Monday, January 5, 2015

காங்கயம் இன பசுக்களை பராமரித்து வரும் சாப்ட்வேர் இன்ஜினியர்

Rajesh Shankar's photo.
Rajesh Shankar's photo.
 
 
 
 


காங்கயம் அருகே அடிமாடாக பசுவதைக்கூடங்களுக்கு செல்லும் காங்கயம் இன பசுமாடுகளை வாங்கி கோசாலை அமைத்து பராமரித்து வருகிறார் சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவர்.
 
திருப்பூரைச் சேர்ந்தவர் சிவக்குமார். சாப்ட்வேர் இன்ஜினியரான இவர் அமெரிக்காவில் படித்து அங்கேயே சாப்ட்வேர் கம்பெனியும் கடந்த 18ஆண்டுகளாக நடத்தி வந்தார்.
 
கடந்த ஆண்டு தாய்நாடு திரும்பிய சிவக்குமார் காங்கயம் அடுத்துள்ள ஆண்டிபுதூரில் கொங்க கோசாலை என்ற பெயரில் கோசாலை தொடங்கி நடத்தி வருகிறார். வழக்கமாக கோசாலை என்றாலே அனைத்து இன மாடுகளும் இருக்கும். ஆனால் இங்கு காங்கயம் இன பசுக்களை மட்டுமே வாங்கி பராமரிப்பதோடு வளர்க்க விரும்புவோருக்கு விற்பனையும் செய்து வருகிறார்.
 
இதுபற்றி சிவக்குமார் கூறும்போது, இந்த நவீன உலகத்தில் இயந்திரங்களின் ஆதிக்கம் தொடங்கிய பின் உழவுத் தொழிலுக்கு பயன்படுத்தப்பட்ட காங்கயம் இன மாடுகள் வேகமாக அழிந்து வருகிறது. வணிக நோக்கில் பால் பண்ணை வைத்திருப்போரும் அதிக பால் கொடுக்கும் கலப்பின பசுக்களையே வாங்குகின்றனர். இதனால் காங்கயம் இன பசுக்கள் வேகமாக அழிந்து வருகின்றன.
 
தாயகம் திரும்பியபின்னர் காங்கயம் இன பசுக்களை அழிவிலிருந்து காப்பாற்ற என்னால் ஆன முயற்ச்சியை மேற்கொண்டுள்ளேன்.
ஒவ்வொரு வாரமும் திருப்பூர், ஒட்டன்சத்திரம், குண்டடம் ஆகிய மாட்டுச்சந்தைகளுக்கு சென்று அங்கு அடிமாட்டுக்கு விற்பனைக்கு வரும் காங்கயம் இன பசுக்களை வாங்கி அவற்றை எங்கள் கோசாலையில் பராமரிக்கிறோம். இதுபற்றி தகவல்களை இணையதளங்கள் மூலம் விளம்பரம் செய்கிறோம். வளர்க்கும் நோக்கத்தில் காங்கயம் இன பசுக்களை கேட்டால் நாங்கள் வாங்கிய விலைக்கே லாபநோக்கமின்றி கொடுக்கிறோம். ஒரே நிபந்தனை அந்த மாடுகளை அடிமாட்டுக்கு விற்பனை செய்யக்கூடாது என்று சத்தியம் வாங்கிக் கொள்கிறோம். வாங்கியவர்களால் பராமரிக்க முடியவில்லை என்றால் மீண்டும் எங்களுக்கே கொடுத்துவிடலாம்.
இதுவரை பசுவதைக் கூடத்திற்கு செல்லவிருந்த 500க்கும் மேற்பட்ட மாடுகளை காப்பாற்றியுள்ளோம். எங்களிடமிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் வந்து காங்கயம் இன பசுக்களை வளர்ப்புக்காக வாங்கிச் சென்றவண்ணம் உள்ளனர்.
 
அமாவாசை தோறும் கோபூஜையுடன் குல பூஜையும் இந்த கோசாலையில் நடைபெற்று வருகிறது.நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட பால், இயற்கை விவசாயத்திற்கு தேவையான எரு, கோமியம் கொடுக்கக்கூடிய காங்கயம் இன பசுக்களை வளர்க்க வேண்டுவோர் கொங்க கோசாலையை அணுகலாம் என தெரிவித்தார் சிவக்குமார்.

படவிளக்கம், காங்கயம் அடுத்துள்ள ஆண்டிபுதூரில் தான் அமைத்துள்ள கோசாலையில் பராமரிக்கப்படும் காங்கயம் இன பசுக்களுடன் சாப்ட்வேர் இன்ஜினியர் சிவக்குமார் குடும்பத்துடன் உள்ளார்.

No comments:

Post a Comment

முத்துசாமி தீட்சிதர்

மிகபெரும் பக்திமான்களை, நாயன்மார் ஆழ்வார் வழிவந்த அதிதீவிர பக்தர்களை ஒருவலையில் ஞான சித்தர்களை வெறும் சங்கீத மும்மூர்த்திகள் என அடக்கிவிட்ட ...