ஒன் மேன் ஆர்மி என்பார்கள் அதை போன்று - தனி ஆளாக நின்று இந்திய சீன போரில் 300 சீன வீரர்களை கொன்று வரலாறு தெரியுமா...? இன்றும் அவருக்கு தபாங் என்ற இடத்தில் கோவில் உள்ளது
ஜஸ்வந்த் சிங் என்வர் 1962 ஆம் வருடம் இந்திய சீனா போரின் கதாநாயகன்.
அவருடைய வீரமும் தியாகமும் அறிந்தவர் மிகச் சிலரே. RFN என்கிற துப்பாக்கி
பிரிவில் எண் 4039009 என்கிற பதிவேட்டில் நான்காம் படையில் போரில் முன்னே
சென்றவர். கார்வால் எனும் படைப் பிரிவு. நவம்பர் மாதம் 17 ஆம் தேதி MMG
என்கிற பெரிய தானியங்கி துப்பாக்கியை கொண்டு சீனா எல்லையில் அபாயகரமான
நாசத்தை உண்டு செய்வதற்கு முன்னேறியது. ஜஸ்வந்த், நாயக் த்ரிலோக் சிங்
மற்றும் கோபால் சிங் குசைன் போன்றவர்கள் அதனை எதிர்த்து சென்றனர். 12
மீட்டர் இடைவெளியில் அதனை நெருங்கியவுடன், அதன் கூடாரம் போன்ற முகப்பில்
கையெறி குண்டினை வீசி பல சீனர்களை வதைத்து MMG என்கிற தானியங்கி
துப்பாக்கியினை கைபற்றினர். ஜஸ்வந்த் அந்த கைப்பற்றிய பெரிய துப்பாக்கியினை
தைரியமாக குண்டுகளுக்கு மத்தியில் இந்திய எல்லைக்கு இழுத்து வந்தார்.
ஆனால் ஜஸ்வந்த் மற்றும் த்ரிலோக் அவர்களை இந்திய எல்லையின் பாதுகாப்பு அரனை
நெருங்கும் தறுவாயில் சீன துப்பாக்கி குண்டுகள் துளைத்தன. கோபால் குசேன்
காயம் பட்டிருப்பினும், ஜஸ்வந்திடமிருந்து அத்துப்பாக்கியினை பெற்று இந்திய
அரனில் நிறுவினார். இதன் மூலமாக மிகப்பெரிய சீன ஊடுறுவல் தடுக்கப்பட்டு,
300 சீன சிப்பாய்களின் உயிர் பறிக்கப்பட்டு பின் சீன படைகள் பின்
வாங்கப்பட்டது. வீர போர் புரிந்து தனது இன்னுயிரை ஈர்ந்த ஜஸ்வந்த்
அவர்களுக்கு "மஹா வீர் சக்ரா" பதக்கம் நமது அரசால் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment