Wednesday, September 2, 2015

உலகின் முதல் டெஸ்ட் ட்யூப் பேபி அகத்தியர்.???



அகத்தியரின் வரலாறு கூறும் அறிவியல் உண்மை!


படித்தவர், பாமரர் அனைவரும் அகத்தியரை அறிவார்கள். ஆறுவகைச் சமயத்தினரும் அகத்தியரைப் போற்றுகின்றனர். குடுவையில் பிறந்தது, தென்புலம் தாழ்ந்த பொழுது பூமியைச் சமன் செய்தது, பார்வதி திருமணத்தைப் பொதிகையில் கண்டது, காவிரி கொணர்ந்தது போன்ற அகத்தியர் தொடர்பான வரலாறுகள் அனைத்திலும் அறிவியல் கூறுகள் பொதிந்துள்ளன.

சோதனைக்குழாய் குழந்தை

உலகின் முதல் சோதனைக்குழாய் குழந்தை அகத்தியர்தான் ! குடுவையில் கருத்தரித்து, வளர்ந்து வெளிப்பட்டதால் அவரை, கலயத்தில் பிறந்தோன் (கும்பசம்பவர்) என்றும், குடமுனி என்றும் கூறுவர். உயிர்கள் தாயின் கருப்பைக்கு வெளியே கருத்தரித்து வளர இயலும் என்ற அறிவியல் உண்மை, அகத்தியரின் பிறப்பிலேயே பொதிந்துள்ளது. அவ்வாறு, செயற்கை முறையில் உருவாக்கப்படும் உயிரினங்கள், தொடக்க நிலையில் இயல்புக்கு மாறான உருவத்தைப் பெற்றிருக்கும் என்பதும், இயல்பான வளர்ச்சி, மேம்பட்ட ஆய்வுகளுக்குப் பிறகே சாத்தியமாகும் என்பதும் அறிவியல் உண்மை. முதல் சோதனைக் குழாய் குழந்தையாகிய அகத்தியர் இயல்புக்குக் குறைவானே உயரமே பெற்றிருந்தார் என்பது இந்த உண்மையை நிரூபிக்கிறது.

தொலைக்காட்சி பார்த்தவர்

முதன்முதலில் தொலைக்காட்சி பார்த்தவரும் அகத்தியரே ! பார்வதி - பரமசிவன் திருமணத்தைக் காண அனைவரும் இமயத்தில் கூடியதால் வடபுலம் தாழ்ந்தது. அதனைச் சமன்செய்ய, சிவபெருமான், அகத்தியரை தென்னாட்டிற்கு அனுப்பினார். அனைவரும் காணப்போகும் தங்கள் திருமண நிகழ்ச்சிகளை அடியேன் மட்டும் பார்க்க முடியாமல் போகுமே ? என்று வினவினார். அகத்தியர், இமயத்தில் நடைபெறும் எமது திருமண நிகழ்வுகளை உமக்குப் பொதிகையில் காட்டியருள்வோம் என்றார் ஈசன். அவ்வாறே, அகத்தியர் பார்வதி - பரமசிவன் திருமணக் காட்சியைப் பொதிகையில் கண்டு களித்தார். ஓரிடத்தில் நிகழும் நிகழ்ச்சியைப் பிறிதோர் இடத்தில் காணக்கூடிய சிந்திக்கத் தூண்டும் அறிவியல் கூறு இதில் அமைந்துள்ளது. அகத்தியர் கண்டது நேரடி ஒளிபரப்பு ! (லைவ் டெலிகாஸ்ட்). ஈசன் திருமணம் நடந்து பலநாட்கள் கழித்து அதனை மீண்டும் காண விரும்பினார். திருமால் ! சீர்காழியை அடுத்த ஒரு தலத்தில் சிவ பெருமான், திருமாலுக்குத் தனது திருமணக் கோலத்தை மீண்டும் காட்டியருளினான் ! திருமணத் திருக்கோலம் காட்டிய அந்தத் தலமே, திருக்கோலக்கா என்று பெயர் பெற்றது. இது பதிவு செய்த மறுஒளிபரப்பு!.

அணுவுருவில் நதிகள்

அகத்தியர் தென்னாட்டிற்குப் புறப்பட்டபொழுது, காவிரியை, அணுவுருவாக்கிக் கமண்டலத்தில் அடைத்து எடுத்து வந்தார் என்பது வரலாறு. மனிதன் தண்ணீர் இல்லாத வேறு கோள்களில் குடியேறும் காலத்தில், தண்ணீரை அணுவுருவாக்கி எடுத்துச் சென்று அங்கு, மீண்டும் தண்ணீரை உற்பத்தி செய்துகொள்ள வேண்டியிருக்கும் என்பது நவீன அறிவியல். நானோ - டெக்னாலஜி என்னும் தற்போதைய மூலக்கூறு தொழில் நுட்பத்திற்கு, இந்த சம்பவம் புராண ஆதாரம்.

அர்த்த சாஸ்திரத்தில் இருந்து சில கருத்துகள்:::



👍ஏமாற்றும் மனைவி, போலியான நண்பன், சோம்பேறியான வேலைக்காரன் ஆகியவர்களுடன் வாழ்வது ஒரு கொடிய விஷப் பாம்புடன் வாழ்வதை போன்றது, இது நிச்சயம் மரணத்தை தரும்.
👍ஒருவன் தன்னுடைய கஷ்ட காலத்திருக்கு தேவையான பணத்தை முன்பே காக்க வேண்டும் .
வேலைக்காரனை வேலை செய்யும் போதும், உறவினர்களை கஷ்டம் வரும் போதும், நண்பனை ஆபத்து நேரும் போதும், மனைவியை நோய்வாய்ப்படும் போதும், தூரதிஷ்டமான காலத்திலும் அறியலாம்.
👍ஆறு, கூறிய நகங்கள் அல்லது கொம்புகள் உடைய மிருகம், ஆயுதம் ஏந்திய மனிதன், அரச குடும்பத்தில் பிறந்தவர்களை ஒரு நாளும் நம்ப கூடாது .
👍ஒரு காரியம் நிறைவேறும் வரை அவற்றை பற்றி அறிவாளி வெளியில் சொல்ல மாட்டான்.
அறிவுள்ளவன் தன் குழந்தைகளுக்கு சகல வித்தைகள் பயிலும் வாய்ப்பை தேடித் தருவான்.
ஒரு நாளும் ஒன்றையும் படிக்காமலும், ஒரு வரியாவது, ஒரு சொல்லையாவது கற்காமலும், நல்ல காரியங்களில் ஈடுபடாமலும் செல்ல வேண்டாம்.
👍நல்ல குடும்பத்தில் பிறந்தாலும், நல்ல வசதிகள் இருந்தாலும் கல்வி கற்காவிடின் ஒருவன் வாசனையற்ற மலரை போன்றவன் ஆவான்.
👍உங்கள் குழந்தையை 5 வயது வரை கொஞ்சுங்கள், 5 -15 வயது வரை தவறு செய்தல் தடியால் கண்டியுங்கள். 15 வயதுக்கு மேல் நண்பனாக நடத்துங்கள்.
கற்பது பசுவை போன்றது, அது எல்லா காலங்களிலும் பால் சுரக்கும், அது தாயை போன்றது எங்கு சென்றாலும் நம்மை காக்கும், ஆதலால் கற்காமல் ஒரு நாளும் வீணாக செல்ல வேண்டாம்.

