தமிழகத்தில் மூலை, முடுக்கெல்லாம் "தர்பூசணி", இளநீர் "கீரணிப் பழம்" என்று குவிந்து கிடக்கும் இந்த பழங்கள், கோடைக்கேற்ற, குளிர்ச்சியான பானங்கள் தயாரிக்க மட்டுமன்றி, உடல் ஆரோக்கியத்திற்கும் ஏற்றது. "மெலன்" என்று பொதுவாக ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்தப் பழங்கள் வெவ்வேறு வகையான வடிவத்திலும், வண்ணத்திலும் கிடைக்கிறது. அதில் ஒரு வகைதான் "கீரணிப் பழம்". இது உடற்சூட்ட
ைத் தணித்து, களைப்பைப் போக்க வல்லது. நெஞ்செரிச்சலை நீக்க உதவும்.
இதில் விட்டமின் "A", "B" மற்றும் பொட்டாசியமும் உள்ளது. ஆயுர்வேதத்தில், சிறுநீரகக் கோளாறு, மலச்சிக்கல், வாய்வுக் கோளாறு, குடற்புண் ஆகியவற்றை சரிசெய்ய, இந்தப் பழம் பரிந்துரைக்கப் படுகிறது.
இதன் தோலை நீக்கி விட்டு, சிறு துண்டுகளாக வெட்டி, சிறிது சர்க்கரையைத் தூவி அப்படியே சாப்பிடலாம்.
அல்லது வெட்டிய துண்டுகளை மிக்ஸியில் போட்டு, தேவையான சர்க்கரையும், சிறிது தண்ணீரையும் சேர்த்து சாறாக்கி, குளிர வைத்துக் குடிக்கலாம்.
பாலைச் சேர்த்து மிக்ஸியில் அடித்து, "மில்க் ஷேக்" செய்தும் குடிக்கலாம்.
இத்துடன் சிறிது எலுமிச்சம் சாறு, இஞ்சி சாறு, தேன் கலந்தும் சாப்பிடலாம்.உடல் நலத்திற்கு நிறைய நன்மை இருக்கிறது

No comments:
Post a Comment