Friday, February 19, 2021

பானிப்பட் போர்

18ம் நூற்றாண்டு......The stage is set...

 மராட்டிய பேரரசு ஆல் போல் தழைத்து, அருகு போல் வேரூன்றி, கிட்டதட்ட இந்த முழு பாரதமும் அதன் ஆளுமையில், டில்லி முகலாயர்கள் செல்லா காசு. 

ஒரு மராட்டிய மன்னர் டில்லி அரியணையில் அமர்வது தான் பாக்கி.

 அதற்க்கும் ஆள் தயார், அது "ஸ்ரீ மான் விஸ்வாஸ்  ராவ்." மராட்டிய பேஷ்வா நானா சாகிப் பின் புதல்வர். தேவை ஒரு Excuse... சீக்கிரமே அதுவும் லபித்தது 

 14 ஆம் தியதி, ஜனவரி மாதம் 1761
அந்த பானிப்பட்  சமவெளியில் மாதக்கணக்கான பலப் பரீக்ஷை  களுக்கு பின் அந்த இரு படைகளும் மோதிக் கொண்ட.ன..

 சத்திரபதி சிவாஜி  மஹராஜ் அவர்கள் கனவுகண்ட..... ஹிந்து சாம்ராஜ்யம்...... , A Slip betwex the cup and the lip ஆன நாளும் அது தான்..... 

அதற்க்கு முக்கிய   காரணம்  ஒரே, ஒரு டெக்னிக்கல் தவறு தானாம்... 

அந்தப் படைகள்.... 
ஒன்று...    இந்திய மிலேச்சர் களின் வேண்டுகோளின் படி   இந்தியாவை கொள்ளை அடிக்க, வீர மராட்டியரின்  வளர்ச்சியை தடுக்க அழைக்கப்பட்ட ஆப்கானிய மன்னர்  அஹ்மத் ஷா அப்தாலி தலைமையில்.. . (... 1, 00,000  ஆப்கானிய,+ இந்திய ரோகில்லா+, அவந் நவாப் சிரஜ் - உத்-தௌலா "ஜிகாத்" பெயரால், அவர்களின் உள் ஊர் உதவி உடன் . ) 

மற்றொன்று  காலம் காலமாக நடந்து வரும் இந்த அட்டூழியத்திற்க்கு முற்றுப்புள்ளி இட வேண்டும் என்ற சங்கல்பத்துடன்  மராட்டிய பேரரசின்... வீர மராட்டியர்களின் வட திசை படை...

 சதாசிவ ராவ் பாகு , மற்றும்  பேஷ்வா பாஜி ராவ் வின் மகன், (அடுத்த டில்லி சக்கரவர்த்தி...?? )  ஸ்ரீமான் விஸ்வாஸ்  ராவ் தலைமையில்... . (70,000 வீர மராட்டியர்கள், முக்கியமாக 200 long range, அதி நவீன பிரஞ்சு பீரங்கிகளுடன்... , 

மராட்டியர்கள் டில்லியை கைப்பற்றினர், அதை ஆக்கிரமித்து  இருந்த அப்தாலி. , மிகுந்த உயிர் சேதத்துடன் பின் வாங்கினார். 

சில மாதங்களில்..... அவரை பானிப்பட்டில் சதாசிவ ராவ் மீண்டும்  எதிர் கொண்டார்..
 ஆனால் நிலைமை இப்போது  தலைகீழ்,

 மராட்டியர்கள் ஏறத்தாழ  முற்றுகையில், பாசறையில் தலைவிரித்து ஆடும் கடும் உணவு,,பணப் பஞ்சம், 

பூனாவில் இருந்து பேஷ்வா அனுப்பிய பணம்... உணவு ஆப்கானியர்களிடம் மாட்டிக் கொண்டது. உள் ஊர்   ஹிந்து.... ராஜபுத்திர்கள், ஜாட், சீக்கிய படை உதவி இல்லை... . தளபதிகளிடையே முணு முணுப்பு. 

ஆப்கானியர்க்கு இந்தப் பண, உணவு ப் பிரச்சனைகள் இல்லை, நன்றி இந்திய மிலேச்சர்கள்... ரோகில்லாக்கள், அவுத் நவாப்,, "ஜீகாத் ." .... ஆனால் அவர்களுக்கு போரை ஆரம்பிக்க அச்சம்.. 

பட்டினியில்  சாவதை விட, போரில் சாகலாம்... , முற்றுகையை உடைத்து டில்லி போனால் உணவு கிடைக்கும் என மராட்டியர்கள் சதா சிவ  ராவிடம் வேண்ட, போர் துவங்க அனுமதி கிடைக்கிறது. ஜனவரி 14.... 

காலையில் ஆரம்பித்த போரின் 
முதல் சுற்றில் மராட்டிய, பீரங்கி, துப்பாக்கி தாக்குதலில் 15,,000 ரோகில்லா, ஆப்கானியர்கள் point blank ஆக கொல்லப் பட்டனர்.. 

இப்போது தான் அந்த டெக்னிகல் தவறு நடந்தது.. 

மராட்டியர்களுக்கு  தங்கள் குதிரை படை மேல் மிகுந்த  நம்பிக்கை. பலமுறை அவர்களின் வெற்றிகளுக்கு அது  காரணமும். கூட.... ஆனால்... 

 சதா சிவ ராவ் ஒரு கண்டிப்பான ஒரு  கட்டளை இட்டு இருந்தார், பீரங்கி தாக்குதல்களினால்  எதிரி போதுமான அளவு, மென்மை பட்ட பிறகு தான் குதிரை படை களம் புக வேண்டும் என்று, 

ஆனால் அது அன்று  மீறப்பட்டது. சர்தார்களின் போட்டி பெறாமை,.... தான் பெயர் எடுக்க வேண்டும் என்ற அல்ப ஆசை,

 மராட்டிய... குதிரை படைகள்  முன்னேறி தாக்க ஆரம்பித்தன. 

இப்போது மராட்டிய பீரங்கிகள் சுட  தயங்கின, சுட்டால் தங்கள் குதிரை படையே அடி படும்.. 

அப்தாலி தேர்ந்த தளபதி.. எதிர்பாராமல் லட்டு போல்  வாய்த்த இந்த   சந்தர்ப்பத்தை நழுவ  விடுவாரா? 

பயன் அற்று இருந்த தன் short range, பீரங்கிகளால் குதிரை படையை  தாக்க ஆரம்பித்தார்...  பெரும் அழிவு 

கவனித்த சதாசிவ ராவ் பல போர் கண்டவர்... அந்த சந்தர்ப்பத்தில் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்தார்...

 தனே தலைமை தாங்கி முழு மராட்டிய  பலத்துடன் நேரடியாக  எதிரிகள் மேல் பாய்ந்தார்".ஹர ஹர மஹாதேவ்" முழக்கத்துடன். 

எதிரி யால் இந்த இடியை  தாங்க  முடிய வில்லை... பின் வாங்க ஆரம்பித்தான்...

 அப்தாலி தன்  ரிசர்வ் படைக்கு கட்டளை இட்டார், "புற முதுகு காட்டி ஓடிவரும் ஆப்கானியர்களை வெட்டித் தள்ளுங்கள்" என்று, 

பின் வாங்கி ஓடியவர்கள் திரும்பினர்... வேறு வழி.. போர் மாலை வரை நடந்தது. 

மதியம் 3 மணி வரை வெற்றி முகத்தில் இருந்த மராட்டியர்... போர் திசை மாறியது.. 

அதிகம் வளர்த்துவானேன்..., 30,000/அப்தாலி படையினரும்,, 40,000 வீர மராட்டியரும் கொல்லப் பட்டனர், சதா சிவ ராவும் ..... ஸ்ரீ மான் விஸ்வாஸ்  ராவும் களத்திலேயே  வீர மரணம், 

அதை விட கொடுமை மராட்டிய  படையின் பாதுகாப்பில் வட நாட்டின் புண்ணிய தலங்களை தரிசிக்கலாம் என வந்த 30,000 ++ போரில் ஈடுபடாத ( DEAD WEIGHT) ஆண், பெண், குழந்தைகள் ஈவு இரக்கமின்றி கொல்லப் பட்டனர். அடிமை படுத்தப் பட்டனர். 

