Wednesday, August 1, 2012

கணிதமேதை சீனிவாச ராமானுஜம்

கணித மேதை சீனிவாச ராமானுஜன்கணிதமேதை சீனிவாச ராமானுஜனின் 125 ஆவது ஆண்டில் கூட ஆயிரக்கணக்கான அவரது கணித புதிர்களுக்கு விடை தெரியவில்லை என்கிறார் சென்னை பல்கலைக்கழகத்தின் சீனிவாச ராமனுஜன் உயர்கணித கல்வி மற்றும் ஆய்வு மையத்தின் தலைவர் பேராசிரியர் டி தங்கராஜ் அவர்கள்.
கணிதம் என்பது தனித்துறையாக பரவலாக அறியப்பட்டாலும், விஞ்ஞான உலகில் அறிவியல் துறைகளுக்கெல்லாம் தாயாக கணிதம் கருதப்படுகிறது.
எல்லாவிதமான விஞ்ஞான தத்துவங்களுக்கும் கணக்கே அடிப்படை என்கிற விஞ்ஞானிகளின் கருத்தே இதற்கு காரணம். அப்படியான அடிப்படை விஞ்ஞானமான கணிதத்தில் அகில உலக கவனத்தையும் ஈர்த்த மேதை ராமானுஜன்.
தமிழ்நாட்டின் ஈரோட்டில் மிகவும் வறிய குடும்பத்தில் பிறந்து, கும்பகோணத்தில் பள்ளிப்படிப்பை துவங்கிய ராமானுஜன் ஆரம்பம் முதலே கணிதத்தில் மிகப்பெரும் புலமையை வெளிப்படுத்தினார். பள்ளி செல்லும் மாணவனாக அவர் இருந்தபோதே, கல்லூரி மாணவர்களுக்கான கணித பாடங்களை சுயமாக படித்து எளிதில் புரிந்துகொள்ளும் அளவுக்கு ஆற்றல் பெற்றிருந்தார்.
ஆனால் அவரால் மற்ற பாடங்களுக்கான தேர்வுகளில் முறையாக தேர முடியாமல் தடுமாறிய சம்பவங்களும் நடந்தன. அத்தகைய தடைகளையும் மீறி, பிற்காலத்தில் உலக கணித மேதைகளில் ஒருவராக அவர் பரிணமித்தார்.
மிகச்சிறிய வயதில், அதாவது தனது 32வது வயதில் இறந்த அவருடைய கணித சூத்திரங்கள் இருபதாம் நூற்றாண்டு கணித வளர்ச்சியில் முக்கிய பங்காற்றின என்பது மட்டுமல்ல, இருபத்தியோராம் நூற்றாண்டிலும் கணித வல்லுநர்களுக்கு தூண்டுகோலாகவும் விளங்கி வருகிறது.

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...