Saturday, June 29, 2013
அவிட்ட நட்சத்திரம் 3 & 4ஆம் பாதங்கள் (மட்டும்) கும்ப ராசி.
இந்த நட்சத்திரம் செவ்வாய் கிரகத்திற்கு உரிய நட்சத்திரமாகும்.
இந்த நட்சத்திரத்திற்கு
1. மகம்
2. விசாகம்
3. மூலம்
4. திருவோணம்
ஆகிய 4 நட்சத்திரங்களும் பொருந்தக்கூடிய நட்சத்திரங்களாகும்.
அஷ்டம சஷ்டம நிலைப்பாடு (8/6 position to each rasi) பொருந்துபவற்றில் எதுவும் இல்லை. கும்ப ராசிக்கு மகரம் 12ம் வீடு. ( 2/12 & 12/2 position to each rasi) ஆகவே மகர ராசிக்கு திருவோண நட்சத்திரத்தை விலக்கிவிடுவது நல்லது.
கூட்டிக் கழித்தால் ஆக மொத்தத்தில் 3 நட்சத்திரங்கள் மட்டுமே சிறப்பாகத் தேரும்.
மிருகசீர்ஷம், சித்திரை ஆகிய 2 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத நட்சத்திரங்களாகும். அவற்றையும் விலக்கி விடுவது நல்லது.
பெண்ணிற்கும், பையனுக்கும் அவிட்டம் ஒரே நட்சத்திரமாக இருந்தால் பொருந்தாது!.அதாவது ஏக நட்சத்திரம் பொருந்தாது!
அஸ்விணி, பரணி, சித்திரை,உத்திரம், உத்திராடம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி ஆகிய 8 நட்சத்திரங்களும் பொருந்தாது.
கார்த்திகை, ரோகிணி, திருவாதிரை, பூசம், ஆயில்யம், பூரம், ஹஸ்தம், சுவாதி, அனுஷம் கேட்டை, பூராடம், சதயம் ஆகிய 12 நட்சத்திரங்களும்
மத்திம பொருத்தம் (average) உடையதாகும். தேவைப்பட்டால் அவற்றில் கிடைக்கும் வரன் ஒன்றைத் தெரிவு செய்து கொள்ளலாம்!
Subscribe to:
Post Comments (Atom)
"நகர்ப்புற நக்சல்" (Urban Naxal)
செயல்பாடுகள் மற்றும் சட்டப் பின்னணி 1. அறிமுகம் மற்றும் சொல்லாடலின் தோற்றம் "நகர்ப்புற நக்சல்" (Urban Naxal) என்பது இந்திய அ...
-
பீடம் அமைத்து கும்பம் வைத்து செய்யப்படும் எந்த பூஜை முறைக்கும் பிராண பிரதிஸ்டை செய...
-
Ancient Sacred Chants AUM. In chapter 17 of Bhagwadgita, one of the most sacred texts of the Hindus. Lord Krishna has said that the word...
No comments:
Post a Comment