போரில் தங்கள் உறவு  களை இழக்காத ஒரு மராத்திய குடும்பம் கூட இல்லை, 

படு தோல்வியை குறிக்கும் விதமாக "அது தான் என் பானிப்பட்". எனும் புதிய மராத்திய  சொலவடையே அறிமுகம் ஆயிற்று... 

பொது எதிரி... ஆப்கானியர்களுக்கு எதிரான இப்போரில் இராசபுத்திர,
 சீக்கிய, ஜாட் படைகள் மராட்டியப் படைகளுக்கு உதவ முன் வரவில்லை.  இது மராத்திய  தோல்விக்கு ஒரு காரணம். 

போரில் ஆப்கானிய வெற்றி இந்திய வரலாற்றில் ஒரு பெரும் திருப்புமுனையாக அமைந்தது.

 மராத்தியர்கள் பஞ்சாப், ஜம்மு காஷ்மீர், தில்லி, கங்கைச் சமவெளி பகுதிகளை  விட்டு .வெளியேறினர். 

மராத்தியப் பேரரசு சிதைந்து, தனித்தனி நாடுகளாக மாறியது. .

 இந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி வலுப்பட  இப்போர் காரணமாக அமைந்தது. 

போரின் கடுமையை அனுபவித்த  ஆக்கிரமிப்பாளர்கள் பிறகு இந்தியா பக்கம் பிறகு தலை வைத்தும் படுக்க வில்லை..

இதற்க்கு எல்லாம் காரணம் அந்த  தலைமைக்கு கீழ் படியா அந்த  டெக்னிகல் தவறு, மற்றும் ஹிந்துக்களின் ஒற்றுமை இன்மை தான் என்பது சரித்திர ஆய்வாளர்களின் முடிவு. 

நாம், இன்னும் பாடம் கற்ற பாடு இல்லை.

Thursday, February 18, 2021

தமிழும் சமஸ்கிருதமும்

இங்கு சிலர் சமஸ்கிருதம் பிராமணர்களின் மொழி என்றும் அது ஈரானில் இருந்து ஆரியர்களால் இங்கே புகுத்தப்பட்டது என்றும் தமிழுக்கு சமஸ்கிருதம் விரோதி மொழி என்றும் எழுதிவருகின்றனர். ஆனால் சமஸ்கிருதமானது  முற்காலத்தில் அதாவது ஆங்கிலேயர் வருகைக்கு முன்புவரை  அனைத்து தரப்பினரும் பயன்படுத்தினர் என்பதை ஏகமனதோடு ஒத்துக்கொள்ளும் சில தமிழ்மொழி ஆர்வலர்கள், பெரும்பான்மையாக இன்றைய காலகட்டத்தில் பிராமணர்கள்  மட்டுமே அம்மொழியை பயன்படுத்துவதால் அது பிராமண மொழி என்றும் தமிழுக்கு அந்நியம்  என்றும் எழுதி வருகின்றனர்...!

ஆனால் எனக்கு என்ன சந்தேகமெனில்  ஒரு மொழியை ஒரு மதத்தைச் சார்ந்தவரோ அல்லது  ஒரு சாதியை சார்ந்தவர்களோ  அதிகம் பயன்படுத்துகிறார்கள் என்பதற்காக அம்மொழியை  அச்சாதியினருக்கோ அல்லது அம்மதத்தினருக்கோ உரிமையாக்கிவிடும் என்று கூறுவது முட்டாள்தனமாக தோன்றவில்லையா??? நான் எனது  தமிழ் மொழியின் பெருமையை இன்னொரு மொழியை, அதன் மகத்துவத்தை  பழித்துப் பேசுவதன் மூலம்தான் உயர்த்தமுடியும் என்பது அறிவின்மையாகவே கருதுகிறேன். ஒருவேளை தனது தாய்மொழிக்காக இன்னொரு மொழியை அவமதிப்பவர்களால் நிச்சையமாக அம்மொழிக்கு தீங்குதான் விளையுமே அன்றி என்றும் நன்மை பயக்காது..!

ஆனால் கடவுளுக்கு தமிழ் தெரியாதா என்று நகைப்பாக நெல்லைக் கண்ணன் அவர்கள் பேசியிருந்தார். கடவுளுக்கு மொழிகள் கிடையாது. இந்த மொழிதான் எனக்கு உகந்தது மற்றவைகள் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று இறைவன் எந்த இடத்திலும் யாரிடமும் கூறியதாக சரித்திர சான்றுகள் இல்லை. இதற்கு புராண, இதிகாச ஆதாரங்களும் இல்லை. இறைவனை வழிபடும் போது தமிழ் மொழியிலும் வழிபடலாம். சமஸ்கிருதத்திலும் வழிபடலாம். இதுவரை எழுத்து வடிவமே இல்லாத நரிக்குறவர் பாஷையிலும் வழிபாடு நடத்தலாம். இறைவன் அதை ஒரு போதும் ஏற்காமல் விலக்கி வைப்பது கிடையாது...!

தமிழ் மொழியில் அழகான பாடல்கள் உண்டு. அருமையான கருத்துக்கள் உண்டு. நிகரற்ற திருக்குறளும், நெஞ்சை நெகிழ்விக்கும் பாசுரங்களும் தமிழில் மட்டுமே உண்டு. அதுபோல சமஸ்கிருதத்தில் புகழ்பெற்ற இதிகாசங்களும், காவியங்களும், சிற்றிலக்கியங்களும் உண்டு என்றாலும் அவைகள் தமிழோடு ஒப்பிடும் போது மிகவும் குறைவுதான் என்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்....!

தக்க அந்தணர்களை வைத்து, நிலம் தானம் கொடுத்து, பசு தானம் கொடுத்து சொர்ண தானம் கொடுத்து வேத பாடசாலை வைத்து வடமொழியை வளர்க்க தெரிந்த தமிழ் மன்னர்களுக்கு வடமொழி தமிழுக்கு அந்நியம் என்ற உண்மை தெரியாமல் சென்றதற்கான காரணத்தை தன்னை அறிவில் சிறந்தவர்களாக கருதிக்கொண்டு தமிழ் மொழி காப்பாளர்களாக பிரகடனப்படுத்துபவர்கள் கூறத்தான் வேண்டும். தமிழ் வேதம் என்று போற்றுகின்ற திருமுறைகளிலேயே வேதாகமங்கள் போற்றப்படுகின்றன. இந்த ஆகமமே சைவத்திற்கு ப்ரமாணம். இந்த ஆகமங்கள் இன்றி சைவம் முற்று பெறாது
இந்த ஆகமங்கள் வடமொழியிலேயே உள்ளன. இதை திருமந்திரம் இயற்றிய திருமூலர் தாம் #வடமொழி #ஆகமங்களை தமிழில் சிவபெருமான் அருளியதாகவே குறிப்பிடுகிறார். ஆகமங்கள் மொத்தம் இருபத்து எட்டு. இந்த இருபத்து எட்டு ஆகமங்கள் எது எதுவென்றுகூட பட்டியலிடுகிறார் திருமூலர்.

"பெற்றநல் ஆகமம் காரணம் காமிகம்
உற்றநல் வீரம் உயர்சிந்தம் வாதுளம்
மற்றவ் வியாமள மாகுங்கா லோத்தரம்
துற்றநற் சுப்பிரம் சொல்லும் மகுடமே"

திருமுறைகளிலேயே ஆகமம், நால்வேதம், மந்திரம், ஆகுதி, வேள்வி என்று வடமொழி சம்பந்தமான அனைத்தும் புதைந்திருக்கும்போது தமிழிலிருந்து வடமொழியை அந்நியப்படுத்த நினைப்பது மிகவும் தவறாகும்...!

