Friday, July 19, 2013

அமெரிக்காவுக்குப் பரிசாக கலைவாணி சிலையை

முஸ்லிம் மக்களை தன் மக்கள் தொகையில் அதிகளவு (97%) கொண்டுள்ள நாடான இந்தோனேசியா, அண்மையில் அமெரிக்காவுக்குப் பரிசாக கலைவாணி சிலையை வழங்கியுள்ளது.

அமெரிக்கத் தலைநகரான வாஷிங்டனில் அமைந்துள்ள இந்தோனேசிய நாட்டின் தூதரகத்தின் முன் இந்தச் சிலையை நிறுவியுள்ளது அந்த நாடு.

வெள்ளை மாளிகையிலிருந்து சில மைல்கள் தொலைவிலேயே இந்தச் சிலை அமைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்து மதக் கடவுளான கலைவாணி சிலையை அமெரிக்காவிற்குப் பரிசு அளித்ததன் மூலம் இரு நாட்டிற்கும் இடையே உள்ள நட்புறவைப் பலப்படுத்தவும், மதச்சார்பற்ற கலாச்சாரத்தை வெளிப்படுத்தவும் உதவும்" என்கிறார், இந்தோனேசிய தூதரகத்தின் அதிகாரி ஒருவர்.

16 அடி உயரமுள்ள இச்சிலையை பாலிதீவைச் சேர்ந்த சிற்பி ‘நியோமன் சுதர்வா’வின் தலைமையில் 5 பேர் அடங்கிய குழு கடந்த ஏப்ரல் மாதத்தில் துவங்கி ஐந்தே வாரங்களில் மிக நேர்ந்தியான சிலையாக செதுக்கியுள்ளனர். மொத்தம் மூன்று பகுதிகளாக இந்தச் சிலையை வடிவமைத்துள்ளார்கள்.

தாமரைப் பூவின் மீது அன்னப் பறவை அமர்ந்திருப்பது போன்றும் அதன் மேல் கல்வித் தாய் கலைவாணி நின்று கொண்டிருப்பதைப் போன்றும், அதன் கீழ் 3 மாணவர்கள் அமர்ந்து கொண்டு படிப்பதைப் போன்றும் இச்சிலையை வடிவமைத்துள்ளனர்.

கலைவாணி தனது கைகளில் வீணை, சந்தன மாலை, லாந்தர் விளக்குடன் நின்றுகொண்டு அருள்பாலிப்பது போல் வடிவமைத்துள்ளனர்.

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...