- அண்டம் பிண்டம் அனைத்தும் அதிர்ந்திட!
- கண்டம் நின்ற நீலம் மிளிர்ந்திட!
- சடைவார் குழலெண் திசையில் பறந்திட!
- விடைவா கனனோ விரைந்தே சுழன்றிட!
- கங்கை பயந்து முடியினில் ஒடுங்கிட!
- மங்கை பாகனின் மேனி ஒளிர்ந்திட!
- உடுக்கை ஒலியோ உலகினை ஆக்கிட!
- இடக்கை வளரும் தீ அதை அழித்திட!
- வலது பாதத்தில் முயலகன் நசுங்கிட!
- உலகின் தீமைகள் அவனுடன் பொசுங்கிட!
- இடது பாதத்தில் அபயம் காட்டிட!
- இதுவே உனது அடைக்கலம் என்றிட!
- தத்தோம் தகதோம் தரிகிட தத்தோம்!
- தித்தோம் திகதோம் திரிகிட தித்தோம்!
- நித்தம் சிவன்தாள் பணிவோம் தத்தோம்!
- சித்தம் சிவன்தாள் தனிலே தித்தோம்!
- மான் மழுவுமாட அர வணியுமாட
- காற் சதங்கை யாட தத்தோம்!
- வான் மதியுமாட வளர் கொன்றையாட
- அரைத் தோலுமாட தித்தோம்!
- வான் மழையுமாட கான் மயிலுமாட
- பூங் கழல்களாட தத்தோம்!
- தேன் மலர்களாட நகை இதழ்களாட
- அருள் விழிகளாட தித்தோம்!
- ஓம்நமசிவாய ஓம்நமசிவாய
- ஓம்நமசிவாய தத்தோம்!
- சிவாயநமஓம் சிவாயநமஓம்
- சிவாயநமஓம் தித்தோம்!
- தத்தோம் தகதோம் தரிகிட தத்தோம்!
- தித்தோம் திகதோம் திரிகிட தித்தோம்!
- நித்தம் சிவன்தாள் பணிவோம் தத்தோம்!
- சித்தம் சிவன்தாள் தனிலே தித்தோம்!
Saturday, January 5, 2013
மந்திரங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
கடவுளைக் கண்ட ஹரி சிங்
ஜெய்ப்பூரில், சுவாமி (சுவாமி விவேகானந்தர்) அரசின் தலைமைத் தளபதியான சர்தார் ஹரி சிங்குடன் மிகவும் நெருக்கமாகப் பழகினார். அவர் ஹரி சிங்கின் இல...
-
பீடம் அமைத்து கும்பம் வைத்து செய்யப்படும் எந்த பூஜை முறைக்கும் பிராண பிரதிஸ்டை செய...
-
கந்தர்வ ராஜாய காயத்ரி மந்திரம் ஓம் கந்தர்வராஜாய வித்மஹே களத்ரதோஷ நிவர்த்தகாய தீமஹி தந்நோ யக்ஷ: ப்ரசோதயாத் கீழ்க்காணும் மந்திரங்களைய...
No comments:
Post a Comment