👍கடலில் பெய்யும் மழை பயனற்றது, பகலில் எரியும் தீபம் பயனற்றது, வசதி உள்ளவனுக்கு கொடுக்கும் பரிசு பயனற்றது, நோய் உள்ளவனுக்கு கொடுக்கும் அறுசுவை உணவு பயனற்றது. அதுபோல் முட்டாளுக்கு கூறும் அறிவுரையும் பயனற்றது.
👍காமத்தை விட கொடிய நோய் இல்லை. அறியாமையை விட கொடிய எதிரி இல்லை. கோவத்தை விட கொடிய நெருப்பு இல்லை,
எவன் ஒருவனுக்கு செல்வம் இருக்கிறதோ, அவனுக்கு உறவினர்கள் உண்டு, நண்பர்கள் உண்டு. பணம் இருப்பவனைத் தான் உலகம் மனிதனாக மதிக்கிறது. அவனைத்தான் அறிவாளி, பண்டிதன் என்று உலகம் போற்றுகிறது.
👍பிறவி குருடனுக்கு கண் தெரிவதில்லை, அது போல் காமம் உள்ளவனுக்கு கண் தெரியாது, பெருமை உள்ளவனுக்கு கெடுதி தெரியாது, பணம் செய்யவேண்டும் என்ற எண்ணம் உள்ளவனுக்கு பாவம் தெரியாது.
பேராசை கொண்டவனை பரிசு கொடுத்தும், பிடிவாதம் உள்ளவனை சலாம் போடுவதன் மூலமும், முட்டாளை நகைச்சுவை மூலமும், அறிவாளியை உண்மையான வார்த்தை மூலமும் அணுகலாம்.
👍சிங்கத்திடம் இருந்து ஒன்றையும், கொக்கிடம் இருந்து இரண்டையும், கழுதையிடம் இருந்து மூன்றையும், கோழியிடம் இருந்து நான்கையும், காக்கையிடம் இருந்து ஐந்தையும், நாயிடம் இருந்து ஆறு விஷயங்களையும் நாம் கற்று கொள்ள வேண்டும்.
👍சிங்கம் எந்த ஒரு விஷயத்தையும் உடனடியாக செய்யாது, நன்கு ஆலோசனை செய்த பின்பு முழு மனதுடன் உறுதியாக செயல்படும்.
👍கொக்கு ஓடு மீன் ஓட உறு மீன் வரும் வரை காத்து நிற்கும், அதுபோல் அறிவாளி ஒரு காரியத்தை செய்வதற்கு முன் காலம், இடம், தன் ஆற்றல் கூடும் வரை காத்திருந்து செய்வான்.
களைப்புற்றாலும் கழுதை தன் வேலையை தொடர்ந்து செய்யும், வெயில், மழை என்று பாராமல் உழைக்கும், தன் முதலாளிக்கு கட்டு பட்டிருக்கும். ஆகிய மூன்றும் கழுதையிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.
👍விடியற்காலை எழுதல், தைரியமாக சண்டையிடுதல், அவர் அவர்க்கு தேவையானவற்றை பிரித்து கொடுத்தல், தனக்கு தேவையானவற்றை தானே உழைத்துத் தேடி சம்பாதித்தல் ஆகிய நான்கும் சேவலிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.
👍இரவில் மனைவியுடன் சேர்ந்து இருத்தல், தேவையான பொருள்களை சேமித்து வைத்தல், யாரையும் எளிதில் நம்பாமல் இருத்தல், தைரியம், எச்சரிக்கை உணர்வு ஆகிய ஐந்தும் காக்கையிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.
👍கிடைப்பதை உண்டு திருப்தி அடைதல், உணவு கிடைக்காத நேரத்தில் பட்டினி இருத்தல், நன்றாக பசி இருந்தும் கட்டளை வரும் வரை காத்து இருத்தல், நல்ல தூக்கத்தில் இருந்தாலும் உடனடியாக எழுந்து செயல் படுதல், முதலாளிக்கு விசுவாசமாக இருத்தல், உருவத்தில் பெரிய மிருகமாக இருந்தாலும் தைரியமாக எதிர்த்தல் ஆகிய ஆறு குணங்களை நாயிடம் இருந்து கற்று கொள்ள வேண்டும்.
ஒருவன் மேலே சொன்ன இருபது விஷயங்களை கடைபிடிக்கிறானோ அவன் எதிலும் வெற்றி அடைவான். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றியாகும்.
👍அறிவாளி தனக்கு ஏற்படும் அவமானங்களையும், தன் மன விரக்தியையும், தன் மனைவியின் தீய நடத்தையும், பிறரால் ஏற்படும் கடும் சொற்களையும் வெளியில் சொல்ல மாட்டான்.
ஒருவன் தனக்கு கிடைக்கும் மனைவி, உணவு, நியாமான முறையில் வரும் வருமானம் ஆகியவற்றில் திருப்தி அடைய வேண்டும். ஆனால் கற்கும் கல்வி, , தர்ம காரியங்கள் ஆகியவற்றில் திருப்தி அடையாமல் தொடர்ந்து செய்ய வேண்டும்.
👍யானையிடம் இருந்து 1000 அடி விலகி இருங்கள், குதிரையிடம் இருந்து 100 அடி விலகி இருங்கள், கொம்பு உள்ள மிருகத்திடம் இருந்து 10 அடி விலகி இருங்கள். ஆனால் உங்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்யும், ஏமாற்றும் மக்கள் வசிக்கும் ஊரை விட்டு சென்று விடுங்கள்.

👍எல்லாம் காரியங்களிலும் உங்கள் கொள்கைகளில் பிடிவாதமாக இருக்காதீர். வளைந்து நெளிந்து வாழ கற்று கொள்ளுங்கள். காடுகளில் நீண்டு நேராக உள்ள மரங்களே முதலில் வெட்டப்படுகிறது.
👍அன்னம் நீர் உள்ள இடத்தில் தான் வசிக்கும், நீர் இல்லாது போனால் வேறு இடத்திருக்கு சென்று விடும். அது போல் மனிதர்கள் ஆதாயம் உள்ளவரை தான் நம்மிடம் பழகுவார்கள். இதை புரிந்து கொள்ளுங்கள்.
👍சிங்கத்தில் குகைக்குள் சென்றால் உங்களுக்கு மான் கொம்புகளோ, யானைத் தந்தங்களோ கிடைக்கலாம், நரியின் குகைக்குள் சென்றால் மாட்டின் வாலோ, துண்டு எலும்புகளோ தான் கிடைக்கும். ஆதலால் ஒரு காரியத்தை தொடங்கும் முன் நமக்கு என்ன கிடைக்கும் என்று ஆலோசித்து அதில் இறங்க வேண்டும்.
அறியாமை ஒரு மனிதனை வீணாக்கும். பயிற்சி செய்யாவிடின் நாம் கற்ற வித்தைகள் வீணாகும்,
👍வயதான காலத்தில் மனைவியை இழப்பது, உறவினர்களை நம்பி பணத்தை இழப்பது, உணவுக்காக அடுத்தவரை நாடி இருப்பது ஆகிய மூன்றும் மிகவும் துரதிஷ்டமான சம்பவங்கள் ஆகும்.
👍அழகு ஒழுக்கம் இல்லாத செயல்களால் கெட்டு போகும், நல்ல குலத்தில் பிறந்தவனுடைய மரியாதை கெட்ட நண்பர்களால் கெட்டு போகும். முறையாக கற்காத கல்வி கெட்டு போகும். சரியாக பயன் படுத்தாத பணம் கெட்டு போகும்.
கல்வி கற்றவனை மக்கள் மரியாதை செய்கின்றனர். கல்வி கற்றவன் கட்டளைக்கு அனைவரும் மரியாதை செய்கின்றனர். கல்வி சென்ற இடமெல்லாம் சிறப்பை தேடித் தருகிறது. ஆதலால் கல்வி கற்பதை ஒரு நாளும் நிறுத்த வேண்டாம்.
👍எருக்கம் பூ அழகாக இருந்தாலும் அது சிறப்பான வாசனை தராது. அதுபோல் நல்ல குலத்தில் பிறந்தாலும், அழகாக இருந்தாலும் ஒருவன் கல்வி கற்காவிடின் வீணான மனிதன் ஆவான்.
👍மாணவன், வேலைக்காரன், பயணம் செய்பவர்கள், பயத்தில் உள்ளவன், கருவூலம் காக்கும் காவல்காரன், மெய் காவலர்கள், வீட்டை காவல் காக்கும் நாய் ஆகிய ஏழு நபர்களும் அயர்ந்து தூங்கக்கூடாது, தேவை ஏற்பட்டால் உறக்கத்தில் இருந்து உடனடியாக எழுந்து செயல்பட வேண்டும்.
பாம்பு, அரசன் , புலி, கெட்டும் தேனீ, சிறு குழந்தை, அடுத்த வீட்டுக்காரனின் நாய், முட்டாள் ஆகிய ஏழு நபர்களை தூங்கும் போது எழுப்பக்கூடாது .
👍பணம் ஒன்றே ஒருவனை செல்வந்தன் ஆக்காது, பணம் இல்லை என்றாலும் கல்வி கற்றவன் செல்வந்தன் ஆகிறான், ஒருவன் கல்வி கற்காவிடின் அனைத்தும் இழந்தவனாகிறான்.
கஞ்சனுக்கு பிச்சைகாரன் எதிரி ஆவான், தவறு செய்யும் மனைவிக்கு கணவன் எதிரி ஆவான். அறிவுரை கூறும் பெரியவர்கள் முட்டாளுக்கு எதிரி ஆவார், பூரண நிலவு ஒளி திருடர்களுக்கு எதிரி ஆகும்.
👍கல்வி கற்க விரும்பாதவன், நல்ல குணங்கள் இல்லாதவன், அறிவை நாடாதவன் ஆகியவர்கள் இந்த பூமியில் வாழும் அற்ப மனிதர்கள், அவர்கள் பூமிக்கு பாரம்.

👍வறுமை வந்த காலத்தில் உறவினர்களின் தயவில் வாழ்வதை விட புலிகள் வாழும் காட்டில், புற்கள் நடுவில் உள்ள மரத்தடியில் வாழ்வது மிகவும் மேலானது.
பல பறவைகள் இரவில் ஒரே மரத்தில் இருந்தாலும் காலையில் ஒவ்வொன்றும் ஒரு திசையில் பறக்கிறது. ஆதலால் நம்மிடம் நெருங்கி உள்ளளோர் எப்போதும் நம்முடன் இருப்பதில்லை, இதை உணர்ந்து கவலைப்படாமல் வாழ வேண்டும்.

👍பெரிய யானை சிறிய அங்குசத்தை கண்டு பயப்படுகிறது, சிறிய மெழுகுவத்தி பெரிய இருளை விலக்குகிறது, பெரிய மலை சிறிய உலியால் வெட்டி எடுக்கப்படுகிறது. பெரிய உருவத்தினால் என்ன பயன்? உருவத்தை கொண்டு ஒருவரை எடை போடக்கூடாது.

👍வேப்ப மரத்தை கிளை முதல் வேர் வரை நெய்யும், பாலும் ஊற்றி வளர்தாலும் அதன் கசப்பு தன்மை மாறாது. அது போல் கெட்ட மனிதர்களுக்கு எத்தனை விதமாக உரைத்தாலும் அறிவு வராது.
சாராயப் பாத்திரத்தை நெருப்பில் இட்டாலும் அதன் மணம் போகாது. அது போல் எத்தனை முறை புனித நதிகளில் குளித்தாலும் மனத்துய்மை வராது.

