நம்மால்
அதிகம் கண்டு கொள்ளாதவற்றில் நொச்சியும் ஒன்று. குத்து செடியான இது
ரோட்டோரங்களிலும் வண்டிபாதை ஓரங்களிலும் தானே முளைத்திருக்கும். இதன் இலை
சிறந்த மருத்துவ குணங்களை கொண்டது. முக்கியமாக ஜலதோஷத் தலைவலிக்கு கைகண்ட
மருந்து நொச்சி தைலம். மேலும் நொச்சி இலையில் ஒத்தடம் கொடுத்தால்
வாயுப்பிடிப்பு, சுளுக்கு நீங்கும். நொச்சி இலையைச் சட்டியில் போட்டு பிறகு
அடுப்பில் சூடு செய்து ஒத்தடம் கொடுத்தால் வலி நீங்கும்.
வலியுள்ள இடத்தில் துவையலாக அரைத்தும் பூசலாம். நொச்சி இலைகளை ஒரு
துணிப்பையில் அடைத்துப் தலையணையாகப் பயன்படுத்தினால் ஜலதோஷம் பறந்துவிடும்.
உலர்ந்த நொச்சி இலையைத் தூள் செய்து பீடிப்புகை பிடித்தாலும் ஜலதோஷம்
நீங்கும். இதனுடைய சாறு வயிற்றுப் புண்ணையும் ஆற்றும். இலைச்சாற்றை
தலைப்பகுதியிலும், கழுத்திலும் தேய்த்து, சிலமணி நேரம் உடலில் ஊறவிட்டு
இளஞ்சூட்டு வெந்நீரில் குளித்தால் கழுத்துவலி நீங்கி, காதில் தங்கிய நீரும்
வெளியேறும். பிரசவத்துக்கு முன்னும் பின்னும் கர்ப்பப்பையில் ஏற்படும் வலி
குறைய நொச்சி இலை போட்டு ஊற வைத்த தண்ணீரைச் சூடுபடுத்தி, உடம்பில் ஊற்ற
வலி குறையும்.
நொச்சி இலையை சிறிது ஆமணக்கு எண்னணெய் விட்டு
வதக்கி ஒற்்றடம் இட, மூட்டுவலி, மூட்டு வீக்கம் குறையும்.
நொச்சி இலையை இடித்து சாறு பிடழிந்து கட்டிகளின் மீது பூசி வர
குட்டி கரையும். வீக்கம் குறையும். நொச்சி மலர்களை நிழலில்
உலர்த்தி பொடி செய்து இரண்டு சிட்டிகை அளவு எடுத்து
பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட ரத்த பேதி, ரத்த வாந்தி
குணமாகும். நொச்சி இலையுடன் மிளகு சேர்த்துக் கஷாயம் வைத்து
சாப்பிட மலேரியா சுரம் தணியும். வயிற்று வலி, உப்யபுசம்,
நாக்குப் பூச்சி, வாத நோய்களும் குணமாகும். நொச்சி இலையை
நீரில் விட்டு காய்ச்சி, அந்கத நீரில் குளித்து வர உடல் வலி குணமாகும். அந்ொத நீரைக கொண்டு பிள்ளை பெற்றவர்களை
குளிப்பாட்டலாம். நொச்சி இலையுடன் வெல்லம் சேர்த்துக்
காய்ச்சி குடித்து வர உடலின் சூட்டை நீக்கி உடலுக்கு குளுமையை உண்டாக்கும்.
No comments:
Post a Comment