நம் உடல்நிலைக்கு தகுந்தவாறு இரவு நேர உணவை எடுத்துக்கொள்வது அவசியமானதாகும். ஏனெனில் இரவு நேரங்களில் அஜீரணக்கோளாறு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
அசைவ உணவுகள்
இரவு நேரங்களில் நண்பர்களோடு வெளியில் சென்றால், ஏதேனும் அசைவ உணவுகளை ருசிபார்க்க வேண்டும் என தோன்றும். ஆனால் இந்த பழக்கத்தை தொடர்ச்சியாக மேற்கொள்ளாமல் இருப்பது நல்லது.
ஏனெனில் அசைவம் உணவுகள் ஜீரணமாக 3 மணி நேரம் முதல் 4 மணி நேரம் வரை கூட ஆகக்கூடும்.
அதனால் ஜீரணக் கோளாறு, வாயுத்தொல்லை ஏற்பட்டு, இரவில் தூங்க முடியாமல் போகும். அசைவ உணவுகளை மதிய நேரத்திலோ, மாலை நேரத்திலோ சாப்பிடுவது நல்லது.
காரம் மற்றும் எண்ணெய்
எண்ணெய், நெய் போன்றவற்றில் கொழுப்புச்சத்து அதிகமிருப்பதால், ஜீரணமாகவும் நேரம் எடுக்கும். பொதுவாக இரவு நேரங்களில் நாம் தூங்கும் அந்த 8 மணி நேரத்தில்தான் நம் உடலில் மூளை மற்றும் இதயம் தவிர மற்ற எல்லா பாகங்களும் ஓய்வு எடுக்கும்.
அந்த நேரத்தில் அவற்றுக்கு அதிகப்படி வேலை கொடுப்பது நல்லதல்ல, இதனால் பிற்காலத்தில் தொடர் ஜீரணக்கோளாறு பிரச்சனைகள் ஏற்படலாம்.
நீர்ச்சத்துள்ள உணவுகள்
இரவில் நீர்ச்சத்துள்ள உணவுகளை சாப்பிடும்போது அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய நிலைமை ஏற்படும்.
நீரிழிவுக்காரர்கள் சுத்தமாக சாப்பிடவே கூடாது. பூசணி, புடலை, நீர்ச்சத்துள்ள காய்கறிகள், முட்டைகோஸ் போன்ற காய்கறிகள் சாப்பிட்டாலும் இதே பிரச்சனைதான். இதனால் இரவில் தூக்கம் பாதிக்கும்.
காபி
காபியில் உள்ள காப்ஃபைன் வயிற்றில் அதிகப்படியான அமிலத்தை உருவாக்கும் . எனவே இது உங்களுக்கு காலை வேளைகளில் வயிற்று உபாதைகள் ஏற்பட காரணமாகிவிடும்.
எனவே, இரவு நேரங்களில் காபி குடிப்பதை தவிர்த்துவிடுங்கள்.
No comments:
Post a Comment