👍கல்வி கற்கும் மாணவனன் இந்த எட்டு விஷயங்களில் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும். அவை காமம், கோவம், பேராசை, இனிப்பு உணவுகள், அலங்காரம், அதிக ஆர்வம், அதிக தூக்கம், உடலை பராமரிக்க அதிக அக்கறை.
உங்கள் தேவைக்கு அதிகமான செல்வங்களை, தானம் இடுங்கள், இன்று வரை நாம் கர்ணன், பலி சக்ரவர்த்தி, விக்ரமாதித்தனை பாராட்டுகிறோம். தேனீக்களை பாத்து கற்று கொள்ளுங்கள், அது கஷ்டப்பட்டு தேடிய தேனை அது உன்பதில்லை, யாரோ ஒருவன் ஒரு நாள் அவற்றை அழித்து தேனை தூக்கி செல்கிறான். அது போல் நாம் பார்த்து பார்த்து சேர்த்த செல்வம் கொள்ளை போகும் முன் உங்களால் முடிந்த தானங்களை செய்யுங்கள்.

ஆணும் பெண்ணும் சமம் அல்ல;


பெண்களின் மூளை ஒரே நேரத்தில் பலபணிகளை செய்யக்கூடியவகையில்
வடிவமைக்கப்பட்டுள்ளது!

உதாரணாமக பெண்ணால்,
தொலைக்காட்ச்சி பார்த்துக்கொண்டே தொலைபேசியில்
பேசவும் சமையல் செய்யவும், பிள்ளைகளுக்கு தேவையான பணிவிடையையும் செய்ய முடியும்.
( உங்கள் வீடுகளிலும் பார்த்திருப்பீர்கள்.)

ஆண்களின் மூளை ஒரு நேரத்தில்
ஒரு பணியை செய்யக்கூடியவகையில்
வடிவமைக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக, ஆண்களால்
தொலைக்காட்ச்சியைப பார்த்துக்கொண்டே தொலைபேசியில்
பேச முடியாது! ( அவர்களின் கவனம்
தொலைக்காட்சியில் இருக்கும்
அல்லது தொலை பேசியில் இருக்கும்.
இரண்டிலும் இருக்காது! )

மொழி;
----------
பெண்களால் இலகுவாக பல
மொழிகளைக்கற்றுக்கொள்ள
முடியும்! அதனால் தான் சிறந்த
மொழி பெயர்ப்பாளர்கள் பலர்
பெண்களாக இருக்கின்றார்கள். 3
வயது ஆண்குழந்தையுடன் ஒப்பிடும்
போது அதே வயது பெண்குழந்தை அதிகபடியான சொற்களை தெரிந்து வைத்திருப்பதற்கும்
மூளையின் இந்த அமைப்பே காரணம்.

பகுத்துணரும் திறன் (ANALYTICAL SKILLS)
----------------------------------------------------------------
ஒரு பிரச்சனையை அல்லது பல
பிரச்சனைகளை பகுப்பாய்வு செய்து தீர்மானத்திற்குரிய
படிகளை தீர்மானிப்பதற்கு ஆண்களின் மூளையில்
பெரும்பாலான இடம் ஒதுக்கப்படுகிறது.
அதனால், எந்த பிரச்சனைக்கும் ஒரு தீர்க்கமான
தீர்மானத்திற்குரிய வரைபடத்தை ஆணகளின்
மூளையால் இலகுவாக
ஏற்படுத்திக்கொள்ள முடியும்.
ஆனால், பெண்களின் மூளையால்
இதை செய்ய முடியாது.
அது மட்டுமல்லாது பெண்களால் ஆண்கள் வைக்கும் தீர்மானத்தையும்
உணர்ந்துகொள்ள முடியாது.

வாகனம் ஓட்டுதல்;
------------------------------
வாகனத்தை ஓட்டிக்கொண்டு இருக்கும் போது,
தூரத்தில் வரும் ஒரு வாகனத்தின் வேகம், பயணிக்கும் திசை, வாகனத்தின் போக்கில் ஏற்பட
இருக்கும் மாற்றங்களை (சிக்னல்ஸ்) முன் கூட்டியே விரைவாக கணித்து அதற்கு ஏற்றபோல்
நடத்தையை வெளிப்படுத்த ஆண்களின் மூளையால்
முடியும்.

ஆனால், பெண்களின்
மூளை தாமதமாகவே இந்த
கணிப்புக்களை மேற்கொள்ளும்.
இதற்கு காரணம், ஆண்களின்
“ஒரு பணியை செய்யக்கூடிய மூளைத்திறன்”ஆகும்.
உதாரணமாக வாகனம் செலுத்தும்
போதுஇசையைக் கேட்டுக் கொண்டிருந்தாலும்
ஆண்களின் கவணம் வாகனம்
செலுத்துவதில் தான் இருக்கும்.
பெண்களின் கவனம் இரண்டிலும் இருக்கும்.
அதனால் வாகனங்களை செலுத்துவதில்
பெண்கள்
சிரமங்களை எதிர்கொள்கின்றார்கள். (ஹெட் போனில் பாட்டு கேட்டுக் கொண்டு scooty ஓட்டும் பெண்கள் ஜாக்கிரதை).

பொய்ப்பேச்சு;
-----------------------
ஆண்கள் பெண்களின் முகத்திற்கு நேராக பொய் பேசும் போது, பெண்கள் இலகுவாக பொய்
என்பதை அறிந்துகொள்வார்கள்! ஆனால், பெண்கள் ஆண்களிடம் பொய் பேசும் போது ஆண்களால் அதை உணரமுடிவதில்லை. (என் மனைவி ஒன்றும் தெரியாத அப்பாவி என்று 99 சதவீதம் ஆண்கள் இன்றும்கூட தவறாக நம்பி கொண்டு இருப்பார்கள்.)
காரணம் பெண்கள் பேசும் போது 70% முக
மொழியையும் 20% உடல்
மொழிகளையும் 10% வாய்
மொழியையும் உணர்கின்றனர். ஆண்களின்
மூளை அவ்வாறானதில்லை!

பிரச்சனைக்கான தீர்வுகள்:
-------------------------------------------
பல பிரச்சனைகள் இருக்கும் ஒரு ஆணின் மூளையானது ஒவ்வொரு பிரச்சனையையும்
தனித்தனியாக பிரித்து ஒவ்வொன்றிற்கும்
தனித்தனி தீர்வை படிப்படியாக இனங்காணும்.
இதனால் பிரச்சணையுள்ள ஆண்கள் தனிமையில்
தமது தீர்வுகளை கண்டுகொள்வார்கள்.

ஆனால், இதே அளவு பிரச்சனையுள்ள
ஒரு பெண்னின்
மூளையானது பிரச்சனைகளை தனித்தனியாக
பிரித்தறியாது…. யாராவது ஒருவரிடம்
தமது முழுப்பிரச்சனைகளையும் வாய்மூலமாக
சொல்வதனூடாக
திருப்தியடைந்துகொள்ளும்.
சொன்னதன் பின்னர்,
பிரச்சனை தீர்ந்தாலும் தீராவிட்டாலும் அவர்கள்
நின்மதியாக படுத்துறங்குவார்கள்.

தேவைகள்:
-------------------
மதிப்பு, வெற்றி, தீர்வுகள், பெரிய
செயலாக்கங்கள் என்ற ரீதியில் ஆண்களின் தேவைகள் அமைந்திருக்கும்.
ஆனால், உறவுகள், நட்பு, குடும்பம் என்ற ரீதியில்
பெண்களின் தேவைகள் அமைந்திருக்கும்.

மகிழ்ச்சியின்மை:
------------------------------
ஒரு பெண்ணிற்கு தனது காதல்/
உறவுகளிடையே பிரச்சனை அல்லது திருப்தியின்மை இருந்தால்…
அவர்களால், அவர்களின் வேலையில் கவணம்
செலுத்த முடியாது.
ஆனால், ஒரு ஆணிற்கு தனது வேலையில்
பிரச்சனை இருப்பின் அவர்கள் காதல்/ உறவுகளில்
கவணம் செலுத்த முடியாது.

உரையாடல்;
---------------------
பெண்கள் உரையாடும் போது மறைமுக
மொழிகளை அதிகம் பயன்படுத்துவார்கள்.
ஆனால், ஆண்கள்
நேரடி மொழியையே பயன்படுத்துவார்கள்.

எண்களை ஆண்கள் அதிகம் நினைவில் வைத்து கொள்ள முடியாது. மனைவியின் பிள்ளைகளின் பிறந்த நாளை நினைவு வைத்து கொள்ள ஆண் சிரமம் படுவான். (காதலன் அல்லது கணவன் பிறந்த நாளை மறந்து விட்டால் பெண்கள் ஈசி யாக எடுத்து கொள்ள வேண்டும். ஏன் மறந்தாய என் டார்சர் தர கூடாது. ) பெண்கள் தனது முன்னாள் காதலன் பின்னால் காதலன் அம்மா அப்பா அண்ணன் தம்பி தங்கை பிள்ளைகள் என்று எல்லார் பிறந்த தினமும் மனதில வைத்துக்கொண்டு இருப்பாள். அது அவளுக்கு சுலபமானது.

நடவடிக்கை;
---------------------
பெண்கள் சிந்திக்காமல் அதிகம்
பேசுவார்கள். ஆண்கள் சிந்திக்காமல் அதிகம்
செய்வார்கள்!
ஆண்கள், பெண்களிடையேயான உறவுகளில்
ஏற்படும் பிரச்சனைக்கான உண்மையான அறிவியல்
காரணத்தை தற்போது உணர்ந்திருப்பீர்கள்.