‘தண்ணிலவார் சடையார்தாம் தந்தஆ கமப்பொருளை
மண்ணின் மிசைத்திருமூலர் திருவாக்கால் தமிழ்வகுப்ப’

என்று கூறியதன் மூலம் இறைவன் வடமொழியில் அருளிச்செய்த ஆகமங்களின் பொருளை தமிழில் தரவே, திருமூலரைத் திருவருள் தந்தது என்று விளக்குகிறார் சேக்கிழார் பெருமான். இதை திருந்திரத்தின் வழியே பார்த்தோமேயானால்,

‘என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே’

என்று குறிப்பிடுகின்றார். இங்கே சேக்கிழாரும் திருமூலரும் வடமொழி ஆகமங்களை தமிழ்ப்படுத்துவதற்காக சிவபெருமானே திருமூலரை அனுப்பியதாக தனது திருப்பதிகங்கள் மூலம் உறுதி செய்கின்றனர். இனி சமஸ்கிருதம் அந்நிய மொழியா? என்பதையும் தமிழ் இலக்கியங்களில்  இது எங்கெங்கு பயின்று வந்துள்ளது என்பதையும் சுருக்கமாக காண்போம்...!

முதலில் தொல்காப்பியத்தில் ஆரிய கலப்பு இல்லை என்றும் தொல்காப்பிய காலத்திற்கு பின்தான் ஆரியர் வருகை என்பதும் இங்கு இருக்கும் பெரும்பான்மை கூற்று. அதன் அடிப்படையில்,

"வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே"

என்ற தொல்காப்பிய சூத்திரத்தின் மூலம் தொல்காப்பியர் காலத்திலேயே வடசொல் தமிழில் பெற்றிருந்த செல்வாக்கைக் காட்டுகிறது. வடசொற்களைத் தமிழில் எடுத்தெழுதுவது பற்றியும் தொல்காப்பியர் சிந்தித்துள்ளார். இதை விளக்குகையில்,

"சிதைந்தன வரினும் இயைந்தன வரையார்"

அதாவது தமிழ் மொழி மரபுக்கேற்ப மாற்றி எழுத வேண்டும் என்றும், சிதைந்து வருவனவற்றையும் ஏற்றுக் கொள்ளலாம் என்றும் குறிப்பிடுகிறார். ஆக இங்கு தொல்காப்பியர் வடமொழி அந்நிய மொழி  என்றோ அது தமிழர்கள் பயன்படுத்தக்கூடாது என்றோ பதிவு செய்யவில்லை. ஆனால் அதற்கு பின் வந்த இலக்கியங்களில் எது ஏது நமது மொழி எது எது பிறநாட்டு மொழிகள் என்பதையும் நம் முன்னோர்கள் ஆங்காங்கே நமக்கு ஊட்டியே சென்றுள்ளனர் அதாவது,

12 ஆவது திருமுறையில் பரமனையே பாடுவோர் புராணத்தில்

"தென்றமிழும் வடகலையும்
தேசிகமும் பேசுவன
மன்றினிடை நடம்புரியும்
வள்ளலையே பொருளாக
ஒன்றியமெய் யுணர்வோடும்
உள்ளுருகிப் பாடுவார்
பன்றியுடன் புட்காணாப்
பரமனையே பாடுவார்"

அதாவது இங்கு #சேக்கிழார் பெருமான் என்ன சொல்கிறார் எனில், #தென்_தமிழ், #வடமொழி, #பிறநாட்டு மொழிகள் ஆகிய மொழிகளுள் யாதொன்றில் தமக்குப் பயிற்சியிருப்பினும் அவற்றுள், ஒன்றில் இறைவனை வணங்கலாம் என்கிறார். அதாவது அவர் இங்கு தமிழையும் வடமொழியையும் நம் நாட்டு மொழிகளாக குறிப்பிட்டிருப்பது கவனிக்கத்தக்கது. அடுத்தாக #திருவிளையாடல் புராணத்தில்,

"வடமொழியை பாணிணிக்கு வகுத்து அருளி
தொடர்புடைய தென்மொழியை உலகமெலாம்
தொழுதேத்தும் குடமுனிக்கு வலியுறுத்தார் கொல்லேற்றுப் பாகர்
கடல் வரைப்பினிதன் பெருமை யாவரே கணித்து அறிவார்’’

என்று இரு மொழிகளின் பிறப்பிடம் எது என்பதையும் தெளிவாக உணர்த்தி விட்டனர். ஆனால் மொழிப்பேதம் பார்த்து பிரிவினை பேசுபவர்களை அதாவது வடமொழியோடு தமிழ் மொழியையும் சிறப்பிக்காதவர்களை குரங்குக்கு சமமாகவும் பாடியுள்ளனர். அதாவது இங்கே வடமொழியை உயர்வாக பேசுபவர்களுக்கே இந்த சவுக்கடியை கொடுத்துள்ளார். இங்கே நாம் கவனிக்க வேண்டியது இரண்டு மொழியையும் சமமாக பாவித்துள்ளார் என்பதே.

"மந்தி போல் திரிந்து ஆரியத்தொடு செந்தமிழ் பயன் அறிகிலா
அந்தகர்க்கு எளியேன் அலேன்”

ஆக ஒவ்வொரு மலருக்கும், தனித்தனி வாசனை உண்டு. ஒவ்வொரு மனிதனுக்கும் தனிதனி இயல்புகள் உண்டு. அதே போன்று ஒவ்வொரு மொழிக்கும் அதன் சொல் அசைவிற்கு ஏற்ப தனித்தனி சக்திகள் உண்டு. இந்த சக்திகள் மனிதனால் உருவாக்கப்பட்டது அல்ல. இயற்கையின் ஆற்றலினால் மொழி தோன்றும் போதே கூடவே தோன்றுவது உண்டு....!

ஆனால் இங்கு பிரிவினை பேசித்திரியும்  கோஷ்டிகளை விட நம் முன்னோர்கள் ஒன்றும் #மூடர்கள் அல்ல எதையும் தெளிவாக சிந்தித்து செயல்படுகின்ற ஆற்றல் அவர்களுக்கு நம்மை விட சற்று அதிகமாகவே இருந்திருகிறது என்பதையும் நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். அப்படி இருந்ததனால் தான் அவர்கள் தமிழ் மொழி காதலர்களாக இருந்தாலும் கூட சமஸ்கிருதத்தின் காவலர்களாகவும் இருந்திருக்கிறார். ஆகவே தான் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடிய சுந்தரம் பிள்ளை அவர்கள்,

"வடமொழி தென்மொழியெனவே வந்த இருவிழி"

என்று வாழ்த்தி இரண்டுமே நமது மொழி என்கிறார். அதோடு திரு.வி.க  வரும் இதே கருத்தை தான் முன்மெழிகிறார்.

"அவிழ்க்கின்றவாறும் அதுகட்டுமாறும்
சிமிட்டலைப் பட்டுயிர் போகின்றவாறும்
தமிழ்ச்சொல் வடசொல் எனும் இவ்விரண்டும்
உணர்த்தும் அவனை உணரலும் ஆமே"

என்று ஆசான் #திருமூலர் இருமொழிக்கு உண்டான ஒற்றுமையை உணர்த்தி இரண்டு நம் மொழியே என்று ஒற்றுமை பேசுகிறார்....!

"மைம்மலர்க்கோதை மார்பினரெனவு மலைமகளவளொடு மருவினரெனவும்
செம்மலர்ப்பிறையுஞ் சிறையணிபுனலுஞ் சென்னிமேலுடையரெஞ்சென்னிமேலுறைவார்
தம்மலரடியொன் றடியவர்பரவத் #தமிழ்ச்சொலும்
#வடசொலுந் தாணிழற்சேர
அம்மலர்க்கொன்றை யணிந்தவெம்மடிக ளச்சிறுபாக்கம தாட்சிகொண்டாரே"

என்று #திருஞானசம்பநத்ர் இரு மொழிகளிலும் இறைவன் பாதத்தை பணிய வேண்டும் என்கிறார்....!

