’ஸ்கந்த புராணம்’’ என்ற சமஸ்க்ருத காவியத்தின் தமிழாக்கமே ‘’கந்த
புராணம்’’. 1100 வருடங்களுக்கு முன்பு காஞ்சிபுரத்தில் வாழ்ந்த கச்சியப்ப
சிவாச்சாரியாரால் எழுதப்பட்டது. ஒரு முறை கந்த பெருமான் இவர் கனவில் வந்து
சமஸ்க்ருதத்தில் உள்ள இந்த காவியத்தை தமிழில் எழுத சொல்லி ‘’திகடசக்கர’’
என்ற முதல் எழுத்தையும் அவரே எடுத்துக் கொடுத்தார். ஒவ்வொரு நாளும் ஓலைச்
சுவடியில் தான் எழுதியதை மாலையில் குமரகோட்டம் முருகன் முன்பு வைப்பார்.
இரவில் முருகனே வந்து கச்சியப்பர் எழுதியதை திருத்துவார். ஆகவே ‘’கந்த
புராணம்’’ இறைவனே முற்றிலும் அங்கீகாரம் செய்த காவியம் ஆகும். திரளாக
இருந்த பண்டிதர்களின் கூட்டத்தில் இக்காவியம் அரங்கேறும் போது சிலர் இறைவன்
எடுத்துக் கொடுத்த முதல் எழுத்தில் இலக்கண பிழை உள்ளது என்று கூறினர்.
முருகன் தன் பக்தனை காக்க உடனே ஓடி வந்து அது சரி என நிரூபித்தார்.
அனைவரும் இறைவனின் கருணையை போற்றி உடனே இக்காவியத்தை அரங்கேற்றினர்.
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா !
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா !
No comments:
Post a Comment