| 1.
அகல்யை - ராமரின் அருளால் சாபம் நீங்கப்பெற்றவள். |
| 2. அகத்தியர் - ராமனுக்கு
போர்க்களத்தில் ஆதித்ய ஹ்ருதயம் உபதேசித்த மாமுனிவர். |
| 3. அகம்பனன் - ராவணனிடம்
ராமனைப்பற்றி கோள் சொன்னவன். ராமனின் அம்புக்கு தப்பிப்பிழைத்த அதிசய ராட்சஷன் |
| 4. அங்கதன் - வாலி, தாரையின்
மகன். கிஷ்கிந்தையின் இளவரசன். |
| 5. அத்திரி - அனுசூயா என்ற
பத்தினியின் கணவர். ராமதரிசனம் பெற்றவர். |
| 6. இந்திரஜித் - ராவணனின் மகன்.
லட்சுமணனால் அழிந்தவன். மேகநாதன் என்ற பெயரையும் உடையவன். |
| 7. கரன், தூஷணன் - ராவணனின்
தம்பிகள், ராமனின் கையால் அழிந்தவர்கள். ஜனஸ்தானம் என்ற இடத்திற்கு அதிபதிகள். |
| 8. கபந்தன் - தலையும் காலும்
இல்லாத அரக்கன். ராமனால் வதைக்கப்பட்டவன். கந்தர்வ வடிவம் பெற்று ராம
லட்சமணர்கள் கிஷ்கிந்தை செல்ல வழி காட்டியவன் |
| 9. குகன் - வேடர் தலைவன்,
படகோட்டி |
| 10. கும்பகர்ணன் - ராவணனின்
தம்பி, எப்போதும் பெரும் தூக்கம் தூங்குபவன். |
| 11. கும்பன் - கும்பகர்ணனின்
மகன் |
| 12. குசத்வஜன் - ஜனகரின் தம்பி,
மாண்டவி, சுருதகீர்த்தி ஆகியோரின் தந்தை. பரத சத்ருக்கனின் மாமனார். |
| 13. கவுசல்யா, கைகேயி,
சுமித்திரை - தசரதரின் பட்டத்தரசியர் |
| 14. சுநைனா - ஜனகரின் மனைவி,
சீதையின் தாய் |
| 15. கவுதமர் - அகல்யையின்
கணவர், முனிவர் |
| 16. சதானந்தர் - அகல்யை,
கவுதமரின் மகன். சீதையின் திருமணத்திற்கு வந்த புரோகிதர். |
| 17. சம்பராசுரன் - இவனுக்கும்,
தேவர்களுக்கும் நடந்த போரில் தசரதர் தேவர்களுக்கு உதவினார். |
| 18. சபரி - மதங்க முனிவரின்
மாணவ, ராமனை தரிசித்தவள் |
| 19. சதபலி - வடக்கு திசையில்
சீதையை தேடச்சென்றவன். |
| 20. சம்பாதி - கழுகரசன்
ஜடாயுவின் அண்ணன், சீதையைக்காண அங்கதனின் படைக்கு உதவியவன். |
| 21. சீதா - ராமனின் மனைவி,
ஜானகி, வைதேகி, ஜனகநந்தினி, ஜனககுமாரி, மைதிலி ஆகிய பெயர்களும் இவளுக்கு உண்டு. |
| 22. சுமந்திரர் - தசரதரின்
மந்திரி, தேரோட்டி |
| 23. சுக்ரீவன் - கிஷ்கிந்தையின்
மன்னன், வாலியின் தம்பி, சூரியபகவானின் அருளால் பிறந்தவன். |
| 24. சுஷேணன் - வாலியின்
மாமனார், வானர மருத்துவன், மேற்கு திசையில் சீதையை தேடச்சென்றவன். |
| 25. சூர்ப்பணகை - ராவணனின்
தங்கை, கணவனை இழந்தவள். |
| 26. தசரதர் - ராமனின் தந்தை |
| 27. ததிமுகன் - சுக்ரீவனின்
சித்தப்பா, மதுவனம் என்று பகுதியின் பாதுகாவலர் |
| 28. தாடகை - காட்டில் வசித்த
அரக்கி, ராமனால் கொல்லப்பட்டவள். |
| 29. தாரை - வாலியின் மனைவி,
அங்கதனின் தாய். அறிவில் சிறந்த வானர ராணி. |
| 30. தான்யமாலினி - ராவணனின்
இளைய மனைவி |
| 31. திரிசடை - அரக்கிகளுள்
நல்லவள், சீதைக்கு நம்பிக்கை ஊட்டியவள். |
| 32. திரிசிரஸ் - ராவணனின்
தம்பியான கரனின் சேனாதிபதி. |
| 33. நளன் - பொறியியல் அறிந்த
வானர வீரன், விஸ்வகர்மாவின் மகன், கடலின் மீது இலங்கைக்கு பாலம் கட்டியவன் |
| 34. நாரதர் - பிரம்மாவின்