‘’வடமொழி தமிழ் மொழி எனும் இரு மொழியினும்
இலக்கணமொன்றே என்றே எண்ணுக’’

என்கிறார் ஈசான தேசிகர். ஆனால் எங்கேயுமே வடமொழியை தமிழுக்கு அந்நியம் என்றோ அது பிராமணர்களின் மொழி என்றோ குறிப்பிடவில்லை என்பதை அறிக. ஆக மீண்டும் சொல்கிறேன். இவைகளை எல்லாம் நமது முன்னோர்கள் அறியாதது அல்ல. நமது மன்னர்கள் மடையர்களும் அல்ல. எல்லாம் அறிந்தே, எல்லாம் தெளிந்தே ஒவ்வொரு காரியத்தையும் செய்தார்கள்.  இன்னும் சொல்லப் போனால் அவர்கள் இரண்டு மொழியையும் இரண்டு கண்களாகவே பார்த்தார்கள்.....!

இறுதியாக ஆரிய இனவாத கோட்பாட்டை கால்டுவெல்லும் மேக்ஸ் மில்லரும் ஆரம்பிப்பதற்கு முன்புவரை சமஸ்கிருதம் கைபர் கணவாய் வழியாக வந்தது என்றோ அது தமிழுக்கு விரோதி மொழி என்றோ எந்த தமிழ் அறிஞரும் பதிவு செய்யாதபோது இந்த பதிவின் பின்னூட்டத்தில் தமிழ்மொழியின் விசுவாசிகள் என்று தன்னை கூறிக்கொள்பவர்கள் கதற வேண்டாம். அதோடு மாற்றுமத அன்பர்களும் ஒதுங்கிச்செல்லுங்கள். ஏனெனில் கிறிஸ்தவத்தில் இன்று நமது கைகளில் புழங்கும் பைபிளும், இஸ்லாமின்  தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட குரானும் சமஸ்கிருதமின்றி முழுமையாக இயங்காது. அவ்வளவு ஏன் சமஸ்கிருதம் இன்றி அந்த இரு மதப்பெயர்களுமே முழுமை அடையாது. புரியவில்லை எனில் #கிறிஸ்தவம், #இஸ்லாம் இந்த இரு சொற்களிலுள்ள சமஸ்கிருத சொற்களை நீக்கிவிட்டு எழுதிப்பாருங்கள் புரியும்....!

தமிழ்நாட்டில் சிவனுக்குரிய ஸ்தலங்களின்

தமிழ்நாட்டில் சிவனுக்குரிய பெருமை மிக்க ஸ்தலங்களின்
பெருமைகள்...

ராஜ கோபுரத்தை விட மூலவருக்கு உயர்ந்த விமானம் உள்ள இடங்கள்

1,தஞ்சை – பிரகதீஸ்வரர்
2,கங்கைகொண்டசோழபுரம் – பிரகதீஸ்வரர்
3,தாராசுரம் – ஐராவதேஸ்வரர்
4,திருபுவனம் – கம்பேஸ்வரர்

சிவனுக்குரிய விஷேச ஸ்தலங்கள்.

1, திருவேள்விக்குடி – கௌதுகாபந்தன க்ஷேத்ரம்
2, திருமங்கலகுடி – பஞ்சமங்கள க்ஷேத்ரம்
3, திருவையாறு – பஞ்ச நந்தி க்ஷேத்ரம்
4, திருவிடைமருதூர் – பஞ்சலிங்க க்ஷேத்ரம்
5, திருநீலக்குடி – பஞ்சவில்வாரண்ய க்ஷேத்ரம்
6, திருவிற்கோலம் – நைமிசாரண்ய க்ஷேத்ரம்
7, திருநெல்லிக்கா – பஞ்சாட்சரபுரம்
8, காஞ்சி – சத்தியவிரத க்ஷேத்ரம்
9, திருவல்லம் – வில்வாரண்யம்
10, திருகண்டியூர் – ஆதிவில்வாரண்யம்

சிவ பூஜைக்கு சிறந்த ஸ்தலங்கள்.

1, திருக்குற்றாலம் – திருவனந்தல் பூஜை
2, இராமேஸ்வரம் – காலை சந்தி பூஜை
3, திருவானைக்கா – உச்சிகால பூஜை
4, திருவாரூர் – சாயரக்ஷை பூஜை
5, மதுரை – இராக்கால பூஜை
6, சிதம்பரம் – அர்த்தஜாம பூஜை

காசிக்கு சமமான ஸ்தலங்கள்

1, திருவெண்காடு. 2, திருவையாறு. 3, மயிலாடுதறை. 4, திருவிடைமருதூர்.
5, திருச்சாய்காடு. 6, ஸ்ரீவாஞ்சியம். 7, விருத்தாசலம். 8, மதுரை.
9, திருப்புவனம்

தருமநூல்கள் 18.

கடவுளால் வகுத்தது தருமத்தை பற்றி மட்டும் உபதேசித்தது.

1.மனு, 2.அத்தி, 3.விண்டு, 4.வாசிட்டம், 5.யமம், 6.ஆபத்தமம், 7.யாஞ்ஞ வற்கியம், 8.பராசரம், 9.அங்கீரசம், 10.உசனம், 11.காத்தியாயனம், 12.சம்பவர்த்தம், 13.வியாசம், 14.பிரகற்பதி, 15.சங்க்லிதம், 16.சாதாதபம். 17.கௌதம், 18.தக்கம்.

பாரதத்தின் முக்தி ஸ்தலங்கள்

1,காசி 2,காஞ்சி 3,மதுராபுரி 4,அரித்துவார் 5,உஜ்ஜையினி 6,அயோத்தி 7,துவாரகை.

பாரதமே பரமசிவம்.

1,திருப்பரும்பதம் – தலை உச்சி
2,திருக்கேதாரம் – நெற்றி.
3,காசி – புருவநடு
4,பிரயாகை – நெஞ்சு
5,தில்லை – இதயம்
6,திருவாரூர் – மூலம்.

முக்தி தரும் ஸ்தலங்கள்.

திருவாரூர் – பிறக்க முக்தி
காசி – இறக்க முக்தி
திருவண்ணாமலை – நினைக்க முக்தி
சிதம்பரம் – தரிசிக்க முக்தி
வேதாரண்யம் – தீர்த்தமாட முக்தி
மதுரை – கூற முக்தி
அவினாசி – கேட்க முக்தி.

ஐந்து அற்புதங்கள்.

1, ஆவுடையார் கோவில் கொடுங்கை. 2, கடாரங்கொண்டான் மதில்
3, திருவீழிமிழலை வௌவ்வால் ஒட்டிமண்டபம் 4, தஞ்சாவூர் கோபுரம் 5, திருவலஞ்சுழி பலகணி

திவசம் சிறப்பு இடம் {பிதுர்கடன் கொடுக்க சிறப்பு ஸ்தலம்.}

காசி, கயா {விஷ்னுபாதம் ஆலமரம்}
திருவெண்காடு – ஆலமரத்தடி {ருத்ரபாதம்}
பத்ரிநாத், திருக்கோகர்ணம், பவானி, திலதர்ப்பணபுரி, செதிலப்பதி, {தசரதன்,ஜடாயுக்கு இராமன் லட்சுமனன் தர்ப்பணம் செய்தது.}
இராமேஸ்வரம், துவாரகாபுரி, பூம்புகார், இடும்பாவனம், சங்குமுகேஸ்வரர்.

