Saturday, September 26, 2015

நொச்சி மருத்துவ குணங்கல்


                
              நம்மால் அதிகம் கண்டு  கொள்ளாதவற்றில் நொச்சியும் ஒன்று. குத்து செடியான  இது   ரோட்டோரங்களிலும்     வண்டிபாதை   ஓரங்களிலும் தானே முளைத்திருக்கும்.  இதன்  இலை சிறந்த   மருத்துவ குணங்களை கொண்டது. முக்கியமாக ஜலதோஷத்  தலைவலிக்கு கைகண்ட மருந்து நொச்சி  தைலம். மேலும்   நொச்சி  இலையில்  ஒத்தடம்   கொடுத்தால்   வாயுப்பிடிப்பு,  சுளுக்கு நீங்கும். நொச்சி இலையைச் சட்டியில் போட்டு  பிறகு அடுப்பில் சூடு   செய்து ஒத்தடம்   கொடுத்தால்   வலி    நீங்கும். வலியுள்ள    இடத்தில்     துவையலாக அரைத்தும்  பூசலாம்.   நொச்சி  இலைகளை  ஒரு  துணிப்பையில்  அடைத்துப் தலையணையாகப்  பயன்படுத்தினால்  ஜலதோஷம்    பறந்துவிடும்.  உலர்ந்த நொச்சி இலையைத் தூள் செய்து பீடிப்புகை பிடித்தாலும்  ஜலதோஷம் நீங்கும். இதனுடைய   சாறு       வயிற்றுப்  புண்ணையும்       ஆற்றும்.    இலைச்சாற்றை தலைப்பகுதியிலும், கழுத்திலும் தேய்த்து, சிலமணி நேரம் உடலில் ஊறவிட்டு இளஞ்சூட்டு   வெந்நீரில்   குளித்தால் கழுத்துவலி நீங்கி,  காதில்   தங்கிய நீரும் வெளியேறும். பிரசவத்துக்கு முன்னும் பின்னும் கர்ப்பப்பையில் ஏற்படும் வலி குறைய    நொச்சி இலை   போட்டு    ஊற   வைத்த      தண்ணீரைச்    சூடுபடுத்தி, உடம்பில் ஊற்ற வலி குறையும்.

நொ‌ச்‌சி இலையை ‌சி‌றிது ஆமண‌க்கு எண்னணெ‌ய் ‌வி‌ட்டு வத‌க்‌கி ஒற்்றட‌ம் இட,  மூ‌ட்டுவ‌லி, மூ‌ட்டு ‌வீ‌க்க‌ம் குறையு‌ம். நொ‌ச்‌சி இலையை இடி‌த்து சாறு பிட‌ழி‌ந்து க‌ட்டிக‌ளி‌ன் ‌மீது பூ‌சி வர க‌ுட்டி கரையு‌ம். ‌வீ‌க்க‌ம் குறையு‌ம். நொ‌ச்‌சி மல‌ர்களை ‌நிழ‌லி‌ல் உல‌ர்‌த்‌தி பொடி செ‌ய்து இர‌ண்டு ‌சி‌ட்டிகை அளவு எடு‌த்து பன‌ங்க‌ற்க‌ண்டு சே‌ர்‌த்து சா‌ப்‌பிட ர‌த்த பே‌தி, ர‌த்த வா‌ந்‌தி குணமாகு‌ம். நொ‌ச்‌சி இலையுட‌ன் ‌மிளகு  சே‌ர்‌த்து‌க்         கஷாய‌ம் வை‌த்து சா‌ப்‌பிட மலே‌ரியா சுர‌ம் த‌ணியு‌ம்.    வ‌யி‌ற்று  வ‌லி,    உப்யபுச‌ம்,    நா‌க்கு‌ப்  பூ‌ச்‌சி,     வாத  நோ‌ய்களு‌ம் குணமாகு‌ம். நொ‌ச்‌சி இலையை ‌நீ‌ரி‌ல் ‌வி‌ட்டு கா‌ய்‌ச்‌‌சி, ‌அந்கத ‌நீ‌ரி‌ல் கு‌ளி‌த்து வர      உட‌ல்   வ‌லி   குணமாகு‌ம்.     அந்ொத         ‌நீரை‌க  கொ‌ண்டு     ‌பி‌ள்ளை பெ‌‌ற்றவ‌ர்களை கு‌ளி‌ப்பா‌ட்டலா‌ம். நொ‌ச்‌சி இலையு‌ட‌ன் வெ‌ல்ல‌ம் சே‌ர்‌த்து‌க் கா‌ய்‌ச்‌சி   குடி‌த்து   வர உட‌லி‌ன் சூ‌ட்டை ‌நீ‌க்‌கி உடலு‌க்கு  குளுமையை                    உண்டா‌க்கு‌ம்.

நாட்டுக்காக அர்ச்சனை செய்ய சொன்ன அப்துல் கலாம்!


நாள்: நவம்பர் 20, 2003
இடம்: திருமலை-திருப்பதி

செய்தி: குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், திருமலையில் வழிபாடு.

பலரும் அப்துல் கலாமை,ஒரு விஞ்ஞானி, தேசபக்தர், மனித நேயர், நல்ல மேலாளர், கல்வியாளர், குழந்தைப் பாசம் கொண்டவர், எளிமைப் பண்பாளர், இயற்கை ஆர்வலர், குடியரசுத் தலைவர் என்று தான் பார்த்திருப்பார்கள்!
சற்றே வித்தியாசமாக, திருவேங்கட மலையில் அப்துல் கலாமைக் கண்டதே இந்தப் பதிவு!

பைந்தமிழால் பாமாலை சூட்டி, ஆழ்வார்கள் உள்ளம் உருகிய இடம்.தமிழிசையால் இறைவனைத் தாலாட்டி மகிழ்ந்த இடம். தெழி குரல் அருவித் திருவேங்கடம் இன்று பணக்காரத் தோற்றம் காட்டினாலும், அதன் ஆன்மா என்றுமே எளிய பக்தி மட்டும் தான்!

"எம்பெருமான் பொன்மலை மேல் ஏதேனும் ஆவேனே!" என்பது ஆழ்வாரின் உள்ளக் கிடக்கை!

இப்படி மானுடம், தமிழ் என்று இரண்டிற்கும் பொதுவாய் நிற்கும் திருமலை நாயகன், நம் அப்துல் கலாம் ஐயாவையும் கவர்ந்ததில் வியப்பேதும் இல்லையே!

முன்பு ராபர்ட் க்ளைவ், தாமஸ் மன்றோ, பீவி நாஞ்சாரம்மா, பீதா பீவி என்று அனைவரையும் கவர்ந்தவன் தானே அவன்! அதனால் தான் போலும், அவன் அனுபவத்தை நேரிலே பெறுவதற்காகத் திருமலைக்கு வருகை புரிந்தார் நாட்டின் முதற் குடிமகன். ஆனால் அடியவர்களுக்கும், பக்தர்களுக்கும் தன் வருகையின் படோபடத்தால், தொல்லை தர விரும்பவில்லை அவர். அதனால் விடியற்காலை, வைகறைப் பூசைகளில் மட்டும் கலந்து கொண்டார்.
நாட்டின் மன்னருக்கு அளிக்கப்படும் "இஸ்டி-கபால்" மரியாதைகள் தரப்பட்டு, ராஜகோபுரத்தின் அருகே வரவேற்கப்பட்டார்.
இனி என்ன? நேரே தரிசனம் தான்!
ஆனால் கலாம் தயங்கி தயங்கி நிற்கிறார்.
அதிகாரிகளே "அதை" மறந்து விட்டார்கள்!
ஆனால் இது பற்றி எல்லாம் முன்பே தெரிந்து கொண்டு வருபவர் தானே நம் தலைவர்!
"எங்கே... அந்த கையெழுத்துப் புத்தகம்? கொண்டு வாருங்கள்" என்று கேட்டு வாங்கிக் கொள்கிறார். மாற்று மதத்தினராய் இருப்பதால், ஆலயத்தில் அதன் கோட்பாடுகளுக்குக் குந்தகம் வாராது, இறை தரிசனம் செய்ய விழைகிறேன் என்று படிவத்தில் கையொப்பம் இடுகிறார்! இப்படி ஒரு வழக்கம் தேவையா?
இது போல் ஆகமங்களில் கூடச் சொல்லப்படவில்லையே! இது அவரவர் அந்தந்த ஆலயங்களுக்கு ஏற்படுத்திக் கொண்ட விதிகள் தானே!
முன்பு முகம்மதிய ஆட்சிக் காலத்தில்....

திருவரங்கம் படையெடுப்பு, திருப்பதி கோவில் கொள்ளை, ஆலயங்களுக்குத் திறை வசூல், மறுத்தால் கோவில் உடைப்பு என்றெல்லாம் இருந்த போது, ஆலய நிர்வாகிகள் அமைத்த சட்டதிட்டம்.

ஐயா சாமீ....நீ உள்ளே வந்து உயிரை வாங்காதே-உனக்குக் கட்ட வேண்டிய கப்பத்தைப் பக்தர்களிடம் வசூலித்துக் கட்டி விடுகிறோம், என்று "அக்ரீமெண்ட்" அவலம்!

அப்போது கூட ஜீயர்கள் என்னும் வைணவத் துறவிகள்,

இதனால் உண்மையான மாற்றுமத பக்தர்கள் உள்ளே வந்து பெருமானைச் சேவிக்க முடியாது போய் விடுமே என்று எண்ணினர்; அதிகாரிகளிடம் சொல்லி ஒரு மாற்று ஏற்பாடு செய்தனர். அது தான் இந்தக் கையொப்பப் படிவம்! உறுதிமொழி வாங்கிக் கொண்டு உள்ளே விடுவது!

நல்ல மனிதரான கலாம் இதை வைத்து அரசியல் செய்யவில்லை. அதிகாரம் காட்டவில்லை! அதிகாரிகள் மறந்தால் கூடத் தாமே கேட்டு வாங்கி, இருக்கும் விதியைக் கடைப்பிடிக்கிறார்.உண்மையான, உள்ளார்ந்த பக்தர்களின் நற்குணம் இது! அவர்கள் நோக்கம் இறை தரிசனம் மட்டுமே! ஆலயத்தில் இறைவனை மட்டுமே அடியவர்கள் முன்னிறுத்துகிறார்கள்! இறைவனோ அடியவரை முன்னிறுத்துகிறான்.வரவேற்பு எல்லாம் முடிந்து, பங்காரு வாகிலி எனப்படும் பொன் வாயிலைக் கடந்து அழைத்துச் செல்கிறார்கள், அப்துல் கலாமை! படியாய்க் கிடந்து உன் பவள வாய் காண்பேனே என்று பாடியது போல், படி அருகே நின்று விழிகளால் பரந்தாமனைப் பருகாதார் யார்?
கலாம் என்ன நினைத்தாரோ, என்ன வேண்டினாரோ, எப்படி வழிபட்டாரோ, நாம் அறியோம்!

சுமார் பத்து நிமிடங்கள், ஆழ்வார்களின் பாசுரங்கள் முழங்க, வழிபாடு. முடித்துக் கொண்டு, தீர்த்தமும் திருப்பாதமான சடாரியும் பெற்றுக் கொண்டு, வலம் வருகிறார் கலாம். உண்டியலில் காணிக்கையும் செலுத்துகிறார். அங்கே ரங்கநாயக மண்டபத்தில் மரியாதைகள் செய்யக் காத்து இருக்கிறார்கள் கோவில் அலுவலர்கள்!

திருமலையில் எப்பேர்ப்பட்ட விஐபி-க்கும் மாலைகள் போட்டு மரியாதை கிடையாது!

மாலைகளும் மலர்களும் ஆண்டாள் சூடிக் கொடுத்தவை அல்லவா? அவை எம்பெருமானுக்கு மட்டுமே உரியவை! - இது இந்த ஆலயத்தின் சம்பிரதாயம்!
அதனால் லட்டு/வடை பிரசாதமும், வஸ்திரம் என்கிற பட்டுத்துணியும் அர்ச்சகர்கள் வாழ்த்திக் கொடுக்கிறார்கள்!
அப்போது தான் அப்துல் கலாம் குண்டைத் தூக்கிப் போட்டார்!
வேத ஆசிர் வசனம் என்ற சுலோகங்கள் உள்ளதே!

அதை ஓதி வாழ்த்தும் போது, நம் தேசத்தின் பேரைச் சொல்லி, "இந்தியா" என்று வாழ்த்திக் கொடுங்களேன்! நாட்டுக்காக ஆசிர்வாத மந்திரம் சொல்லுங்களேன், என்று அர்ச்சகர்களைக் கேட்டுக் கொண்டார்...யாருக்கும் முகத்தில் ஈயாடவில்லை! அருகில் இருந்த ஆளுநர் பர்னாலாவுக்கும், முதல்வர் நாயுடு காருவுக்கும் தான்!அட, இந்த மனுசனுக்கு எப்படி இது தெரிந்தது என்ற வியப்பா! இல்லை இது வரை யாரும் இப்படிக் கேட்டுப் பெற்றதில்லை என்ற திகைப்பா?

"இந்தியா" என்ற பெயருக்குத் திருமலைக் கோவிலில் நடந்த அர்ச்சனை இதுவே முதல் முறையாக இருக்கும் என்று நினைக்கிறேன்! அருகில் சேஷாத்ரி என்ற அர்ச்சகர்/பாரபத்யகாரர் இருந்தார். அவரிடம் தன் பாக்கெட்டில் இருந்து ரூ.600 பணம் எடுத்துக் கொடுத்து, மூன்று சகஸ்ரநாம அர்ச்சனைச் சீட்டுகளை வாங்கச் சொன்னார் கலாம். இது போன்று அர்ச்சனை செய்ய 200 ரூபாய் கட்டணம் செலுத்தி இருக்க வேண்டும்.

எங்கேயோ முகம் தெரியாமல் வறுமையில் வாடும் ஏழை இந்தியன் ஒருவன். அவனுக்குத் தன் பெயர் சொல்லி, தன் நல்வாழ்வுக்கு அர்ச்சனை செய்து கொள்ள முடியுமோ என்னவோ,....அதுவும் திருவேங்கடமுடையான் சன்னிதியில்!
பொத்தாம் பொதுவாக, அவர்களை எல்லாம் நினைத்து சங்கல்பம் செய்து கொண்டு, அர்ச்சனை செய்து வைக்குமாறு சொன்னார் கலாம்!
அர்ச்சகர்களும் மறுநாள் காலை செய்து வைத்தனர்!
கோவில்களில் ட்யூப்லைட்-டில் கூட உபயம் என்று தன் பெயரை ஒட்டி வைத்து, வரும் கொஞ்ச நஞ்ச வெளிச்சத்தையும் மங்கலாக்கும் ஆசாமிகள் எத்தனை பேர் உள்ளனர்!
தன் குடும்பம், தன் பெண்டு, தன் பிள்ளையின் பேரில் தான் அர்ச்சனை செய்து பார்த்துள்ளோம். இல்லைன்னா சுவாமி பேருக்கே அர்ச்சனை என்பார்கள் சிலர்!
ஆனால் இப்படியும் ஒரு அர்ச்சனையா? - அந்த நாள், கோவில் பக்தர்களுக்கே சற்று வித்தியாசமான நாளாகத் தான் இருந்திருக்கும்!