இத்தாலி பாராளுமன்றத்தையே நடுங்க வைத்த இந்து துறவி

வீரத்துறவி சுவாமி யோகானந்தகிரி. கிறிஸ்தவ மதவெறி கொண்ட இத்தாலி நாட்டையே புரட்டிப் போட்டு இந்துத்வா கொள்கையை புகுத்தி மதசார்பற்ற நாடாக மாற்றிய Secularism மாமனிதர்.
யார் இவர்??????!!!!!!??
இத்தாலியில் கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்த இவர் இந்தியாவிற்கு வந்து யோகா கலையை கற்று பின்னர் சமஸ்கிருதம் பயின்று இந்து மத கொள்கையையும் தத்துவங்களையும் அறிந்து கொண்டார். பின்னர் தென் இந்தியாவில் சைவ சித்தாந்தங்களையும்,ஆயுர்வேதம், கலைகளையும் அறிந்து தன்னை இந்துவாக பிரகடன படுத்தினார். 1982ல் இந்து துறவியாக தன் வாழ்க்கையை மாற்றினார்.
பின்னர் இத்தாலிக்கு சென்று இந்து மதத்திற்கான விதையை போட்டார். 1985 ல் இத்தாலியின் சவனோ Savona என்ற இடத்தில் தனது கீதானந்த ஆசிரமத்தை தொடங்கி இந்து மதத்தை போதித்தார். அத்தோடு நில்லாமல் Italian Hindhu Union (IHU) என்ற அமைப்பினை தொடங்கி 3 நாள் இந்து மத வழிபாடு பற்றிய சொற்பொழிவினை ஏற்படுத்தி இந்தியாவிலிருந்து ஆண்மிகவாதிகளை வரவழைத்தார்.
யோகானந்தகிரியின் செயல்பாடுகளை கண்டு அதிர்ந்த கத்தோலிக்க கிறிஸ்தவம் குருமார்கள் இவருக்கு எதிராக பாராளுமன்றத்தில் குரல் எழுப்பி கண்டித்தனர். கிறிஸ்தவ மதம் மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட இத்தாலியில் இந்துத்வாவை புகுத்துவதா என வசை பாடினார்கள். அதன் விளைவாக இந்து மதம் இத்தாலியில் தடையும் செய்யப்பட்டது.
துணிச்சல் மிகுந்த வீரத்துறவி பலரை இந்துவாக மாற்றியதோடு பாராளுமன்றத்திற்கே இந்துத்வா கொள்கையை விளக்கி சவால் விட்டார். இந்துக்களின் அற்புதமான யோகா கலையை பலர் பயின்று இத்தாலியில் ஆரோக்கியமாக இருப்பதையும், ஆயுர்வேதம், இந்துத்வா கொள்கையை யும் விளக்கினார்.
இந்தியா, இலங்கை, நேபாளம், மொரிஷியஸ் போன்ற இந்து நாட்டுக்களில் கிறிஸ்தவ மக்கள் வழிபட அனுமதி இருக்கும் போது இத்தாலி ஏன் இந்து மதத்தை ஏற்கக் கூடாது என கேள்விக் கணையை விட்டார். இதனால் இந்து மதத்தினை அறிந்த பலர் இவருக்கு ஆதரவாக களம் இறங்கினார்கள். பல போராட்டங்களுக்கிடையே,
2007 ம் ஆண்டு இத்தாலி பாராளுமன்றத்தில் Article 8 படி புதிய தீர்மானம் இயற்றப்பட்டு இத்தாலி மதசார்பற்ற நாடாக அறிவிக்கப்பட்டது Secularism. இதனால் இந்து மற்றும் புத்த மதத்திற்கு புத்துணர்ச்சி அளிக்கப்பட்டது. இதனால் இந்து மதம் பல்கிப் பெருகி தன் வெற்றியை நிலை நாட்டியது.
இந்து மதத்தின் அற்புதங்களை அறிந்து கொண்டு பலர் இதுவாக மாறுகின்றனர். இந்துக்களின் மறுபிறவி, தர்மம், கடவுள் வழிபாடு, பிரபஞ்ச சுழற்சி, கலாச்சாரம், வேதங்கள், யோகா போன்றவற்றினை அறிந்து இந்து மதத்தின் வேர்களை இத்தாலியில் பரப்புகின்றனர்.
இளம் பதின்பருவத்து வயதில் இந்தியாவிற்கு வந்து 20 ஆண்டுகாலம் இருந்து துறவியாகி இத்தாலிற்கு சென்று இந்து சாம்ராஜ்யத்தை ஏற்படுத்தி இன்றும் இந்து மதத் தொண்டாற்றுகின்றனர்.
பூஜ்யமாக இருந்த இந்துக்களின் மக்கள் தொகை இத்தாலியில் இன்று 1,28,950 ஆக மாபெரும் விஷ்வரூபம் எடுத்து கத்தோலிக்க கிறிஸ்தவத்தை ஆட்டம் காணச் செய்துள்ளது. வாழ்க பல்லாண்டு வீரத்துறவி யோகானந்தகிரி. இந்துக்களே விழித்துக் கொள்ளுங்கள்! நாமும் இந்து மதத்தை உலகமறியச் செய்வோம்! என்றும் இந்துவாக! இதை அனைவரும் பகிர்வோம்!!

சந்தனத்தை இட்டுக் கொள்வதில் உள்ள நியமங்கள்

சந்தனத்தை அரைத்தல், பூஜைக்கு உபயோகித்தல் மற்றும் மனிதர்கள் இட்டுக் கொள்வதில் உள்ள நியமங்கள்

1) சந்தனத்தை அரைத்த பிறகு பெருவிரல் படாமல் சந்தன கட்டை மற்றும் கல்லிருந்து சந்தனத்தை எடுக்கவும்.

2) பெருவிரல் பித்ரு சம்மந்தம் என்பதால் நிஷேதிக்கப்பட்டுள்ளது.

3) அரைத்த சந்தனத்தை வேறு ஒரு செப்பு தட்டிலோ அல்லது ஒரு சிறிய வாழை இலையிலோ எடுக்க வேண்டும்.

4) சந்தனத்தை நேரான கட்டையிலோ அல்லது கல்லிருந்தோ எடுத்து பூஜைக்கு உபயோகப்படுத்துவது சம்பிரதாயம் அல்ல.

5) சந்தனத்தை அரைத்த பிறகு சந்தன கட்டையை கல்லின் மீது வைக்கக்கூடாது. தனித்தனியாக வைக்கவும்.

6) முடிந்தவரை பூஜைக்கு ஸ்த்ரீகள் சந்தனத்தை அரைக்கக்கூடாது. ஆபத்கால அவச்யமேற்பட்டால் செய்யலாம்.

7) ஸ்த்ரீகள் சந்தனத்தை கழுத்தில் தான் இட்டுக் கொள்ள வேண்டும். ஆனால் கேரளத்தில் அவர்கள் ஆசாரம் இதற்கு விதிவிலக்கு.

8) புருஷர்கள் சந்தனத்தை நெற்றியில் தான் இட்டுக் கொள்ள வேண்டும், கழுத்தில் அல்ல.

9) போஜனத்திற்கு பிறகு உபசாரத்திற்கு மார்பில் இட்டுக் கொள்ளலாம்.

Monday, August 24, 2015

அரிய‌ அதிசயங்கள் கொண்ட‌ பட்டீஸ்வரர் !


ஐந்து அதிசயங்களை உள்ள‍டங்கிய ஆயிரமாண்டு ஆலயம் ஒன்று உள்ள‍து. கோயம்புத்தூரில் இருந்து மேற்கு திசையி ல் ஆறாவது கிலோமீட்ட‍ர் தொலைவில் உள்ள‍து பேரூர் என் னும் பாடல்பெற்ற‍ ஸ்தலம்.
 
நால்வரால் பாடல்பெற்ற‍ இவ்வாலயம் மேல சிதம்பரம் என் றும் அழைக்கப்படுகிறது. இங்கு நடராஜப் பெருமான் ஆனந் த தாண்டவம் ஆடியபோது அவர் காலில் அணிந்திருந்த சில ம்பு தெறித்து சிதம்பரத்தில் விழுந்ததாக செவிவழிச் செய்தி யும் உண்டு.
 
இக்கோவிலில் ஐந்து அதிசயங்கள் எது என்றால்,
இறவாத பனை, பிறவாத புளி, புழுக்காத சாணம், எலும்பு கல்லாவது, வலதுகாதுமேல் நோக்கிய நிலையில் இறப்ப‍து. இதுதான் அந்த அதிசயங்கள்.
 
