Monday, July 23, 2012

சத்தம் எழுவது எப்படி


இரைச்சல் 130 `டெசிபலை’ எட்டினால் நமது காதுகள் தாங்காது. பொத்திக்கொண்டு விடுவோம்.
டெசிபல் என்பது சத்தத்தின் அளவை அளவிடப் பயன்படும் ஓர் அலகு. ஒலி அலைகளின் பலத்தைக் குறிப்பது அது.
காற்றில் இருக்கும் லட்சக்கணக்கான மாலிக்யூல்கள் ஒன்றோடு ஒன்று உரசி மோதிக்கொள்வதால் சப்தம் எழுகிறது.
டெலிபோனை கண்டுபிடித்த அலெக்சாண்டர் கிரஹாமëபெல்லை பெருமைப்படுத்துவதற்காக விஞ்ஞானிகள் உருவாக்கிய வார்த்தைதான் டெசிபல் என்பது. ஒலி அலைகளில் கிரஹாம்பெல் கொண்ட ஆர்வம்தான் அவர் டெலிபோனை கண்டுபிடிக்கக் காரணமானது.
நம் அன்றாட வாழ்வில் நிகழும் சில நிகழ்வுகளின் டெசிபல் அளவு எவ்வளவு தெரியுமா?
மரத்தின் இலைகள் காற்றில் இலேசாய் அசைந்து ஒருவித சத்தத்தை உண்டாக்குகின்றன அல்லவா? அதன் அளவு 10 டெசிபல்கள்.
சில அடிகளுக்கு அப்பாலிருந்து ஒருவர் ரகசியக் குரலில் பேசினால் அது 20 டெசிபல்.
தொலைக்காட்சிப் பெட்டியை போட்டுவிட்டு ஒரு வீட்டின் சத்த அலைகளைக் கணக்கிட்டால் அது 50 டெசிபல். ஒரு கார் தொழிற்சாலையின் இரைச்சல் 95 டெசிபல். ஒரு நிமிடத்துக்கு 16 ஆயிரம் தடவைகள் சுழலும் விமானத்தின் `புரொப்பெல்லர்கள்’ ஏற்படுத்தும் ஓசை, 120 டெசிபல்கள்.

No comments:

Post a Comment

கடவுளைக் கண்ட ஹரி சிங்

ஜெய்ப்பூரில், சுவாமி (சுவாமி விவேகானந்தர்) அரசின் தலைமைத் தளபதியான சர்தார் ஹரி சிங்குடன் மிகவும் நெருக்கமாகப் பழகினார். அவர் ஹரி சிங்கின் இல...