும் எப்பொழுதும் இருக்கும்.

திசை பலன்கள்;
     
அனுஷ நட்சத்திராதிபதி சனி பகவான் என்பதால் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சனி திசை முதல் திசையாக வரும். இதன் மொத்த வருட காலங்கள் 19 என்றாலும் பிறந்த நேரத்தை  கணக்கிட்டு மீதமுள்ள சனி தசா புக்திகளை பற்றி அறியலாம். சனி பலம் பெற்றிருந்தால் கல்வியில் மேன்மை, பெற்றோருக்கு உயர்வு, அசையா சொத்து சேர்க்கை அமையும். பலமிழந்திருந்தால் குடும்பத்தில் சோதனையும் பெரியவர்களிடையே கருத்து வேறுபாடும் கல்வியில் மந்த நிலையும், சோம்பல் தனமும் உண்டாகும்.
     
இரண்டாவதாக வரும் புதன் திசை காலங்கள் 17 வருடங்கள் நடைபெறும் இத்திசை காலங்களில் குடும்பத்தில் சுபிட்சமும், கல்வியல் மேன்மையும், பெற்றோர் பெரியோர்களின் ஆசியும், நல்ல ஞாபக சக்தியும் உண்டாகும்.
     
மூன்றாவதாக வரும் கேது திசை காலங்களில் அவ்வளவு நல்ல பலன்களை எதிர்பார்க்க முடியாது. உடல் நிலையில் பாதிப்பு, திருமண வாழ்வில் பிரச்சனை வாழ்வில் முன்னேற்றமற்ற நிலை உண்டாகும்.
     
நான்கவதாக வரும் சுக்கிரன் திசை 20 வருட காலங்களில் நல்ல மேன்மைகளை அடைய முடியும். பொருளாதார உயர்வும் அசையும் அசையா சொத்து சேர்க்கையும் உண்டாகும். பொன் பொருள் சேரும்.
     
சூரிய திசை 6 வருட காலங்கள் நடைபெறும் இத்திசை காலங்களில் சற்று ஏற்ற இறக்கமான பலன்கள் உண்டாகும். தந்தைக்கு சோதனைகள் ஏற்படும்.

ஸ்தல மரம்;
     
அனுஷ நட்சத்திர காரர்களின் ஸ்தல மரம் மகிழம்பூ மரமாகும். இம்மரமுள்ள ஸ்தலங்களில் வழிபாடு செய்தால் நற்பலன் அமையும். இந்த நட்சத்திரத்தை கும்ப லக்னம் அமைந்த முன்னிரவில் 10 மணியளவில் தலைக்கு நேராக காண முடியும்.
செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்
     
அனுஷ நட்சத்திர நாளில் மஞ்சள் நீராட்டுதல், திருமணம், சீமந்தம் வாஸ்துபடி வீடு கட்ட தொடங்குதல், புது ஆடை ஆபரணம் அணிதல் உபநயனம் செய்தல், கல்வி கற்க தொடங்குதல், புது மனை புகுதல், தானியம் சேர்த்தல், விதை விதைத்தல், கதி வறுத்தல், தெய்வ பிரதிஷ்டை செய்தல் வாசற் கால் வைத்தல் போன்றவற்றை செய்யலாம்.

வழிபாட்டு ஸ்தலங்கள்
திருவெற்றியூர்;
     சென்னைக்கு வடக்கே 8.கி.மீ தொலைவிலுள்ள புற்றிடங் கொண்டார், ஆதிபுரீசுவராக அருள் பாலிக்கும் ஸ்தலம். ஸ்தல விருட்சம் மகிழ மரம்.
திருவண்ணாமலை;
     திருமாலும் நான்முகனும் அடி&முடி தேடிய போது அவர்களுக்கு எட்டாமல் அண்ணாமலையாக இறைவன் தோன்றிய ஸ்தலம்.
நீடூர்;
     மயிலாடு துறைக்கு வடக்கே 5 கி.மீ தொலைவில் மகிழ வனம் கொண்ட ஊழிக் காலத்தும் அழியாதலால் நீடூர் ஆனது. லட்சுமி நாராயண பெருமாள் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார்.

கூற வேண்டிய மந்திரம்
     ஓம் நாராயணாய வித்மஹே
     வாசுதேவாய தீமஹி
     தன்னோ விஷ்ணு பிரசோதயாத்
அனுஷ நட்சத்திரத்திற்கு பொருந்தாத நட்சத்திரங்கள்
     பரணி, பூசம்,பூராடம்,உத்திரட்டாதி, பூரம் ஆகியவை பொருந்தாது.

விசாகம்



     இருபத்தேழு நட்சத்திரங்களின் வரிசையில் பதினாராவது இடத்தை பெறுவது விசாக நட்சத்திரமாகும். இது ஒரு பெண் நட்சத்திரமாக கருதப்படுகிறது. இதன் அதிபதி தேவகுருவான குருபகவானாவார். இதன் 1,2,3&ஆம் பாதங்கள் துலா ராசிக்கும், 4&ம் பாதம் விருச்சிக ராசிக்கும் உரியதாகும். இதில் 1,2,3ம் பாதங்கள் வயிற்றின் கீழ் பகுதி, சிறுநீர்ப்பை, சிறுநீரகங்கள் போன்றவற்றை ஆளுமை  செய்கின்றன. 4&ம் பாதம் சிறுநீர்ப்பை, பிறப்பு உறுப்பு, குதம், சிறுகுடல் போன்றவற்றை ஆள்கின்றது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதலெழுத்துக்கள் தி, து,தே, தோ தொடர் எழுத்துக்கள் தூ,தை ஆகியவை.

குண அமைப்பு
     
விசாக நட்சத்திராதிபதி குரு பகவான் என்பதால் தான தருமங்கள் செய்வதில் வல்லவராகவும், வேண்டியவர் வேண்டாதவர் என பிரித்து பார்க்காத குணம் கொண்டு இருப்பர்கள். முன் கோபம் இருந்தாலும் நல்ல குணசாலியாகவும், அறிவாற்றல் மிக்கவராகவும் இருப்பார்கள். நியாய அநியாயங்களை பயப்படாமல் எடுத்துறைப்பார்கள். வசீகரமான முக அமைப்பும், கட்டாண உடல்வாகும் சிவந்த கண்களும் உடையவர்கள் நல்ல நீதிமானாகவும், மக்களிடம் அடக்கமாகவும் அன்பாகவும் பேச கூடியவராகவும் இருப்பார்கள். பல கலைகளையும் கற்று வைத்திருப்பார்கள். தன்னுடைய கொள்கைளிலிருந்து எந்த நெருக்கடியான நேரத்திலும் மாறமாட்டார்கள். மனதில் ஒரு முடிவு எடுத்து விட்டால் அந்த மகேசனே வந்து சொன்னாலும் மாற்றி கொள்ள மாட்டார்கள். சூட்சும புக்தி உடையவர்கள் என்பதால் கலகமும் செய்வார்கள். சற்று பொறாமை குணமும் இருக்கும். பெரியவர்களை மதிக்கும் பண்பு, பல பெரிய மனிதர்களின் தொடர்பும் சமுதாயத்தில் பெயர் புகழை உயர்வடைய செய்யும், பல கோடி கொட்டி கொடுத்தாலும் பொய் பேச மாட்டார்கள்.

குடும்பம்;
     
விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சற்று காலம் கடந்து தான் திருமணம் நடைபெறும். திருமண வாழ்வில் நிறைய சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புண்டு என்பதால் சரியான பொருத்தத்தையும், ஜாதகத்தையும் ஆராய்ந்து மணம் முடிப்பது நல்லது. சிலருக்கு வயதில் மூத்தவர்களை திருமணம் செய்ய கூடிய  நிலையும், ஏற்கனவே மண மானவர்களை மணம் முடிக்க கூடிய நிலையும் உண்டாகும். நல்லவருக்கு நல்லவராகவும், தீயவருக்கு தீயவராகவும் நடந்து கொள்வார். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வார். எதையும் சரியாக புரிந்து கொள்ளாமல் உறவினர்களிடம் சண்டையிட கூடிய சூழ்நிலையும் உண்டாகும். உடல் நலத்தை பேணுவதில் அக்கரை எடுக்க மாட்டார்கள். எதையும் அடக்கி ஆளும் வல்லமை யிருக்கும். அடிக்கடி நோய் வாய்பட்டு மருத்துவ செலவுகளை எதிர்கொள்வார்கள். சற்று கஞ்கனாகவும் சிறந்த பக்திமானாகவும் இருப்பார்கள்.

