Monday, January 12, 2015

சரும நோய்களுக்கு :தாழம்பூ தைலம் :

 

தேவையான சரக்குகள் :
தாழம்பூ இரண்டு
நல்லெண்ணெய் அரை லிட்டர்

செய்முறை :
தாழம்பூ இதழ்களை பிரித்து எடுத்து ' ஈசல் இறகு போல (சிறு சிறு துண்டுகளாக) கத்திரியினால் கத்திரித்துக் கொள்ளவும் இதை வாயகன்ற ஓரு பாத்திரத்தில் போட்டு தேவையான எள் எண்ணையை விட்டு கடுமையான வெய்யிலில் ஓரு வாரம்வரை வெய்யிலில் ( சூரியபுடம்) வைக்கவும் பிறகு வடிகட்டி ஓரு புட்டியில் அடைக்கவும்

உபயோகம் :
இந்த எண்ணையை உடல் முழுவதும் பூசி ஒரு மணி நேரம் ஊற விட்டு சீயக்காய்தூள் அல்லது அரப்புத்தூள் தேய்த்து இளம் வெந்நீரில் குளிக்கவும் இதன்நாள்
தீரும் நோய்கள் தேமல் -படை சொரி சிரங்கு 'தினவு ' மேகரணம் ' தொழுநோய் முதலான நோய்கள் தீரும் மற்றும் தாழம்பூச் செடியின் வேரை நறுக்கிப் போட்டு நீர்வீட்டு காய்ச்சி வடிகட்டிய கஷாயத்துடன் சீனீ சேர்த்துக் குடிக்கவும் மேலும் துரிதகுணம் ஏற்படும்

No comments:

Post a Comment

காந்தியும் பகத்சிங்கும்

பிரிட்டிசாருக்கு எதிரான கடைசிகட்ட சுதந்திரபோரில் ஜாலியன் வாலாபாக் சம்பவம் கொடுமையானது, அங்கிருந்து எத்தனையோ தேசாபிமானிகள் போராட கிளம்பினார்க...