இறவாத பனை பல ஆண்டுகாலமாக இன்றும் பசு மைமாறாமல் இளமையாகவே ஒரு பனைமரம் நின்று கொண்டிரு க்கிறது. இந்த மரத்திற்கு இறப்பெ ன்று எப்போதுமே கிடையாதாம். இ ந்த பனை மரத்தின் பட்டையை இடி த்துக் கஷாயம் போட்டுக் குடித்தா ல், தீராத வியாதியெல்லாம் தீரும் என்கிறார்கள். இது தான் இறவாத பனை பிறவாத புளி
 
அடுத்து பிறவாதபுளி, என்றுபோற்ற‍ப்படும் புளியமரம் இங்கு இருக்கிறது. இந்த புளியமரத்தின் கொட்டைகள் மீண்டும் முளைப்ப‍ தேயில்லையாம். புளியம்பழத்தின் கொட்டைகளை மீண்டும் முளை க்க‍ வைப்ப‍தற்காக வெளிநாட்டிலி ருந்து வந்த விஞ்ஞானிகள் பலரும் எவ்வ‍ளவோ முயற்சி செய்து பார் த்து விட்டார்கள். முளைக்க‍வே இல்லை. இந்த புளியமரம் இந்த பிறவி மட்டுமே என்று வரம் வாங்கி வந்து ள்ள‍தாம். அதனால் பிறவாத புளி என்றுஅழைக்கிறார்கள்.
புழுக்காத சாணம்
மூன்றாவதாக புழுக்காத சாணம்
 
கோயில் இருக்கிற பேரூர் எல்லைக் குட்பட்ட‍ பகுதிகளில் ஆடு, மாடு போ ன்ற கால் நடைகளின் சாணம் மண் ணில் கிடந்தால் எத்த‍னை நாட்கள் ஆனாலும் அவற்றிலிருந்து புழுக்க‍ள் உண்டாவதே இல்லை யாம்.
மனித எலும்புகள் கல்லாவது
 
அடுத்து மனித எலும்புகள் கல்லாவது இங்குள்ள‍வர்களில் யாரேனும் இறந்து விட்டால் அந்த உடலை எரித்த‍ப் பிறகு மிச்ச‍மாகும் எலும்புகளை இ ந்த ஆத்மா புண்ணியம் பெற வேண்டும் என்பதற்காக இங் குள்ள‍ நொய்யால் ஆற்றில் விடுவார்களாம். அப்ப‍டி ஆற் றில் விடப்படுகிற எலும்புகள் சிறிது காலத்தில் கற்களாக உருமாறி கண்டெடுக்க‍ப்படுகிறதாம். என்ன‍அதிசயமாக இரு க்கிறது அல்ல‍வா? அதுதான் பட்டீஸ்வரரின் திருவருவள். த‌மது வலது காதை மேல் நோக்கி வைத்த‍படி மரணிப் ப‍து.
 
ஐந்தாவதாக பேரூரில் மர ணமடையும் மனிதன் முதல் அனைத்து ஜீவராசிகளு ம் இறக்கும் தருவாயில் தமது வலது காதை மேல் நோக்கி வைத்த‍படிதான் மர ணம் அடைகின்ற அதிசயமும் இங்கு இன்னமும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது.
 
இந்த அதிசயங்களை நடத்திக் கொண்டிருக்கின்ற பட்டீஸ்வ ரர், இங்கு அமைதியாகத் தான் காட்சித்தருகிறார். ஆனால் இவரின் வரலாறு நமக்கு ஆச்ச‍ரியத்தைத் தருகின்றது. முன்பு இக் கோயில் இருந்த இடம் அரச மரங்கள் நிறைந்த காடாக இருந்ததாம். அப் போது பல பசுமாடுகள் இ ங்கு வந்து மேய்ந்து கொ ண்டிருக்கும் அதில் ஒரு மாடு மட்டும் அருகிலுள்ள‍ பாம்பு புற் றின் மீது பாலை சொறியுமாம். இதைப்பார்த்த‍ ஒரு வன் மற்ற‍வர்களிடம் சொல்ல‍ அவர்கள் அந்த இடத்தைத் தோண் டும்போது கிடைத்த‍வர்தான் நமது பட்டீஸ்வரர்.
 
கிடைக்கும்போதும் அதிசயத்துடன் கிடைத்த‍வர் இவர். இவரின் திருமே னியில் தலையில் ஐந்து தலைப்பா ம்பு படமெடுத்த‍ நிலை, மார்பில் பாம் பின் பூணூல், தலையில் அழகழகா ய் சடைக்கொத்துக்கள், சடைகளுக் கு அரணாய் இருப்ப‍துபோல் கங்கை, அன்ன‍மும், பன்றியுமாய் பிரம்மா, விஷ்ணு அடிமுடி தேடிய அடையா ளங்கள் இவைகளோடு பட்டீஸ்வரர் தலையில் மாட்டின் கால் குளம்புகள் மூன்றும், கொம்பு முட்டிய தழும்பும் காணப்படுகின்றன•
 
இதையெல்லாம் பார்த்த‍ மக்க‍ள் பரவசத்துடன் வழிபட ஆர ம்பித்திருக்கிறார்கள். இவர் இ ருக்கும் பின்புறம் பன்னீர் மரங் கள் பன்னீர் பூக்க‍ளைச் சொறி ந்து கொண்டிருக்கின்றன•
 
ஒரு முறை மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று கோயிலுக்குத் திடீர் என்று வந்திருக்கின்றான் மன்ன‍ன் திப்புசுல்தான். இந்தக் கோயில் அதி சயங்களை எல்லாம் பார்க்க‍ வந்தவனுக்கு மீண்டும் ஒரு அதிசயத்திஐ இங்குள்ளோர் சொல்லியிருக்கிறார்கள். ஆம் இறைவன் குடியிருக்கும் சிவ லிங்கம் அடிக்க‍டி அசையும் என்று, இதை நம்பாமல் சிவா லயத்தின் மீது கைவைத்துப் பா ர்த்திருக்கிறான் மன்ன‍ன் திப்பு சுல்தான்
 
அப்போது அவன் உடலில் அதிர்வுகள் தோன்றியிருக்கின்றன• நெருப்பின்மீது கைகள் வைப்ப‍துபோல் உணர்ந்து துடித் திருக்கிறான். கண்கள் இரண்டு கீழே விழுந்தவன் சிறிது நே ரத்திற்குப்பின்சுய நினைவு அடைந்த பின் தன் செயலுக்கு வருந்தி கண்களில் கண்ணீர் மல்க கை தொழுது பட்டீஸ்வரரிடம் தன்னை மன் னிக்குமாறு வேண்டியிருக்கின்றான்.
 
கோயிலுக்கு நிலங்களை மானியமாக தந்திருக்கிறான். இவனைப்போன்றே ஹதர் அலியும் நிலங்க ளை மானியங்களாக தந்திருப்ப‍தாக கல்வெட்டுகளில் செய்திகள் காணப்படுகின்றன இக்கோயிலின் ஸ்தல விருட்சம் அரச மரமாகும். பட்டீஸ்வரனின் சிறப்புக்களை எல்லாம் பார்த்தோம். இனி தாயின் சிறப்புக்க ளைப் பார்போம்.
 
இங்குள்ள‍ அம்ம‍னின் பெ யர் பச்சை நாயகியாகும். பச்சை நிறமாகிய மரகதக் கல்லி ல் அன்னை எழில் ஓவியமாக எழு ந்தருளியிருக்கிறாள்.
 
அன்னையின் அன்புமுகத் தைப்பார்த்துக்கொண்டேயி ருக்க‍லாம். அவ்வ‍ளவு அழ கு, வேண்டுவோர்க்கு வே ண்டும் வரம் தரும் அன்னை கற்பக விருட்சமாய் காட்சி தருகின்றாள். இவளின் ஆல யத்தின் முன்பு சிங்கமொன் று சிலை வடிவில் காட்சித் தருகின்றது. அத‌ன் வாயினு ள் உருண்டைக் கல்லொன்று உருளுகின்றது. கல்வெளியில் வராதவாறு சிங்கத்தின் பற்கள் நிற்கின்றன• அற்புதமாக கலை நுட்பத்துடன் கண் டோர் வியக்கும் வண்ண‍ம் சிங்கத்தின் சிலை உருவா க்க‍ப்பட்டுள்ள‍து. ஒரே கல் லில் செதுக்க‍ப்பட்ட‍ சுழல் தாமரை, நான்குபுறமும் தொங்கும்கல்லால் ஆன சங்கிலிகள்.
 
இதுபோன்ற ஏராளமான சிற்பங்கள் ஆலயத்தில் தவினுற வடிவமைக்க‍ப்பட்டுள்ள‍ன• குறிப்பாக கோயிலின் வட பக்க‍ம் உள்ள‍ பெரிய மண்டபம் 94 அடி நீளமும் 38 அடி அகலமும் உடையது. இம்மண்டபத்தை 16 அடி உயரமுள்ள‍ 36 பெரிய கல் தூண்கள் தாங்கி நிற்கின் றன•
 
சிற்பங்களால் வடிவமைக்க‍ப்பட்டு ள்ள‍ இக்க‍ல் தூண்கள் தாங்கி நிற்ப து பெரிய மண்டபத்தை மட்டும் அல்ல‍, தமிழனின் புகழையும் தான் என்று நாம் எண்ணும் போதே பெரு மையால் நமது நெஞ்சு நிமிர்கின் றது.
 
மேலும் கோயிலின் வடமேற்கில் பிரம்ம‍குண்ட விபூதி எனப் படும் திருநீறுமேடு இன்றும் காணப்படுகிறது.
 
அருள் நிரம்பிய இந்த ஆலயத் தைப் பஞ்சபாண்டவர்களும், பரசுராமரும் காமதேனு, வியா க்யபாதர், பதஞ்சலி, காலவரி ஷி,கோமுனி, பட்டி முனி போ ன்றவர்களும் வணங்கி அருள் பெற்றுள்ளனர். அருணகிரி நாதரால் பாடல் பெற்றுள்ள‍ மூருகன் பழனியில் உள்ள‍தை ப் போன்றே மேற்கு நோக்கி தண்ட பானித் தெய்வமாய் பக்த ர்களுக்கு காட்சி தருகின்றான்.
 