தொழில்;
     
விசாக நட்சத்திர காரர்கள் நல்ல கல்வி மான்களாகவும், அறிவாற்றல் உடையவராகவும் இருப்பதால் மனநோய் மருத்துவராகவும், கோயில் அறநிலையத் துறையில் பணிபுரிபவராகவும் மேடை பேச்சாளர்களாகவும் வங்கியில் பணிபுரிபவர்களாகவும், ரேஸ், ரெவின்யூ பெரிய கம்பெனிகளில் வர்த்தக ரீதியாக பிரதி நிதிகளாகவும் பணிபுரிவார்கள் நீதி துறையிலும், கல்லூரி பேராசியர்களாவும், அரசியல் மற்றும் அரசு துறைகளில் பணிபுரிபவர்களாகவும் இருப்பார்கள். பல இடங்களில் உயர்பதவிகளை வகிக்கும் ஆற்றல் கொண்டவர்கள். கலை கணிதம் போன்றவற்றிலும் ஈடுபாடு அதிகம் இருக்கும்.  சிறு வயதில் சில சங்கடங்களை சந்தித்தாலும் 23 வயதிற்கு மேல் நிறைய சம்பாதிக்கும் யோகம் உண்டாகும் தேவை அதிகரிக்கும் போது தான் பணம் மீது அதிக நாட்டம் உண்டாகும். மத குரு சித்தர்கள் மீது அதிக ஈடுபாடு இருக்கும்.

நோய்கள்;
     
உடல் நலத்தில் மீது அதிக அக்கரை எடுத்து கொள்ளாத காரணத்தால் அடிக்கடி நோய் வாய் படுவார்கள். பலமற்ற இருதயம் கொண்டவர்கள் என்பதால் இருதயம் கொண்டவர்கள் என்பதால் இருதய சம்மந்தப்பட்ட நோய்கள் சிறு நீரகங்களில் பாதிப்புகள் உண்டாகும்.

திசை பலன்கள்;
     
விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முதல் திசையாக வரும் குரு திசை மொத்த வருட காலங்கள் 16 என்றாலும், பிறந்த நேரத்தை கொண்டு கணக்கிட்டு மீதமுள்ள தசா புக்திகளை பற்றி அறியலாம். பிறக்கும் போதே சுப கிரகமான குருவின் திசை வருவதால் கல்வியில் மேன்மை குடும்பத்தில் சுபிட்சம், பெரியோர்களை மதிக்கும் பண்பு போன்ற யாவும் சிறப்பாக இருக்கும்.
    
இரண்டாவதாக வரும் சனி திசை மொத்தம் 19 வருடங்கள் நடைபெறும் சனி பலம் பெற்று அமைந்திருந்தால் நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம், அசையா சொத்துக்களின் சேர்க்கை வேலையாட்களால் அனுகூலம் உண்டாகும். சனி பலமிழந்திருந்தால் அடிக்கடி நோய் வாய்பட நேரிடும்.
     
மூன்றாவதாக வரும் புதன் திசை மொத்தம் 17 வருடங்கள் நடைபெறும். இத்திசை காலங்களில் ஒரளவுக்கு ஏற்ற இறக்கமானப் பலன்களை பெற முடியும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும்.
     
நான்காவதாக வரும் கேது திசை 7 வருட காலங்கள் நடைபெறும். ஆன்மீக  தெய்வீக காரியங்களில் நாட்டமும் தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் மேற் கொள்ளும் வாய்ப்பும் உண்டாகும். இல்வாழ்வில் ஈடுபாடு குறையும்.
    
ஐந்தாவதாக வரும் சுக்கிர திசை காலங்கள் இருபது வருடங்கள் நடைபெறும். இத்திசை காலங்களில் பொன் பொருள் சேரும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். பண வரவுகளும் சிறப்பாக இருக்கும். சொகுசான வாழ்க்கையும் அமையும்.

ஸ்தல மரம்;
விசாக நட்சத்திரகாரர்களின் ஸ்தல மரம் விளா மரமாகும். இம்மரமுள்ள ஸ்தலங்களை வழிபாடு செய்தால் நற்பலன் விளையும்.குயவன்  சக்கரத்தை போல ஐந்து நட்சத்திரங்கள் கொத்தாக இருக்கும். இதை ஜீன் மாதத்தில் இரவு பன்னிரெண்டு மணியளவில் வானத்தில் காணலாம்.

செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்
சிற்ப கலை கற்றல், நாட்டியம் பயிறுதல், அக்னி காரியங்கள் செய்தல், மந்திரம் கற்றல், தேவ புத்ரு பூஜை விதை விதைத்தல், கிணறு குளத்தை சீர்படுத்துதல், வியாதிக்கு மருந்துண்ணுதல் போன்றவற்றை செய்யலாம்.
வழிபாட்டு ஸ்தலங்கள்
அத்தாள நல்லூர்;
     நெல்லை மாவட்டம் வீர நல்லூருக்கு வடகிழக்கே 7 கி.மீ தொலைவிலுள்ள ஆனைக்கருள் செய்த பிரான் என்ற புகழோடு கஜேந்திரவாதப் பெருமாள் அருள்பாலிக்கிறார்.
திருநின்றியூர்;
     மயிலாடுதுறைக்கு வடகிழக்கே 8 கி.மீ தொலைவில் உள்ள லட்சுமி புரீசுவரர்&உலகநாயகி அருள் பாலிக்கும் திருஸ்தலம்.
கபிஸ்தலம்;
     தஞ்சை, பாப நாசத்துக்கு வடக்கே 3 கி.மீ தொலைவில் கும்ப கோணம் திருவையாறு சாலையில் விளாமரங்கள் நிறைந்த ஸ்தலம் மூலவர் கஜேந்திர பெருமாள் தாயார் ரமாமணிவல்லி
கூற வேண்டிய மந்திரம்;
     ஓம் தத்புருஷாய வித்மஹே
     மஹாஸேனாய தீமஹி 
     தன்னோ ஷண்முக ப்ரசோதயாத்

விசாக நட்சத்திரத்திற்கு பொருந்தாத நட்சத்திரங்கள்
     கிருத்திகை, உத்திரம்,புனர்பூசம், உத்திரம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் பொருந்தாது.

சுவாதி



இருபத்தேழு நட்சத்திரங்களின் வரிசையில் பதினைந்தாவது இடத்தை பெறுவது சுவாதி நட்சத்திரமாகும். இதன் அதிபதி ராகு பகவானாவார். இது ஒரு ஆண் பெண் இனமாக கருதப்படுகிறது. இவர் துலா ராசிக்குரியவராவார். உடல் பாகத்தில் தோள் பட்டை, சிறு நீரகம் போன்ற உறுப்புகளை இவர் ஆளுமை செய்கிறார். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதலெழுத்துக்கள் ரூ, ரே, ரோ, த தொடர் எழுத்துக்கள் தா ஆகியவையாகும்.
குண அமைப்பு;
     
சுவாதி நட்சத்திராதிபதி ராகு பகவான் என்பதால் முன்கோபம் அதிகமிருந்தாலும் நல்ல அறிவுள்ள திறமைசாலிகள். நற்பண்புகளும் உடையவர். மனித உரிமைகளைப் பற்றி அடிக்கடி சட்டம் பேசுவார்கள். பிறருக்காக அதிகம் உதவி செய்வார்கள். அனைவரையும் தன் வசம் இழுத்து கொள்ள கூடிய ஆற்றல் கொண்டவர்கள். சில நேரங்களில் தான் சொல்வது தான் சரி என தவறான வழியினையும் காட்டி விடுவார்கள். திடமான புக்தி உடையவர்கள் என்றாலும் அடிக்கடி தன் புக்தியை மாற்றி கொள்வார்கள். எளிதல் பயப்படும் குணம் கொண்டவர்கள். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எல்லாரிடமிருந்தும் வித்தியாசப் படுவார்கள் எல்லா நேரமும் சுறுசுறுப்பாக காணப்படுவார்கள் புன்னகை பூத்த முகமும் நீண்ட விரல்களும், பிறரை வசீகரிக்கும் தோற்றமும் பலர் மத்தியில் ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தும். விளையாட்டு குணம் அதிகமிருக்கும். சுய மரியாதையை இழக்க விரும்ப மாட்டார்கள். யார் என்ன சொன்னாலும் தனக்கு சரியெனப் பட்டதை மட்டுமே செய்வார்கள். அதில் தவறுகள் நேர்ந்தால் பகிங்கிரமாக மன்னிப்பையும் கேட்பார்கள். பெரியவர் சிறியவர் என பாகுபாடின்றி அனைவரிடமும் அன்பாக பழகுவார்கள். இவர்களின் தோற்றத்தை கொண்டு வயதை எடை போட முடியாது. நல்ல எழுத்தாற்றலும் பேச்சாற்றலும் கொண்டவர்கள்.

