எல்லா இடங்களிலும்தானே பகவான் உள்ளார்; அப்படியிருக்க எதற்கு கோவிலுக்கு செல்கிறாய்? ஆலயம் போய்தான் கும்பிட வேண்டுமா?
இன்று ஆலயம் போய் சாமி கும்பிட்டுவர 1 1/2 மணி நேரத்திற்கும் மேலானது. ஆனால் அங்கு பகவானை நினைத்து அவனது நாமாவை சொல்லி அமர்ந்திருந்தது சில நிமிடங்களே......
எப்படியும் சரி, ஆலயம் செல்லவே இந்த நேரத்தை செலவழித்தேன். நிஜமான பக்தனாக இருந்திருந்தால் இந்த நேரம் முழுமைக்கும் நாமஜபம் செய்திருக்கலாமே. அப்படியானால் எதோ சில நிமிடங்கள் அவன் நாமாவை சொன்னதற்கு பதிலாக மணிநேரம் சொல்லி இருக்க வாய்ப்பு கிடைத்திருக்குமே....... ஆனால் வீட்டில் இருந்திருந்தால் அத்தனை நிமிடங்களாவது சொல்லியிருப்பேனா? இல்லை அந்த நேரத்தில் FB அல்லது TVயில் இருந்திருப்பேனா?
ஆலயம் சென்றதால் சில நிமிடங்களாவது இறை சிந்தையில் இருந்தேன். எப்போது ஆலயம் போய் வர ஆகும் நேரத்தையும் வீட்டில் இருந்து கொண்டே பகவானுக்காக செலவிடும் பக்குவம் வருகிறதோ அபோது ஆலயம் செல்வதை நிறுத்த முயற்சிக்கிறேன். மற்றபடி விதண்டாவாதம் பேசுவதற்காக ஆலயம் செல்வதை என்னால் நிறுத்திக் கொள்ள முடியாது. எனக்கு நான் எந்த நிலையில் உள்ளேன் என்று புரிகிறது..........
ஒருமணி நேரம் தொடர்ந்து ஈசனின் மந்திரத்தை சொல்லிக்கொண்டிருக்க முடியவில்லை; ஆனால் மனைவி குழந்தைகளுடன் நான்கு மணி நேரமானாலும் சலிக்காமல் பேசிக் கொண்டிருக்கிறேன்.
நான் ஈசன் மீது பக்தி வைத்துள்ளேனா? இல்லை ஈசன் மீது அன்பு கொண்டுள்ளேனா? இல்லை ஈசனை அடைய வேண்டும் என்ற ஆசைதான் கொண்டுள்ளேனா?
ஈசனை நினைக்கையில் நான் ஆனந்தம் கொண்டு அவன் நாமாவை சொல்லிக் கொண்டேயிருப்பதில் திருப்தி கொண்டு நேரம் போவதே தெரியாமல் இருந்திருப்பேனாயனால் நான் அவனது பக்தன் என கொள்ளலாம். ஆனால் எனக்கோ மனைவி மக்களிடத்தில் பேசுவதில் உள்ள ஆனந்தம் அம்மை அப்பனது மந்திரத்தை சொல்வதில் வரவில்லையே.............
அப்படியானால் நான் பக்தன் இல்லை.... பதிதன்..........
நான் ஒரு உலோபி................
உலக ஆசைகளுள் புதைந்து கிடக்கும் ஒரு லோபி............
No comments:
Post a Comment