நால்வரில் ஒருவராகிய சுந்தரர், இங் குள்ள‍ பட்டீஸ்வர்ரை வணங்க வர வேண்டும் என்று நினைக்கிறாராம்.எப்போது மே சுந்தரரிடம் ஒரு நல்ல‍ குணம் உண்டு. எந்த ஊர்சென்றாலும் வழிச்செலவுக்கு இறைவனிடம் காசு கேட்பார். ஏன் என்றால், இவர் இறை வனின் தோழன் அல்ல‍வா! இறைவனு ம் இவர் சொல்லைத் தட்டாது பணம் கொடுப்பாராம்.
 
செல்வசெழிப்போடு இருந்த ஈசனுக் கே ஒருமுறை போரூரில் பணம் தட்டு ப்பாடாம். சுந்தரர் வந்தால், பணம் கேட்பானே என்ன‍ செய்வது என்று யோசித்த பட்டீஸ்வரர் சுந்தரரிடமிரு ந்து தப்பித்துக் கொள்வதற்காக நிலத் தில் நாறும் நடும் கூலி த்தொழிலாளி யாய் பச்சையம்ம‍னுடன் சேர்ந்து நாற் று நடும்போது சுந்தரர் பார்த்து விடு கின்றார். அவை அழைத்து வந்து ஆட வைக்கிறாராம்.
 
அவரிடமிருந்து ஒரு பாட்டும் வருகின்றது. அந்த அற்புமான பாட்டைப் பார்ப்போம்.
 
பாரூரும் அரவு அல்குல அமைநங்கை அவள்
பங்கன் பைங்கண் ஏற்ற‍ன்
ஊர் ஊரான் தருமனார் தமர் செக்கில்
இடும்போது தடுத்து ஆட்கொள்வான்
கொங்கில் ஆணி காஞ்சி வாய்ப்
பேரூர்ப் பெருமானைப் புலியூர்ச்
சிற்ற‍ம்பலத்தே பெற்றாம் அன்றே!
 
சுந்தரர்க்காக அம்பலத்தில் ஆடினான் இறைவ ன் அதைக்க ண்டு மகிழ்ந்து பாடினார் சுந்தரர். சுந்தரர் பாடிய இறைவ னை மட்டுமல்லாமல் நம்மையும் மகிழ்விக்கின்றது.
 
பேரூரில் இறைவனும் இறைவியும் நடவு நட்ட‍ வரலாற்றை இன்றும் இவ்வூர் மக்க‍ள் ஆணி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரத்தன்று உற்சாக‌மாய் கொண்டா டி மகிழ்கின்றார்கள்.
 
என்ன‍ இப்போது உங்களு க்கு இந்த கோயிலுக்குப் போக வேண்டும்.!அந்த அதிசயங்களை எல்லாம் பார்க்க‍ வேண்டும். என்ற எண்ண‍ம் வந்திருக்குமே! சரி, கோயிலுக்குப் புறப்படு ங்கள். ஆனால் ஒரு சின்ன‍ செய்தி அவனிடம் பணம் கேட்டுப்போகாதீர்கள். ஓடி ஒளி ந்து கொள்வான். அருள் வேண்டி போங்கள் அவன் அருளை அள்ளித் தருவான்

Friday, August 21, 2015

""விதி வலியது""


இந்திரன் மனைவி 'இந்திராணி' ஒரு கிளியை மிகவும் பிரியமாக வளர்த்து வந்தாள்.
ஒரு நாள் அந்த கிளி நோய்வாய்ப்பட்டுவிட்டது. அதை பரிசோதித்த மருத்துவர் இனி அது பிழைக்காது என்று கூறிவிட்டார்.
உடனே தன் கணவனை அழைத்த இந்திராணி, 'இந்தக் கிளியை எப்படியாவது காப்பாற்றுங்கள். கிளி இறந்துவிட்டால் நானும் இறந்துவிடுவேன்' என்றாள். இந்திரன், 'கவலைப்படாதே இந்திராணி. நான் உடனே பிரம்மாவிடம் சென்று முறையிடுகிறேன். ஒவ்வொருவர் தலையெழுத்தையும் எழுதுபவர் அவர்தானே? அவரிடம் சென்று கிளியின் தலையெழுத்தை மாற்றி எழுதிவிடுவோம்' என்று சொல்லிவிட்டு , பிரம்மாவிடம் சென்று விஷயத்தை கூறினான்.
விஷயத்தை கேட்ட பிரம்மா , 'இந்திரா, படைப்பது மட்டுமே என் வேலை. உயிர்களை காப்பது சாட்சாத் மஹாவிஷ்ணுவின் தொழில். நாம் அவரிடம் சென்று உதவி கேட்போம். வா.. நானும் உன்னுடன் வருகிறேன்' என்று இந்திரனை அழைத்துக் கொண்டு மஹாவிஷ்ணுவிடம் சென்று விஷயத்தை தெரிவித்தார்.
மஹாவிஷ்ணுவோ, 'உயிர்களை காப்பது நான்தான். ஆனால் உன் கிளி இறக்கும் தருவாயில் இருக்கிறதே! அழிக்கும் தொழிலை மேற்கொண்ட சிவன் பெருமான் தான் அதைக் காப்பாற்ற வேண்டும். வாருங்கள்.. நானும் உங்களுடன் வந்து சிவபெருமானிடம் பேசுகிறேன்' என்று கிளம்பினார்.
விபரங்களை கேட்ட சிவன், 'அழிக்கும் தொழில் என்னுடையது தான். உயிர்களை எடுக்கும் பொறுப்பை நான் எமதர்மராஜனிடம் ஒப்படைத்துள்ளேன். வாருங்கள்.. நாம் அனைவரும் சென்று எமதர்மனிடம் கூறி அந்த கிளியின் உயிரை எடுக்க வேண்டாம் என்று முறையிடுவோம்' என்று சொல்லி அவர்களை அழைத்துக் கொண்டு எமலோகம் செல்கிறார்.
தன்னுடைய அவைக்கு சிவன், மஹாவிஷ்ணு, பிரம்மா, இந்திரன் ஆகிய நால்வரும் வருவதை கண்ட எமதர்மன் உடனே எழுது ஓடி வந்து வரவேற்கிறார்.
விஷயம் முழுவதையும் கேட்ட அவர், 'ஒவ்வொரு உயிரையும் எந்த நேரத்தில், எந்த சூழ்நிலையில், என்ன கார‌ணத்தால் எடுக்க வேண்டும் என்ற காரணத்தை, ஒரு ஓலையில் எழுதி ஒரு பெரிய அறையில் தொங்கவிட்டுவிடுவோம். அந்த ஓலை என்று அறுந்து விழுமோ, அன்று அவரின் ஆயுள் முடிந்துவிடும். வாருங்கள்.. அந்த அறைக்குச் சென்று, கிளியின் ஆயுள் ஓலை எது என்று பார்த்து, அதை மாற்றி எழுதிவிடுவோம்' என்று அவர்களை அழைத்துச் செல்கிறார்.
இப்படியாக, இந்திரன், பிரம்மா, விஷ்ணு, சிவன், எம்தர்மன் ஆகிய ஐவரும் அந்த அறைக்குச் சென்றனர். அவர்கள் உள்ளே நுழைந்தவுடன் ஒரு ஓலை அறுந்து விழுகிறது. உடனே அவர்கள் அவசரமாகச் சென்று அந்த ஓலையை எடுத்து பார்க்கின்றனர். அது அந்த கிளியின் ஆயுள் ஓலை. அவசரமாக அதைப் படித்து பார்க்கின்றனர்.
அதில்,,,
"இந்திரன், பிரம்மா, விஷ்ணு, சிவன், எம‌தர்மன் ஆகிய ஐவரும் எப்போது ஒன்றாக இந்த அறைக்குள் நுழைகிறார்களோ, அப்போது இந்த கிளி இறந்துவிடும்" என்று எழுதப்பட்டிருந்தது.

Friday, July 31, 2015

'கலோனல் பிருத்விராஜ்'

 
          பொக்ரான் அணு குண்டு சோதனையை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து மறைக்கும் யுத்தி தொடங்கியது இந்த பெயர்கள் மாற்றத்தில் இருந்து தான்.

இந்த முழு சோதனையையும் மகா ரகசியமாக வைக்க திட்டமிட்ட கலாம்-சிதம்பரம்- இந்திய அணு ஆயுத பிரிவின் தலைவரான டாக்டர் கே.சந்தானம்- பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் தலைவர் அனில் ககோட்கர் டீம் முதலில் தங்களுக்கு புதிய பெயர்களை சூட்டிக் கொண்டனர்.

அந்த வகையில் பிருத்வி ஏவுகணையின் பெயரை சேர்த்து கலாமுக்கு பிருத்விராஜ் என பெயர் சூட்டினார் சிதம்பரம். பதிலுக்கு சிதம்பரத்துக்கு நட்ராஜ் என பெயரிட்டார் கலாம். அதே போல சந்தானம், 'கலோனல் சீனிவாசன்' ஆனார். ககோட்கருக்கு மட்டும் ஜாலியாக 'மாமாஜி' என பெயர் சூட்டினர். பாலைவனப் பகுதியில் தாங்கள் நடத்தப் போகும் அணு குண்டு சோதனைக்கு 'சக்தி' என பெயர் சூட்டினர்.

இந்தியாவின் ராணுவ நடவடிக்கைகளை செயற்கைக்கோள்கள் மட்டுமல்லாது உளவாளிகள் கொண்டும் தொடர்ந்து கண்காணித்து வரும் நாடுகள், தொலைபேசிகளை ஒட்டு கேட்கும் நாடுகளுக்கு இந்த 'கலோனல்கள்' போக்ரானில் ஏதோ ராணுவ பயிற்சி நடத்துகிறார்கள் என்று தான் தோன்றியிருக்க வேண்டும்.