குடும்பம்;
     
சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எது நல்லது, எது கெட்டது என ஆராய்ந்து செயல்படுவார்கள். உற்றார் உறவினர்கள் மீது மதிப்பும் மரியாதையும் கொண்டவர்கள். மண வாழ்க்கை சற்று தாமதமாகத் தான் அமையும். அதிக பிள்ளைகளை பெற்று கொள்ள விட்டாலும் பிள்ளைகள் மீது அதிக பாசம் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு முழு சுதந்திரத்தை கொடுப்பதுடன் அவர்களுக்கு தேவையானவற்றை தாராளமாக செய்து கொடுப்பார்கள். முன் கோபம் அதிகமுடையவர்கள் என்பதால் கணவன் மனைவியிடத்தில் அடிக்கடி கருத்து வேறுபாடுகளும் உண்டாகும். பிராணிகள் பறவைகள் அனைத்தின் மீதும் பாசம் கொண்டவர்கள். மலை கடல் மரம் கொடி செடி போன்றவற்றினை அதிகம் விரும்பி நேசிப்பார்கள். குடும்பத்திலுள்ளவர்களிடம் சற்று விட்டுக் கொடுத்து நடந்து கொண்டால் மண வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும்.
தொழில்;
சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகல விஷயங்களைப் பற்றி தெரிந்து வைத்திருந்தாலும் கற்றது கை மண் அளவு  என்பதற்கேற்ப அடக்கத்துடன் நடந்து கொள்வார்கள். சங்கீதம், நாட்டியம், இலக்கியம் போன்றவற்றில் அதிக நாட்டம் இருக்கும். நல்ல மனவலிமை கொண்டவர்கள் என்பதால் தொழில் ரீதியாக உண்டாக கூடிய பிரச்சனைகளை வித்தியாசமான முறையில் தீர்த்து வைப்பார்கள். மொத்த  வியாபாரிகளாகவும், மார்கெட்டிங் துறையில் வல்லவர்களாகவும் இருப்பார்கள். எப்பொழுதும் சுதந்திரமாகவே செயல்படுவார்கள். சகல சாஸ்திரங்களையும் தெரிந்து வைத்திருப்பார்கள். முதலாளி தொழிலாளி என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரையும் சமமாக நடத்துவார்கள். சிலர் கலை துறையை சார்ந்தவர்களாக-வும், பேராசிரியர்களாகவும் கெமிக்கல் இஞ்சினியர்களாகவும் ஏரோனாட்டிக்ஸ். கம்பியூட்டர் போன்ற துறைகளிலும் சிறந்து விளங்குவார்கள்.

நோய்கள்;
சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, தோல் நோய், ஹார்ட் அட்டாக், சிறு நீர் குழாய்களில் பாதிப்பு, இரண்யா கோளாறு, கர்ப்பபை போன்றவற்றில் பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகள் உண்டாகும்.
திசைப்பலன்கள்;
    
சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ராகு திசை முதல் திசையாக வரும். இத்திசையின் மொத்த வருட காலங்கள் 18 என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு ராகு திசையின்  மீதமுள்ள தசா புக்திகளைப் பற்றி அறியலாம். இளம்வயதில் ராகு திசை நடைபெறும் என்பதால் ராகு நின்ற வீட்டதிபதி பலம் பெற்று சுபர் பார்வையுடனிருந்தால் கல்வியில் முன்னேற்றமும் பெற்றோருக்கு உயர்வும் உண்டாகும். அதுவே ராகு பாவ கிரக சேர்க்கையுடனிருந்தால் பேச்சில் வேகம், கல்வியில் மந்த நிலை பிடிவாத குணம், பெரியவர்களிடம் கருத்து வேறுபாடு உண்டாகும்.
     
இரண்டாவதாக வரும் குரு திசை காலங்களில் வாழ்வில் முன்னேற்றம், கல்வியில் ஈடுபாடு எடுக்கும் முயற்சிகளில் வெற்றி. பெற்றோர் பெரியோர்களிடையே ஒற்றுமை குடும்பத்தில் திருமண சுப காரியங்கள் நடைபெறும் அமைப்பு, பணவரவுகள் தாராளமாக இருக்கும் யோகம் கொடுக்கும்.
மூன்றாவதாக வரும் சனி திசை 19 வருட காலங்கள் நடைபெறும். சனி பலம் பெற்றிருந்தால் யோகமும் முன்னேற்றமும், சமுதாயத்தில் பெயர் புகழ் உயரக்கூடிய வாய்ப்பும் உண்டாகும். பொருளாதாரம் மேம்படும்.
     
நான்காவதாக வரும் புதன் திசையிலும் எதிர்பார்த்த உயர்வுகளைப் பெற முடியும். புதன் திசை 17 வருடங்கள் நடைபெறும். இக்காலங்களில் எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும் முன்னேற்றமும் உண்டாகும். பண வரவுகளும் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும்.
     
சுவாதி நட்சத்திரகாரர்களின் ஸ்தல மரம் மருத மரமாகும். இம்மரம் அமைந்துள்ள திரு ஸ்தலங்களை வழிபாடு செய்வது நல்லது மாணிக்கம் போன்ற ஜோதியுடன் காட்சி தரும் இந்த நட்சத்திரத்தை ஜீன் மாதம் இரவு 10 மணியளவில் வானத்தில் காணலாம்.
சுவாதி நட்சத்திரத்தில் செய்ய கூடிய நல்ல காரியங்கள்
மாங்கல்யம் செய்தல், திருமணம் செய்தல், பெயர் சூட்டுதல், பூ முடித்தல், முடி களைதல், வீடு வாகனம் வாங்கல், கல்வி ஜோதிடம் மருத்துவம் கற்றல், அன்ன தானம் ஆயுத பிரயோகம், சமுத்திர யாத்திரை செய்தல், பயிடுதல், விதை விதைத்தல், தானியம் வாங்குதல், புதிய ஆடை ஆபரணம் அணிதல் போன்ற நற் காரியங்களை செய்யலாம்.
வழிபாட்டு ஸ்தலங்கள்
பிள்ளையார்பட்டி;
     சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூருக்கு கிழக்கே 8 கி.மீ தொலைவிலுள்ள மருதீசுவரர் அருள் பாலிக்கும் மருதகுடி ஸ்தலம்
ஸ்ரீரங்கம்;
     ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தருகிலுள்ள காட்டழகிய சிங்கர் திருக்கோயில்
திருப்புடை மருதூர்;
     நெல்லை மாவட்டம் அம்பா சமுத்திரத்துக்கு வடகிழக்கே 7 கி.மீ தொலைவிலுள்ள தாமிரபரணி ஆற்றங்கரையிலுள்ள இந்திரன் வழிபட்ட ஸ்தலம். தைபூசத்தன்று தரிசனம் செய்வது மிகவும் சிறப்பு.
கடத்தூர்;
     கோவை மாவட்டம் உடுமலை பேட்டைக்கு வடகிழக்கே 18 கி.மீ தொலைவில் அமராவதி ஆற்றங்கரையில் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கும் அர்ஜீனேஸ்வரர் திருக்கோயில்
கூற வேண்டிய மந்திரம்
     உக்ரம் வீரம் மகாவிஷணும்
     ஜீவலந்தம் ஸர்வதேமுகம்
     ந்ருஸிம்ஹம் பிஷனம் பத்ரும்
     ம்ருத்யும்ருத்யும் நமாம்யஹம்!
பொருந்தாத நட்சத்திரங்கள்
     ரோகிணி, அஸ்தம், திருவோணம், திருவாதிரை, சதயம் ஆகிய நட்சத்திரங்கள் பொருந்தாது.