12 தமிழ் மாதங்களும், தெய்வங்களும்.
1, சித்திரை, ஆடி, ஐப்பசி, தை. – பிரம்மா, சித்திரை, ஐப்பசி பிறக்கும் காலம் விஷு {விஷாவகன் – பிரம்மா}
2, வைகாசி, ஆவணி, கார்த்திகை, மாசி – விஷ்ணு. பிறக்கும்நேரம் விஷ்ணுபதி புண்ணிய காலம்.
3, ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி – சிவம். பிறக்கும் நேரம் “ஷடசீதி” {ஷடாங்கன் – சிவன்}
ஆடி மாதப் பிறப்பு தட்சிணாயன – புண்ணியகாலம் – சூரியன் தெற்கு பயனிப்பது.
தை மாதப் பிறப்பு உத்தராயண – புண்ணியகாலம் – சூரியன் வடக்கு நோக்கி பயனிப்பது.

பெரிய தேர்கள் உள்ள ஸ்தலங்கள்.

திருவாரூர், திருநெல்வேலி, ஸ்ரீவில்லிபுதூர், திருவண்ணாமலை, சிதம்பரம், காஞ்சி, மதுரை.

பன்னிரு ஜோதிர்லிங்க ஸ்தலங்கள்.
1, கேதாரம் – இமயம் {கேதாரேஸ்வரர்}
2, சோமநாதம் – குஜராத் {சௌராஷ்டிரம்,சோமநாதேஸ்வரர்}
3, மகாகாளேசம் – உஜ்ஜையினி {மகா காளேஸ்வரர்}
4, விஸ்வநாதம் – காசி {விஸ்வநாதேஸ்வரர்}
5, வைத்தியநாதம் – {மகாராஷ்டிரம், வைத்தியனாதர்}
6, பீமநாதம் – {மகாராஷ்டிரம், பீமநாதேஸ்வர்.}
7, நாகேஸ்வரம் – {மகாராஷ்டிரம், தாருகாவனம், நாகேஸ்வர்}
8, ஓங்காரேஸ்வரம் – மத்தியப்பிரதேசம் {அமலேஸ்வரம், ஓங்காரேஸ்வரர்}
9, த்ரயம்பகம் – {மகாராஷ்டிரம், கௌதம்} திரயம்பகேஸ்வரர்.
10, குசுமேசம் – மகாராஷ்டிரம் குஸ்ருணேஸ்வர்.
11, மல்லிகார்ஜுனம் – {ஆந்திரம்} ஸ்ரீசைலம் – மல்லிகார்ஜுனர்.
12, இராமநாதம் – இராமேஸ்வரம் {தமிழ்நாடு}

சப்த விடங்கத் ஸ்தலங்கள்.
1, திருவாரூர் – வீதிவிடங்கர் – அஜபா நடனம்.
2, திருநள்ளாறு – நகரவிடங்கர் – உன்மத்த நடனம்.
3, நாகப்பட்டினம் – சுந்தரவிடங்கர் – வீசி நடனம்.
4, திருக்காறாயில் – ஆதிவிடங்கர் – குக்குட நடனம்.
5, திருக்கோளிலி – அவனிவிடங்கர் – பிருங்க நடனம்.
6, திருவாய்மூர் – நீல விடங்கர் – கமல நடனம்.
7, திருமறைக்காடு – புவனி விடங்கர் – ஹம்ஸபாத நடனம்.

பஞ்ச சபைத் ஸ்தலங்களும், பஞ்சாட்சர வடிவமும்.

1, திருநெல்வேலி – தாமிர சபை – ந
2, திருக்குற்றாலம் – சித்திர சபை – ம
3, திருவாலங்காடு – இரத்தின சபை – சி
4, திருத்தில்லை {சிதம்பரம்} – பொற்சபை – வ
5, மதுரை – வெள்ளிசபை – ய

Saturday, September 5, 2020

ஆத்திசூடி- ஔவையார

1. அறம் செய விரும்பு /
1. Learn to love virtue.
2. ஆறுவது சினம் /
2. Control anger.
3. இயல்வது கரவேல் /
3. Dont forget Charity.
4. ஈவது விலக்கேல் /
4. Dont prevent philanthropy.
5. உடையது விளம்பேல் /
5. Dont betray confidence.
6. ஊக்கமது கைவிடேல் /
6. Dont forsake motivation.
7. எண் எழுத்து இகழேல் /
7. Dont despise learning.
8. ஏற்பது இகழ்ச்சி /
8. Dont freeload.
9. ஐயம் இட்டு உண் /
9. Feed the hungry and then feast.
10. ஒப்புரவு ஒழுகு /
10. Emulate the great.
11. ஓதுவது ஒழியேல் /
11. Discern the good and learn.
12. ஒளவியம் பேசேல் /
12. Speak no envy.
13. அகம் சுருக்கேல் /
13. Dont shortchange.
14. கண்டொன்று
சொல்லேல்/
14. Dont flip-flop.
15. ஙப் போல் வளை /
15. Bend to befriend.
16. சனி நீராடு /
16. Shower regularly.
17. ஞயம்பட உரை /
17. Sweeten your speech.
18. இடம்பட வீடு எடேல் /
18. Judiciously space your home.
19. இணக்கம் அறிந்து இணங்கு /
19. Befriend the best.
20. தந்தை தாய்ப் பேண் /
20. Protect your parents.
21. நன்றி மறவேல் /
21. Dont forget gratitude.
22. பருவத்தே பயிர் செய் /
22. Husbandry has its season.
23. மண் பறித்து உண்ணேல் /
23. Dont land-grab.
24. இயல்பு அலாதன செய்யேல் /
24. Desist demeaning deeds.
25. அரவம் ஆட்டேல் /
25. Dont play with snakes.
26. இலவம் பஞ்சில் துயில் /
26. Cotton bed better for comfort.
27. வஞ்சகம் பேசேல் /
27. Dont sugar-coat words.
28. அழகு அலாதன செய்யேல் /
28. Detest the disorderly.
29. இளமையில் கல் /
29. Learn when young.
30. அரனை மறவேல் /
30. Cherish charity.
31. அனந்தல் ஆடேல் /
31. Over sleeping is obnoxious.
32. கடிவது மற /
32. Constant anger is corrosive.
33. காப்பது விரதம் /
33. Saving lives superior to fasting.
34. கிழமைப்பட வாழ் /
34. Make wealth beneficial.
35. கீழ்மை அகற்று /
35. Distance from the wicked.
36. குணமது கைவிடேல் /
36. Keep all that are useful.
37. கூடிப் பிரியேல் /
37. Dont forsake friends.
38. கெடுப்பது ஒழி /
38. Abandon animosity.
39. கேள்வி முயல் /
39. Learn from the learned.
40. கைவினை கரவேல் /
40. Dont hide knowledge.
41. கொள்ளை விரும்பேல் /
41. Dont swindle.
42. கோதாட்டு ஒழி /
42. Ban all illegal games.
43. கெளவை அகற்று /
43. Dont vilify.
44. சக்கர நெறி நில் /
44. Honor your Lands Constitution.
45. சான்றோர் இனத்து இரு /
45. Associate with the noble.
46. சித்திரம் பேசேல் /
46. Stop being paradoxical.
47. சீர்மை மறவேல் /
47. Remember to be righteous.
48. சுளிக்கச் சொல்லேல் /
48. Dont hurt others feelings.
49. சூது விரும்பேல் /
49. Dont gamble.
50. செய்வன திருந்தச் செய் /
50. Action with perfection.
51. சேரிடம் அறிந்து சேர் /
51. Seek out good friends.
52. சையெனத் திரியேல் /
52. Avoid being insulted.
53. சொற் சோர்வு படேல் /
53. Dont show fatigue in conversation.
54. சோம்பித் திரியேல் /
54. Dont be a lazybones.
55. தக்கோன் எனத் திரி /
55. Be trustworthy.
56. தானமது விரும்பு /
56. Be kind to the unfortunate.
57. திருமாலுக்கு அடிமை செய் /
57. Serve the protector.
58. தீவினை அகற்று /
58. Dont sin.
59. துன்பத்திற்கு இடம் கொடேல் /
59. Dont attract suffering.
60. தூக்கி வினை செய் /
60. Deliberate every action.
61. தெய்வம் இகழேல் /
61. Dont defame the divine.
62. தேசத்தோடு ஒட்டி வாழ் /
62. Live in unison with your countrymen.
63. தையல் சொல் கேளேல் /
63. Dont listen to the designing.
64. தொன்மை மறவேல் /
64. Dont forget your past glory.
65. தோற்பன தொடரேல் /
65. Dont compete if sure of defeat.
66. நன்மை கடைப்பிடி /
66. Adhere to the beneficial.
67. நாடு ஒப்பன செய் /
67. Do nationally agreeables.
68. நிலையில் பிரியேல் /
68. Dont depart from good standing.
69. நீர் விளையாடேல் /
69. Dont jump into a watery grave.
70. நுண்மை நுகரேல் /
70. Dont over snack.
71. நூல் பல கல் /
71. Read variety of materials.
72. நெற்பயிர் விளைவு செய் /
72. Grow your own staple.
73. நேர்பட ஒழுகு /
73. Exhibit good manners always.
74. நைவினை நணுகேல் /
74. Dont involve in destruction.
75. நொய்ய உரையேல் /
75. Dont dabble in sleaze.
76. நோய்க்கு இடம் கொடேல் /
76. Avoid unhealthy lifestyle.
77. பழிப்பன பகரேல் /
77. Speak no vulgarity.
78. பாம்பொடு பழகேல் /
78. Keep away from the vicious.
79. பிழைபடச் சொல்லேல் /
79. Watch out for self incrimination.
80. பீடு பெற நில் /
80. Follow path of honor.
81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ் /
81. Protectyour benefactor.
82. பூமி திருத்தி உண் /
82. Cultivate the land and feed.
83. பெரியாரைத் துணைக் கொள் /
83. Seek help from the old and wise.
84. பேதைமை அகற்று /
84. Eradicate ignorance.
85. பையலோடு இணங்கேல் /
85. Dont comply with idiots.
86. பொருள்தனைப் போற்றி வாழ் /
86. Protect and enhance your wealth.
87. போர்த் தொழில் புரியேல் /
87. Dont encourage war.
88. மனம் தடுமாறேல் /
88. Dont vacillate.
89. மாற்றானுக்கு இடம் கொடேல் /
89. Dont accommodate your enemy.
90. மிகைபடச் சொல்லேல் /
90. Dont over dramatize.
91. மீதூண் விரும்பேல் /
91. Dont be a glutton.
92. முனைமுகத்து நில்லேல் /
92. Dont join an unjust fight.
93. மூர்க்கரோடு இணங்கேல் /
93. Dont agree with the stubborn.
94. மெல்லி நல்லாள் தோள்சேர் /
94. Stick with your exemplary wife.
95. மேன்மக்கள் சொல் கேள் /
95. Listen to men of quality.
96. மை விழியார் மனை அகல் /
96. Dissociate from the jealous.
97. மொழிவது அற மொழி /
97. Speak with clarity.
98. மோகத்தை முனி /
98. Hate any desire for lust.
99. வல்லமை பேசேல் /
99. Dont self praise.
100. வாது முற்கூறேல் /
100. Dont gossip or spread rumor.
101. வித்தை விரும்பு /
101. Long to learn.
102. வீடு பெற நில் /
102. Work for a peaceful life.
103. உத்தமனாய் இரு /
103. Lead exemplary life.
104. ஊருடன் கூடி வாழ் /
104. Live amicably.
105. வெட்டெனப் பேசேல் /
105. Dont be harsh with words and deeds.
106. வேண்டி வினை செயேல்/
106. Dont premeditate harm.
107. வைகறைத் துயில் எழு /
107. Be an early-riser.
108. ஒன்னாரைத் தேறேல் /
108. Never join your enemy.
109. ஓரம் சொல்லேல் /
109. Be impartial in judgement.