கலாம்-ஆர்.சிதம்பரம்- ககோட்கர்- சந்தானம் ஆகியோர் போக்ரான் பக்கம் போய் வந்து கொண்டிருக்கிறார்கள் என்று தகவல் வெளியானால், சந்தேகப் பொறி கிளம்பிவிடும் என்பதால் தங்கள் ரகசிய திட்டத்தை பெயர் மாற்றத்தில் இருந்து ஆரம்பித்தது இந்த டீம். மேலும் இவர்களது உடைகளும் மாறின. ராணுவ கலோனல்களின் உடைகளை அணிந்து தான் அந்தப் பகுதியில் நடமாடினர்.

ஏப்ரல் 10ம் தேதி தான் இந்த டீமை அழைத்து குண்டைப் போடச் சொன்னார் பிரதமர் வாஜ்பாய். அவர்கள் கோரியது ஒரே மாத அவகாசம் தான். சட்டென களத்தில் குதித்த இவர்கள் 120 விஞ்ஞானிகள் கொண்ட குழுவை உருவாக்கினர்.

ராணுவத்தின் Corps of Engineers பிரிவில் இருந்து 1,000 வீரர்களை தேர்ந்தெடுத்தனர். விஞ்ஞானிகள்- பொறியாளர்கள் என அனைவருக்கும் ராணுவ உடைகள் தான். அடுத்ததாக கலாம் அமெரி்க்க உளவு செயற்கைக் கோள்களின் நடமாட்டத்தை (satellite hours) வைத்து ஒரு 'டைம் டேபிள்' போட்டார்.
 
இந்த நேரத்தில் இருந்து இந்த நேரம் வரை வேலை பார்க்கலாம்.. இந்த நேரத்தில் யாரும் வெளியில் தலை காட்டக் கூடாது.. இந்த நேரத்தில் தான் அணுக் கருவிகள் தாங்கிய ராணுவ வாகனம் புறப்பட வேண்டும்.. இந்த நிமிடத்தில் தான் அது போக்ரானுக்குள் நுழைய வேண்டும்.. அங்கு நடப்பது ராணுவ பயிற்சி மாதிரி தெரிய வேண்டும், இதனால் ஹெவி மெஷின் கன்கள், மார்ட்டர்கள், ராக்கெட் லாஞ்சர்கள் ஆகியவை ஒரு பக்கம் வெடித்து புகையை கிளப்பட்டும்.. என பல்வேறு உளவு-ராணுவ யுத்திகளை ஒருங்கிணைத்தார் கலாம்.

    கலாமின் இந்த டைம் டேபிளின்படி விஞ்ஞானிகளுக்கும் பொறியாளர்களுக்கும் பெரும்பாலும் மிஞ்சியது இரவு நேரம் தான். இதனால் இந்தியாவின் அணு குண்டு சோதனைக்கான பெரும்பாலான பணிகள் இரவில் தான் நடந்தன. கிட்டத்தட்ட ஒரு மாத தூக்கமில்லா இரவுகள்..

மே மாதத்து 107 டிகிரி பாலைவன வெயில், கடும் உழைப்பு.. மே 10ம் தேதி பிரதமர் வாஜ்பாய்க்கு தகவல் தந்தார் கலாம், 'நாங்க ரெடி'..

வாஜ்பாயும் நீங்கள் நினைக்கும் எந்த நேரத்திலும் சோதனையை நடத்தலாம் என சுதந்திர தர, மே 11ம் தேதி பிற்பகலில் ஜெய்சால்மீர் பாலைவனத்தின் நிலத்தின் மிக ஆழத்தில் பூமி அடுத்தடுத்து 3 முறை குலுங்கியது.

உலகின் பல நாடுகளில் உள்ள சீஸ்மோகிராப் கருவிகள் இந்த சோதனையை உடனடியாக ரெக்கார்ட் செய்ய, உலக நாடுகள் முழுவதும் தெர்மோ நியூக்ளியார் ஷாக்...!.

இந்தியா சோதனையிட்டது அணு இணைப்பு (fission) மூலம் வெடிக்கும் 'தெர்மோ-நியூக்ளியார்' பாம். இந்தியா மீது போடப்பட்ட 30 ஆண்டு கால அணு ஆராய்ச்சித் தடைகளையும் அந்த குண்டு முழுவதுமாய் சிதறடித்தது. உங்கள் தடைகளால் நாங்கள் முடங்கிப் போய்விடவில்லை என உலகத்திடம் கர்ஜித்தது அந்த குண்டு.

அடுத்த 30 நிமிடத்தில் பிரதமர் திடீரென பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறார்.. ''இனி நாமும் அணு ஆயுத நாடு தான், இதை மற்றவர்கள் ஏற்றாலும் சரி. இல்லாவிட்டாலும் சரி''.

இந்த சோதனை மூலம் இந்தியா 3 முக்கிய தகவல்களை 'அணு' உலகுக்கு சொன்னது.

1. யுரேனியத்திலிருந்து புளுட்டோனியத்தை பிரித்தெடுப்பதில் தன்னிறைவை பெற்று விட்டோம்.
2. இனி அணு இணைப்பு மூலமான ஹைட்ஜன் பாமும் எங்களுக்கு சாத்தியம் தான்.
3. ஹெவி வாட்டரி்ல் இருந்து டிரிடியத்தை பிரித்தெடுக்கவும் எங்களுக்குத் தெரியும்.


நன்றி - புத்தர் சிரித்தாலும் சிரித்தார் - ஏ.கே.கான்

“தியாகச்சிங்கம்” - உத்தம்சிங்

 
21 ஆண்டுகள் காத்திருந்து தன் மூச்சு,செயல்,வாழ்வு அனைத்தையும் இதற்க்கு மட்டுமே அர்பணித்து பழி வாங்கிய இந்திய சுதந்திர போராட்ட போராளி பற்றி தெரியுமா....அவர் தான் உத்தம் சிங்..

இந்திய வரலாற்றின் மறக்க முடியாத அந்தக் ஜாலியன் வாலாபாக் கோரச் சம்பவம், 15 நிமிடங்களுக்குள் நடந்தேறியது. 1000 பேருக்கும் மேலான மக்கள் ஜெனரல் டயர் என்பவனால், கொன்று குவிக்கப்பட்டனர். 2,000 பேருக்கும் அதிகமானோர் குற்றுயிரும் குலைஉயிருமாகத் துடித்துக்கொண்டு இருந்தனர். ஒவ்வொரு துப்பாக்கி வீரனும் 33 ரவுண்ட் சுட்டு இருந்தான். மொத்தம் 1,650 ரவுண்ட் சுடப்பட்டது. செத்து விழுந்த உடல்கள் ரத்த வெள்ளத்தில் மிதந்தன. தப்பிப் பிழைத்தவர்கள், நடக்க முடியாமல் வீதியில் விழுந்து கிடந்தனர்.

என்னை மதிக்காத இந்தியர்களுக்கு நான் அளித்த தண்டனை இது. ஒரு ராணுவ அதிகாரியாக இந்தச் செயலுக்காக நான் சந்தோஷம் அடைகிறேன். என்னிடம் இன்னும் அதிக ஆயுதங்கள் இருந்திருந்தால், அதிக நேரம் சுட்டிருப்பேன்’ என்று வெளிப்படையாகத் தெரிவித்தான் ஜெனரல் டயர்..இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் 'மார்னிங் போஸ்ட்’ என்ற பத்திரிகை ஜெனரல் டயரை 'வெற்றி நாயகன்’ என்று பாராட்டி எழுதியது..

ஜாலியன் வாலாபாக் படுகொலை, இந்தியாவை உலுக்கியது. அந்தப் பாதகச் செயலுக்கு காரணமாக விளங்கிய பஞ்சாப் கவர்னர் மிக்கேல் ஓ டயர் மற்றும் ஜெனரல் டயர் ஆகியோரைப் பழிவாங்குவேன் என்று, உத்தம்சிங் என்ற இளைஞன் சபதம் செய்தான்...

சொன்னபடியே சரியாக 21 ஆண்டுகள் காத்திருந்து இங்கிலாந்தில் எச்சில் தட்டு கழுவி, கூலி வேலை செய்து கிடைத்த பணத்தில் துப்பாக்கி வாங்கி 1940-ம் ஆண்டு மார்ச் 13-ம் தேதி கவர்னர் ஓ டயரைச் சுட்டுத் தள்ளினார் உத்தம் சிங். ...

உதம் சிங்கின் செயல் இந்திய மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் விடுதலைப் போராட்டத்தை அகிம்சைவழியில் கொண்டு செல்ல உறுதியேற்றிருந்த மகாத்மா மற்றும் பண்டித நேரு ஆகியோர் இதைக் கண்டித்தனர். “பைத்தியகாரத்தனமான செயல்” என்று கூறினார் காந்தியடிகள். பண்டித நேரு, மகாத்மா காந்தி ஆகிய இருவருமே இச்செயலினால் தமது இயக்கம் பிரிட்டிஷ் அரசிடம் நடத்திக்கொண்டிருக்கும் அரசியல் பேச்சுவார்த்தைகளுக்கு பங்கம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தனர். பஞ்சாப் காங்கிரஸ் அரசு உதம் சிங்கின் செயலைக் கண்டித்தும் ஜெனரல் டயரின் மனைவிக்கு ஆறுதல் தெரிவித்தும் தீர்மானம் இயற்றியது. இந்நிலையில் காங்கிரஸ் பிதாமகர்களால் ஓரங்கட்டப்பட்டு அதனை விட்டு விலகிச் சென்று பாரத விடுதலைக்குப் போராடத் தீர்மானித்திருந்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மட்டுமே உதம் சிங்கை வெளிப்படையாகப் பாராட்டினார்.