உத்திர


    இருப்தேழு நட்சத்திரங்களில் பன்னிரெண்டாவது இடத்தை பெறுவது உத்திர நட்சத்திரமாகும். இதன் அதிபதி சூரிய பகவானாவார். இந்த நட்சத்திரத்தின் முதல் பாதம் சிம்ம ராசிக்கும்,  2,3,4,&ம் பாதங்கள் கன்னி ராசிக்கும் உரியதாகும். இது ஒரு ஆண் நட்சத்திரமாக கருதப்படுகிறது. இது உடலில் முதுகெலும்பு பகுதியை முதல் பாதமும்,  2,3,4&ம் பாதங்கள் குடல், சிறு நீர்பை, கல்லீரல் போன்ற பாகங்களை ஆளுமை செய்கிறது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதலெழுத்துக்கள் டே, டோ, ப, பி ஆகியவை. தொடர் எழத்துக்கள் பா, டீ ஆகியவையாகும்.

குண அமைப்பு;
     உத்திர நட்சத்திரல் பிறந்தவர்களுக்கு நட்சத்திராதிபதி சூரிய பகவான் என்பதால் நல்ல மன வலிமையும், உண்மை பேசும் குணமும், கல்வி கேள்விகளில் சிறந்தவராகவும், நல்ல அறிவாற்றல் கொண்டவாகளாகவும் இருப்பார்கள். கம்பீரமான நடையும், பெண்களை கவரும் உடலமைப்பும் இருக்கும். இவர்களை கண்டவர்கள் மேலும் மேலும் பேசவும் பழகவும் ஆசைப்படுமளவிற்கு வசீகர தோற்றமிருக்கும். அனைவரையும் கவரக் கூடிய பேச்சாற்றல் இருந்தாலும் குறைகளை கண்டால் முகத்தில் அடித்தாற் போல பேச கூடியவர்கள். எந்த இக்கட்டான சூழ்நிலையாக இருந்தாலும் தங்களுடைய நிலைமையிலிருந்து தடம் மாறாமல் சமாளிப்பார்கள். அனுபவ அறிவு அதிகமிருக்கும். ஆன்மீக தெய்வீக காரியங்களிலில் ஈடுபாடு அதிகமிருக்கும். எவரையும் அலட்சியம் செய்ய மாட்டார்கள். தன்னலத்தை விட பிறர் நலத்தை பேணி காப்பார்கள். சிக்கனத்தை கையாள்பவராகவும் சுயமரியாதையும் கண்ணியமும் உடையவராகவும் இருப்பார்கள்.

குடும்பம்;
     உத்திர நட்சத்திரகாரர்கள் குடும்பத்தின் மீது அதிக அக்கரையும் பாசமும் கொண்டிருப்பார்கள். முன்கோபத்தால் சிறுசிறு வாக்கு வாதங்களை எதிர்கொள்ள நேரிட்டாலும் குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். இளமை காலத்தில் சிறு துன்பங்களை சந்திக்க வேண்டியிருந்தாலும், முப்பது வயதிலிருந்து செல்வம், செல்வாக்கு யாவும் சேரும். பூர்வீக சொத்துக்கள் அதிகமிருந்தாலும் தங்களுடைய சொந்த முயற்சியால் வீடு மனை, வண்டி வாகனங்கள் போன்றவற்றை சேர்ப்பார்கள். ஆடம்பரப் பொருட்களை வாங்கி சேர்ப்பார்கள். அடிக்கடி பசியெடுப்பதால் சிறுக சிறுகவே உணவுகளை உண்பார்கள். சிறு வயதிலேயே தாய் அல்லது தந்தையை இழக்க வேண்டியிருக்கும். மனைவி பிள்ளைகளின் மீது அதிக அக்கரை உடையவராக இருப்பார்கள்.
தொழில்;
     உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மனோதிடமும் அறிவாற்றலும் அதிகம் இருப்பதால் பெரிய அளவில் வியாபாரம் செய்பவர்களாகவோ அல்லது பெரிய பெரிய நிறுவனங்களை அமைத்து அதில் பல ஆட்களை வைத்து வேலை வாங்குபவராகவோ இருப்பார்கள். தொழிலாளி முதலாளி என்ற பாகுபாடின்றி அனைவரையும் சமமாக நடத்துவதால் நல்ல மனதுள்ளவர்கள் என்று பெயரெடுப்பார்கள். யார் மனதையும் புண்படுத்தாமல் தட்டி கொடுத்து வேலை வாங்குவார்கள். வேத சாஸ்திரம் மற்றும் ஜோதிடம், கலை, இசை போன்ற வற்றாலும் சம்பாதிக்கும் யோகம் உண்டாகும். எந்தவொரு போட்டி பொறாமைகளையும் தவிடு பொடியாக்க கூடிய அளவிற்கு மனோதிடம் பெற்றவர்கள்.

நோய்;
     
இவர்களுக்கு முதுகில் வலியும் கழுத்து வலியும், இரத்த கொதிப்பு, ரத்த நாளங்களில் அடைப்பும் மூளை  நரம்புகளில் ரத்த அடையும் உண்டாகும். உடல் நிலையில் பல ஹீனமாக இருப்பார்கள்.

திசை பலன்கள்;
   
உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முதல் திசையாக வரும் சூரிய திசை 6 வருடங்கள் நடைபெறும் என்றாலும் பிறந்த நேரத்தை வைத்து கணக்கிட்டு மீதமுள்ள சூரிய திசை காலங்களை அறியலாம். சூரிய பகவான் பலம் பெற்று கேந்திர திரிகோண ஸ்தானங்களில் அமைந்திருந்தால் குடும்பத்தில் சுபிட்சம், தந்தைக்கு முன்னேற்றம் கொடுக்கும். பலமிழந்திருந்தால் உஷ்ண சம்மந்தப்பட்ட பிரச்சனைகளையும் தந்தைக்கு கெடுபலன்களையும் உண்டாகும்.
     
இரண்டாவதாக வரும் சந்திர திசை காலங்களிலும் ஜல தொடர்புடைய பாதிப்புகள் ஏற்பட்டாலும் கல்வியில் ஏற்ற இறக்கமான சூழலை உண்டாக்கும்.
     
மூன்றாவதாக வரக் கூடிய  செவ்வாய் திசையிலும் எதிர்பார்த்த அளவிற்கு முன்னேற்றம் ஏற்படாது என்றாலும் எதிர் நீச்சல் போட்டாவது முன்னேற்றத்தை அடைந்து விடமுடியும்.
நான்காவதாக வரும் ராகு திசை மொத்தம் 18 வருட காலங்கள் நடைபெறும். ராகு நின்ற விட்டதிபதி பலம் பெற்று இருந்தால் பலவகையில் யோகத்தையும்  உண்டாக்கும். 
குரு திசை காலங்களும் ஒரளவுக்கு ஏற்றத்தை அளிக்கும். 6வதாக வரும் சனி திசை காலங்கள் உயர்வான அந்தஸ்தினை அள்ளிக் கொடுக்கும்.
     