Tuesday, August 25, 2020

மாந்திதோஷம்

மரணத்தின் காரகன் , மரணத்தை அறிய உதவுபவன், மரண பயத்தையும்  மரணத்திற்கு சமமான கண்டங்களையும்  தருபவன் , சனிபகவானின் மகன், சனிபகவானின் உபகிரகம் என்று எல்லாம் அழைக்கப்படுபவர் தான் மாந்தி .......

                   இந்த மாந்தி ஒருவருடைய ஜாதகங்களில் இருக்கும் இடத்தை பொருத்து பலனை வழங்குகிறார்.

    மாந்தி லக்னத்திற்கு 3 6 11 ஆகிய பாவங்களிலும் கும்பம் மகரம்  சிம்மம் ஆகிய ராசிகளில் இருக்கும் போதும் அதிகமான கெடுதல்களை செய்வதில்லை .

         ஆனால் 1 2 4 5 7 8 9 10 12 ஆகிய  இடங்களில் மாந்தி இருக்கும் போது ஜாதகர்களுக்கு பெரும் துன்பத்தையும் கஷ்டங்களையும் ,பிரச்சனைகளையும் அசிங்கத்தையும் ,அவமானங்களையும் திடீர்இழப்புகள்,  திடீர்விபத்துகள், திடீர்மரணம் ,  எதிர்பாராத வீழ்ச்சி  கல்வித்தடை , திருமணதடை ,
தொழில்தடை  ,  வேலைஇழப்பு குழந்தைதடை,  நோய்நொடிகள் , வம்புவழக்கு,  கோர்ட்  கேஸ்,  தண்டனை போன்றவைகளை தருகிறார் .

        

பனை மரத்தில் வகைள்

பனை மரத்தில் மொத்தம் 34 வகைள் இருக்கின்றன. அவை,

1. ஆண் பனை
2. பெண் பனை
3. கூந்தப்பனை
4. தாளிப்பனை
5. குமுதிப்பனை
6.சாற்றுப்பனை
7. ஈச்சம்பனை
8. ஈழப்பனை
9. சீமைப்பனை
10. ஆதம்பனை
11. திப்பிலிப்பனை
12. உடலற்பனை
13. கிச்சிலிப்பனை
14. குடைப்பனை
15. இளம்பனை
16. கூறைப்பனை
17. இடுக்குப்பனை
18. தாதம்பனை
19. காந்தம்பனை
20. பாக்குப்பனை
21. ஈரம்பனை
22. சீனப்பனை
23. குண்டுப்பனை
24. அலாம்பனை
25. கொண்டைப்பனை
26. ஏரிலைப்பனை
27. ஏசறுப்பனை
28. காட்டுப்பனை
29. கதலிப்பனை
30. வலியப்பனை
31. வாதப்பனை
32. அலகுப்பனை
33. நிலப்பனை
34. சனம்பனை


Monday, August 24, 2020

வராஹி மூல மந்திரம்:

வராஹி அம்மன் வழிபாட்டை நம் வீட்டிலேயே செய்ய முடியும். இதற்காக நிரந்தரமாக ஒரு இடத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள் அது உங்கள் பூஜை அறையாக இருந்தாலும் சரி. இந்த வழிபாட்டை நாம் எந்த இடத்தில் முதலில் செய்கிறோமோ, அதே இடத்தில்தான் மற்ற எல்லா நாட்களிலும் செய்ய வேண்டும். வழிபாட்டில் அன்னையின் படம் மற்றும் விளக்கில் ஜோதி ஏற்றி வைத்து இருக்க வேண்டும். அதே போல் நாம் வடக்கு அல்லது மேற்க்கை நோக்கி அமர வேண்டும்.

வழிபாட்டிற்கு முன்பு நம் குளிக்க வேண்டும். இதில் துளசி மற்றும் வில்வ இலைகளை ஒரு கைப்பிடி அளவு போட்டு குளிப்பது நல்லது. வாராஹி வழிபாட்டிற்கு தனி பூஜை அறை இருந்தால் சேமமாக இருக்கும். அதே போல் அன்னையின் படத்திற்கு அருகில் விநாயகர் படத்தை வைப்பது நல்லது. வடக்கு மற்றும் கிழக்கு திசையை நோக்கி இப்படம் இருக்க வேண்டும்.