Thursday, September 24, 2015

பாவங்களின் 42 வகை


வள்ளலார் பாவங்கள் சிலவற்றைப் பட்டியலிட்டுக் கூறுகிறார்.

அவை வருமாறு:
1. நல்லவர் மனத்தை நடுங்க வைப்பது.
2. வலிய வழக்கிட்டு மானம் கெடுப்பது.
3. தானம் கொடுப்போரைத் தடுத்து நிற்பது.
4. கலந்த சிநேகிதருள் கலகம் உண்டாக்குவது.
5. மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்வது.
6. குடிமக்களிடம் வரி உயர்த்திக் கொள்ளையடிப்பது.
7. ஏழைகள் வயிறு எரியச்செய்வது.
8. தருமம் பாராது தண்டிப்பது.
9. ஒரு தலைச் சார்பாக வழக்குரைப்பது.
10. உயிர்க் கொலை செய்பவர்க்கு உபகாரம் செய்வது.
11. களவு செய்பவர்க்கு உளவுகள் சொல்வது.
12. பொருளை இச்சித்துப் பொய் சொல்வது.
13. ஆசை காடி மோசம் செய்வது.
14. போக்குவரவு கூடிய வழியை அடைப்பது.
15. வேலை வாங்கிக்கொண்டு குறைப்பது.
16. பசித்தோர் முகத்தைப் பாராமல் இருப்பது.
17. இரப்பவர்க்குப் பிச்சை இல்லை என்பது.
18. கோள் சொல்லிக் குடும்பத்தைக் குலைப்பது.
19. நாட்டாற்றில் கை நழுவுவது.
20. கலங்கி ஒளிந்தவரைக் காட்டிக் கொடுப்பது.
21. கற்பிழந்தவளோடு கலந்துறைவது.
22. காவல் கொண்டகன்னியைக் கற்பழிப்பது.
23. கணவன் வழி நிற்பவளைக் கற்பழிப்பது.
24. கருவைக் கலைப்பது.
25. குருவை வணங்கக் கூசி நிற்பது.
26. குருவின் காணிக்கை கொடுக்க மறுப்பது.
27. கற்றவர் தம்மிடம் கடுகடுப்போடு நடப்பது.
28. பட்சியைக் கூண்டில் பதைக்க அடைப்பது.
29. கன்றுக்குப் பாலூட்டாமல் கட்டி அடைப்பது.
30. ஊன் சுவை உண்டு உடல் வளர்ப்பது.
31. கல்லும் நெல்லும் கலந்து விற்பது.
32. அன்புடையவர்க்குத் துன்பம் செய்வது.
33. குடிக்கின்ற நீருள்ள குளத்தைத் தூர்ப்பது.
34. வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சத்தை அழிப்பது.
35. பகை கொண்டு அயலவர் பயிர் அழிப்பது.
36. பொது மண்டபத்தைப் போய் இடிப்பது.
37. ஆலயக் கதவை அடைத்து வைப்பது.
38. சிவனடியாரைச் சீறி வைவது.
39. தவம் செய்வோரைத் தாழ்வு சொல்வது.
40. சுத்த ஞானிகளைத் தூஷணம் செய்வது.
41. தந்தை தாய் மொழியைக் தள்ளி நடப்பது.
42. தெய்வம் இகழ்ந்து செருக்கு அடைவது

32 வகை தர்மங்கள்


பிற உயிர்கட்குச் செய்யும் புண்ணியங்கள் என 32 வகை தர்மங்கள்......

1. வழிப் போக்கர்கட்குச் சத்திரங்கள் கட்டிவைப்பது.

2. கல்வி கற்கும் ஏழைப் பிள்ளைகட்கு உணவு வசதி அளிப்பது.
3. அறுவகைச் சமயத்தார்க்கும் உணவு கொடுப்பது.
4. பசுவுக்கு வைக்கோலும் புல்லும் வழங்குவது.
5. சிறைச் சாலையில் துன்புறுவோர்க்கு சோறளிப்பது.
6. வீடு தேடி வரும் ஆதரவற்ற ஏழைகட்குப் பிச்சை அளிப்பது.
7. தின்பண்டம் நல்கல்.
8. அறநெறி மேற்கொண்டு வாழும் துறவிகட்குச் சோறளிப்பது.
9. தாய்மைப் பேறுபெற்ற பெண்கட்கு உதவி செய்வது.
10. அனாதைக் குழந்தைகளை எடுத்து வளர்ப்பது.
11. அனாதைப் பிணங்களை அடக்க்கம் செய்வது.
12. வாசனைப் பொருள்களை அளிப்பது.
13. நோயாளிகட்கு மருந்துகள் கொடுத்து உதவுவது.
14. துணிவெளுக்கும் தொழிலாளர்க்கு உதவி செய்வது.
15. நாவிதர்க்கு உதவிகள் செய்வது.
16. ஏழைப் பெண்கட்குச் காசோலை கொடுத்து உதவுவது.
17. ஏழைகளின் கண் நோய்க்கு மருந்து கொடுத்து உதவுவது.
18. தலைக்கு எண்ணெய் கொடுப்பது.
19. திருமணமாகாத ஏழைப் பையனுக்குத் திருமணம் செய்து வைப்பது.
20. பிறர் துன்பம் தீர்ப்பது.
21. தண்ணீர்ப் பந்தல் வைத்து உதவுவது.
22. மடம் கட்டிச் சமய அற்இவை வளர்ப்பது.
23. சாலைகளை அமைத்துக் கொடுப்பது.
24. சோலைகளை உண்டாக்கி வைப்பது.
25. பசுமாடுகள் உடம்பைத் தேய்த்துக் கொள்ள தூண்களை நிறுவுவது.
26. விலங்கினங்கட்கு உணவளிப்பது.
27. ஏறு விடுதல்.
28. விலை கொடுத்து உயிரைக் காப்பாற்றுதல்.
29. கன்னிகாதானம் செய்து கொடுத்தல்.
30. குழந்தைகட்குப் பால் வழங்குதல்.
31. கண்ணாடி வழங்குதல்.
32. அறவைத் தூரியம்.

Monday, September 21, 2015

இந்துவாக மாறியா "டேனியல் ராசையா "

"டேனியல் ராசையா " வாக பிறந்து கிறிஸ்துவ மதத்தை உதறிவிட்டு இந்துவாக மாறி நாடு போற்றும் "இளைய ராஜா" வாக மாறிய கதை தெரியுமா ?
இளைய ராஜாவும் ராமராஜனும் அமைத்த கூட்டணி ரஜினி கமலையே மிரட்டியது ஊருக்கே தெரியும்.கரகாட்டம் தொடங்கி ராமராஜனின் அணைத்து படங்களிலும் இந்த இளையராஜாவும் இருப்பார்.

காமராஜர் படத்தில் நாடு பார்த்ததுண்டா என்ற பாடலில் இசை வலிமையால் காமராசரை நினைவு படுத்தி அணைத்து மக்களின் கண்களில் கண்ணீரை கொண்டு வந்திருப்பார்.

பெருந்தலைவர் "காமராஜர்" படத்திற்கு இசை அமைத்த இளைய ராஜா ,பெரியார் என்ற சனியன் படத்திற்கு இசை அமைக்க மறுத்து விட்டார்.பெரியார் என்ற சாக்கடைக்கு ஆன்மீகவாதியான இளையராஜா இசைஅமைக்க மறுத்த காரணம் என்னவென்றால் , பெரியார் இந்தியாவிற்கு கிடைத்த சுதந்திரத்தை எதிர்த்ததும் ,இந்து கடவுள்களை கேவலமாக பேசியதும் தான். ஆதி திராவிட இனத்தை சேர்ந்த பச்சை தமிழன் இளையராஜா

தேனிக்கு அருகில் உள்ள பண்ணைப்புரத்தில் கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய  அவரது தந்தை எம்.ஆர்.ராமசாமி. பிறப்பால் ஒரு இந்துவாக இருந்த ராமசாமி கிருஸ்துவ ராக மதம் மாறியவர். தனது பெயரை டேனியல் ராமசாமி என வைத்துக் கொண்டவர்.


இளையராஜா.விற்கு “ஞான தேசிகன்” என்பது இயற்பெயர். “டேனியல் ராசையா”, என்று செல்லமாக அழைக்கப்பட்டார்.

பிற்காலத்தில் கிறிஸ்துவ மத கொள்கைகள் சுத்தமாக பிடிக்காமல் அதை உதறிவிட்டு தீவிர ரமண பக்தராக மாறி முழுக்க இந்துவாக மாறிவிட்டார். அவர் இசையமைத்துப் பாடிய 'ஜனனி ஜனனி' மற்றும் "எனக்கொரு அன்னை வளர்த்தவள் என்னை" என்ற பாடல்களில் பக்திரசம் சொட்டும்.அவர் இந்து மத பக்தி அந்த பாடலில் தெரியும்.

திருவண்ணாமலை நமக்கு பல மகான்களை தந்திருந்தாலும் அதில் முதன்மையானவர் ரமண மகரிஷி. ரமணரை தமிழகத்தில் பலருக்கு அறிமுகபடுத்தியது இசைஅமைப்பாளர் இளையராஜா. இளையராஜாவிற்கு ரமணர்தான் ஆன்மீக குரு.ரமணருக்காக இளையராஜா இயற்றிய "ராஜாவின் ரமணமாலை",பக்தி பாடல்களில் சிறப்பானதும் கூட.

நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணமலை கோவிலுக்கு இளையராஜா அளித்த கொடைகளும் ஆன்மீக பணிகளும் அதிகம் .மேலும் பல கோவில்களுக்கும் செய்துள்ளார்.

ஒரு கலைஞனை ஒரு குறிப்பிட்ட சாதி அல்லது மத அமைப்பு என்னும் குறுகிய வட்டத்திற்குள் சுருக்கிப் பார்க்கத் தேவையில்லை. கலைஞனை கலைஞனாக மட்டுமே பார்க்க வேண்டும் என்பது என் அபிப்ராயம்.

 இருந்தாலும் இந்த பதிவை எழுத காரணம் இன்னும் சமுக சூழ்நிலையால் சிக்கி தவிக்கும் ஆதி திராவிட இனத்தை சேர்ந்த இளையராஜா அவர்கள் இந்துவாக மாறியது போல ஏமாந்து கிறிஸ்துவ மதம் மாறிய என்னுடைய நாடார் சமுதாய மக்களும் இதை படித்த பின்பு திரும்ப அன்னை பத்திரகாளியிடத்தில் வருவதற்கு தூண்டு கோலாக அமையும் என்ற சுயநலம் தான் காரணம்.

இளைய ராஜாவின் மகன் யாரோ ஒரு நாய் கொடுத்த பாயால் இசுலாமியனாக மாறினேன் என்று கூறிக்கொண்டு அலைகிறான். இளையராஜாவின் பக்தியால் அவனும் இந்துவாக மாறுவான். காலம் நல்ல பதிலை தரும். இந்துவாக இருந்து இசுலமியனாக மாறிய A.R. ரகுமானை இஸ்லாம் எதிர்க்கிறது, அவரும் வருவர் என நம்புகிறேன்.

நாடார்களை மட்டும் ஏன் மதம் மாறாதீங்க சொல்லுரிங்க , இந்துக்களே மதம் மாறாதிங்க நு சொல்லுங்க ,நாங்களும் உதவிக்கு வருகிறோம் என பல மாற்று சமுதாய சகோதரர்கள் கூறினார்கள். அதற்க்கு பதிலும் நான் இப்போது கூறுகிறேன்.
 
ஆரம்ப கால கட்டத்தில் நான் பொதுவாக கிறிஸ்துவ மதம் மாறாதீர்கள் என முகநூலில் எழுத ஆரம்பித்த காலத்தில் விஸ்வகர்மா மற்றும் ஆதி திராவிடர் சமுதாயத்தை சேர்ந்த நண்பர்கள் கோபமாக சொன்னார்கள் , .தமிழ்நாட்டில் அதிகம் மதம் மாறியிருப்பது தலித், மீனவ சமுதாய மக்களை விட நாடார் சமுதய மக்கள் தான் . நீ முதல்ல உன் சமுதயத்தை மாற்று அப்புறமா எங்களுக்கு அறிவுரை சொல்லு நு சொன்னார். அவர் சொன்னதிலும் ஒரு நியாயம் இருப்பதை உணர்ந்தேன். என்னுடைய சமுகத்தை மாற்றாமல் எப்படி பிற மக்களை மதம் மாறாதே நு சொல்லமுடியும். என்னுடைய நாடார் சமுதாய மக்கள் ஏன் மதம் மாறினார்கள்/மாற்றினார்கள் என வரலாறுகளை படிக்க ஆரம்பித்தேன். சுதந்திரத்திற்க்கு திருவாங்கூரில் அடக்குமுறையால் நாயர் சமுதாய கொடுமையால் சிலர் மதம் மதம் மாற தொடங்கி யுள்ளனர். இருந்தாலும் அந்த அடக்கு முறையை மீறி திருப்பி அடி கொடுத்து இந்துவாக வும் இருந்துள்ளனர்.
சுதந்திரத்திற்க்கு பின்பு கல்வி ,வேலைவாய்ப்பு ,என பொய் சொலலியும் பணத்திற்கு ஆசை பட்டு சில கிறித்துவ நாய்கள் நாடார் சமுதயத்தை மதம் மாற்றி கொண்டிருக்கிறார்கள் . நாடார் சமுதாயத்திற்குள் கிறிஸ்துவ மதம் மாறினால் மட்டுமே கல்யாணத்துக்கு பொண்ணு கொடுக்க வேண்டும் / மாப்பிள்ளை எடுக்க வேண்டும் என கூறி CSI கிறிஸ்துவ கும்பல்கள் நாடார் சமுதயத்தை சீரழித்து கொண்டிருப்பதையும் கண்டேன் . பிறப்பு முதல் இறப்பு வரை கிறிஸ்துவ பழக்க வழக்கங்களை புகுத்தி நாடார் களின் அடிப்படை பழக்க வழக்கங்களை அழித்து கொண்டிருப்பதை உணர்ந்தேன். கிறிஸ்துவ மத நஞ்சை பற்றி என் சமுதய மக்கள் பெரிதும் உணர்ந்திருந்தும் பலர் வெளிபடுத்த முடியாமல் தவிப்பதையும் உணர்ந்தேன். இறுதி யாத்திரை வண்டியில் கூட இது இந்து நாடார் சமுதயாத்திற்கு பாத்திய பட்டது என எழுதுமளவுக்கு கிறிஸ்துவர்களின் கொடுமையை என் சமுதாய மறைமுகமாக வெளிபடுத்தியுள்ளனர். நாடார் என்றால் இந்துக்கள் தானே. ஏமாந்து கிறிஸ்துவ மதம் போன நாடார்களுக்கு பொய்யான வரலாறுகளை திரித்து கூறி இந்துவாக மதம் மாற நினைக்கும் நாடார் களின் கைகளை குட்டி சாத்தான் இயேசுவின் பொய்யான போதனைகளால் கட்டி வைத்துள்ளனர். பழைய வரலாறுகளை படிக்கும் போது நாடார் சமுதயாத்திற்கு கிறிஸ்துவர்கள் செய்த பல துரோகங்களை கண்டேன். கிறிஸ்துவர்கள் செய்த துரோகத்தையும் பதிவு செய்து வருகிறேன்

கிறிஸ்துவ மத கும்பல்களின் கொட்டத்தை அடக்க என் சமுதய இளைய தலைமுறை களுக்கு இந்து மதத்திற்காக வாழ்ந்த நாடார் தலைவர்களை பற்றியும் நாடார்களின் பழைய புராண வரலாறுகளையும் தெரிய படுத்தி கிறிஸ்துவ மதத்தில் இருந்து திரும்ப அழைத்து வர 18 சமுதாய மக்களுக்கு தோள்சீலை வாங்கி தந்த "அய்யா வைகுண்டர் "அவதரித்த நாளில் PNP Tamilnadu என்ற அமைப்பை உருவாக்கி முகநூலில் எழுதி கொண்டிருக்கிறேன். எழுத்தோடு நில்லாமல் சமுகத்தில் இறங்கி பணி செய்யவும் போகிறேன். என் சமுதாயத்திற்காக ...