உத்திர நட்சத்திர காரர்களின் ஸ்தல மரம் அலரி மரமும், இலந்தை மரமுமாகும். இம்மரத்தை தொடர்ந்து வழிபாடு செய்வதால் நற்பலன்களை பெற முடியும். இந்த நட்சத்திர ஜோடியை மார்ச் மாதத்தில் இரவு பன்னிரெண்டு மணிக்கு வானத்தில் காண முடியும்.
செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்;
     உத்திர நட்சத்திரத்தில், பூ முடித்தல், தாலிக்கு பொன் உருக்குதல், திருமணம், சீமந்தம், புதிய வாகனம், ஆடை அணிகலன்களை வாங்குதல், வியாதிக்கு மருந்து உட்கொள்ள மேற்கொள்ளுதல், தெய்வ பிரதிஷ்டை செய்தல், விதை விதைத்தல், வியாபாரம் தொடங்குதல்,  புதிய வேலையில் சேருதல் குளம் கிணறு வெட்டுதல், ஆயுத பயிற்சி மேற்கொள்தல் போன்ற நல்ல காரியங்களை செய்யலாம். 

வழி பாட்டு ஸ்தலங்கள்;
கரவீரம்;
வடகண்டம் என தற்போது அழைக்கப்படும் கருவீர ஸ்தலத்தில் கர வீரநாதராகவும் அன்ன பிரத்யட்ச மின்னம்மையாகவும் அருள் பாலி ஸ்தலத்தின் ஸ்தல விருட்சம் அலரி மரமாகும். இது திருவாரூர்&கும்பகோணம் சாலையில் 10.கி.மீ தொலைவில் உள்ளது.
காஞ்சிபுரத்து மேற்கேயிருக்கும் திருப்பனங்காட்டில் வீற்றிருக்கும் ஸ்ரீ அமிர்தவல்லி தாயார் உடனுரை பனங்காட்பீஸ்வரரையும் வணங்கலாம்.
ஸ்ரீவைகுண்டத்திற்கு அருகிலுள்ள திருக்குளத்தை என்னும் ஊரில் வீற்றிருக்கும் ஸ்ரீ குளந்தைவல்லி தாயார்,ஸ்ரீஅலமேலு மங்கை தாயார் உடனுறை ஸ்ரீசோரநாத பெருமானையும் வழியலாம்.
சென்னை பாடியில் திருவலிதாயத்தில் உள்ள ஸ்ரீதாயம்மை உடனுறை ஸ்ரீவல்லிசரரையும் வழிபடுவது நல்லது.

சொல்ல வேண்டிய மந்திரம்
    ஓம் மஹாதேவ்யை சவித்மஹே
     விஷ்ணுபத்ன்யை ச தீமஹி
     தன்னோ லஷ்மி பிரசோதயாத்
பொருந்தாத நட்சத்திரங்கள்
     கிருத்திகை, புனர்பூசம், விசாகம், உத்திராடம், பூரட்டாதி ஆகிய ஆண் பெண் நட்சத்திரங்களை திருமணம் செய்ய கூடாது.

பூரம்



     இருபத்தேழு நட்சத்திரங்களின் வரிசையில் பதினோறாவது இடத்தை பெறுவது பூர நட்சத்திரமாகும். இதன் அதிபதி சுக்கிர பகவானாவார். இது ஒரு பெண் நட்சத்திரமாக கருதப்படுகிறது. பூர நட்சத்திரம் சிம்ம ராசிக்குரியதாகும். இது உடலில் முதுகெலும்பு, இதயம் போன்ற பாகங்களை ஆளுமை செய்கிறது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதலெழுத்துக்கள் மோ,ட,டி,டு ஆகியவை. தொடர் எழுத்துக்கள் மொ.மௌ ஆகியவையாகும்.
குண அமைப்பு;
     பூர நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் நட்சத்திராதிபதி சுக்கிரன் என்பதால் காண்பவர்களை கவர்ந்திழுக்கும் கட்டழகி கொண்டவர்களாக இருப்பார்கள். அழகாக ஆடை ஆணிகலன்களை அணிவதிலும் மிடுக்கான நடை நடப்பதிலும் இவர்களுக்கு நிகர் இவர்களே தான். காம உணர்வு அதிகமிருப்பதால் மனம் அலை பாயந்து கொண்டேயிருக்கும். பகட்டான வாழ்க்கையை வாழவே விரும்புவார்கள். நல்ல அறிவும் அறிவுக் கூர்மையும் பகைவர்களை வெல்ல கூடிய ஆற்றலும் அதிகமிருக்கும். மற்றவர்களை அனுசரித்து சென்று அவர்களின் மனம் புண்படாதபடி நடந்து கொள்வார்கள் என்றாலும் கோபம் வந்து விட்டால் கட்டு படுத்த முடியாது. பின்னால் வரக்கூடிய விளைவுகளை முன் கூட்டியே அறியும் திறமை இருக்கும். எதார்த்த குணமும், ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு இருக்கும். கற்பனை உலகில் சஞ்சரிப்பதுடன் தத்துவங்களையும் பேசுவார்கள்.
குடும்பம்;
     காதலில் வெற்றி பெற கூடிய ஆற்றல் மிக்கவர்கள் இவர்களின் பேச்சாற்றலால் மனைவி பிள்ளைகளை மட்டுமில்லாது உற்றார் உறவினர்களையும் வசப்படுத்தி வைத்து இருப்பார்கள். பிறர் நலனுக்காக எதையும் தியாகம் செய்வார்கள். இளம் வயதில் நெருங்கியவர்களை இழக்க கூடிய சூழ்நிலைகள் உண்டாவதால் மனதில் எப்பொழுதும் ஒரு சோகம் இழையோடி கொண்டிருக்கும். இயற்கை உணவுகளை விரும்பி உண்பார்கள். பெற்ற பிள்ளைகளால் நற்பலன்களை அடைவார்கள். அடிக்கடி பயணங்களை மேற்கொள்ள கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். 30 வயதிற்கு மேல் அதிரடி மாற்றங்கள்  ஏற்பட்டு வீடு, வண்டி வாகனங்களை வாங்கி சேர்ப்பார்கள். சுகவாழ்விற்கு பஞ்சம் இருக்காது என்றாலும் ஆடம்பர செலவுகளை அதிகம் செய்வதால் சேமிப்பு இல்லாமல் அடிக்கடி கடன் வாங்க கூடிய நிலையும் உண்டாகும்.
தொழில்;
     பூர நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஒயாது  உழைப்பதில் ஆர்வம் மிக்கவர்கள். குறுக்கு வழியில் பணம் சேர்ப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். நடிப்பு துறையில் அதிக ஆர்வம் உண்டு. அரசு உத்தியோகமோ, சொந்த தொழிலோ எதிலும் சம்பாதிக்கும் யோகம் அதிகமிருக்கும், சுற்றுலா துறை, பொது மக்கள் தொடர்பு துறை, வர்த்தக துறை போன்றவற்றில் பணி புரியும் ஆற்றல் உடையவர்கள். சிலர் புத்தக வியாபாரிகளாகவும், பெண்கள் உபயோக படுத்தக் கூடிய பொருட்களை விற்பனை செய்ய கூடியவர்களாகவும் வாகன திரவியங்களை விற்பவராகவோ இருப்பார்கள். சூதாடத்திலும் எதிர்பாராத வகையில் பண வரவுகள் உண்டாகும். கலை, இசை, அரசியல், ஆன்மீகம், ஆடல் பாடல் போன்ற துறைகளிலும் ஜொலிப்பார்கள்.

நோய்;
     இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சிறு வயதில் ஏற்பட்ட நோய்களால் பின் விளைவுகளை மத்திம வயதில் சந்திப்பார்கள் சிற்றின்ப பிரியர்கள் என்பதால் பால்வினை நோய்களும் தாக்கும். சர்க்கரை வியாதியாலும் அவதிபடுவார்கள். மின்சாரம் தாக்கும், மனநிலையில் பாதிப்புகளும் உண்டாகும்.

திசை பலன்கள்;
     பூர நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முதல் திசையாக சுக்கிர திசை வரும். இதன் மொத்த வருட காலங்கள் 20 என்றாலும் பிறந்த நேரத்தை வைத்து கணக்கிட்டு மீதமுள்ள சுக்கிர திசா காலங்களை பற்றி அறியலாம். இளம் வயதில் சுக்கிர திசை வருவதால் சுக்கிரன் பலம் பெற்று கேந்திர திரிகோண ஸ்தானங்களில் அமைந்திருந்தால் சுக்கிர திசை காலங்களில் குடும்பத்தில் சுபிட்சம் ஆடை அணிகலன்களின் சேர்க்கை, உற்றார் உறவினர்களின் ஆதரவு, கல்வியில் முன்னேற்றம் போன்ற நற்பலன்களை அடைய முடியும். சுக்கிரன் பலமிழந்திருந்தால் இளமை கால வாழ்க்கையில் பல போராட்டங்கள் உண்டாகும்.
     