பூஜையறையில் பன்னீரில் மஞ்சளை மற்றும் ஏலக்காயை கலந்த நீரை வைக்க வேண்டும். இதை வீடு முழுவதும் தெளிப்பது நல்லது.


மஹா வராஹி மூல மந்திரம்:

ஓம் க்லீம் வராஹ முகி ஹ்ரீம் ஸித்தி ஸ்வரூபிணி
ஸ்ரீம் தன வசங்கரி தனம் வர்ஷய ஸ்வாகா



கண் திருஷ்டியை போக்க

ஒரு சிகப்பு துணியை எடுத்துக் கொள்ளுங்கள். சிகப்பு, கருப்பு போன்றவை கண் திருஷ்டியை போக்க வல்லவை என்பார்கள். அதனால் சிகப்பு அல்லது கருப்பு துணியை சதுரமாக வெட்டி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு கைப்பிடி அளவிற்கு கல் உப்பை எடுத்து குடும்பத்தினர் மற்றும் வீட்டை சுற்றி திருஷ்டி கழியுங்கள். அதாவது மூன்று முறை வலது புறமாகவும், மூன்று முறை இடது புறமாகவும் சுற்றிக் கொள்ளுங்கள். அதை அந்தத் துணியில் போட்டு அதனுடன் சிறிதளவு கடுகு அல்லது வெண்கடுகு ஏதாவது ஒன்றை போட்டுக் கொள்ளுங்கள்.

இதனை நீளவாக்கில் சுற்றி பின்னர் இரு முனைகளையும் பிடித்து, நன்றாக முடிந்து கொள்ளுங்கள். இதனை தலைவாசலில் ஆணி அடித்து வைத்திருப்பீர்கள் அல்லவா? அதில் மாட்டி வைத்து விடுங்கள். மாதம் ஒரு முறை மட்டும் இதனை மாலை ஆறு மணி ஆவதற்குள் கலற்றி தண்ணீரில் கரைத்து யார் காலிலும் படாதவாறு வெளியே ஊற்றி விடுங்கள். இதை அமாவாசை தினத்தில் செய்தால் கூடுதல் சிறப்பான பலனை தரும். முடியாதவர்கள் மற்ற நாட்களிலும் தாராளமாக இதை செய்யலாம். மீண்டும் புதியதாக இதே போல் செய்து ஆறு மணிக்குள் கட்டிவிடுங்கள். அவ்வளவு தான். உங்கள் வீட்டை எந்த ஒரு கண் திருஷ்டியும் நெருங்கக் கூட முடியாது.

செல்வத்தை தரும் செடிகளை

தெய்வங்களுக்கு வாசனை மிக்க மலர்களால் அர்ச்சனை செய்து வருகிறோம். வாசனை இல்லாத மலர்கள் தோஷ நிவர்த்திக்காக பயன்படுத்துவார்கள் தவிர அவைகள் நல்ல அதிர்வலைகளை உண்டாக்குவதில்லை. எல்லா செடி வகைகளும் நமக்கு சுத்தமான காற்றை தருபவை தான். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் வாஸ்து என்று வந்து விட்டால் அதற்குரிய சாஸ்திரத்தை கடைபிடித்தால் மட்டுமே நமக்கு அதிர்ஷ்டம் வரும்

வாஸ்து திசைகள் என்பது மிகவும் முக்கியமாக இருக்கிறது. அது போல் ஜோதிடத்திலும் திசைகள் அதிகமாக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இந்த இரண்டு வகைகளிலும் சொல்லப்பட்டுள்ள முக்கியமான விஷயம் என்று பார்த்தால் அது முல்லை செடியை சொல்லலாம். முல்லை செடியை குருவின் அம்சமாக ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது. குரு பார்வை இருந்தால் நமக்கு எந்த அளவிற்கு நன்மைகள் விளையும் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான். குருவின் அருள் இருந்தால் தான் நம்முடைய சந்ததியினர் நலமுடன் வாழ முடியும்.

அது போல் மல்லி செடியை சுக்கிரனின் அம்சமாக பார்க்கப்படுகிறது. ஒருவன் தன் வாழ்க்கையில் மகிழ்ச்சியுடன், சந்தோஷமாக, உற்சாகத்துடன் வாழக்கூடிய சூழ்நிலையை சுக்கிரனின் பலத்தால் தான் பெறுகிறான். சுக்கிரனுடைய இடம் சரியாக அமைந்திருந்தால் அந்த ஜாதகன் அதிக அளவில் உற்சாகத்துடன் சந்தோஷமாக இருப்பான். உலகில் கிடைக்க கூடிய சிற்றின்பம் அனைத்தையும் அனுபவிப்பான் என்பார்கள். அத்தகைய சுக்கிரனின் அம்சம் பொருந்திய மல்லிச் செடி தெய்வாம்சம் பொருந்திய செடியாக இருக்கிறது.

ஆக முல்லை மற்றும் மல்லி செடியை வீட்டில் வளர்ப்பதால் குரு மற்றும் சுக்கிரனின் ஆசி நமக்கு பரிபூரணமாக கிடைத்துவிடும். இதனால் வீட்டில் செல்வ வளம் உயரும் என்பது நிதர்சனமான உண்மை. முல்லை செடியை பொறுத்தவரை வடக்கு திசையில் வைப்பது மிக மிக நல்லது. வடக்கு திசையில் சிறிதளவு இடமிருந்தாலும் அதை கொடியாக மேலே படர விட்டு விடலாம். மல்லி செடியின் திசையாக தெற்கு திசையும், வடக்கு திசையும் சிறந்ததாக கூறப்பட்டுள்ளது.

வீட்டின் அமைப்பு எப்படி இருந்தாலும் எந்த திசையில் இருந்தாலும் பரவாயில்லை. செடிகள் வைக்கும் திசை மட்டும் இந்த திசையில் வைத்து பாருங்கள். அதுபோல் மல்லிகையும், முல்லையும் ஒன்றாக வைக்கக் கூடாது. இரண்டும் வெவ்வேறு அம்சங்களை கொண்டுள்ளதால், அதற்குரிய திசைகளில் ஒன்றிற்கொன்று பாதகமில்லாமல் வளர்த்து வரவேண்டும். காடு போல் வளர்க்காமல் அவ்வப்போது அதன் கிளைகளை வெட்டி விட்டு, பார்ப்பதற்கே அம்சமாக இந்த இரண்டு செடிகளை மட்டும் நீங்கள் வீட்டில் வளர்த்தால் மகாலட்சுமியின் கடாட்சம் வீடு முழுவதும் பரவி செல்வ வளம் மென்மேலும் பெருகும்.

தொழிலில் முன்னேற்றம் தரும் சனி காயத்ரி

சனி பகவானின் காயத்ரியைச் சொல்லி வழிபட்டு வந்தால், சனி கிரக தோஷங்களனைத்தும் விலகும். தொழில் இருந்த தடைகள் அனைத்தும் விலகும். நோய்கள் நீங்கப் பெற்று ஆனந்தமாக வாழச் செய்வார் சனீஸ்வர பகவான்.

சனி பகவான். நமக்குச் சோதனைகளைத் தருவார். நம்மைச் சோதனைக்குள்ளாக்குவார். இவை அனைத்துமே நம்மைத் திருத்துவதற்காகத்தான் என விவரிக்கிறார்கள் ஆச்சார்யர்கள். எனவே சனி பகவானை நினைத்து எந்தச் சூழ்நிலையிலும் நாம் பயப்படத் தேவையில்லை.

சனிக்கிழமை தோறும், எள் தீபமேற்றி, சனீஸ்வரரை வழிபட்டு வந்தால், சனியின் பிடியில் இருந்தும் சனியின் பார்வையில் இருந்தும் தப்பிக்கலாம். விடுபடலாம். விமோசனம் பெறலாம்.

அப்போது, சனி பகவானின் காயத்ரியை சனிக்கிழமைகளில் பாராயணம் செய்யுங்கள். சனிக்கிழமை என்றில்லாமல் எந்த நாளில் வேண்டுமானாலும் சொல்லி வழிபடலாம்.