என்னுடைய எந்த பதிவவிலும் பொய்யான வரலாற்று செய்திகளை எழுதியது இல்லை.பிற சமுகத்தை பற்றி இழிவாகவும் எழுதியது இல்லை.நாடார் சமுதயம் முன்னேறுவதற்கு காரணம் அணைத்து சமுதாய மக்களுடன் இணக்கமாக வாழ்ந்ததே காரணம்.
 
ஆகவே நாடார் சமுதாயதிற்கு எந்த ஒரு சமுதாயமும் எதிரிகள் அல்ல.இதில் ஏதும் தவறு என்றால் பதில் சொல்லுங்க....

93 சதவீத மக்கள் ஹிந்துக்கள் உள்ள பாலி (BALI)


உலகின் மிகப்பெரிய இஸ்லாம் நாடான இந்தோனேசியாவில் உள்ள ஒரூ தீவு தான் பாலி (BALI). இங்கே 93 சதவீத மக்கள் ஹிந்துக்கள். 42 லட்சம் ஹிந்துக்களின் தாயகமாக பாலி விளங்குகிறது.

ஒரு காலத்தில் ஹிந்து ராஜ்யமாக இருந்த இந்தோனேசியாவில், முஸ்லிம்களின் படையெடுப்பிற்கு பிறகு பெரும்பான்மை மக்கள் முஸ்லிம்களாக மாற்றப்பட்டனர். இஸ்லாமியர்கள் மஜாபஹிட் (Majapahit ) என்ற கடைசி ஹிந்து மன்னரை வீழ்த்திய பிறகு ஹிந்து மதத்தை விட்டு மாறாமல் இருந்த மக்கள் பாலிக்கு குடிபெயர்ந்தனர்.
பாலியை பற்றிய சுவாரசியமான தகவல்கள்.

1. இங்கே ஒவொரு ஆண்டும் மார்ச் மாதத்தில் ஒரு நாள் மௌன விரதம் கடைபிடிக்கபடுகிறது. Nyepi day ( மௌன தினம் ) என்று சொல்கிறார்கள். ஹிந்துகளின் பண்டிகை போன்ற அந்த நாளில் இந்தோனேசியா முழுவதும் விடுமுறை அளிக்கபடுகிறது. காலை 6 மணி முதல், மாலை 6 மணி வரை எந்த போக்குவரத்தும் இருக்காது. பன்னாட்டு விமான நிலையமான Denpasar (bali) விமான நிலையம் கூட மூடப்பட்டு இருக்கும். யாரும் பேசிக்கொள்ள மாட்டார்கள். வீட்டில் இருந்தபடியே தியானம் செய்வார்கள்.

2. பாலியில் உள்ள ஹிந்து கலாச்சாரம் இந்திய ரிஷிகளிடமிருந்து வந்தது தான். பாலி பள்ளிகளில் இன்றும் கூட ரிஷிகளை பற்றிய பாடங்கள் இருக்கின்றன. புராணங்களில் வரும் மார்கண்டேய, அகஸ்திய, பரத்வாஜ ரிஷிகளை பற்றி இந்தியாவில் யாருக்கும் தெரியாத நிலையில், இந்த ரிஷிகளை பற்றி பாலி குழந்தைகள் கூட தெரிந்து வைத்து இருக்கிறார்கள்.

3. பாலியில் ஆணுக்கும், பெண்ணுக்கும் தேசிய உடை 'வேஷ்டி' தான். எந்த ஒரு பாலி கோவிலுக்கும் வேஷ்டி அணியாமல் ஆணோ, பெண்ணோ உள்ளே செல்ல முடியாது. இந்தியாவில் கூட சில கோவில்களில்தான் பாரம்பரிய உடை கட்டாயமாக உள்ளது (குருவாயூர் போன்ற). ஆனால் பாலியில் அனைத்து கோவில்களிலும் நமது உடை அணிந்து தான் செல்ல வேண்டும்.

4. பாலியின் சமூக, பொருளாதார, அரசியல் கட்டமைப்பு ரிஷிகள் உருவாகிய tri-hita-karana என்ற கோட்பாட்டின் படி தான் அமைந்துள்ளது. அதைதான் அவர்கள் தங்கள் வாரிசுகளுக்கும் சொல்லிக்கொடுக்கிறார்கள். Parahyangan - Pawongan - Palemahan என்று பொருள்படும். tri-hita-karana என்பது சமஸ்கிருதம்.

5. Trikala Sandhya என்பது சூரிய நமஸ்காரம். அணைத்து பாலி பள்ளிகளிலும் கட்டயாமாக மூன்று வேலை சூரிய நமஸ்காரம் செய்கிறார்கள். அதே போல மூன்று வேலையும் காயத்ரி மந்திரத்தை அவர்கள் பள்ளியில் சொல்லவேண்டும். பொதுவாக பாலி ரேடியோவில் மூன்று வேலை சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டிய நேரத்தில் அதை ஒலிபரப்புவார்கள். இந்தியாவில் சூரிய நமஸ்காரதிர்க்கு எதிர்ப்பு தான் வருகிறது. 5 வேலை நமாஸ் செய்ய சொல்வார்கள் போல.

6. பாலி கோவில் பூசாரிகளின் சம்பளத்தை இந்தோனேசியா அரசாங்கமே கொடுக்கிறது. முஸ்லிம் மத நாடான இந்தோனேசியாவில் அனைத்து மத கோவில் பூசாரிகளின் சம்பளத்தை அரசே கொடுக்கிறது.

7. இந்தோனேசிய நாட்டின் மூதாதையர்கள் அனைவரும் ஹிந்துக்களே, அதனால் அவர்களின் பண்பாடுகளில் இந்திய கலாசாரமே அதிகம் கலந்துள்ளது.

8. உலகில் அரிசி விளைவிக்கும் நாடுகளில் இந்தோனேசியா முக்கிய இடம் வகிக்கிறது, பாலி தீவு முழுவதும் அரிசி வயல்கள் தான் இருக்கின்றது. பாலி மக்கள் விளைந்த அரிசியை முதலில் ஸ்ரீ தேவி, பூதேவி (Shri Devi and Bhu Devi ) ஆகிய தெய்வங்களுக்கு தான் படைக்கிறார்கள். அனைத்து வயல்களிலும் இந்த இரண்டு தெய்வங்களும் கோவில் இருக்கும், விவசாயிகள் இந்த இரு தெய்வங்களை வணங்கிய பிறகு தான் விவசாய தொழிலுக்கு செல்வார்கள். 9ஆவது நூற்றாண்டிலேயே விவசாய மற்றும் நீர்பாசன விதிமுறைகளை ஹிந்து பெரியோர்கள் கற்றுகொடுத்து இருக்கிறார்கள். அதற்க்கு Subak System என்று பெயர். இங்கே நீர் பாசனம் முழுவதும் கோவில் பூசாரிகளின் கட்டுபாட்டில் தான் இருக்கும். உலக வங்கியே Subak System பின் பற்றுமாறு மற்ற நாட்டினருக்கு அறிவுரை வழங்கி உள்ளது குறிப்பிட தக்கது. இந்தியர்கள் கொண்டு வந்த இந்த விஞ்ஞானம் இன்று இந்தியாவில் இல்லை.

9. பாலி ஹிந்துக்கள் பூஜை செய்யும் பொழுது பிரிண்ட் செய்யப்பட்ட புத்தகங்களை வாசிப்பது இல்லை. இன்றும் கூட அவர்கள் கையால் எழுதப்பட்ட ஓலை சுவடியையே (Lontar) பயன்படுத்துகிறார்கள். ராமாணயம் அனைவருக்கும் தெரிந்து இருக்கும்.ராமாணய ஓலைசுவடியை நல்ல நாட்களில் எடுத்து வரும் திருவிழா நடைபெறும். 10. அனைத்து திருவிழாகளிலும் பாலி நடனம் ஆடுவார்கள், அதில் பெரும்பாலும் இராமாயண இதிகாசங்களை கதைகளாக சொல்வார்கள். ஹிந்துக்களின் சொர்க்க பூமி பாலி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. உலகின் அழகிய தீவுகளில் பாலி முக்கிய இடம் வகிக்கிறது. அழகிய இடங்கள், அமைதியான வாழ்க்கை முறை, பாரம்பரியமிக்க ஹிந்து கலாச்சாரம், நடனம், இசை என்று இந்த தீவு உலக சுற்றுலா பயணிகளை அதிகம் கவருவதில் ஆச்சிரியம் ஏதும் இல்லை.

Friday, September 18, 2015

இந்து புனித நூல்கள்:


வேதங்கள் (4):
ரிக்வேதம்,
சாம வேதம்,
யசுர் வேதம்,
அதர்வ வேதம்.

வேத பிரிவுகள் (4):
சம்ஹிதைகள்,
பிராமணங்கள்,
ஆரண்யகங்கள்,
உபநிடதங்கள்.

உபநிடதங்கள் (108):
108 உபநிஷத்துக்களில் 10 முக்கிய உபநிஷத்துக்களான,
ஈசா வாஸ்ய உபநிடதம்,
கேன உபநிடதம்,
கடோபநிடதம்,
பிரச்ன உபநிடதம்,
முண்டக உபநிடதம்,
மாண்டூக்ய உபநிடதம்,
ஐதரேய உபநிடதம்,
தைத்திரீய உபநிடதம்,
பிரகதாரண்யக உபநிடதம்,
சாந்தோக்யம் உபநிடதம்,
மேலும்,
24 சாமானிய வேதாந்த உபநிடதங்கள், 20 யோக உபநிடதங்கள், 17 சன்னியாச உபநிடதங்கள், 14 வைணவ உபநிடதங்கள், 14 சைவ உபநிடதங்கள், 9 சாக்த உபநிடதங்கள்.

வேதாங்கங்கள் (6):
சிக்ஷா,
சந்தஸ்,
வியாகரணம்,
நிருக்தம்,
கல்பம்,
சோதிடம்.

உபவேதங்கள் (4):
ஆயுர்வேதம்,
அர்த்தசாஸ்திரம்,
தனுர் வேதம்,
காந்தர்வ வேதம்.

புராணங்கள் (18):
பிரம்ம புராணங்கள்;
பிரம்ம புராணம்,
பிரம்மாண்ட புராணம்,
பிரம்ம வைவர்த்த புராணம்,
மார்க்கண்டேய புராணம்,
பவிசிய புராணம்.
வைணவ புராணங்கள்;
விஷ்ணு புராணம்,
பாகவத புராணம்,
நாரத புராணம்,
கருட புராணம்,
பத்ம புராணம்,
வராக புராணம்,
வாமன புராணம்,
கூர்ம புராணம்,
மச்ச புராணம்,
கல்கி புராணம்.
சிவ புராணங்கள்;
சிவமகாபுராணம்,
லிங்க புராணம்,
கந்த புராணம்,
ஆக்கினேய புராணம்,
வாயு புராணம்

உபபுராணங்கள் (18):
சூரிய புராணம்,
கணேச புராணம்,
காளிகா புராணம்,
கல்கி புராணம்,
சனத்குமார புராணம்,
நரசிங்க புராணம்,
துர்வாச புராணம்,
வசிட்ட புராணம்,
பார்க்கவ புராணம்,
கபில புராணம்,
பராசர புராணம்,
சாம்ப புராணம்,
நந்தி புராணம்,
பிருகத்தர்ம புராணம்,
பரான புராணம்,
பசுபதி புராணம்,
மானவ புராணம்,
முத்கலா புராணம்.

இதிகாசங்கள் (2):
இராமாயணம்
மகாபாரதம்

ஏனைய நூல்கள்;
பகவத் கீதை,
உத்தவ கீதை,
ரிபு கீதை,
அஷ்டாவக்கிர கீதை,
பிரம்ம சூத்திரம்,
மனுஸ்மிருதி,
அர்த்தசாஸ்திரம்,
ஆகமம்,
தந்திரம்,
 சூத்திரம்,
தோத்திரம்,
தர்மசாத்திரங்கள்,
நாலாயிர திவ்வியப் பிரபந்தம்,
தேவாரம்,
திருவாசகம்,
பெரிய புராணம்.....
நம் இந்துமதமே உலகின் தாய்மதம்

விஸ்வகர்மா வரலாறு...


சுமார் 5000 ஆண்டுகளுக்கு மேலாக இந்த தேசத்தின் ஆணிவேராகவும், எல்லா கலைகளுக்கும் மூலவித்தாகவும், ஹிந்து மதத்தின் தலைமகனாகவும், 2300 வருடங்களுக்கு முன் படையெடுத்து வந்த அலெக்சாண்டர் முதல் தற்போது இந்தியாவிற்கு சுற்றுபயணம் வரும் வெளிநாட்டுக்காரர்கள் வரை வந்து பிரமித்து பார்க்கும் அனைத்து கலைப் பொக்கிஷங்களையும் படைத்து இந்தியாவின் அடையாளமாகவே வாழ்ந்து வந்த நம் விஸ்வகர்மா சமுதாயத்தின் இன்றைய வீழ்ச்சிக்கும், முன்னேற்றமின்மைக்கும், ஒற்றுமையின்மைக்கும் மிக முக்கிய காரணம் நம் விஸ்வகர்மா இன மக்கள் தங்கள் குலக்கடவுளான ஸ்ரீவிஸ்வகர்மாவிற்கும், ஸ்ரீகாயத்ரி தேவிக்கும் உரிய முக்கியத்துவம் தராமல் மறந்து போனது தான் என்று உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீவிஸ்வகர்மபுத்ர மகரிஷி அவர்கள் வருத்ததுடன் தெரிவித்து உள்ளார்.

தென்னிந்தியாவில் குறிப்பாக, தமிழ்நாட்டில் வாழும் 65மூ ஐந்தொழில் விஸ்வகர்மா இன மக்களுக்கு தங்கள் கடவுள் ஸ்ரீவிஸ்வகர்மா மற்றும் ஸ்ரீகாயத்ரி தேவி என்பதே தெரியாமல் வாழ்கிறார்கள். இதில் மீதி 30மூ பேர் கூட ஸ்ரீசதாசிவமூர்த்தியை தான் ஸ்ரீவிஸ்வகர்மா என்று வணங்குகிறார்கள். தன் ஐந்து நெற்றிகளில் திருநாமம் அணிந்தவர் தான் ஸ்ரீவிஸ்வகர்மா (படைப்புக் கடவுள்) மாறாக, விபுதி பட்டை அணிந்தவர் ஸ்ரீசதாசிவமூர்த்தி (அழிக்கும் கடவுள்). நம்மவர்கள் பெரும்பாலும் ஸ்ரீசதாசிவமூர்த்தியையே ஸ்ரீவிஸ்வகர்மா என்று நினைத்து வணங்கி வருகிறார்கள். இது இரு பெரும் கடவுள்களும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருப்பதால் ஏற்பட்ட குழப்பம் மற்றும் இது ஏற்படுத்தப்பட்ட குழப்பம். ஸ்ரீவிஸ்வகர்மாவின் முக்கிய ஆயுதமான சுத்தியல் ஸ்ரீசதாசிவமூர்த்தியின் கரங்கள் எதிலும் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது மற்றும் கவனிக்கத்தக்கது. ஆதியில் சிவபெருமானும் நாமத்துடன் தான் ஸ்ரீவிஸ்வகர்மாவால் படைக்கப்பட்டார் ஆனால் பிறகு வந்த காலத்தி்ல் தனது அழிக்கும் பணி சிறப்பாக நடைபெறுகிறது என்பதை உலகிற்கும் மற்றவர்களுக்கும் உணர்த்தும் பொருட்டே சிவபெருமான் தான் அழித்தப் பொருட்களின் சாம்பலை எடுத்து விபுதியாகப் புசிக் கொண்டார் என்பது வரலாறு.

ஸ்ரீவிஸ்வகர்மா
ஸ்ரீசதாசிவமூர்த்தி

உலகின் முதல் வேதமான ரிக் வேதம் ஸ்ரீவிஸ்வகர்மா-வை அனைத்து கடவுள்களையும் படைத்தவர் என்றும் அவர்களுக்கு பெயரிட்டவர் என்றும் பிரபஞ்சத்தின் மூலக்கருவையே தோற்றுவித்தவர் என்றும் 10ம் அதிகாரம் முழுவதும் தெளிவாக கூறுகிறது. ரிக் வேதம் மட்டுமல்ல, யஜுர், சாம, அதர்வணம் என அனைத்து வேதங்களும் நம் கடவுள் ஸ்ரீவிஸ்வகர்மாவை துதிப்பாடுகின்றன. எந்த யாகம் நடத்தப்பட்டாலும் அதில் ஸ்ரீவிஸ்வகர்மாவிற்கு உரிய அவில்பாகம் கொடுக்கப்படுகிறது. எந்த கோயில் கும்பாபிஷேகம் நடந்தாலும் புனித நீரை நம் குலக்கடவுள் ஸ்ரீவிஸ்வகர்மாவின் பெயரை சொல்லி தான் தெளிக்கப்படுகிறது. அப்படிப்பட்ட உயர்ந்த கடவுளை நாம், அதாவது அவரின் குழந்தைகள் மறந்து விட்டு கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறோம்.

நம்மை வீழ்த்த நினைத்தவர்கள் 11ம் நுரற்றாண்டில் செய்து வைத்த தவறான, குழப்பமான மற்றும் நம் சமுதாயத்தையே வேரறுக்கும் அளவிற்கு நம்மையும் நம் குலக்கடவுளையும் பிரித்து வைக்கும் படியான வழிபாட்டு முறையை தான் நாம் தற்போது பின்பற்றிக் கொண்டு இருக்கிறோம். இந்த தவறான முறையால் நாம் நம் கடவுளை மறந்து விட்டோம் அல்லது இழந்து விட்டோம் அல்லது தவறாக வணங்கிக் கொண்டிருக்கிறோம். அந்த காலக்கட்டத்தில் தான் நமது ஸ்ரீவிஸ்வகர்மாவின் புகழைப்பரப்பி வந்த நமது மடங்கள் எல்லாம் வலுக்கட்டாயமாக சைவ(சிவ)மடங்களாக மாற்றப்பட்டன. அங்கு சிவபெருமானுக்கும், லிங்கத்திற்கும் தான் முக்கியத்துவம் தரப்படும் படி செய்யப்பட்டன. இதன்படி ஸ்ரீவிஸ்வகர்மாவை மறக்கடிக்க செய்து விட்டனர். நம்மையும் நம் கடவுளையும் பிரித்து வைக்கும் அந்த தவறான முறையை மாற்றி அமைத்து மீண்டும் நம் விஸ்வகர்மா இன மக்களை அதாவது ஸ்ரீவிஸ்வகர்மாவின் குழந்தைகளை மீண்டும் ஸ்ரீவிஸ்வகர்மாவின் பக்தர்களாக மாற்றுவதே எங்களின் புனிதமான லட்சியமாகும்.

நம்மவர்கள் மற்ற கடவுள்களுக்கு தரும் முக்கியத்துவத்தை நம் குலக்கடவுள்களான ஸ்ரீவிஸ்வகர்மாவிற்கும், ஸ்ரீகாயத்ரி தேவிக்கும் அளிப்பது கிடையாது. ஸ்ரீவிஸ்வகர்மாவின் பக்தர்கள் என்றால் மற்ற கடவுள்களை வணங்கக் கூடாது என்று அர்த்தமல்ல. அப்படி சொல்வது மிகப்பெரிய காட்டுமிராண்டித்தனம். அப்படி நாங்கள் சொல்லமாட்டோம். நாங்கள் கேட்பதெல்லாம் ஆயிரம் கடவுள்களை கூட வணங்குங்கள் தவறில்லை. ஆனால் நம் குலக்கடவுள் ஸ்ரீவிஸ்வகர்மாவையும் ஸ்ரீகாயத்ரி தேவியையும் வணங்காமல் அல்லது தவறாக ஸ்ரீசதாசிவமூர்த்தியை ஸ்ரீவிஸ்வகர்மா என்று வணங்கி விட்டு ஆயிரம் கடவுள்களை வணங்கி என்ன பயன்? என்று தான் கேட்கிறோம்.

நாம் சைவ மதமா? வைணவ மதமா? என்று நம் சமுதாயத்தைச் சேர்ந்த ஆன்மீகப் பெரியவர்களே சந்தேகத்துடன் கேட்கிறார்கள். உண்மையில் நாம் சைவ மதமும் அல்ல (அனைத்தும் ஒரு நாள் சாம்பலாகும் என்ற கொள்கை) வைணவ மதமும் அல்ல (நமக்கு விதிக்கப்பட்ட கடமையை நாம் செய்ய வேண்டும் என்ற கொள்கை). நாம் படைப்பவர்கள். நாம் தனி மதம். சிவபெருமானை வணங்கும் சைவம், விஷ்ணுவை வணங்கும் வைணவம், சக்தியை வணங்கும் சாக்கியம், விநாயகரை வணங்கும் கணபாத்தியம், சூரியபகவானை வணங்கும் சௌமாரம், முருகப்பெருமானை வணங்கும் கௌமாரம் போல விஸ்வகர்மா என்பது ஸ்ரீவிஸ்வப்பிரம்மனாகிய ஸ்ரீவிஸ்வகர்மாவையும், ஸ்ரீகாயத்ரி தேவியையும் மற்றும் ஐந்து ரிஷிகளையும் வழிபடும் தனி மதம் அதுவும் விஸ்வகர்ம மதம் என்பது ஹிந்து தர்மத்தின் முதல் மதம். இதை மறந்து விட்டு நாம் அடிப்படையிலேயே தவறு செய்கிறோம்.

அது எந்த அளவிற்கு நம்மையும், நம் தலைமுறைகளையும் பாதிக்கிறது என்பதையும் உணராமல் வாழ்கிறோம். ஸ்ரீவிஸ்வகர்மாவையும், ஸ்ரீகாயத்ரி தேவியையும் முறையாக வணங்கி வரும் நம் ரத்த சொந்த பந்தங்களான வட இந்திய விஸ்வகர்மாக்கள் தங்கள் தொழில்கள் உள்பட அனைத்து துறைகளிலும் கொடிக்கட்டிப் பறக்கின்றனர். பெரிய பெரிய தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் உள்பட பலவற்றை ஆரம்பித்து வட இந்தியாவில் உள்ள மற்ற சமுதாயத்தினருக்கு உதாரணமாக திகழ்கிறார்கள். மற்ற சமுதாயத்தினருக்கு மட்டுமல்ல, நமக்கும் கூட உதாரணமாக திகழ்கிறார்கள். நாமும் நம் கடவுள்களை வணங்க ஆரம்பித்தால் வாழ்வில் என்றென்றும் சுபிட்சமும், உண்மையான நிம்மதியும், நிலையான சுபிட்சமும் பெறலாம்.

நாம் புனிதமான விஸ்வகர்மாக்கள், மற்றவர்களைப் போல பிரம்மனால் படைக்கப்பட்டவர்கள் அல்ல. உயர்ந்த கடவுளின், அதுவும் எல்லா கடவுள்களையும் படைத்த ஸ்ரீவிஸ்வப்பிரம்மனாகிய ஸ்ரீவிஸ்வகர்மாவின் ஐந்து தலைகளில் இருந்து நேரடியாக படைக்கப்பட்டவர்கள். நமக்கு என்று தனியாக நியதிகள், முறைகள், குல மரபுகள், தனி அடையாளங்கள் உண்டு. மற்றவர்கள் போல் நாம் நடந்து கொண்டால் அதில் நமக்கு பலன்கள் கிடையாது அல்லது குறைவு. நாம் யார் என்பதை உணர்ந்தால் தான், நாம் யாருடைய ரத்தம் என்பதை உணர்ந்தால் தான், நமது குலமரபுகளை நாம் பின்பற்றினால் தான, நம்மால் அனைத்தையும் சாதிக்க முடியும். நம் முன்னோர்களைப் போல காலத்தால் அழியாத கலைப் படைப்புகளை ஏன் தனி சரித்திரத்தையே கூட படைக்க முடியும்.

இது தாங்க ஆர்.எஸ்.எஸ்!!!

 
பாரத நாட்டின் உயிர் துடிப்பான இந்து சமுதாயத்தை ஒற்றுமைப்படுத்தி இந்து தர்மத்தை, இந்து பண்பாட்டை பாதுகாத்து தேசபக்தி கட்டுப்பாட்டை உருவாக்கி, தீண்டாமையை அகற்றி பாரதத்தை உலகின் குருவாக திகழ வைக்க துவக்கப் பட்ட இயக்கமே ஆர்.எஸ்.எஸ்.

1925-ல் பிறவி தேசபக்தரான ஹெட்கேவார் அவர்களால் விஜயதசமி அன்று நாகபுரியில் துவக்கப்பட்டது.1947 பாகிஸ்தான் பிரிவினையின் போது சொந்த நாட்டிலேயே எண்ணற்ற ஹிந்துக்கள் அகதிகளாக முஸ்லீம்களால் பாகிஸ்தானிலிருந்து விரட்டியடிக்கப் பட்டனர். அப்போது அங்குள்ள ஹிந்துக்களை உதவிகரம் நீட்டி மீட்டது ஆர்.எஸ்.எஸ்.

1962-ல் சீன போரில் நமது ராணுவத்துடன் இணைந்து போர் முனையில் உதவி செய்ததால் ஆர்.எஸ்.எஸ் ஐ தவறாக நினைத்து கொண்டு இருந்த அன்றைய பிரதமர் நேரு உண்மையை உணர்ந்து சங்கத்தை 1963 ஜனவரி 26 குடியரசு தின விழா அணி வகுப்பில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார்.1965-ல் பாகிஸ்தான் போரின் போது தலைநகர் தில்லியில் சாலை போக்குவரத்து, கட்டுப்பாடு, காவல் துறை பனி முழுவதையும் இருபது நாட்களுக்கு அன்றைய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி ஆர்.எஸ்.எஸ். வசம் ஒப்படைத்தார். அத்தகைய சீரிய பனி செய்த இயக்கம் தான் ஆர்.எஸ்.எஸ்.

1975 நெருக்கடி நிலை சமயத்தில் பல கட்சிகளும், அமைப்புகளும், தலைவர்களும், பத்திரிக்கைகளும் முடங்கி கிடந்த நேரத்தில் சங்க சகோதரர்கள் சர்வாதிகார அரசை கண்டித்து நாடு முழுவதும் சத்யாக்ராஹ போர் செய்தனர். 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பல மாதம் சிறை சென்று பல கொடுமைகளை ஏற்று, சர்வாதிகார ஆட்சியை நீக்கி தேசத்தை மீண்டும் மக்களாட்சிக்கு கொண்டு வந்தனர்.1995 தேச விரோதிகளால் தூண்டி விடப்பட்டு ஜாதி வெறியினால் தென் மாவட்டங்கள் ரணகளமான சமயத்தில், சமய நல்லிணக்க கூடத்தையும், பாத யாத்திரையும் நடத்தி சமுதாய இசைவை ஏற்படுத்தியது ஆர்.எஸ்.எஸ்.

2004 ஆழிப் பேரலை (சுனாமி) தாக்கிய போது உடனடியாக அவர்களுக்கு நேசகரம் நீட்டி வாழ்வில் ஒளியை ஏற்றியது ஆர்.எஸ்.எஸ்.2013 உத்திரகன்ட் வெள்ள நிவாரண பணியில் ஆயிரக்கணக்கான ஸ்வயம் சேவகர்கள் அணைத்து வித உதவிகளும் செய்தனர்.தேசம் முழு கல்வி, மருத்துவம், பண்பாடு, பொருளாதாரம், சார்ந்த ஒன்றரை லட்சம் சேவா காரியங்களை செய்து வரும் அமைப்பு ஆர்.எஸ்.எஸ்.விமான ரயில் விபத்து, லாத்தூர், குஜராத் பூகம்பம் போன்ற பேரிடர்களின் போது நேசகரம் நீட்டி உடனே சேவை செய்தது ஆர்.எஸ்.எஸ்.