இரண்டாவதாக வரும் சூரிய திசையின் மொத்த காலங்கள் 6 வருடங்களாகும். இத்திசை காலங்களில் சிறு சிறு உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள், நெருங்கியவர்களிடம் கருத்து வேறுபாடுகள் உண்டாகும் என்றாலும் சூரியன் பலம் பெற்றிருந்தால் கல்வியில் ஏற்றம் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும்.
    மூன்றாவதாக வரக்கூடிய சந்திர திசையின் காலங்கள் 10 வருடங்களாகும். இத்திசை காலங்களில் தேவையற்ற மனக் குழப்பங்களும் முன்னேற்ற தடையும், தாய்க்கு ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படும்.
   
நான்காவதாக வரும் ராகு திசையின் காலங்கள் 18 வருடங்களாகும். இத்திசை காலங்களின் முற்பாதியானது யோகத்தை கொடுத்தாலும் பிற்பாதியில் கண்டங்களை உண்டாக்கி உடல் உஷ்ணத்தையோ, மாரகத்தையோ ஏற்படுத்தும்.

விருட்சம்;
     பூர நட்சத்திர காரர்களின் ஸ்தல விருட்சம் பலா மரமாகும். இம்மரத்தை வழிபாடு செய்வதால் நற்பலன்களை பெற முடியும். இந்த நட்சத்திரத்தை மார்ச் மாதம் இரவு சுமார் பதினோரு மணியளவில் உச்சி வானத்தில் பார்க்க முடியும்.

செய்ய கூடிய நல்ல காரியங்கள்
     பூர நட்சத்திர நாளில் நவகிரக சாந்தி செய்வது. நோயாளிகள் மருந்து உண்பது, குளிப்பது, சித்திரம் வரைவது,  வழக்குகளை வாதிடுவது போன்றவற்றை செய்யலாம்.

வழிபாட்டு ஸ்தலங்கள்
கஞ்சனூர்;
     கும்பகோணம்&மயிலாடுதுறை கல்லணை சாலையில் உள்ள அக்னீசுரர் கற்பகாம்பிகை அருள் பாலிக்கும் சுக்கிரனின் பரிகார ஸ்தலம்.
நாவலூர்;
     தஞ்சை மாவட்டம் கும்ப கோணம் திருவாரூர் சாலையில் திருச்சேறை மாடக் கோயில் எழுந்தருளியுள்ள பலாசவனநாதர்&பெரிய நாயகி அருள் பாலிக்கும் ஸ்தலம்.
தலைச்சங்காடு;
     நாகை மாவட்டம் மயிலாடுதுறை திருக்கடையூர் சாலையில் உள்ள ஆக்கூருக்கு வடக்கில் 1.கி.மீ தூரத்திலுள்ள கோச்செங்கட் சோழன் கட்டிய மாடக் கோயிலில் அருள் பாலிக்கும் சங்கருணா தேவசுவரர்&சௌந்தர நாயகி அருள் பாலிக்கும் ஸ்தலம் இவற்றை வழிபாடு செய்தால் நற்பலனை பெற முடியும்.
கூற வேண்டிய மந்திரம்;
ஸம் பூஜயாமி அர்ய மானம் பல்குனி தார தேவதாம் தூம் ரவர்ணம் ரதாருடம் ஸ சக்திகர சோயினம்

பூர நட்சத்திரத்திற்கு பொருந்தாத நட்சத்தரங்கள்
பரணி, பூசம், பூரம், அனுஷம், பூராடம், உத்திரட்டாதி போன்ற ஆண் பெண் நட்சத்திர காரர்களை திருமணம் செய்ய கூடாது.

மகம்

     இருபத்தேழு நட்சத்திரங்களின் வரிசையில் பத்தாவது இடத்தை பெறுவது மகம் நட்சத்திரமாகும். இதன் அதிபதி கேது பகவானாவார். இது ஒரு பெண் நட்சத்திரமாக கருதப்படுகிறது. மகம் சிம்ம ராசிக்குரிய நட்சத்தரமாகும். இது உடலில் இதயம், முதுகு, இருப்பின் மேல் பகுதி போன்ற பாகங்களை ஆளுமை செய்கிறது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதலெழுத்துக்கள் ம,மி,மு,மெ ஆகியவை. தொடர் எழுத்துக்கள் மா, மீ,மு ஆகியவைகளாகும்.
குணஅமைப்பு;
     மகத்தில் பிறந்தவர்கள் ஜெகத்தை ஆள்வார்கள் என்று பழைய நூல்களில் குறிப்பிட்டிருந்தாலும் எல்லாருக்கும் அந்த யோகம் அமைவதில்லை. எதிலும் தனித்தன்மை கொண்டவர்களாகவும், சுதந்திரத்தை விரும்புபவர்களாகவும் இருப்பார்கள். தங்கள் விஷயங்களில் மற்றவர்கள் தலையிட்டு செய்வதை விரும்ப மாட்டார்கள் வாழ்வில் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற வேட்கை மிக்கவர்கள். எப்பொழுதும் உண்மையே பேசுபவர்கள். கோபமிருக்கும் இடத்தில் தான் குணமிருக்கும் என்பதற்கேற்கேற்ப நியாமான கோபமும், குணமும் இருக்கும் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இயங்கி கொண்டேயிருப்பார்கள். தனக்கு கீழ் படிந்தவர்களை எந்த துன்பத்திலிருந்தும் காக்கும் இவர்கள் எதிரிகளை ஒட ஒட விரட்டியடிக்காமல் ஒயமாட்டார்கள். மனதில் ஒன்று, வெளியில் ஒன்று வைத்து பேச தெரியாதவர்கள். அனுபவ அறிவு அதிகமிருக்-கும். நேரம் காலம் பார்க்காமல் மற்றவர்களுக்கு உதவி செய்வார்கள்.
குடும்பம்;
     எதையும் முன் கூட்டியே அறியும் திறமை கொண்டவர்கள் என்பதால் குடும்ப வாழ்வில் அனுசரித்து செல்வார்கள். காதலித்து திருமணம் செய்து  கொள்வதையே விரும்புவார்கள். இளமையிலேயே சுக்கிர திசை வருவதால் திருமண வாழ்க்கை விரைவில் அமையும். சிற்றின்ப வேட்கை அதிக முடையவர்கள். இவர்களுக்கு ஆண் குழந்தை பாக்கியமே அதிகம். வாழ்க்ககையில் செல்வம் செல்வாக்கு அதிக மிருந்தாலும் எப்பொழுதும் எதையாவது மனதில் போட்டு குழப்பி கொண்டேயிருப்பார்கள். தவறு என மனதிற்கு பட்டால் பிறரிடம் மன்னிப்பு கேட்க தயங்க மாட்டார்கள். உற்றார் உறவினர்களிடம் கூட வலிய சண்டைக்கு போக மாட்டார்கள். வந்த சண்டையையும் விட மாட்டார்கள். இவர்களிடம் உதவி பெற்று வாழ்பவர்கள் கூட முன்னால் முகஸ்துதி பாடி விட்டு பின்னால் தூற்றிக் கொண்டிருப்பார்கள். மனைவி பிள்ளைகள் மேல் அதிக பாசமிருக்கும்.
தொழில்;
     
