• முருகப்பெருமான், சூரியன், இந்திரன், யமன், அக்கினி, குபேரர் போன்றவர்கள் மகாசிவராத்திரி பூஜை செய்து பலன் அடைந்தார்கள்.
• பிரம்ம தேவன், மகாசிவராத்திரி அன்று விரதம் இருந்து சிவபெருமானை வழிபாடு
செய்ததால் சரஸ்வதி தேவி பிரம்ம தேவனுக்கு மனைவியாக அமைந்தார்.
• ஸ்ரீமகாவிஷ்ணு இந்த சிவராத்திரி விரதத்தை கடைபிடித்ததால் சக்ராயுதத்தை பெற்றார். அத்துடன் ஸ்ரீமகாலஷ்மியை மனைவியாக அமையப் பெற்றார்.
• சிவபெருமான் ஆலகால விஷத்தை உண்டு மயங்கிக் சாய்ந்தார். அப்போது சிவபெருமானை தேவர்கள் பூஜித்த காலம் சிவராத்திரி.
• பிரளய காலத்தில் உலகம் முற்றிலுமாக அழியாமல் இருக்க இந்த அகிலத்தின்
அன்னையான அகிலாண்டேஸ்வரி,ஈசனை சிவராத்திரி அன்று நான்கு ஜாமத்திலும் பூஜை
செய்தார்.
மகாசிவராத்திரி. அன்று பல மலர்களாலும், வாசனை திரவியங்களாலும்
அபிஷேகங்கள் செய்ய முடியாதவர்கள், தண்ணீரையும், வில்வ இலையையும்
சர்வேஸ்வரனுக்குசமர்பித்து, வெல்லம், பச்சரிசியையும் நெய்வேதியமாக படைத்து
வணங்கி, “ஓம் நமசிவாய – ஹர ஹர மஹாதேவ” என்ற மந்திரத்தை உச்சரித்தாலே சகல
நன்மைகளும் தருவார் சிவபெருமான்.
வீட்டில் சிறிய அளவில் சிவலிங்கத்தை
வைத்து பூஜிப்பவர்கள், சிவலிங்கத்தின் நான்கு ஜாமத்திலும் மலர்கள்,
பன்னீர், வில்வ இலைகளால் பூஜிக்க வேண்டும். நான்கு ஜாமத்திலும் பூஜிக்க
முடியாதவர்கள், இரவு பண்ணிரெண்டு மணிக்கு சிவபூஜை செய்தாலு்ம் பலன்
கிடைக்கும். மறுநாள் சிவாலயம் சென்று வழிபடுபவது இன்னும் நல்லது.
நாம்
மகாசிவராத்திரி வழிபாடு செய்ய செய்ய நம் நீண்ட கால கர்மவினை படிப்படியாக
குறையும். கர்மவினைகள் தீர்ந்தால் தலைமுறை தலைமுறையாக இராஜயோக வாழ்க்கை
அமையும்.
No comments:
Post a Comment