மந்திரம்

”ஓம் காகத்வஜாய வித்மஹே
கட்க ஹஸ்தாய தீமஹி
தந்நோ மந்த பிரசோதயாத்”

அதாவது, காகத்தை வாகனமாகக் கொண்ட சனி பகவானே... கட்க என்கிற ஆயுதத்தால் மங்லம் பொங்குகிற காரியங்களைச் செய்து கொடுத்து அருளுவாய். குறைவின்றி வாழ்வதற்கு அருள் புரிவாயாக’ என்று அர்த்தம்.

இந்த சனீஸ்வர காயத்ரிமந்திரத்தைச் சொல்லி, காகத்துக்கு எள்ளும் சாதமும் கலந்த உணவிடுங்கள். சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள். சனியால் விளையும் கிரக தோஷங்கள் அனைத்தும் விலகும். தொழிலில் இருந்த தடைகளையெல்லாம் தகர்ந்து, முன்னேற்றமும் லாபமும் உண்டாகும். நீண்ட ஆயுளுடன் நோய்கள் நீங்கப் பெற்று, இனிதே வாழ்வீர்கள்.


Saturday, August 22, 2020

திறுநீறும் காவி உடையும்

ஒரு ஊரில் ஒரு திருடன் 
அவன் திருடாத இடமே இல்லை,

ஊர் மக்கள் அனைவரும் அந்த ஊர் ராஜாவிடம் சென்று முறையிட்டனர்.

அந்த திருடன் ராஜா இடமும் சிக்காமல் சாமத்தியமாக தப்பித்து தப்பித்து வந்தான்.

ஒரு கட்டத்தில் ராஜா முடியாமல் இந்த திருடனை பிடித்துததந்தால் ருபாய் ஐந்து லட்சம் என ஆனையிட்டார்.

"இது ஒருபுரம் இருக்காட்டும்"

சில நாட்கள்கழித்து அந்த ராஜா மந்திரியை அழைத்து,

யார் பற்று இல்லாமல் இருகின்றார்களோ அவருக்கு என் ராஜாங்கத்தில் பாதி தந்துவிடுகின்றேன். என அறிவித்து. நீங்கள் சென்று யார் பற்று இல்லாமல் உள்ளார் என தேடிபார்த்து அழைத்துவாரும் என ஆனையிட்டார்.

மந்திரி தேடி செல்லும் போது இந்த திருடன் அவரிடம் வசமாக மாட்டிக்கொண்டான்.

மந்திரியின் சூழ்ச்சியினால் உன் தலைக்கு ராஜா ஐந்து லட்சம் என கூரியுள்ளார்.நான் சொல்வது போல் நீ நடித்தால் உனக்கு இருபது லட்சம் தருகின்றேன், மேலும் உன்னையும் தப்பிக்க வைக்கின்றேன். என உறுதி அளித்தான்.

சரி என இந்த திருடனும் சம்மதித்தான். அந்த திருடனுக்கு ,

திருநீறும் ருத்ராட்சமும் போட்டு ஒரு சன்யாசி போல் வேடம்மிட்டு நீ இந்த மரத்தின் கீழ் அமைதியாக அமர்ந்து இருப்பது போல் நடி, ராஜா வந்து எதை தந்தாலும் வேண்டாம் என்று சொல்,

கடைசியாக அவர் தன் ராஜியத்தில் பாதியை உனக்கு தானமாக தருவார். அதை வாங்கி என்னிடம் தா,
நான் உனக்கு பேசியது போல் இருபது லட்சம் தருவேன். என ஒப்பந்தம் செய்துக் கொண்டனர்.

பின் அந்த மந்திரி ராஜாவிடம் சென்று ஒரு சன்யாசி பற்றுகளைவிட்டு மரத்தடியில் அமர்ந்து உள்ளார். அவரை தரிசித்து தங்களின் வேண்டுதளை நிறைவேற்றிக் கொள்ளுங்கள் என்றார்.

ராஜா சென்று மரத்தின் கீழ் உள்ள அந்த சன்யாசி (திருடன்)யின் காலில் விழுந்து வனங்கி, ஐயா தங்களுக்கு தானமாக ஒரு லட்சம் பொன்மலை தருவேன் அதை எற்றுக்கொள்க என,

இந்த சன்யாசி வேண்டாம் என்றார்.
பின் ஐந்துலட்சம், பத்து லட்சம். இருபது லட்சம், ஐம்பது லட்சம் என உயர்ந்த. நகை, பனம், என தானமாக தந்தார்.

இந்த சன்யாசி எதுவும் வேண்டாம் என்றார்.

பின் ராஜா நீயே சத்தியசீலன் என் ராஜாங்கத்தில் பாதி தங்களுக்கு தானமாக தருகின்றேன் .நீங்கள் அதை பெற்றுக் கொண்டு எனை வாழ்த்த வேண்டும் என்றார்.

(இப்போது தான் மந்திரிக்கு சந்தோஷம் நாம் சொன்னது போலவே நடிக்கின்றான் .என தன் மனதுக்குள்ளே சிரித்து மகிழ்ந்தான்)

ஆனால் அந்த சன்யாசி வேண்டாம் என்றார். (மந்திரிமுகம் மாறிவிட்டது அடபாவி வேண்டாம் என்றுவிட்டானே, இவனை இப்போது திருடன் எனவும் நாம் சொல்ல முடியாது, என்ன செய்வது என மனதுக் உள்ளே குழம்பத்தில் நிற்க்)

கடைசியாக அந்த ராஜா தன் மகளையே தங்களுக்கு திருமணம் செய்து தருகின்றேன் என கூரினார்.

அதற்கும் அந்த சன்யாசி
ஐயா நானோ பற்று அற்றவன் எனக்கு எதுக்கு இதுஎல்லாம் வேண்டாம் என்றார்.

நீறே தீர்க்கதரிசி என வீழ்ந்து வனங்கி அந்த ராஜா சென்றுவிட்டார்.

பின் அந்த மந்திரி வந்து அடப்பாவி என் வயத்துல இப்படி மண்அள்ளி போட்டு விட்டாயே இது நியாமா என சண்டை போட,

அதற்க்கு அந்த சன்யாசி
ஐயா நான் திருடன் தான்.

எப்போது நீங்கள்
திருநீறும் ருட்ராச்சமும் என் மீது தரித்தீர்களோ அப்போதே என் மனம் மாறிவிட்டது.

மேலும் என் தலைக்கு ஐந்து லட்சம் என விலை வைத்த ராஜா
என் கோளத்தை பார்த்து என் காலில் விழுந்தார்.

அந்த பனிவு எனக்காக அல்ல
என் மேல் உள்ள இந்த 
திறுநீறுக்கும் காவி உடைக்கும் ருத்ராட்சத்துக்கும் தான்,

நான் எதை வேண்டாம் வேண்டாம் என்று சொன்னேனோ அதைவிட உயர்வான பெருள் தான் எனக்கு கிடைத்தது.

மதிப்புள்ள இந்த பெருளை நான் வேண்டாம் என்றால்
விலைமதிப்பில்லா அந்த இறைவன் எனக்கு கிடைப்பான்
அதுவே எனக்கு போதும் என்றார்.

ஆம், என் அன்பின் உறவுகளே
இந்த திறுநீறும் காவி உடையும் ருத்ராச்சமும் நமக்கு கிடைத்த பொக்கிஷம்...இதை அணிந்து களங்கமும் விளைவிப்பதோ அறத்திற்கு புறம்பான செயல்களை செய்வதோ வேண்டாம்..

திருச்சிற்றம்பலம்

கடவுளைக் கண்ட ஹரி சிங்

ஜெய்ப்பூரில், சுவாமி (சுவாமி விவேகானந்தர்) அரசின் தலைமைத் தளபதியான சர்தார் ஹரி சிங்குடன் மிகவும் நெருக்கமாகப் பழகினார். அவர் ஹரி சிங்கின் இல...