மக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எவ்வளவு கஷ்டமான பணியை எடுத்துக் கொண்டாலும் அதை பாடுபட்டு செய்து முடித்து பெரும் பணம் சம்பாதிக்க ஆசைபடுவார்கள். பரந்த மனப்பான்மையும், நல்ல நிர்வாகம் திறனும் உடையவர்கள். பிறரிடம் கைகட்டி அடிமையாக வேலை செய்ய விரும்ப மாட்டார்கள். எந்த பணியிலும் தானே முதன்மையாக இருக்க வேண்டும் என நினைப்பார்கள். இவர்கள் மருந்து, மாந்திரீகம், ஜோதிடம், சரித்திரம், தர்க்க சாஸ்திரம், புரண, இதிகாசம் ஆகியவற்றில் புகழ் பெற்று விளங்குவார்கள். பழம் பெரும் கலை, கலைகளை ஆராய்ச்சி செய்வதை விரும்புவார்கள். உளவியல் நிபுணர்களாகவும் இருப்பார்கள் பலர் பேராசியர், நடிகர், நடிகை, ஆடை வடிவமைப்பு, விளம்பர மாடல் போன்ற துறைகளிலும் ஈடுபடுவார்கள். வண்டி வாகனங்கள் மீது அதிக விருப்பமும் உண்டு. 26 வயதிலிருந்து 33 வயதுக்குள் சொந்த வீடு  யோகமும் 46 வயதிலிருந்து 52 வயதுக்குள் பெயர் புகழம் உயரும்.
நோய்கள்;
     இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உடலின் பின்புறம் வலி ஏற்படும். சிறு நீரக பிரச்சனையும் இருதய சம்மந்தப்பட்ட பிரச்சனையும் தண்டு வட ஜவ்வு காய்ச்சலும் ஏற்பட கூடிய வாய்ப்புகள் அதிகம்.
திசை பலன்கள்;
     மக நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முதல் திசையாக கேது திசை வரும். இதன் மொத்த வருட காலங்கள் 7 ஆகும் என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு மீதமுள்ள தசா காலங்களை அறியலாம். இத்திசை காலங்களில் உடல் ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள், கல்வியில் மந்தநிலை, தாய்க்கு ஆரோக்கியத்தில் பிரச்சனைகள் குடும்பத்தில் சற்று குழப்பங்கள் உண்டாகும்.
     
இரண்டாவது திசையாக வரும் சுக்கிர திசை மொத்தம் இருபது வருடங்கள் நடை பெறும் இளம் வயதிலேயே சுக்கிர திசை வருவதால் திருமண வாழ்க்கையும் இளம்வயதிலேயே நடைபெறும். சுக்கிரன் பலம் பெற்று அமைந்திருந்தால் செல்வம் செல்வாக்குடன் வாழும் யோகம் உண்டாகும். சுக்கிரன் பலமிழந்திருந்தால் இல்வாழ்க்கை போராட்டகரமானதாக இருக்கும்.
     
மூன்றாவதாக வரும் சூரிய திசை காலங்களில் சூரியன் பலமாக  இருந்தால் தந்தை வழியில் அனுகூலங்களை பெற முடியும். சூரியன் பலமிழந்திருந்தால் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகளும் தந்தைக்கு கெடுபலன்களும் உண்டாகும். 
நான்காவதாக வரும் சந்திர திசை மொத்தம் பத்து வருடங்கள் நடைபெறும் இக்காலங்களில் ஏற்ற இறக்கமான பலன்களை பெற முடியும் தேவையற்ற மன குழப்பங்கள் தோன்றி மறையும். குடும்பத்தில் நிம்மதி குறையும். 
     
ஐந்தாவதாக வரும் செவ்வாய் திசையின் மொத்த காலங்கள் 7 வருடங்களாகும். மக நட்சத்திரம் கேதுவின் சாரம் என்பதால் செவ்வாய் திசை மாரக திசையாகும். இதனால் உடல் நிலையில் பாதிப்புகள் ஏற்படும் என்றாலும் செவ்வாய் பலம் பெற்றிருந்தால் செல்வம் செல்வாக்கு உயரும். பூர்விக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும்.
     
மக நட்சத்திர காரர்களின் ஸ்தல விருட்சம் ஆலமரமாகும். இந்த மரத்தினை வழிபாடு செய்வதினால் நற்பலனை அடைய முடியும். இந்த நட்சத்திரத்தை பிப்ரவரி மாதம் இரவு  பன்னிரண்டு மணியளவில் உச்சி வானத்தில் காண முடியும்.
செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்
     
மக நட்சத்திரத்தில் திருமணம், தாலிக்-கு பொன் உருக்குவது, வாகனம் வாங்குவது, வேத விரதங்களை பூர்த்தி செய்வது, வாஸ்து படி வீடு கட்ட ஆரம்பிப்பது, ஆயிதம் பயிலுவது, களஞ்சியத்தில் தானியம் சேமிப்பது போன்றவற்றை தொடங்கலாம்.
வழிபாட்டு ஸ்தலங்கள்
திருவாலங்காடு;
     கும்பகோணம் மயிலாடுதுறை பாதையிலுள்ள வடா ரணீயேஸ்வரர் ஆலயம்
திருக்கச்சூர்;
     காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல் பட்டிலிருந்து வடக்கே 12.கி.மீ தொலைவிலுள்ள தாததில் திருமால் ஆமை வடிவில் ஈசனை வழிபட்டதால் கச்சர் என பெயர் கொண்டது. கூர்ம தீர்த்தமானது புனிதமானது
கிமுப்பழுபூர்;
     அரியலூர் மாவட்டத்திற்கு தெற்கே 10.கி.மீ தொலையில் ஆலந்துறை நாதராக ஈஸ்வரனும், அருந்தவ நாயகியும் அருள் புரியும் ஸ்தலம் இக்கோயில்களில் வழிபாடு செய்யலாம்.

கூற வேண்டிய மந்திரம்
     ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
     பாஸஹஸ்தாய தீமஹி
     தன்னோ ஸீர்ய ப்ரசோதயாத்

மக நட்சத்திரற்க பொருந்தாத நட்சத்திரங்கள்
     அஸ்வினி, ஆயில்யம், கேட்டை, மூலம், ரேவதி ஆகிய ஆண் பெண் நட்சத்திர காரர்களை திருமணம் செய்ய கூடாது.

ஆயில்யம்


இருப்த்தேழு நட்சத்திரங்களின் வரிசையில் ஒன்பதாவது இடத்தை பெறுவது ஆயில்ய  நட்சத்திரமாகும். இதன் அதிபதி புதன் பகவானாவார். இது ஒரு பெண் நட்சத்திரமாக கருதப்படுகிறது. இது உடலில் நுரையீரல், வயிறு கல்லீரல் போன்ற பாகங்களை ஆளுமை செய்கிறது. இது கடக ராசிக்குரிய நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதலெழுத்துக்கள் டி, டு, டே, டோ ஆகியவை. தொடர் எழுத்துக்கள் மெ, மை ஆகியவை யாகும்.

குண அமைப்பு;
ஆயில்ய நட்சத்திரத்தின் அதிபதி புதன் பகவான் என்பதால் நல்ல பேச்சாற்றலும் கல்வி அறிவும், சகல வித்தைகளையும் கற்றறியக்கூடிய ஆர்வமும் இருக்கும். அழகிய கண்களையும் சுருட்டை முடியையும் கொண்டவர்கள். எதிரிகளையும் நண்பர்களாக்கி கொள்வார்கள். தங்களுடை கனிவான பேச்சினால் கல்லையும் கரைய வைக்கும் சிறந்த அறிவாற்றல் கொண்டவர்கள் மன வலிமை¬யும், உடல் வலிமையும் ஒருக்கே பெற்றவர்கள். எந்த பிரச்சனையையும் எதிர் கொள்ள கூடிய திறனிருக்கும். நாளை நடப்பதை கூட முன் கூட்டியே அறிவர். மற்றவர்களின் ஆலோசனைகளை எளிதில் ஏற்க மாட்டார்கள் கண்களால் ஆயிரம் கதை பேசுவார்கள். சற்றே சஞ்சல குணமும் உண்டு. இவர்களின் வயதை தோற்றத்தை கொண்டு எடை போட முடியாது. இயற்கையை அதிகம் நேரிப்பவர்கள் பயணங்களில் அதிக ஆர்வம் உண்டு. ஒரே நேரத்தில் இரண்டு காரியங்களை சாதிக்க கூடிய ஆற்றல் கொண்டவர்கள்.