மனத்தில் பிறந்தவர், கலக முனிவர். |
| 35. நிகும்பன் - கும்பகர்ணனின்
மகன் |
| 36. நீலன் - வானர வீரன் நளனின்
நண்பன், வானர சேனாதிபதி, அக்னி தேவனின் அருளால் பிறந்தவன் |
| 37. பரசுராமர் - விஷ்ணுவின்
அவதாரம், ஜமத்கனியின் மகன், ராமனுடன் போரிட்டவர் |
| 38. பரத்வாஜர் - பிராயாகை அருகே
ஆசிரமம் அமைத்திருந்த முனிவர் |
| 39. பரதன் - கைகேயியின் மகன்,
ராமனின் தம்பி. |
| 40. மந்தரை - கைகேயியுடன் கேகய
நாட்டிலிருந்து அயோத்திக்கு வந்த வேலைக்காரி, கூனி என்றும் சொல்வர். |
| 41. மதங்கர் - தவ முனிவர் |
| 42. மண்டோதரி - தேவலோக
சிற்பியான மயனின் மகள், ராவணனின் பட்டத்தரசி, இந்திரஜித்தின் தாய். |
| 43. மாரீசன், சுபாகு -
தாடகையின் மகன்கள். ராமனால் வதம் செய்யப்பட்டவர்கள், மாரீசன் மாய மானாக வந்தவன். |
| 44. மால்யவான் - ராவணனின்
தாய்வழிப்பாட்டன். |
| 45. மாதலி - இந்திரனின்
தேரோட்டி |
| 46. யுதாஜித் - கைகேயியின்
தம்பி, பரதனின் தாய்மாமன் |
| 47. ராவணன் - மிச்ரவா என்பரின்
மகன், குபேரனின் தம்பி, புலஸ்திய முனிவரின் பேரன். |
| 48. ராமன் - ராமாயண கதாநாயகன் |
| 49. ரிஷ்யசிருங்கர் -
புத்திரகாமேஷ்டி செய்த முனிவர். |
| 50. ருமை - சுக்ரீவனின் மனைவி,
வாலியால் கவரப்பட்டவள். |
| 51. லங்காதேவி - இலங்கையின்
காவல் தெய்வம் |
| 52. வசிஷ்டர் - தசரதனின்
குலகுரு, அருந்ததியின் கணவர். |
| 53. மார்க்கண்டேயர்,
மவுத்கல்யர், வாமதேவர், காஷ்யபர், கார்த்தியாயனர், கவுதமர், ஜாபாலி - தசரதரின்
மற்ற குருமார்கள் |
| 54. வருணன் (சமுத்திரராஜன்) -
கடலரசன், தன்மீது அணை கட்ட ராமனை அனுமதித்தவன் |
| 55. வால்மீகி - ராமாயணத்தை
எழுதியவர். ரத்னாகரன் என்பது இயற்பெயர், கொள்ளைக்காரனாக இருந்தவர், ராமனின் மகன்
குசனுக்க ராமாயணம் போதித்தவர், சீதைக்கு அடைக்கலம் அளித்தவர். |
| 56. வாலி - இந்திரனின் அருளால்
பிறந்த வானர வேந்தன். |
| 57. விஸ்வாமித்ரர் - ராமனுக்கு
அஸ்திரவித்தை போதித்தவர், சீதா - ராமன் திருமணத்திற்கு காரணமானவர். |
| 58. விராதன் - தண்டகவனத்தில்
வசித்த அரக்கன், ராமனால் சாபம் தீர்ந்தவன். |
| 59. விபீஷணன் - ராவணனின் தம்பி,
ராமனிடம் அடைக்கலம் அடைந்தவன். |
| 60. வினதன் - கிழக்குத்திசையில்
சீதையை தேடச் சென்றவன். |
| 61. ஜடாயு - கழுகரசன்
சம்பாதியின் தம்பி, தசரதனின் தோழன், சீதைக்காக ராவணனுடன் போராடி உயிர்நீத்தவன். |
| 62. ஜனகர் - சீதை, ஊர்மிளாவின்
தந்தை. |
| 63. ஊர்மிளா - லட்சுமணனின்
மனைவி. |
| 64. ஜாம்பவான் - கரடி வேந்தர்,
பிரம்மாவின் அருள்பெற்று பிறந்தவர் |
| 65. அனுமான் - அஞ்சனை, கேசரி
ஆகியோருக்கு வாயுபகவானின் அருளால் பிறந்தவன், ஆஞ்சநேயன், மாருதி ஆகியவை வேறு
பெயர்கள். |
| 66. ஸ்வயம்பிரபை - குகையில்
வாழ்ந்த தபஸ்வினி, குரங்குப் படையினருக்கு உணவிட்டவள். |
| 67. மாண்டவி - பரதனின் மனைவி. |
| 68. சுருதகீர்த்தி -
சத்ருக்கனனின் மனைவி. |
No comments:
Post a Comment