Thursday, January 10, 2013
வன்னி மரங்களின் மருத்துவ குணங்கள் :-
இந்தியப் பாலைவனங்களின் தங்க மரம்’ எனச் சிறப்பிக்கப்படுவது வன்னி மரம். பாலைவனங்களிலும் வானிலை அதிகம் வறண்டிருக்கும் பகுதியிலும் தாக்குப்பிடித்து வளரக் கூடிய பசுமை மாறாத மரம் வன்னி. இதன் அனைத்துப் பகுதிகளுமே பயன்படுவதால், 'கற்பகதரு’ என்றும் சொல்வார்கள்.
பூ:பித்தத்தால் வரக்கூடிய குன்மம், சொறி, சிரங்கு போன்றவற்றைக் குணப்படுத்தக்கூடியது இந்த மரத்தின் பூ. பூக்களைப் பொடி செய்து, சர்க்கரையுடன் கலந்து கருவுற்ற பெண்கள் உட்கொண்டால், கருச்சிதைவு தவிர்க்கப்படும்.
இலை: இலையை அம்மியில் அரைத்துப் புண்கள் மீது வைத்துக் கட்டுப் போட்டால், அவை விரைவில் ஆறும். நரம்புத் தளர்ச்சியைக் குணமாக்கும் ஆற்றல் வன்னி இலைக்கு உண்டு. இதன் இலையைக் கொதிநீரில் போட்டு கஷாயம் தயாரித்துக் கொப்பளித்து வந்தால், பல் வலி கட்டுப்படும்.
காய்: காயைப் பொடி செய்து உட்கொண்டால், மார்புச் சளி குறையும். இந்தப் பொடியை தினமும் 5 முதல் 10 கிராம் வரை உட்கொண்டால் பெண்களுக்கு மாதவிடாய் சமயத்தில் ஏற்படக் கூடிய அதிகப்படியான உதிரப் போக்கு கட்டுப்படும். வன்னிக் காய் போட்டுக் கொதிக்கவைத்த நீரில் வாய் கொப்பளித்தால், ஈறுகள் மற்றும் பற்கள் உறுதிப்படும். விந்து அணுக்களின் எண்ணிக்கை குறைபாடு உள்ளவர்கள், வன்னிக் காய்ப் பொடியைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், விந்து கெட்டிப்பட்டு எண்ணிக்கையும் கூடும்.
பட்டை: அஜீரணம், குடல் புண் போன்ற நோய்களுக்கு இதன் பட்டை பயனாகிறது. பாம்பு, தேள் போன்ற விஷ ஜந்துக்கள் தீண்டினால், இதன் பட்டையை அரைத்துப் பூசுவதன் மூலம் வலி உடனடியாகக் குறையும். பட்டையில் இருந்து தயாரிக்கப்படும் மருந்துகள், தொழுநோய், தசையில் தோன்றும் கட்டிகள் போன்றவற்றைக் குணப்படுத்த உதவுகின்றன. பட்டையில் இருந்து கிடைக்கும் ஒரு வகைக் கோந்தை தண்ணீரில் கலக்கி கர்ப்பிணிகளுக்குக் கொடுப்பதன் மூலம் சுகப் பிரசவம் நிகழும்.
முசாஃபி என்னும் மருந்து ரத்தத்தைச் சுத்திகரிக்கவும் வன்னிப் பூவில் இருந்து தயாரிக்கப்படும் முஹாஃபிஸ் ஜனீன் என்ற மருந்து கருச்சிதைவைத் தடுக்கவும் பயனாகிறதாம். 'ஹப்பே பேசிஷ், சஃபூப் கலான், சஃபூப்சீலானுல் ரஹம், சஃபூப் கஜ்வாலா, சஃபூப் பாஸ், ஜரூர் முஜஃபஃப், தவாயே காகரா, தவாயே காஸ், மாஜுன் ஸலலப், மாஜுன் ஜாலிநியுஸ், மாஜுன் சோப்சீனி பனுஸ்கா கலான் போன்ற பல மருந்துகளும் வன்னி மரத்தில் இருந்து கிடைக்கும் பொருட்கள் மூலம் தயாரிக்கப்படுகின்றன
Subscribe to:
Post Comments (Atom)
முத்துசாமி தீட்சிதர்
மிகபெரும் பக்திமான்களை, நாயன்மார் ஆழ்வார் வழிவந்த அதிதீவிர பக்தர்களை ஒருவலையில் ஞான சித்தர்களை வெறும் சங்கீத மும்மூர்த்திகள் என அடக்கிவிட்ட ...
-
இது புதனின் நட்சத்திரம். 1. கார்த்திகை 2. மிருகசீரிஷம் 3. புனர்பூசம் 4. பூரம் 5. சித்திரை 6. சுவாதி 7. விசாகம் 8. அனுஷம் 9. திருவோணம் 10. அவ...
-
கந்தர்வ ராஜாய காயத்ரி மந்திரம் ஓம் கந்தர்வராஜாய வித்மஹே களத்ரதோஷ நிவர்த்தகாய தீமஹி தந்நோ யக்ஷ: ப்ரசோதயாத் கீழ்க்காணும் மந்திரங்களைய...
No comments:
Post a Comment