தேசம் முழுவதும் 60 ஆயிரம் கிளைகளை கொண்ட மாபெறும் இயக்கம் மற்றும் 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் ஹிந்துக்களை ஒன்றிணைக்கும் பணியை செய்து கொண்டு வருகின்றது ஆர்.எஸ்.எஸ்.உலகிலேயே நாட்டிற்காக தினமும் 1 மணி நேரம் செலவிடும் கோடிக் கணக்கான ஸ்வயம் சேவகர்களை கொண்ட ஒரே அமைப்பு என்ற பெருமையும் ஆர்.எஸ்.எஸ் –ற்கு உண்டு.தேசமே தெய்வம்

Tuesday, September 15, 2015

தீர்க்கமுடியுமோ அந்தக் கடன்?


தாயென்னும் தவவடிவம் முற்றும் துறந்த முனிவர்களாலும் துறக்க முடியாததோர் உறவு. ஆதிசங்கரரைப் பற்றிப் பேசப்போந்த எழுத்தாளர் அமரர் தேவன், அவர் தன்தாயாரின் இறுதிக் காலம் நெருங்குவதை உணர்ந்து கண்ணீர் உகுப்பதை உருக்கமாகவர்ணிக்கிறார். முற்றும் துறந்த துறவியான அவர் ஏன் கண்ணீர் உகுக்கிறார் என அவர்சிஷ்யர்கள் அவரை வினவ அவர் காரணத்தை விளக்கி, முன்னதாக ஸ்ரீகிருஷ்ணரைதன் தாயாரிடம் சென்று ஆறுதல்படுத்தக் கேட்டுக் கொள்வதாகவும், அப்படியே சென்றஸ்ரீகிருஷ்ணரிடம் ஆர்யாம்பாள், “சங்கரா! வந்து விட்டாயா?” என வினவ, அவர்

“சங்கரன் கேட்டுக் கொண்டதால் ஓடி வந்திருக்கும் ஸ்ரீகிருஷ்ணன் நான்” என பதில் கூற“பகவானையே அனுப்பும் அளவுக்கு என் சங்கரன் அவ்வளவு பெரியவனாகி விட்டானா?” என வியப்பதாகவும் பின் சங்கரரே அங்கு வருவதாகவும் வர்ணிக்கிறார்.துறவியான ஆதிசங்கரரால் கூடத் துறக்கமுடியாத பந்தம் தாய் என்னும் உறவு. ஊரேஎதிர்த்தாலும், விறகுதர மறுத்தாலும், இவர் வீட்டின் புழக்கடையில் பச்சை வாழைமரத்தைத் தன் தவவலிமையால் கொழுந்து விட்டெரியச் செய்து தாயின் உடலை தகனம் செய்தார்.

மற்றொரு துறவியான ஸ்ரீபட்டினத்தாரோ தன் தாய் இறந்ததும் கதறிப் புலம்பி ஒருபதிகமே இயற்றினார். கல்லையும் கரையச் செய்யும் அந்த வரிகளை நாமும்காண்போம். ஐயிரண்டு திங்களாய் அங்கமெல்லாம் நொந்து பெற்றுப்
பையலென்ற போதே பரிந்தெடுத்துச்-செய்ய இரு கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை எப்பிறப்பில் காண்பேன் இனி? முந்தித்தவம் கிடந்து முந்நூறுநாள் சுமந்தே அந்திபகலாச் சிவனை ஆதரித்துத்-தொந்தி சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ எரியத் தழல் மூட்டுவேன்? வட்டிலிலும், தொட்டிலும், மார்மேலும், தோள்மேலும், கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து-முட்டச் சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டும் தாய்க்கோ விறகிலிட்டுத் தீ மூட்டுவேன்? நொந்து சுமந்து பெற்று நோவாமல் ஏந்திமுலை
தந்து வளர்த்தெடுத்துத் தாழாமே-அந்திபகல் கையிலே கொண்டென்னைக் காப்பாற்றும் தாய்தனக்கோ மெய்யிலே தீ மூட்டுவேன்? அரிசியோ நான் இடுவேன் ஆத்தாள் தனக்கு? வரிசையிட்டுப் பார்த்து மகிழாமல்-உருசியுள்ள தேனே அமிர்தமே செல்வத் திரவியப்பூ மானே! என அழைத்த வாய்க்கு? அள்ளி இடுவது அரிசியோ? தாய் தலைமேல் கொள்ளிதனை வைப்பேனோ? கூசாமல் மெள்ள முகமேல் முகம்வைத்து முத்தாடி என்றன் மகனே! என அழைத்த வாய்க்கு? முன்னை இட்ட தீ முப்புரத்திலே; பின்னை இட்ட தீ தென் இலங்கையில்; அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே; யானும் இட்ட தீ மூள்க! மூள்கவே! வேகுதே தீயதனில்; வெந்து பொடி சாம்பல் ஆகுதே பாவியேன் ஐயகோ!-மாகக் குருவிபறவாமல் கோதாட்டி என்னைக் கருதி வளர்த்தெடுத்த கை. வெந்தாளோ சோணகிரி வித்தகா! நின்பதத்தில் வந்தாளோ! என்னை மறந்தாளோ-சந்ததமும் உன்னையே நோக்கி உகந்துவரம் கிடந்து என் தன்னையே ஈன்றெடுத்த தாய்? வீற்றிருந்தாள் அன்னை; வீதிதனில் இருந்தாள்
நேற்றிருந்தாள்; இன்று வெந்து நீறானாள்; பால் தெளிக்க எல்லாரும் வாருங்கள்! ஏதென்று இரங்காமல் எல்லாம் சிவமயமே யாம்! எல்லாம் துறந்ததொரு பராபரத்தில் லயித்த துறவியான பட்டினத்தாரையே இவ்வாறுகதறியழச் செய்த உறவு தாயினுடையது. எத்துணை மேன்மையான உறவு அது! அந்தத் தாயின் தவத்திற்கு, தியாகத்திற்கு நாம் கொடுக்கக்கூடிய கைம்மாறு எதுவாக இருக்க முடியும்? 
நம்மையே நாம் ஈந்தாலும் தீருமோ அந்தக் கடன்?

Monday, September 14, 2015

திப்பு சுல்தான்..


                         திப்பு சுல்தான் ஒரு மறக்கபட வேண்டிய  கொடுங்கோலன். அவன் ஆட்சி செய்த காலம் இருண்ட காலம்  என்று சொல்லலாம். கேரளாவில் அவன் நடத்திய  படையெடுப்பு அக்கிரமத்தின் உச்சம். கைபற்றிய இடங்களில் பெண்களை தூக்கிலிடும் முன் அவர்களது குழந்தைகளை அவர்கள் கழுத்திலே தொங்கவிட்டு (அதற்காக சின்ன தூக்கு கயிறை டிசைன் செய்தானாம்.) கொல்லும்படி உத்தரவிட்டவன்.

ஒரு நாள் 12000 பேரை அப்படி கொலை செய்ததாக அவனது தளபதி அனுப்பிய கடிதம் இன்னும் இருகிறது. பதினாயிரக் கணக்கான கோவில்கள் இடிக்க பட்டது. கட்டாய மதமாற்றம் நாடு முழுவதும் நடத்தி வைக்கபட்டது.இந்துக்களையும் கிறிஸ்தவர்களையும் கொத்து கொத்தாக பிடித்து சென்று கொட்டடிகளில் அடைத்தார்கள். அங்கேயே மதம் மாற்றி ஆண்களுக்கு சுன்னத் பிரமணர்களை on ஸ்பாட் புலால் உண்ண வைத்தார்கள்...அதும் மாட்டு இறைச்சி .அதோடு முடிய வில்லை.முஸ்லிம்களின் உடை அணிந்துதான் வெளி யே போக வேண்டும் என்று தருவிக்கப்பட்ட உடைகள் வரும் வரை அங்கேயே இருக்க வைக்க பட்டார்கள் இதெல்லாம் ஓன்று இரண்டு என்று token basis ல் நடக்க வில்லை..லட்சகணக்கான மக்களுக்கு நடந்தது.

முப்பதாயிரம் வீர்கள் முன்னால் ஆயதங்களோடு நடக்க ஒரு யானையில் அமர்ந்து நடந்த கொடூரங்களை பார்த்துக்கொண்டே திப்பு வர பின்னல் இன்னொரு 30000 வீர்கள் பாதுகாப்பாக வந்ததாக விவரிக்கிறார் இதை பற்றி எழுதியவர். திப்புவே தன்னுடைய கடிதத்தில் ஒரு பகுதியில் மட்டும் 400000 பேரை மதம் மாற்றியதாக எழுதி இருக்கிறான். திப்புவின் கொலை உத்திரவு கடிதங்கள் இன்னும் பத்திரமாக இருகின்றன .

திப்புவை கதாநயகன யாரவது சித்தரித்தால் அது சரித்திரம் தெரியாதவர்களாகதான் இருக்கும். பி கு மைசூர் பக்கம் இன்றுவரை முஸ்லிம் கள் கூட தங்களுடைய குழந்தைகளுக்கு திப்புவின் பெயரை வைக்க மாட்டார்கள்..அது ஒரு சபிக்கப்பட்ட பெயராம் ...
தெரிய வேண்டியவர்களுக்கு தெரிந்தால் சரிதான்.
source - Fra Barotolomaco எழுதிய voyage of east india ..& commuiques of tippu

Saturday, September 12, 2015

ஆண்டுகளின் தமிழ்ப் பெயர்கள்.!


தமிழ் ஆண்டுகள் அறுபது எனப் பிரிக்கப்பட்டுள்ளன. இதில் முதல் இருபது ஆண்டுகள் உத்தம ஆண்டுகள் என்றும், அடுத்த இருபது ஆண்டுகள் மத்திம ஆண்டுகள் என்றும், கடைசி இருபது ஆண்டுகள் அதம ஆண்டுகள் என்றும் அழைக்கப் பெறுகின்றன. இந்தச் சம(ஸ்)கிருத பெயர்களுக்குச் சரியான தமிழ்ப் பெயர் உங்களுக்குத் தெரியுமா?

தெரியவில்லையே என்று கலங்க வேண்டாம். உங்களுக்காகவே சமஸ்கிருதப் பெயர்களும், அதற்கு இணையான தமிழ்ப் பெயர்களும் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
சமஸ்கிருதப் பெயர் -தமிழ்ப் பெயர்
பிரபவ -நற்றோன்றல்
விபவ -உயர்தோன்றல்
சுக்கில-வெள்ளொளி
பிரமோதூத-பேருவகை
பிரசோத்பத்தி-மக்கட்செல்வம்
ஆங்கீரச-அயல்முனி
சிறிமுக-திருமுகம்
பவ- தோற்றம்
யுவ-இளமை
தாது-மாழை
ஈசுவர-ஈச்சுரம்
வெகுதானிய-கூலவளம்
பிரமாதி-முன்மை
விக்ரம-நேர்நிரல்
விச-விளைபயன்
சித்திரபானு-ஓவியக்கதிர்
சுபானு-நற்கதிர்
தாரண-தாங்கெழில்
பார்த்திப-நிலவரையன்
விய-விரிமாண்பு
சர்வசித்த-முற்றறிவு
சர்வதாரி-முழுநிறைவு
விரோதி- தீர்பகை
விகிர்தி-வளமாற்றம்
கர-செய்நேர்த்தி
நந்தன-நற்குழவி
விசய-உயர்வாகை
சய-வாகை
மன்மத-காதன்மை
துன்முகி-வெம்முகம்
ஏவிளம்பி-பொற்றடை
விளம்பி-அட்டி
விகாரி-எழில்மாறல்
சார்வரி-வீறியெழல்
பிலவ-கீழறை
சுபகிருது-நற்செய்கை
சோபகிருது-மங்கலம்
குரோதி-பகைக்கேடு
விசுவாவசு-உலகநிறைவு
பராபவ-அருட்டோற்றம்
பிலவங்க-நச்சுப்புழை
கீலக-பிணைவிரகு
சவுமிய-அழகு
சாதாரண-பொதுநிலை
விரோதி கிருது-இகல்வீறு
பரிதாபி-கழிவிரக்கம்
பிரமாதீச-நற்றலைமை
ஆனந்த-பெருமகிழ்ச்சி
இராட்சச-பெருமறம்
நள- தாமரை
பீங்கள-பொன்மை
காளயுக்தி-கருமைவீச்சு
சித்தார்த்தி-முன்னியமுடிதல்
ரவுத்ரி-அழலி
துன்மதி-கொடுமதி
துந்துபி-பேரிகை
உருத்ரோத்காரி-ஒடுங்கி
இரக்தாட்சி-செம்மை
குரோதன்-எதிரேற்றம்
அட்சய-வளங்கலன்

