Friday, August 3, 2012

அறிந்து கொள்வோம்!



விடுதலைக்குப் பிறகு வெளியிடப்பட்ட முதல் ஸ்டாம்பின் விலை 3.5 அணா. 21.11.47-ல் வெளியிடப் பட்ட இதில்,'ஜெய்ஹிந்த்'என்று பொறிக்கப்பட்டிருந்தது. இந்தியாவில் முதலில் தபால் தலை வெளியிடப் பட்டது,1.7.1852ல்.விலை அரை அணா.
******
கண் இமைகள், வியர்வைத் துளிகள் கண்ணுக்குள் விழாமல் காக்கின்றன.
******
'வைரஸ்'என்ற சொல்லுக்கு லத்தீன் மொழியில் 'விஷம்'என்று பொருள்.
******
துருக்கி நாட்டின் தலை நகரான இஸ்தான்புல்லில்தான் உலகிலேய அதிகமான மசூதிகள் உள்ளன. அவற்றின் எண்ணிக்கை 444.
******
'ஆல்காக்கள்'என்ற சிவப்பு நிற கடல் தாவரம் அதிக அளவில் உள்ளதால்தான் செங்கடல் சிவப்பாகத் தெரிகிறது.
******
நமது பூமி சூரியக் குடும்பத்தில் ஐந்தாவது பெரிய கிரகம். விண்ணிலிருந்து பார்த்தால் பூமி நீல நிறத்தில் தெரியும். யுரேனஸ் கிரகம் நீலமும் பச்சையும் கலந்த நிறத்தில் காட்சியளிக்கும்.
******
செவ்வாய் கிரகத்துக்கு என்று தனியாக ஒரு சந்திரன் உண்டு. அது தினமும் இருமுறை தோன்றும்.அதன் பெயர் டைமோஸ்.
******
இந்தியாவில் முதல் முதலாக பஞ்சாயத்துத் தேர்தல் நடந்த ஆண்டு--1926
******
சிலி நாட்டிலுள்ள கலாமா என்ற இடத்தில் இதுவரை மழை ஒரு துளி கூட விழுந்ததில்லை.உலகிலேயே மிக வறண்ட பகுதி இதுதான்.
******
கி.மு.700 ல் இந்தியாவில் தொடங்கப்பட்ட தட்சசீலப் பல்கலைக் கழகம் தான் உலகிலேயே முதலில் உருவான பல்கலைக் கழகம். இங்கே பத்தாயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் படித்தார்கள். சுமார் அறுபது துறைகள் இதில் இயங்கின

No comments:

Post a Comment

முத்துசாமி தீட்சிதர்

மிகபெரும் பக்திமான்களை, நாயன்மார் ஆழ்வார் வழிவந்த அதிதீவிர பக்தர்களை ஒருவலையில் ஞான சித்தர்களை வெறும் சங்கீத மும்மூர்த்திகள் என அடக்கிவிட்ட ...