Friday, June 7, 2013

ஔவையாரின் நல்வழியிலிருந்து,



வருந்தி அழைத்தாலும் வாராத வாரா
பொருந்துவன போமினென்றால் போகா இருந்தேங்கி
நெஞ்சம்புண்ணாக நெடுந்தூரம் தாம்நினைந்து
துஞ்சுவதே மாந்தர் தொழில்.

ஊழ்வினைப் பயனால் அன்றி, வரக்கூடாதவைகளை வருந்தி அழைத்தாலும் வராது. அதுபோல் வந்தவைகளை எவ்வளவு வெறுத்துத் ஒதுக்கினாலும் போகாது. நன்மையும், தீமையும் ஊழ்வினைப் பயனாலே என்பதை அறியா மக்கள் எப்போதும் இன்பத்தை நாடியும், துன்பத்தை வெறுத்தும், கவலைகளில் மூழ்கிக் கிடப்பார்கள்.

செய்தீ வினையிருக்கத் தெய்வத்தை நொந்தக்கால்
எய்த வருமோ இருநிதியம் - வையத்து
அறும்பாவம் என்ன அறிந்தன் இடார்க்கின்று
வெறும்பானை பொங்குமோ மேல்.

அறம் செய்வதால் பாவங்கள் நீங்கும் என்று உணர்ந்து செல்வம் பெற்றிருந்த காலத்தில் வறியவர்களுக்கு உதவாதவர்களுக்கு, செல்வம் போய் வறுமையுற்ற காலத்தில் வெறும்பானை பொங்காதது போல் முன்னர் செய்த தீவினைப் பயனே என்று வருந்த வேண்டுமே தவிர, தெய்வத்தை வெறுப்பதால் செல்வம் வராது.

No comments:

Post a Comment

முத்துசாமி தீட்சிதர்

மிகபெரும் பக்திமான்களை, நாயன்மார் ஆழ்வார் வழிவந்த அதிதீவிர பக்தர்களை ஒருவலையில் ஞான சித்தர்களை வெறும் சங்கீத மும்மூர்த்திகள் என அடக்கிவிட்ட ...