குடும்பம்;
     ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இளமையிலேயே சுக்கிர திசை வருவதால் விரைவிலேயே திருமண வாழ்க்கை அமைந்து விடும். இளமையில் வறுமை வயப்பட்டாலும் மத்திம வயதில் யோகம் உண்டாகும். மனைவி பிள்ளைகள் மீது அதிக பாசம் கொண்டவர்கள் இவர்களின் தேவைகளுக்காக அதிகம் செலவு செய்தால் பல தகிடு தத்த வேலைகளிலும் ஈடுபட்டு பணம் சம்பாதிப்பார்கள். பெற்றவர்கள் மீது அதிக பாசம் கொண்டவர்கள். ஆடம்பர வாழ்க்கையை வாழ விரும்புவதால் வண்டி வாகனம், பூமி மனை அனைத்தையும் சேர்ப்பார்கள். வாழ்க்கையையும் திட்டமிட்டு வாழ்வார்கள் நொறுக்கு தீனி விரும்பிகள் என்பதால் எப்பொழுதும் எதையாவது சாப்பிட்டு கொண்டேயிருப்பார்கள்.
தொழில்;
     ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வேலை செய்யும் இடத்தில் நீதி நேர்மை தவறாமல் நாணயத்துடன் நடப்பார்கள். மனசாட்சிக்கு மீறி எந்த பணியிலும் ஈடுபடமாட்டார்கள். குறிப்பாக கெட்டவர்களுக்கு துணை போக மாட்டார்கள். அதிக மன தைரியம் கொண்டவர்கள் இவர்களில் பலர் கல்லூரிகளில் பேராசியர்களாகவும், ஆய்வு கூடத்தில் அறிவியல் அறிஞர்களாகவும், இருப்பார்கள். மற்றவர்களை போல நடித்து காட்டுவதிலும், பழமொழிகளை உதாரணமாக கொண்டு பேசுவதிலும் வல்லவர்கள். 40 முதல் 47 வயதுக்குள் சொத்துக்களை வாங்கி குவிப்பார்கள். பெயர் புகழ் அந்தஸ்து யாவும் பெருகும். அதிகாரமிக்க பதவிகளிலும் அமர்வார்கள். பலரை நிர்வாகிக்கும் ஆற்றல் ஆலோசனை கூற கூடிய வல்லமையும் உண்டாகும் மெக்கானிக்கல், பொறியியல் துறைகளிலும் வல்லவர்கள்.
நோய்கள்;
     இவர்களுக்கு, நுரையீரல், வயிறு, உணவு குழாய் மற்றும் குடலுக்கு இடையிலுள்ள ஜவ்வு கல்லீரல், கணையம், ஈரல் போன்ற பாகங்களில் பிரச்சனைகள் உண்டாவதுடன், மூச்சு விடுவதில் சிக்கல்களும், மூட்டுகளில் வலியும், கால்களில் வீக்கமும், நரம்பு சம்மந்த பிரச்சனைகளும் உண்டாகி மருத்துவ செலவினை ஏற்படுத்தும்.

திசை பலன்கள்;
     ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முதல் திசையாக புதன் திசை வரும். இதன் மொத்த வருடங்கள் 17 என்றாலும் பிறந்த நேரத்தைக் கொண்டு கணக்கிட்டு மீதமுள்ள புதன்  தசா காலங்களை அறியலாம். முதல் திசையாக வரும் புதன் திசை காலங்களில் கல்வியில் உயர்வு நல்ல அறிவாற்றல் பேச்சாற்றல் ஆகியவை உண்டாகும். புதன் பலமிழந்திருந்தால் நரம்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் கல்வியில் மந்த நிலையை கொடுக்கும். ஆயில்ய நட்சத்திரம் மாமியாருக்கு ஆகாது என்று பண்டைய நூல்களில் எழுதியிருந்தாலும் அது உண்மையா என்ற பல கேள்விகள் இன்றும் உள்ளது.
     இரண்டாவதாக வரும் கேது திசையானது மொத்தம் 7 வருடங்கள் நடைபெறும் கேது திசை காலங்களில் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள், நரம்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள், கல்வியில் மந்த நிலை ஆகியவை உண்டாகும்.
     மூன்றாவதாக வரும் சுக்கிர திசை இருபது வருடங்கள் நடைபெறும் இத்திசை காலங்களில் சுக்கிரன் பலம் பெற்று அமைந்திருந்தால் எல்லா வகையிலும் மேன்மை, செல்வம் செல்வாக்கு சேரும் வாய்ப்பு, குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும்.
     சூரியன் 6வருடம் சந்திரன் 10 வருடம் செவ்வாய் 7 வருடம் என நடைபெறும் இத்திசை காலங்களில் கிரகங்கள் பலம் பெற்று அமைந்திருந்தால் மேன்மையான பலன்களை பெற முடியும். பலமிழந்திருந்தால் அதற்கேற்றபடி நன்மை தீமை கலந்த பலன்களை தான் பெற இயலும்.
     ஆயில்ய நட்சத்திர காரங்களுக்கு ராகு திசை மாரக திசையாகும். ஆயில்ய நட்சத்திர காரர்களின் ஸ்தல விருட்சம் புன்னை மரமாகும். இம்மரத்தை வழிபாடு செய்வதால் நற்பலன்கள் உண்டாகும். இந்த நட்சத்திரத்தை பிப்ரவரி மாதத்தில் இரவு பதினோறு மணியளவில் வானத்தில் காணலாம்.
செய்ய வேண்டிய நற்காரியங்கள்
     நவ கிரக சாந்தி செய்தல், ஆயுத பயிற்சி மேற்கொள்ளுதல், கிணறு, குளம் வெட்டுதல் மந்திர பிரயோகம் செய்தல் போன்றவற்றை இந்த நட்சத்திர நாளில் செய்யலாம்.
வழி பாட்டு  ஸ்தலங்கள்
சங்கரன் கோவில்;
     திருநெல்வேலிக்கு  வடக்கே 50.கி.மீ தொலைவில் அமைந்துள்ள திருத்தலத்தில் சங்கரலிங்கத்துக்கும், கோமதி அம்மனுக்கும் இடையில் சங்கர நாராயணன் சந்தியில் வழங்கப்படும் புன்னை மரப்பட்டையில் செல்லரித்து உருவான புற்று மண் பிரசாதம் எல்லா வித நோய்களையும் தீர்க்கும்.
புள்ள பூதங்குடி;
     கும்பகோணத்து வடமேற்கில் 11.கி.மீ தொலையில் உள்ள புஜாங்க சயனராக காட்சி தரும் ஸ்ரீராமர் ஸ்தலம் இங்கும் புண்ணை மரம் உள்ளது.
திருப்புகலூர்;
     திருவாரூர் மாவட்டம் நன்னிலத்துக்கு கிழக்கே 8.கி.மீ தொலைவிலுள்ள அக்னிஸ்வரர் அருள் பாலிக்கும் ஸ்தலம்.
நாகூர்;
     நாகை மாவட்டம் நாகபட்டினத்திற்கு வடக்கே 4.கி.மீ தொலைவில் உள்ள நாகநாதர் நாகவல்லி உள்ள ஸ்தலம். தல மரம் புன்னை.
திருவாரூர்;
     அருகிலுள்ள எண்கண் என்ற ஊரில் அருள் பாலிக்கும் ஸ்ரீ சுப்ரமண்ய சுவாமிகள் ஸ்தலம். இவற்றை வழிபாடு செய்வது சிறப்பு.
கூற வேண்டிய மந்திரம்
     ஓம் ஸஹஸ்ரபனாய வித்மஹே
     சர்ப்ப ராஜாய தீமஹி
     தந்நோ அனந்த ப்ரசோதயாத்

ஆயில்ய நட்சத்திரத்திற்கு பொருந்தாத நட்சத்திரங்கள்
     அஸ்வினி, ஆயில்யம், மகம், கேட்டை, மூலம், ரேவதி ஆகிய ஆண் பெண் நட்சத்திர காரர்களை திருமணம் செய்ய கூடாது.

கடவுளைக் கண்ட ஹரி சிங்

ஜெய்ப்பூரில், சுவாமி (சுவாமி விவேகானந்தர்) அரசின் தலைமைத் தளபதியான சர்தார் ஹரி சிங்குடன் மிகவும் நெருக்கமாகப் பழகினார். அவர் ஹரி சிங்கின் இல...