Monday, September 7, 2015

பயனுள்ள 100 மருத்துவ குறிப்புகள்…


 1.காயம்பட்டவரை அவசரத்தில் கண்டபடி தூக்கிச் செல்லக் கூடாது. படுக்க வைத்து மட்டுமே தூக்கிச் செல்ல வேண்டும். ஒருவேளை தண்டுவடம் பாதிக்கப்படாமல் இருந்து, நீங்கள் உடலை மடக்கித் தூக்குவதன் மூலம் அது பாதிப்படையலாம். உடல் பாகங்கள் செயல் இழந்து, நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிடும்.
2. எலும்பு முறிவு ஏற்பட்டால், எக்ஸ்-ரே எடுத்துப் பார்க்காமல் குத்துமதிப்பாக கட்டுப்போட்டு கொள்ளாதீர்கள். ஏனென்றால், எலும்புகள் கோணல்மாணலாக சேர்ந்துகொள்ளவும், தசைகள் தாறுமாறாக ஒட்டிக்கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. இதனால்… கால்கள் கோணலாக, குட்டையாக மாறக்கூடிய ஆபத்து இருக்கிறது.
3. பிஸியோதெரபி என்பது இயற்கை வலி நிவாரணி. மாதக் கணக்கில் வலி நிவராணி மாத்திரைகள் சாப்பிடுவதன் மூலம் குணமாகும் பிரச்னையை, வாரக் கணக்கிலேயே குணமாக்கிவிடும்.
4. எலும்பு உறுதிக்கு கால்சியத்தைவிட, புரொட்டீன்ஸ் மிக முக்கியம். புரொட்டீன்ஸ் புடவை எனில், அதில் உள்ள டிசைன்ஸ் தான் கால்சியம். பருப்பு வகை, சோயா, காளான், முட்டை, இறைச்சி போன்றவற்றில் புரொட்டீன்ஸ் அதிகமாக உள்ளது.
5. எடை குறைவான இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்துவோர், மிக மெதுவாக செல்ல வேண்டும். வேகமாக செல்லும்போது ஏற்படும் அதிர்வுகள் நேரடியாக முதுகு, கழுத்து மற்றும் இடுப்புப் பகுதியை பாதிக்கும்.
6. எலும்புகள், 25 வயது வரைதான் பலம் பெறும். அதன்பிறகு மெள்ள வலுவிழக்க ஆரம்பிக்கும். எனவே, குழந்தைப் பருவத்திலிருந்து 25 வயது வரை சாப்பிடும் சத்தான உணவுகள் தான் எலும்பை உறுதிப்படுத்தும். அதன் பிறகு சாப்பிடுவதெல்லாம் எலும்புகளின் வலு குறையும் வேகத்தை குறைக்க மட்டுமே உதவும்.எலும்புகள்
7. வயதான காலத்தில் தடுமாறி விழுந்தால் முதுகு எலும்பு, இடுப்பு எலும்பு உடைந்து போக வாய்ப்பு அதிகம். வயதானவர்கள் நடமாடும் பகுதிகளில் தரை வழவழப்பாக இருக்கக் கூடாது. நல்ல வெளிச்சத்தோடு இருக்க வேண்டும். கார்ப்பெட்டில் கூட தடுக்கி விழலாம். எனவே, அவர்கள் எதையாவது பிடித்தபடி நடப்பதற்கு வழி செய்ய வேண்டும்.
8. கால் தடுமாறி பிசகிவிட்டால்… உடனே ‘கையால் நீவிவிடு’ என்பார்கள். அது தவறு. ஒருவேளை, எலும்பில் நூலிழை தெறிப்பு இருந்தால், நீவி விடுவதன் மூலம் அந்தத் தெறிப்பு அதிகரிக்கலாம்.
9. குதிகால் வலி, கீழ் முதுகுவலி, கழுத்துவலி போன்றவை வந்தால் உடனே டாக்டரைப் பார்க்க ஓடாதீர்கள்… நாற்காலியும் செருப்பும் கூட காரணமாக இருக்கலாம். அணிந்திருப்பது தரமான செருப்புதானா… நாற்காலியில் முதுகு நன்றாகப் படியும்படி அமர்கிறோமா… என்பதையெல்லாம் கவனியுங்கள். அரை மணி நேரத்துக்கு ஒரு முறை, ஐந்து நிமிடம் சாய்ந்து அமர்ந்து ‘ரிலாக்ஸ்’ செய்துகொள்வதையும் வழக்கமாக்குங்கள். இவ்வளவுக்குப் பிறகும் தொல்லை இருந்தால், டாக்டரைப் பார்க்கலாம்.
பெண்களுக்காக…
10. இளவயதில் தினமும் ஒரு கப் பால் குடிப்பது, எலும்புகளை வலுவாக்கி கால்சியம் சத்தை அதிகரிக்கும்.
11. முட்டைகோஸில் ஈஸ்ட்ரோஜன் அதிகமென்பதால் மார்பக புற்று வரமல் தடுக்க கோதுமை உணவுடன் கோஸ் சேர்த்து உண்ணலாம்.பெண்
12. மார்பக புற்று உள்ளிட்ட பல்வேறு புற்று நோய்கள் வராமல் தடுக்க ஆப்பிள் உதவுகிறது.
13.மாதவிடாய்க் கால மன அழுத்தம், பயம், பதற்றம் ஆகியவற்றால் தொந்தரவா..? அந்த நாட்களில் கார்ன்ஃபிளாக்ஸை காலை உணவாக்குங்கள்.
கர்ப்பக் கால கவனிப்பு..!
14. கர்ப்பிணிகள், நாவல்பழம் சாப்பிட்டால் வயிற்றில் உள்ள குழந்தை கறுப்பாகப் பிறக்கும் என்பதும், குங்குமப்பூ சாப்பிட்டால் சிவப்பாகப் பிறக்கும் என்பதும் மூட நம்பிக்கையே. தோலின் நிறத்தை நிர்ணயிப்பவை ‘மெலனின்’ எனப்படும் நிறமிகளே…!
15. கர்ப்பிணிகள், இரும்புச்சத்து மாத்திரை சாப்பிட்டால், உடல் லேசாக கறுத்து, பிறகு பழைய நிறத்துக்கு வந்துவிடும். இதை வைத்தே, குழந்தையும் கறுப்பாக பிறக்கும் என்று சிலர் பயப்படுவார்கள். அது தேவையற்றது.
16. கர்ப்பிணி பெண்கள், காலையில் சீக்கிரம் சாப்பிட வேண்டும். இதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையாமலிருக்கும். அடிக்கடி மயக்கமும் வராது.கர்ப்பம்
17. வயிற்றில் குழந்தை வளர வளர, குடல் ஒரு பக்கம் தள்ளும். அப்போது அதிகமாக சாப்பிட முடியாது. சீக்கிரமும் பசிக்காது. அந்த நேரங்களில் ஜூஸ், முளை கட்டிய தானியங்கள் போன்றவற்றை, பல வேளைகளாகப் பிரித்துச் சாப்பிட வேண்டும்.
18. பிரசவ காலத்துக்குப் பின் வயிற்று தசைகள் வலுப்பெற உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்.
19. கர்ப்பிணிகளின் உடலுக்கு இயற்கையான குளிர்ச்சியைத் தருகிறது வாழைப்பழம். உடல் காரணங்களால் மட்டுமல்ல… உணர்ச்சி வசப்படுவதாலும் உடலைப் பாதிக்கும் சூட்டை வாழைப்பழம் நீக்குகிறது. தாய்லாந்தில் தாயாகப் போகிறவரின் தினசரி உணவில் வாழை ரெசிபிக்கள் விதவிதமாக இருக்கும்.
20. கர்ப்பக் காலத்தில் சிலருக்கு கால்கள் வீங்குவது வழக்கமான ஒன்று. அதிகமாக தண்ணீர் குடிப்பதால்தான் இப்படி என்று சொல்வது தவறு.
21. கர்ப்பக் காலத்தில் மலச்சிக்கல் பிரச்னை வரும். அதைத் தவிர்க்க அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.
22. பிரசவம் முடிந்த சில நாட்களில், வயிறு சுருங்க வேண்டும் என்பதற்காக பெரிய துணியை வயிற்றில் கட்டிவிடுவார்கள். அது தவறு. இதனால் கருப்பை கீழிறங்கிட வாய்ப்பு உண்டு. இருமல் அல்லது தும்மலின்போது சிலருக்கு சிறுநீர் வெளியாவதற்கு காரணம் இதுதான். பிரசவம் முடிந்து ஆறு வாரம் கழித்து, அதற்கான பெல்ட்டை அணியலாம்.
23. தைராய்டு, சுகர் போன்ற பிரச்னைகள் உள்ள பெண்கள், கர்ப்பக் காலத்தில் அதற்கான மருந்துகளைக் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். அது, குழந்தையைப் பாதிக்காது.
24. பிறந்த குழந்தைக்கு பழைய துணியை முதலில் அணிவிப்பது சம்பிரதாயமாக இருக்கிறது. நீண்டநாள் பெட்டியில் வைத்திருந்த துணியை அப்படியே எடுத்துப் போடக் கூடாது. அதில் தொற்றுக் கிருமிகள் இருக்கலாம். துவைத்து, காய வைத்த பிறகே அணிவிக்க வேண்டும்.
25. சில கிராமங்களில் பிறந்த குழந்தையின் நாக்கில் தேன், சர்க்கரை, கழுதைப் பால் போன்றவற்றைத் தடவும் பழக்கம் உள்ளது. நாள்பட்ட தேனாக இருந்தால் அதிலிருக்கும் ஒரு வகை நச்சுக்கிருமி, இளம்பிள்ளைவாதத்தைக்கூட கொண்டு வரக்கூடும்.
26. வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் குழந்தைகளின் மூளைத்திறனைத் தூண்டுகிறது.
27. குழந்தைகள் விளையாடச் செல்வதற்கு முன்பு நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். விளையாடும்போது வியர்வையாக வெளியேறும் நீரை, அது ஈடு செய்யும்.
28. தாய்ப்பாலை சேமித்து கொடுப்பது நல்லதல்ல. தவிர்க்கமுடியாத பட்சத்தில், சுத்தமான பாத்திரத்தில் சேகரித்துக் கொடுக்கலாம். சாதாரண அறை வெப்பத்தில் 6 மணி நேரம் வரை கெடாமல் இருக்கும்.
29. தயிர் சாப்பிட்டால் குழந்தைகளுக்குச் சளி பிடிக்கும் என்பது தவறு. குழந்தைக்குத் தயிர் மிகவும் நல்ல உணவு. தயிரில் புரொபயோட்டிக் எனும் சத்து அதிகம். அது குடலுக்கு மிக நல்லது. குழந்தைக்கு அலர்ஜி வராமல் தடுக்கும்.
30. குழந்தைகள் உணவில் மாவுச் சத்துக்களே அதிகமிருப்பதால்… வாழைப்பழம் அவசியம் கொடுக்க வேண்டும். இது மலச்சிக்கலைப் போக்கும். வாழைப்பழம் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்பது தவறு.
31. குழந்தைகள் குண்டாக இருக்க வேண்டும் என்று அளவுக்கு அதிகமாக உணவு கொடுத்து உடலை பருமனாக்காதீர்கள். 60 வயதில் வர வேண்டிய பி.பி., சுகர் போன்றவை 30 வயதிலேயே வந்துவிடும். குழந்தைகளை சீரான உடல்வாகுடன் வளர்க்கப் பாருங்கள்.உணவே மருந்து….!
32. நீங்கள், தினமும் ஐந்து விதமான பழங்களையும், சில காய்கறிகளையும் உணவாக எடுத்துக் கொள்பவரா..? ஆம் என்றால்… ஆரோக்கியமும் அழகும் எப்போதும் உங்க பக்கம்தான்..!
33. தினமும் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸ் குடிப்பது… உடலில் ரத்த அழுத்தம், கொழுப்பு, நச்சுத்தன்மை என பல பிரச்னைகளுக்குத் தீர்வாக இருக்கும்.
உணவே மருந்து
34. மனநலக் கோளாறு மற்றும் மூளை நரம்புகளில் பாதிப்பு உள்ளவர்களின் தினசரி உணவில் தர்பூசணி துண்டுகள் அவசியம். மன அழுத்தம், பயம் போன்ற பாதிப்புகளை தகர்க்கும் விட்டமின் பி-6 தர்பூசணியில் அதிகம்.
35. ஆப்பிள் தோலில் பெக்டின் என்ற வேதிப்பொருள் கணிசமாக இருப்பதால், தோலோடு சாப்பிட வேண்டும். பெக்டின் நம் உடலின் நச்சுக்களை நீக்குவதில் எக்ஸ்பர்ட்.
36. பூண்டு சாப்பிட்டீர்களென்றால்… உங்கள் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி வெகுவாக அதிகரிக்கும். வெள்ளை அணுக்கள் அதிகம் உற்பத்தியாவதோடு, கேன்சர் செல்கள் உருவாகாமலும் தடுக்கும்.
37. சிவப்பணு உற்பத்திக்கு புடலங்காய், பீட்ரூட், முருங்கைக்கீரை, அவரை, பச்சைநிறக் காய்கள், உளுந்து, துவரை, கம்பு, சோளம், கேழ்வரகு, பசலைக்கீரை போன்றவற்றை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.
38. பச்சைப் பயறு, மோர், உளுந்துவடை, பனங்கற்கண்டு, வெங்காயம், சுரைக்காய், நெல்லிக்காய், வெந்தயக்கீரை, மாதுளம் பழம், நாவற்பழம், கோவைக்காய், இளநீர் போன்றவை உடலின் அதிகப்படியான சூட்டைத் தணிக்கும்.
39. சுண்டைக்காயை உணவில் சேர்த்தால்… நாக்குப்பூச்சித் தொல்லை, வயிற்றுப்பூச்சித் தொல்லை தூர ஓடிவிடும்.
40 வெங்காயம், பூண்டு, சிறுகீரை, வேப்பிலை, மிளகு, மஞ்சள், சீரகம், கருப்பட்டி, வெல்லம், சுண்டைக்காய் வற்றல், செவ்விளநீர், அரைக்கீரை, எலுமிச்சை போன்றவை உடலில் உள்ள நச்சுத்தன்மை நீக்கும் உணவுகள்.
41. பொன்னாங்கண்ணிக் கீரையைத் துவட்டல் செய்து சாப்பிட்டு வந்தால், மூல நோய் தணியும். இந்தக் கீரையின் தைலத்தை தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால்… கண் நோய்கள் நெருங்காது.
42. சமையலுக்குக் கைக்குத்தல் அரிசியைப் பயன்படுத்துவது மிக மிக நல்லது. கைக்குத்தல் அரிசியில் நார்ச் சத்துக்கள் நிறைந்துள்ளன.
43. சைக்கிள் கேப்பில் எல்லாம் ஸ்நாக்ஸ் சாப்பிடுவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக தானியங்கள், முளைகட்டிய பயறு போன்றவற்றைச் சாப்பிடலாம்.
44. பப்பாளிப் பழங்கள் மிகவும் சத்து மிகுந்தவை. வாரம் ஒருமுறை பப்பாளிப் பழம் வாங்கிச் சாப்பிடுங்கள். கண்களுக்கும் நல்லது.
45. அதிக நாட்கள் உணவை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அப்படி வைக்கப்பட்ட உணவுகளில் சத்துக்கள் குறைந்து விடுவதோடு, உடல் ஆரோக்கியத்துக்கும் தீங்கினை ஏற்படுத்தும்.
46. தினசரி சிறு துண்டு பைனாப்பிளை தேனில் ஊற வைத்து, அந்தத் தேனை இரண்டு வாரம் சாப்பிட்டால் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்.
47. பலமான விருந்து காரணமாக ஜீரணக் கோளாறா? புதினா, தேன், எலுமிச்சைச் சாறு… இவற்றில் ஒவ்வொரு ஸ்பூன் கலந்து சாப்பிட்டால் போதும். கல்லும் கரைந்துவிடும்.
