Thursday, September 26, 2013

அருள்மிகு சுந்தரநாயகி உடனுறை பாக்கபுரேசுரர் - அச்சிறுபாக்கம்






மரம்: கொன்றை
குளம்: வேததீர்த்தம்

பதிகம்: பொன்றிரண் -1 -77 திருஞானசம்பந்தர்

முகவரி: அச்சிறுப்பாக்கம் அஞ்சல்,
மதுராந்தகம் வட்டம்,
காஞ்சிபுரம் மாவட்டம், 603301
தொபே. 044 27523019.

தொண்டை நாட்டுத்தலம். மயிலாடுதுறை - சென்னை பாதையில் இரயில் நிலையம். திண்டிவனம் செங்கல்பட்டுப் பேருந்து வழியில் உள்ளது.


இறைவரின் தேர் அச்சு இற்ற காரணத்தால் இப்பெயர் எய்தியது. சிவபெருமான் திரிபுரதகனஞ்செய்யும் பொருட்டுத் தேவர்கள் அமைத்த தேரில் எழுந்தருளும்போது, தேவர்கள் விநாயகரை வணங்காமையின் அச்சு முரிந்தது என்பதும், பாண்டியனொருவன் கங்கை மணலை வண்டியில் கொண்டு வரும்போது, இத்தலத்திற்கு வந்ததும் வண்டி மேற்கொண்டும் செல்லாமையின் ஊக்கிச் செலுத்த அச்சு முரிந்தது. அவன் அசரீரியினால் செய்தியறிந்து ஆலயத் திருப்பணி செய்தான் என்பதும் வரலாறு. கண்ணுவர் கௌதமர் பூசித்துப் பேறு பெற்றனர்.


கல்வெட்டு:

இத்தலம் இராஜேந்திர சோழவளநாட்டைச் சேர்ந்ததாகக் குலோத்துங்கன் காலத்துக் கல்வெட்டுக் கூறுகிறது. இத்தலத்திறைவன் அகேஷசுவரர்.கல்வெட்டுக்களில் அச்சுக்கொண்டருளிய தேவர்(241 of 1901) என வழங்கப்படுகிறார்.

திரிபுவனசக்கரவர்த்தி கோனேரின்மை கண்டான் காலத்தில் ஆட்கொண்ட நாயகன் சேதிராயனால் ஒருசிலை தயாரிக்கப்பட்டது. இது இன்னார் சிலை என்று அறியக்கூட வில்லை.(235 of 1901) இராஜகேசரிவர்மன் குலோத்துங்கன் I 5ஆம் ஆண்டில் குலோத்துங்கன் உருவச்சிலை செய்து வைக்கப்பெற்றது.(247 of 1901) ஏனைய கல்வெட்டுக்கள் கோயிலுக்கு விளக்கிற்காக ஆடுகளும், பொன்னும், திருவமுதிற்காக நிலமும்விட்ட செய்தியை அறிவிப்பன, குலோத்துங்கசோழன் III ஆட்சி 12ஆம் ஆண்டில் பாண்டியநாட்டைக் கைக்கொண்டசேங்கணி அம்மையப்பன் வைரங்கள் வழங்கினான். (239 of 190) கங்கன் என்பவனால் அர்ச்சனாபோகமாக நிலம் அளிக்கப்பெற்றுள்ளது. (108 of 1934)

No comments:

Post a Comment

முத்துசாமி தீட்சிதர்

மிகபெரும் பக்திமான்களை, நாயன்மார் ஆழ்வார் வழிவந்த அதிதீவிர பக்தர்களை ஒருவலையில் ஞான சித்தர்களை வெறும் சங்கீத மும்மூர்த்திகள் என அடக்கிவிட்ட ...