Wednesday, September 2, 2015

இத்தாலி பாராளுமன்றத்தையே நடுங்க வைத்த இந்து துறவி

வீரத்துறவி சுவாமி யோகானந்தகிரி. கிறிஸ்தவ மதவெறி கொண்ட இத்தாலி நாட்டையே புரட்டிப் போட்டு இந்துத்வா கொள்கையை புகுத்தி மதசார்பற்ற நாடாக மாற்றிய Secularism மாமனிதர்.
யார் இவர்??????!!!!!!??
இத்தாலியில் கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்த இவர் இந்தியாவிற்கு வந்து யோகா கலையை கற்று பின்னர் சமஸ்கிருதம் பயின்று இந்து மத கொள்கையையும் தத்துவங்களையும் அறிந்து கொண்டார். பின்னர் தென் இந்தியாவில் சைவ சித்தாந்தங்களையும்,ஆயுர்வேதம், கலைகளையும் அறிந்து தன்னை இந்துவாக பிரகடன படுத்தினார். 1982ல் இந்து துறவியாக தன் வாழ்க்கையை மாற்றினார்.
பின்னர் இத்தாலிக்கு சென்று இந்து மதத்திற்கான விதையை போட்டார். 1985 ல் இத்தாலியின் சவனோ Savona என்ற இடத்தில் தனது கீதானந்த ஆசிரமத்தை தொடங்கி இந்து மதத்தை போதித்தார். அத்தோடு நில்லாமல் Italian Hindhu Union (IHU) என்ற அமைப்பினை தொடங்கி 3 நாள் இந்து மத வழிபாடு பற்றிய சொற்பொழிவினை ஏற்படுத்தி இந்தியாவிலிருந்து ஆண்மிகவாதிகளை வரவழைத்தார்.
யோகானந்தகிரியின் செயல்பாடுகளை கண்டு அதிர்ந்த கத்தோலிக்க கிறிஸ்தவம் குருமார்கள் இவருக்கு எதிராக பாராளுமன்றத்தில் குரல் எழுப்பி கண்டித்தனர். கிறிஸ்தவ மதம் மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட இத்தாலியில் இந்துத்வாவை புகுத்துவதா என வசை பாடினார்கள். அதன் விளைவாக இந்து மதம் இத்தாலியில் தடையும் செய்யப்பட்டது.
துணிச்சல் மிகுந்த வீரத்துறவி பலரை இந்துவாக மாற்றியதோடு பாராளுமன்றத்திற்கே இந்துத்வா கொள்கையை விளக்கி சவால் விட்டார். இந்துக்களின் அற்புதமான யோகா கலையை பலர் பயின்று இத்தாலியில் ஆரோக்கியமாக இருப்பதையும், ஆயுர்வேதம், இந்துத்வா கொள்கையை யும் விளக்கினார்.
இந்தியா, இலங்கை, நேபாளம், மொரிஷியஸ் போன்ற இந்து நாட்டுக்களில் கிறிஸ்தவ மக்கள் வழிபட அனுமதி இருக்கும் போது இத்தாலி ஏன் இந்து மதத்தை ஏற்கக் கூடாது என கேள்விக் கணையை விட்டார். இதனால் இந்து மதத்தினை அறிந்த பலர் இவருக்கு ஆதரவாக களம் இறங்கினார்கள். பல போராட்டங்களுக்கிடையே,
2007 ம் ஆண்டு இத்தாலி பாராளுமன்றத்தில் Article 8 படி புதிய தீர்மானம் இயற்றப்பட்டு இத்தாலி மதசார்பற்ற நாடாக அறிவிக்கப்பட்டது Secularism. இதனால் இந்து மற்றும் புத்த மதத்திற்கு புத்துணர்ச்சி அளிக்கப்பட்டது. இதனால் இந்து மதம் பல்கிப் பெருகி தன் வெற்றியை நிலை நாட்டியது.
இந்து மதத்தின் அற்புதங்களை அறிந்து கொண்டு பலர் இதுவாக மாறுகின்றனர். இந்துக்களின் மறுபிறவி, தர்மம், கடவுள் வழிபாடு, பிரபஞ்ச சுழற்சி, கலாச்சாரம், வேதங்கள், யோகா போன்றவற்றினை அறிந்து இந்து மதத்தின் வேர்களை இத்தாலியில் பரப்புகின்றனர்.
இளம் பதின்பருவத்து வயதில் இந்தியாவிற்கு வந்து 20 ஆண்டுகாலம் இருந்து துறவியாகி இத்தாலிற்கு சென்று இந்து சாம்ராஜ்யத்தை ஏற்படுத்தி இன்றும் இந்து மதத் தொண்டாற்றுகின்றனர்.
பூஜ்யமாக இருந்த இந்துக்களின் மக்கள் தொகை இத்தாலியில் இன்று 1,28,950 ஆக மாபெரும் விஷ்வரூபம் எடுத்து கத்தோலிக்க கிறிஸ்தவத்தை ஆட்டம் காணச் செய்துள்ளது. வாழ்க பல்லாண்டு வீரத்துறவி யோகானந்தகிரி. இந்துக்களே விழித்துக் கொள்ளுங்கள்! நாமும் இந்து மதத்தை உலகமறியச் செய்வோம்! என்றும் இந்துவாக! இதை அனைவரும் பகிர்வோம்!!

No comments:

Post a Comment

முத்துசாமி தீட்சிதர்

மிகபெரும் பக்திமான்களை, நாயன்மார் ஆழ்வார் வழிவந்த அதிதீவிர பக்தர்களை ஒருவலையில் ஞான சித்தர்களை வெறும் சங்கீத மும்மூர்த்திகள் என அடக்கிவிட்ட ...