48. கேன்சர் செல்களைத் தகர்க்கும் சக்தி திராட்சையின் தோலில் இருக்கிறது. திராட்சை கொட்டைகளிலிருந்து பெறப்படும் மருந்துப் பொருட்கள், வைரஸ் எதிர்ப்புச் சக்தியை பெரிதும் தூண்டுகின்றன.மருந்தே வேண்டாம்….!
49. இயற்கைச் சூழலான இடங்களுக்குச் செல்ல நேர்ந்தால்… கொஞ்ச நேரம் ஆழமாக மூச்சு விடுங்கள். நுரையீரலுக்கு அது மிகவும் பயனளிக்கும்.
50. எந்தவித நோய் தாக்கியிருந்தாலும் முதலில் செய்ய வேண்டியது, கவலையைத் தூக்கி எறிவதுதான். அதுதான் முதலுதவிக்கும் முந்தைய சிகிச்சை.
மருந்தே வேண்டாம்
51. சர்க்கரையை (சீனி) உங்கள் வாழ்க்கையிலிருந்து ஒழிக்க முடிந்தால், உடலின் எதிர்ப்புச் சக்தியை எளிதில் வலுப்படுத்தலாம்.
52. உடம்பைக் குறைக்க ஒரே வழி உணவுக் கட்டுப்பாடும், நடைபயிற்சியும் தான். காந்தப்படுக்கை, பெல்ட், மாத்திரை போன்றவை உரிய பலனை தராது.
லப்… டப்..!
53. பீட்டா காரோட்டீன்ஸ் அதிகமுள்ள உணவுகளை உண்பது இதயத்துக்கு நல்லது. குறிப்பாக கேரட், முட்டைகோஸ், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, அடர் பச்சை நிற கீரைகள் போன்றவை.
54. நீங்கள் அடிக்கடி நீச்சல் அடிப்பவர் என்றால்… இதயத்தைப் பற்றி கவலையேபட தேவையில்லை.
55. உப்பு, இதயத்துக்கு எதிரானது. உப்பு போட்ட கடலையைக் கொறிக்கும்போதெல்லாம், இதயம் பாதிக்கப்படுவதாக உணருங்கள்.
56. மன அழுத்தம் இதயத்தின் எதிரி. அதை விட்டுத் தள்ளுங்கள்.இதயம்
57. உங்கள் குடும்பத்தில் யாருக்காவது இதய நோய்கள் இருந்தால், உங்கள் இதயத்தை மருத்துவர் மூலம் சோதிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
கிட்னியைக் கவனியுங்கள்….
58. கிட்னியில் கல் இருக்கிறதா? சாப்பாட்டில் மெக்னீசியம் சேருங்கள். நிறைய பீன்ஸ் சாப்பிட்டாலே போதும்! கோதுமை, ஓட்ஸ், பாதாம், முந்திரி, மீன், பார்லி போன்றவையெல்லாம் மெக்னீசியம் அதிகம் உள்ள சில உணவுகள்.
59. சிப்ஸ், கோக், இனிப்புள்ள பாட்டில் ஜூஸ்கள், சீனி – இவையெல்லாம் கிட்னியில் கல்லை உருவாக்கும் வில்லன்கள்… உஷார்!
60. நிறைய தண்ணீர் குடிப்பது, சிறுசிறு கிட்னி கற்களை அகற்ற உதவும். கூடவே கேரட், திராட்சை மற்றும் ஆரஞ்சு ஜூஸ் என்று ஏதாவது ஒன்றைக் குடிப்பது மிகவும் நல்லது.
61. காய்கறிகளை நிறைய சாப்பிடுபவர்களுக்கு, ‘கிட்னியில் கல்’ என்ற பயமே தேவையில்லை.
பல்லுக்கு உறுதி…!
62. பல்லில் வலி, ஈறுகளில் வீக்கம், வாயின் வெளிப்புறத்தில் வீக்கம், பல் கறுப்பு நிறமாக மாறுவது, பல்லில் குழி ஏற்பட்டு உணவு தங்குவது, குளிர்ந்த மற்றும் சூடான உணவு உட்கொள்ளும்போது கூச்சம் ஏற்படுவது போன்றவை பல் சொத்தை ஏற்படுவதற்கான அறிகுறிகள்.
63. பற்களில் ஏற்படும் பாதிப்பு, தொண்டைக்குப் பரவி, சமயங்களில் இதயத்தையும் பாதிக்கும். எனவே, பற்களை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
64. தேநீர், காபி போன்றவற்றை அடிக்கடி குடிப்பது பற்களுக்கு நீங்களே வேட்டு வைப்பதற்குச் சமம். மிகவும் குளிர்ந்த நீரைக் குடிப்பதைத் தவிருங்கள்.
65. சூடான உணவை சாப்பிட்ட நொடியே, ஜில்லான உணவுக்கு மாறினால், உடலுக்கும் பல்லுக்கும் பாதிப்புகள் ஏற்படும்.
கிட்னி
66. இனிப்புச் சாப்பிடுபவர்களுக்குப் பல் சொத்தை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனவே, எது சாப்பிட்டாலும் வாய் கொப்பளிக்க வேண்டும்.
67. அக்கி எனப்படும் முகத்தில் தோன்றும் கட்டிகளுக்கு மண் பூசும் வழக்கமிருக்கிறது. அக்கி, ஒருவித கிருமித் தொற்றுமூலம் ஏற்படக்கூடியது. அதற்கான மருந்துகளைப் பயன்படுத்துவதே நல்லது.
68. சருமத்தை இளமையாக, சுருக்கங்கள் இல்லாமல் வைத்திருக்க தண்ணீர் அதிகம் குடிப்பது முக்கியமானது. மன அழுத்தம், சோர்வு, இறுக்கமான ஆடை, மது, புகை, காபி… இவையெல்லாம் சருமத்தின் வில்லன்கள்.
69. தேவையற்ற அழுக்குகள் சருமங்களில் தங்கி, அதன் பொலிவையும், உயிர்ப்பையும் கெடுக்கின்றன. எனவே, முகத்தை அடிக்கடி கழுவிச் சுத்தப்படுத்துவது அவசியமானது.
70. முகப்பரு இருந்தால்… உடனே கிள்ளி எறிய விரல்கள் படபடக்கும். ஆனால், அது ஆபத்தானது. முகத்தில் பள்ளங்களை நிரந்தரமாக்கிவிடும்.
71. நீரிழிவு பிரச்னை உள்ளவர்கள் அனைத்து வகை கீரைகள், காய்கள், வாழைத்தண்டு சாப்பிடலாம். வெந்தயம் மிக நல்லது.
72. உப்பில் ஊறிய ஊறுகாய், கருவாடு, அப்பளம், வற்றல் கூடவே கூடாது. அசைவம் வாரத்தில் 100 கிராம் அளவில் சாப்பிடலாம். முட்டையில் வெள்ளைக்கரு மட்டும் ஓ.கே! உயர் ரத்த அழுத்த பிரச்னை உள்ளவர்களுக்கும் இது பொருந்தும்.
73. மா, பலா, வாழை, காய்ந்த திராட்சை, சப்போட்டா, பேரீச்சை ஆகியவற்றைத் தவிர்க்கலாம். பனை வெல்லம், பனங்கற்கண்டு, தேன், மலைவாழை, லேகியம், பஞ்சாமிர்தம் சேர்க்கவே கூடாது.
74. இரண்டு, மூன்று வெண்டைக் காய்களின் காம்பு மற்றும் அடிப்பகுதியை நீக்கி, நெடுக்குவாட்டில் கீறல்களை போட்டுவிட்டு இரவு முழுக்க டம்ளர் நீரில் மூடி வைக்க வேண்டும். காலை உணவுக்கு முன் இந்த நீரை மட்டும் அருந்திவர, இரண்டே வாரத்தில் சர்க்கரை குறையும். இது மேற்கத்திய நாடுகளின் எளிய வைத்தியம்
75. உடல் எடையைக் குறைக்கிறேன் பேர்வழி என சாப்பாட்டின் அளவை திடீரென குறைப்பது ஆபத்து. உடலில் சர்க்கரையின் அளவு வேறுபட்டு, சர்க்கரை நோய் வருவதற்கும் வாய்ப்பிருக்கிறது.
ஜெனரல் வார்டு..!
76. சர்க்கரை, டி.பி., கேன்சர், எய்ட்ஸ் ஆகிய நோய்களால் பாதிப்புக்குள்ளானவர்களுக்கும், ஸ்டீராய்டு மாத்திரை சாப்பிடுபவர்களுக்கும் உடலில் எதிர்ப்புச் சக்தி குறைந்து இருக்கும். இவர்களை எளிதில் நோய் தாக்கும். எச்சரிக்கையோடு இருத்தல் அவசியம்.
77. வாந்தி, பேதி ஏற்பட்டு மருத்துவமனை செல்ல தாமதமாகும் சூழலில்… உடலில் இருந்து வெளியேறிய நீருக்கு இணையாக உடனே சர்க்கரை மற்றும் உப்பு கலந்த நீரோ, இளநீரோ குடிக்க வேண்டும்.வைத்தியசாலை
78. நடு இரவு அல்லது பயண நேரங்களில் திடீர் ஜுரம் அடிக்கிறது. உடனே டாக்டரை பார்க்க முடியாத நிலை. அதற்காக சும்மா இருக்க வேண்டாம். வீட்டில் இருந்தாலோ அல்லது பயணத்தின் இடையிலோ பாராசிட்டமால் மாத்திரை ஒன்றை பயன்படுத்துவது நல்லது. அதன்பிறகு, 6 மணி நேரத்துக்குள் டாக்டரை சந்திப்பது நல்லது.
79. காதுகளை வாரம் இருமுறை மெல்லிய காட்டன் துணிகளால் சுத்தம் செய்ய வேண்டும். சாவி, ஹேர்பின், பட்ஸ் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் பட்ஸ் போடும்போது திட அழுக்குகள் அப்படியே அழுத்தப்படுமே தவிர, வெளியில் வராது.
80. வயிற்றுப்போக்கு விடுபட உடனடி உபாயம்… வெறும் கொய்யா இலைகளை மெல்வதுதான்.
81. சாப்பிட்டதும் நெஞ்செரிச்சலா..? சிறிது வெல்லம் கரைத்த நீரை அருந்தினால் போதும்.
82. வியர்வை தங்கிய உடையுடேனேயே இருப்பது ஆபத்தானது. அதுவே நோய் தொற்றுக்கான காரணியாக அமைந்துவிடும்.
83. நீங்கள் நீண்ட நேரமாக தண்ணீர் குடிக்காமல் இருந்தாலும்கூட சிறுநீர் மஞ்சளாக போகும்.
84. உடலில் ஏதேனும் காயம் அல்லது நகக்கீறல் போன்றவை ஏற்பட்டால், 12 மணி நேரத்துக்குள் தடுப்பு ஊசி (டி.டி.) போடவேண்டும். தடுப்பூசி காலத்தில் இருக்கும், பத்து வயது வரையுள்ள குழந்தைகள் என்றால், இந்த ஊசி தேவையில்லை.
85. மூலம், பவுத்திரம் பாதிப்பு உள்ளவர்கள் கூச்சப்படாமல் உடனே டாக்டரைப் பார்க்க வேண்டும். நார்ச்சத்துள்ள உணவை அதிகம் சேர்த்துக் கொள்ளவேண்டும். மலச்சிக்கல் தொடர்ந்தால், இதயத்துக்கே ஆபத்தாகிவிடும்.நில்… கவனி… செல்…!
86. மருத்துவமனையில் நோயாளியின் படுக்கைக்குக் கீழே, நடைபாதை என்று கிடைத்த இடங்களில் எல்லாம் அமர்ந்து சாப்பிடுவது தவறு. அது… தொற்றுக்கிருமிகளை பரஸ்பரம் உள்ளே – வெளியே எடுத்துச்செல்லும் வேலையைத்தான் செய்யும்.
நோயாளிகள் தங்கும் இடம்
87. தவிர்க்க முடியாத சூழலைத் தவிர, மற்ற சமயங்களில் குழந்தைகள் மற்றும் முதியவர்களை நோயாளியைப் பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லக் கூடாது.
88. ‘போஸ்ட்மார்ட்டம்’ என்றாலே பலருக்கும் ஒருவித பயமும் பதற்றமும் இருக்கும். இதன் காரணமாக போஸ்ட்மார்ட்டத்தைத் தவிர்த்துவிட்டால்… பல்வேறு சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். எதிர்பாராத மரணமென்றால் கட்டாயம் பிரேத பரிசோதனை செய்வதுதான் எல்லாவற்றுக்கும் நல்லது. பரிசோதனை அறிக்கை இருந்தால்தான் வாரிசுகளுக்கான இன்ஷுரன்ஸ் உள்ளிட்ட அனைத்துவிதமான முதலீடுகளை பெறுவதில் சிக்கல் ஏற்படாமலிருக்கும்.
89. ஹோட்டல், ஹாஸ்டல் போன்ற இடங்களில் பயன்படுத்தப்படும் தட்டு மற்றும் டம்ளர்களை சரியாக கழுவவில்லை என்றாலும், சாலட்டில் போடப்படும் பச்சைக் காய்கறிகள், பழங்களை சுத்தமான தண்ணீரில் அலசவில்லை என்றாலும்… அமீபியாசிஸ் எனும் தொற்றுக்கிருமி தாக்குதல் ஏற்படும். இதனால், சாப்பிட்டதும் மலம் கழிந்துவிடும். கவனிக்காமல் விட்டால் உடல் மெலிந்து எதிர்ப்புச் சக்தியை முற்றிலுமாக இழக்க நேரிடும்.
90. ‘போரடிக்கிறது’ என அடிக்கடி காபி, டீ குடிக்கக் கிளம்பாமல்… தூய்மையான தண்ணீரைக் குடிப்பதே நல்லது.
91. ஒரே இடத்தில் உட்கார்ந்திராமல் அவ்வப்போது எழுந்து நடக்கவேண்டும். அதிகபட்சம் 45 நிமிடங்களுக்கு மேல் தொடர்ச்சியாக அமர வேண்டாம். லிஃப்ட் பயன்படுத்துவதை கூடுமானவரை தவிர்க்கவும்.
92. ஓடுவது நல்ல உடற்பயிற்சி. ஆனால், கறுப்பு நிற ஆடை அணிந்து கொண்டு ஓடக் கூடாது. உடலில் அதிக வெப்பம் ஈர்க்கப்பட்டு சிக்கல் உருவாகலாம். ஜிலுஜிலு குளிர் நேரமென்றால்… கறுப்பே சிறப்பு.
93. கம்ப்யூட்டரில் வேலை பார்ப்பவர்கள் 20-20-20 பயிற்சியைப் பழக வேண்டும். இருபது நிமிடங்களுக்கு ஒருமுறை, இருபது அடி தொலைவிலுள்ள பொருளை, இருபது விநாடிகள் பார்த்து கண்ணை இலகுவாக்குவதுதான் பயிற்சி. அவ்வப்போது கண்களைக் கழுவுவதும் அவற்றுக்குப் புத்துணர்ச்சியைத் தரும்.
94. சமைக்கும்போது ஜன்னல்களைத் திறந்து வைப்பது… அல்லது எக்ஸாஸ்ட் ஃபேனை ஓடவிடுவது நல்லது. சமையல் எரிவாயுவிலிருந்து வெளிப்படும் நச்சுக்களைத் தொடர்ந்து சுவாசிப்பது நுரையீரலுக்கு ஆபத்தானது.
எச்சரிக்கை
95. வெற்றிலை-பாக்கு, புகையிலை, சீவல், புகை போன்றவற்றைத் தொடர்ச்சியாக பயன்படுத்துவோரின் வாயானது, உட்புறம் மென்மைத் தன்மையை இழந்து, நார்நாராகக் காட்சியளிக்கும். இது, வாய் புற்றுநோய்க்கு வழிவகுக்கும்.
96. இரவு உணவுக்குப் பிறகு நீண்ட நேரம் வெறும் வயிறாக இருப்பதால், ஆசிட் நிறைய சுரந்திருக்கும். எனவே, காலையில் கட்டாயம் சாப்பிடவேண்டும். சரிவர சாப்பிடாமல் பழகிவிட்டால், அது வயிற்றில் புற்றுநோயை உருவாக்கும்.
97. இரவு வெகு நேரம் வேலை செய்ய வேண்டியிருந்தால், மறுநாள் காலையில் வாக்கிங், ஜாகிங் போகக்கூடாது. அது, பயனளிப்பதற்குப் பதிலாகக் கெடுதலையே தரும்.
98. அலர்ஜி – ஆஸ்துமா போன்ற நோய்கள் இருந்தால், செல்லப் பிராணிகளைக் கொஞ்சம் தள்ளியே வையுங்கள். அலர்ஜி நோய்க்கு, கரப்பான் பூச்சி ஒரு முக்கிய காரணம்.
99. நாற்பது வயதுக்குமேல் தொடர்ச்சியாக அல்சர் தொந்தரவு இருந்தால் என்டோஸ்கோபி பரிசோதனை செய்துவிடுவது நல்லது. ஃபாஸ்ட்ஃபுட் வகையறாக்களை தொடவே கூடாது.
100. சுகாதாரமற்ற முறையில் பச்சை குத்துதல் மற்றவர்களுடைய நோயை நமக்கு வாங்கித் தந்துவிடும், ஆகவே பச்சை குத்துவதை தவிர்ப்பது