அந்தக் கொலை வழக்கில், உத்தம் சிங்குக்கு தூக்குத் தண்டனை விதித்தது இங்கிலாந்து நீதிமன்றம்."தூக்கில் போட்டவுடன் இங்கிலாந்து மண்ணிலேயே என்னைப் புதைத்துவிடுங்கள். இத்தனை ஆண்டுகள் இந்திய மண்ணை இங்கிலாந்து ஆண்டது போல், இங்கிலாந்தின் ஆறடி மண்ணை ஓர் இந்தியன் நிரந்தரமாக அபகரித்துக்கொண்டான் என்பது ஒரு மாறாத அவமானமாக உங்களுக்கு அமையட்டும் என்று, வேண்டிக் கேட்டுக்கொண்டார் உத்தம் சிங்....

ஜூலை 31, 1940 அன்று அவர் வந்தேமாதர கோஷத்துடன் தூக்குக்கயிறை முத்தமிட்டார். “தியாகச்சிங்கம்” என அழைக்கப்பட்ட அவரது உடல் சீக்கிய மதச்சடங்குகளுக்கு தடைவிதிக்கப்பட்டு சிறைச்சாலையில் புதைக்கப்பட்டது.

பஞ்சாப் மாநிலம் சுல்தான்பூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் எஸ்.சாது சிங், “உத்தம் சிங்கின் எலும்புக் கூடுகளையாவது இந்தியாவிற்கு எடுத்துவர வேண்டும்” என்று மைய அரசிடம் கேட்டுக் கொண்டார். அன்றைய பிரதமர் இந்திரா காந்தி இதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். முப்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்னர், 1975 ஆம் ஆண்டு இங்கிலாந்து அரசு உத்தம் சிங் புதைக்கப்பட்ட இடத்தை மீண்டும் தோண்டி, மிச்சம்மீதி எலும்புக்கூடுகளை பொறுக்கிக் கட்டி இந்தியாவிற்கு அனுப்பியது.

உத்தம்சிங்கின் எலும்புக்கூடுகள் ராஜமரியாதையோடு இந்தியாவில் வரவேற்கப்பட்டு, உத்தம்சிங்கின் சொந்த ஊரில் எரியூட்டப்பட்டு, சாம்பல் கங்கை ஆற்றில் கரைக்கப்பட்டது...

உதம் சிங் போன்ற பல வீரர்களைப்பற்றி நம் இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக காந்தியையும் நேருவையும் விட்டால் வேறு யாரும் நம் சுதந்திரத்திற்குப் பாடுபடவில்லையோ என்று குழந்தைகள் நினைக்கும் அளவிற்கு பாடத் திட்டங்கள் பள்ளிகளில் இருக்கின்றன. நேதாஜியை மறந்தவர்கள், பகத் சிங்கை கேவலப் படுத்தியவர்கள், உதம் சிங் போன்றவர்களை நம் அடுத்தத் தலைமுறைக்குக் காட்டுவார்களா? ……

மேலும் ஆயிரமாயிரம் உயிர்களைப் பலி கொடுத்துப் பெற்ற இந்திய சுதந்திரத்தை, அதன் அருமை தெரியாமல் இந்தியாவை பிரிட்டிஷ்காரர்களே ஆட்சி செய்திருக்கலாமே என்று நம்மில் ஒரு சாரார் கேலியும் கிண்டலுமாகப் பேசி வருகிறார்கள். அதைத்தான் சகிக்க முடியவில்லை...

இன்று இந்த போராளி தூக்கிலிடப்பட்ட நாள் ..

Wednesday, July 29, 2015

அன்னதானம் !!!


சிவசாமி சிவகாமி தம்பதியரின் புதல்வன் கந்தன். பணக்காரரான சிவசாமி தினமும் அன்னதானம் செய்து வந்தார். கணவருக்கு உதவியாக சிவசாமி இருந்தான். சிறுவனான கந்தனுக்கு பெற்றோர் தினமும் இப்படி தானம் செய்கிறார்களே இது எதற்காக என்று அறியும் ஆவல் ஏற்பட்டது. தந்தையிடம் இதுபற்றி கேட்டான்.

மகனே ஒரு பங்குனி உத்திரத்தன்று என் தாத்தா எந்த தானத்தை ஆரம்பிக்க அதை உன் தாத்தாவும் கடைப்பிடித்தார். நானும் அதையே பின்பற்றுகிறேன். முன்னோர் செயலுக்கு காரணம் இருக்கும். ஆனால் நான் எந்த பலனையும் எதிர்பார்த்து இதைச் செய்யவில்லை என்பதால் அதை அறிய முயற்சிக்கவில்லை.

வேண்டுமானால் நீ முயற்சித்துப்பார் என்றார்.
 

அப்பா நான் காட்டிற்குப் போய் தவமிருந்து அன்னதானத்தின் பலன் பற்றி அறிந்து வருகிறேன் நீங்கள் அனுமதிக்க வேண்டும் என்றான். சிவசாமியும் அனுமதி தர கந்தன் காட்டுக்கு புறப்பட்டான். அவனது அம்மா கட்டுச்சோறு கட்டிக் கொடுத்தாள். வழியில் ஒரு துறவி அவனைச் சந்தித்து பசிக்கிறது என்றார்.
கட்டுச்சோற்றை அவரிடம் கொடுத்துவிட்டு கந்தன் நடந்தான். காட்டை அடைந்த வேளையில் இருள் சூழ ஆரம்பித்தது. அவனைக் கண்ட ஒரு வேடன் தம்பி காட்டில் இருளில் நடமாடுவது நல்லதல்ல மிருகங்கள் உன்னைக் கொன்றுவிட வாய்ப்புள்ளது. நீ எனது வீட்டுக்கு வா என்னோடு தங்கி விட்டு காலையில் செல் என்றான்

கந்தனும் உடன் சென்றான் வேடன் தன் மனைவியிடம் இருவருக்கும் உணவு கொடு என்றான். அவள் ஒரு கொடுமைக்காரி நீயே தண்டச்சோறு கூட ஒருவனை கூட்டி வந்திருக்கிறாயா? என்று திட்டினாள். நீ அவனுக்கு தனியாக எதுவும் கொடுக்க வேண்டாம் எனக்கு தரும் சோற்றை தா அதை நான் பகிர்ந்து கொள்கிறேன் என்றான். அதன்படியே கந்தனுக்கு உணவு அளித்தான்.

இரவில் அவர்கள் பரணில் ஏறி படுத்தனர். தனக்குரிய இடத்தை சிறுவனுக்குக் கொடுத்துவிட்டு வேடன் விழித்திருந்தான். ஒரு கட்டத்தில் கண் அசந்தான். அங்கு வந்த புலி அவனைக் கொன்றது. மறு நாள் வேடனின் மனைவி அந்த அதிர்ச்சியில் இறந்துவிட்டாள்.

வருத்தமடைந்த கந்தன் தவம் செய்ய காட்டுக்கு சென்றான். அப்போது ஒரு ஆண் குழந்தையின் அழுகுரல் கேட்டது. தவமுயற்சியை விட்டுவிட்டு அரண்மனையில் ஒப்படைத்தான். அது அந்த நாட்டு ராஜாவின் குழந்தை ராஜாவுக்கு வேண்டாத சிலர் அது பிறந்தவுடன் காட்டில் போட்டிருந்தனர். குழந்தை கிடைத்த மகிழ்ச்சியில் ராஜா கந்தனைப் பாராட்டினார். அப்போது குழந்தை பேசியது.

நான் நேற்று இரவு இறந்து போன வேடன் தான் இந்த சிறுவனுக்கு உணவளித்ததால் ராஜா வீட்டு குழந்தையாகப் பிறந்தேன். இவனுக்கு உணவளிக்க மறுத்த என் மனைவி காட்டில் பன்றியாகப் பிறந்திருக்கிறாள். அன்னதானத்தின் பலன் பற்றி அறிய இந்தச் சிறுவன் காட்டுக்கு வந்தான். அவனுக்கு அதை உணர்த்தவே இறைவன் மூலம் இந்த நாடகம் நடந்தது. என்றது. தானத்தின் பெருமை உணர்ந்த கந்தன் வீட்டுக்கு வந்து பெற்றோர்களிடம் சொல்ல அவர்கள் தானத்தைத் தொடர்ந்தனர்,

ரத்தின லிங்கம்


திருநள்ளாறு திருத்தலத்தில் உள்ள தியாகராஜப் பெருமான் சன்னிதியில், சாதிப்பச்சை ரத்தினத்தினால் ஆன சிவலிங்கம் ஒன்று உள்ளது.

இந்த சிவலிங்கம் அங்குள்ள பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டிருக்கும். அற்புத சக்தி கொண்ட இந்த சிவலிங்கத்திற்கு தினமும் ஐந்து கால பூஜைகள் செய்யப்பட்டு, அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்படுகின்றன.

இந்த பூஜையில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு, எண்ணிய எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது நம்பிக்கையாகும்.

"நகர்ப்புற நக்சல்" (Urban Naxal)

செயல்பாடுகள் மற்றும் சட்டப் பின்னணி ​1. அறிமுகம் மற்றும் சொல்லாடலின் தோற்றம் ​ "நகர்ப்புற நக்சல்" (Urban Naxal) என்பது இந்திய அ...