Sunday, September 6, 2015

ஒன்றுபட்ட இந்தியா என்பது.....

இன்று இந்தியா என்று அறியபடுகிற நாடு எப்போது உருவானது என்ற ஒரு கேள்வி கேட்டால் அதற்கான பதில் பெரும்பாலும் இப்படியாக தான் இருக்கும். இது பழம் பெரும் நாடு, பல ஆயிரம் ஆண்டுகளாக இருந்து வருகிறது என்பதாக. இந்த பதில் சரிதானா? இல்லை தவறு என்றே தான் சொல்லவேண்டியிருக்கிறது வரலாற்று அடிப்படையில் பார்த்தல் 1947ஆம் ஆண்டில் தான் இந்தியா என்ற ஒரு நாடு உருவாகியிருக்கிறது. அதற்கு முன் அப்படி ஒரு நாடு இருந்தது இல்லை. வெள்ளையார்கள் இந்த நாட்டை அடிமை படுத்தியிருந்த காலத்தில் கூட மதராஸ் வங்காளம் பம்பாய் போன்ற பகுதிகள் தான் அவர்களின் நேரடி ஆட்சியின் கீழ் இருந்தன. திருவனந்தபுரம்-கொச்சின் சமஸ்தானம், புதுகோட்டை சமஸ்தானம், ஹைதராபாத் நிஜாம், மைசூர் ராஜ்ஜியம், குவாலியர், ஜெய்பூர், காஷ்மீர் என்று எண்ணற்ற பகுதிகளில் மன்னர் ஆட்சியிருந்து வந்தது. சில பகுதிகளில் அந்த பகுதிக்கான தனி நாணயங்கள் கூட இருந்தன அந்தந்த மன்னர்களே சுயேட்சையாக நாணயங்களை வெளியிட்டு வந்தனர். நமது புராணங்கள், பண்டைய இலக்கியங்கள், ப்ழைய சரித்திர குறிப்புகள் போன்றவற்றின் மூலம் 56 தேசங்கள் இந்தப் பகுதியில் இருந்ததாக தெரிய வருகிறது. அவை:
1. குரு தேசம்.
2. சூரசஸதேசம்.
3. குந்திந்தேசம்.
4. குந்தல தேசம்.
5. விராட தேசம்.
6. மத்ஸ்ய தேசம்.
7. த்ரிகர்த்த தேசம்.
8. கேகய தேசம்.
9. பாஹ்லிக தேசம்.
10. கோசல தேசம்
11. பஞ்சால தேசம்.
12. .நிஷத தேசம்.
13. நிஷாத தேசம்.
14. சேதி தேசம்.
15. தசார்ண தேசம்.
16. விதர்ப்ப தேசம்.
17. அவந்தி தேசம்.
18. மாளவ தேசம்.
19. கொங்கண தேசம்.
20. கூர்ஜர தேசம்.
21. ஆபீர தேசம்.
22. ஸால்வ தேசம்.
23. ஸிந்து தேசம்.
24. ஸௌவீர தேசம்.
25. பாரசீக தேசம்.
26. வநாயு தேசம்.
27. பர்பர தேசம்
28. கிராத தேசம்.
29. காந்தார தேசம்.
30. மத்ர தேசம்.
31. காச்மீர தேசம்.
32. காம்போஜ தேசம்.
33. நேபாள தேசம்.
34. ஆரட்ட தேசம்.
35. விதேஹ தேசம்.
36. பார்வத தேசம்.
37. சீத தேசம்.
38. காமரூப தேசம்.
39. ப்ராக்ஜோதிஷ தேசம்.
40. சிம்ம தேசம்.
41. உத்கல தேசம்.
42. வங்க தேசம்.
43. அங்க தேசம்.
44. மகத தேசம்.
45. ஹேஹய தேசம்.
46. கலிங்க தேசம்.
47. ஆந்த்ர தேசம்.
48. யவன தேசம்.
49. மஹாராஷ்டிர தேசம்.
50. குளிந்த தேசம்.
51. த்ராவிட தேசம்.
52. சோள தேசம்.
53. சிம்ம தேசம்.
54. பாண்டிய தேசம்.
55. கேரள தேசம்.
56. கர்ணாடக தேசம்
இவ்வித ஐம்பத்தாறு தேசங்களின் இருப்பிடத்தையும், நதி, ஷேத்திரம்,மலை முதலியவைகளின் ஸ்வருபம் போன்றவற்றைப் பற்றியும் அந்த குறிப்புகள் விவரிக்கின்றன. இந்த பகுதிகளில் இருந்த மக்கள் அவர்களுகே ஆன தனித்தனி மொழி, பண்பாடு, வாழ்வுமுறை, வழிபாடு என சிறப்பு தன்மைகளை கொண்டு தனி இனங்களாக பரிணாமம் பெற்று திகழ்ந்திருக்கின்றனர். ஆனால் இத்தகைய அத்தனை அம்சங்களையும் அடித்து நொறுக்கிவிட்டு அடவடித்தனமாக ஒன்றிணைக்கப்பட்டு ஒரே நாடு என்பதாக உருவானது தான் இன்றைய ஒன்றுபட்ட இந்தியா என்பது.

Saturday, September 5, 2015

மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும்:-


*அருகம்புல் பொடி :- அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி
*நெல்லிக்காய் பொடி :- பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் "சி" உள்ளது
*கடுக்காய் பொடி :- குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.
*வில்வம் பொடி :- அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது
*அமுக்கலா பொடி :- தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.
*சிறுகுறிஞான் பொடி :- சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.
*நவால் பொடி :- சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.
*வல்லாரை பொடி :- நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.
*தூதுவளை பொடி :- நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.
*துளசி பொடி :- மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது.
*ஆவரம்பூ பொடி :- இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.
*கண்டங்கத்திரி பொடி :- மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது.
*ரோஜாபூ பொடி :- இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும்.
*ஓரிதழ் தாமரை பொடி :- ஆண்மை குறைபாடு, மலட்டுத்தன்மை நீங்கும்.வெள்ளைபடுதல் நீங்கும், இது மூலிகை வயாகரா
*ஜாதிக்காய் பொடி :- நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும்.
*திப்பிலி பொடி :- உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது.
*வெந்தய பொடி :- வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது.
*நிலவாகை பொடி :- மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும்.
*நாயுருவி பொடி :- உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது.
*கறிவேப்பிலை பொடி :- கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது.
*வேப்பிலை பொடி :- குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது.
*திரிபலா பொடி :- வயிற்றுபுண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும்.
*அதிமதுரம் பொடி :- தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும்.
*துத்தி இலை பொடி :- உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்த்து.
*செம்பருத்திபூ பொடி :- அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது.
*கரிசலாங்கண்ணி பொடி :- காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது.
*சிறியாநங்கை பொடி :- அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது.
*கீழாநெல்லி பொடி :- மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது.
*முடக்கத்தான் பொடி :- மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது.
*கோரைகிழங்கு பொடி :- தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது.
*குப்பைமேனி பொடி :- சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது.
*பொன்னாங்கண்ணி பொடி :- உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது.
*முருஙகைவிதை பொடி :- ஆண்மை சக்தி கூடும்.
*லவங்கபட்டை பொடி :- கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது.
*வாதநாராயணன் பொடி :- பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும்.
*பாகற்காய் பவுட்ர் :- குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.
*வாழைத்தண்டு பொடி :- சிருநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது.
*மணத்தக்காளி பொடி :- குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும்.
*சித்தரத்தை பொடி :- சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது.
*பொடுதலை பொடி :- பேன் உதிரும், முடி உதிரிவதை தடுக்கும்.
*சுக்கு பொடி :- ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது.
*ஆடாதொடை பொடி :- சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது.
*கருஞ்சீரகப்பொடி :- சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும்.
*வெட்டி வேர் பொடி :- நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும்.
*வெள்ளருக்கு பொடி :- இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும்.
*நன்னாரி பொடி :- உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நா வறட்சிக்கு சிறந்தது.
*நெருஞ்சில் பொடி :- சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும்.
*பிரசவ சாமான் பொடி :- பிரசவத்தினால் ஏற்படும் அதிகப்படியான இழப்பை சரி செய்யும், உடல் வலிமை பெறும். தாய்பாலுக்கு சிறந்தது.
*கஸ்தூரி மஞ்சள் பொடி :- தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும்.
*பூலாங்கிழங்கு பொடி :- குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும்.
*வசம்பு பொடி :- பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும்.
*சோற்று கற்றாலை பொடி :- உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும்.
*மருதாணி பொடி :- கை , கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும்.
*கருவேலம்பட்டை பொடி :- பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும்
 


Thursday, September 3, 2015

எவரெஸ்ட்டை கண்டுபிடித்த இந்தியர் ராதாநாத் சிக்தர் !


 
ராதாநாத் சிக்தர் என்கிற இந்தப்பெயர் எவரெஸ்ட் சிகரத்தின் கதையோடு உச்சரிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால்,துரோகம்,ஆங்கிலேயே ஆதிக்க மனோபாவம் எல்லாமும் அவரின் வரலாற்றை இருட்டடிப்பு செய்தன என்பது கசப்பான உண்மை. ஜார்ஜ் எவரெஸ்ட் இந்தியா முழுக்க அளவையியல் செய்கிற பணியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்த பொழுது அவருக்கு நல்ல கணித மேதைமை உள்ள ஒரு ஆள் தேவைப்பட்டார்.

பத்தொன்பது வயது சிக்தரை கொண்டு வந்து நிறுத்தினார்கள். கோள திரிகோணவி
யலில் பையன் புலி என்று சொல்லியிருந்தார்கள். அசுர பாய்ச்சல் காட்டினார் அவர். இவரின் திறமையை பார்த்து அசந்து போன எவரெஸ்ட் வேறு வேலைக்கு போகிறேன் என்று சொன்ன இவரை அப்படியெல்லாம் போகக்கூடாது என்று தடுத்து தன்னுடனே வைத்துக்கொண்டார். பின்னர் வானிலைத்துறையில் முக்கிய பொறுப்புக்கு வந்து அங்கேயும் கலக்கி எடுத்தார்.

அவருக்கும் எவரெஸ்ட் சிகரத்துக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா ? ஜார்ஜ் எவரெஸ்ட் ஓய்வு பெற்று வெளியேறியதும் ஆண்ட்ரூ வாக் அப்பதவிக்கு வந்தார். அவரின் கீழே பணியாற்றிய சிக்தர் இமயமலையின் சிகரங்களின் உயரங்களை கணக்கிட்டார். சிக்தர் ஒளிவிலகலை கணக்கில் கொண்டு அளவையியல் செய்வதில் தன்னிகற்றவர்,அவர் ஒரு மனித கணிப்பான் என்றெல்லாம் ஆங்கிலேய அதிகாரிகள் பதிந்திருக்கிறார்கள். ஆறு வெவ்வேறு புள்ளிகளில் இருந்து XV சிகரத்தை அளந்து பார்த்தார் இவர். 8840 மீட்டர் என்று வந்தது ; கடல்மட்டத்துக்கு மேலே உலகின் மிக உயரிய சிகரம் XVஎன்று உறுதியாக வாக்குக்கு அறிக்கை சமர்ப்பித்தார். நான்கு வருடங்கள் காத்திருந்து உறுதி செய்துகொண்டு உலகுக்கு அதை அறிவித்தார் வாக்.

அந்த சிகரத்துக்கு அந்தந்த ஊரின் பெயரை வைப்பது என்பதே வழக்கம். ஜார்ஜ் எவரெஸ்ட்டுக்கு மரியாதை செலுத்த எண்ணிய வாக் எவரெஸ்ட் விரும்பாவிட்டாலும் அச்சிகரத்துக்கு எவரெஸ்ட் என்று பெயர் சூட்டினார். சிக்தருக்கு இன்னொரு அநியாயமும் நடந்தது அளவையியல் வழிகாட்டி நூல் ஒன்றை ஆங்கிலேய அரசு வெளியிட்டது. அதை எடிட் செய்தவர்கள் துலீயர் மற்றும் ஸ்மித் எனும் இரு ஆங்கிலேய அதிகாரிகள். மிகத்தெளிவாக அந்நூலின் கடினமான தொழில்நுட்ப மற்றும் கணித சங்கதிகள் ராதநாத் சிக்தரால் எழுதப்பட்டது என்று குறித்திருந்தார்கள். ஆனால்,அந்த வழிகாட்டியின் மூன்றாவது பதிப்பில் சிக்தரின் பெயரை அப்படியே எடுத்துவிட்டார்கள்.

எவரெஸ்ட் சிகரத்தை கண்டே இராதவரின் பெயரை அது தாங்கி நிற்கிறது. அதனை உலகின் உயரமான சிகரம் என்று கண்டுபிடிதுச்சொன்ன சிக்தரை வரலாற்றின் இருட்டு மூலையில் தள்ளிவிட்டார்கள் ஆங்கிலேயர்கள். மிகப்பெரிய திரிகோணவியல் அளவையியல் என்கிற அந்த அளவையியலில் ஈடுபட்ட நைன் சிங் மற்றும் சிக்தர் ஆகிய இருவரின் நினைவாக அரசு ஸ்டாம்ப் வெளியிட்டது.

- பூ.கொ.சரவணன்

முத்துசாமி தீட்சிதர்

மிகபெரும் பக்திமான்களை, நாயன்மார் ஆழ்வார் வழிவந்த அதிதீவிர பக்தர்களை ஒருவலையில் ஞான சித்தர்களை வெறும் சங்கீத மும்மூர்த்திகள் என அடக்கிவிட்ட ...