Wednesday, June 18, 2014

நம்மை நாம் நல் வழிபடுத்திக்கொள்ள பதினெட்டு படித்தளங்கள்:


1) எதையும் சுயமதிப்பீடு செய்யும் பக்குவம் வளர நல்ல குருவை தேடி,அவரின் வாயிலாக நல்ல கருத்துக்களை அறிந்து பிறகு உணர்ந்து பாருங்கள்.
2) ஐம்புலன்களாகிய பார்த்தல் ,கேட்டல் ,சுவைத்தல் ,நுகர்தல்,உணர்தல் வழியாக சென்றால் மையை உங்களை நரகத்தில் தள்ளிவிட்டு வேடிக்கை பார்க்கும்.ஆனால் உணர்வுபாதையில் செல்பவர் இறைவனின் பாதக் கமலத...்தில் இருப்பார்.
3) உங்கள் மனம் அவப்போது பாதை மாறி தவறான வழியில் இழுத்துச் செல்லும் பொது குருவின் துணையாலும்,சற்குருவின் துணையாலும் உங்களை நல்வழியில் திருப்பிச் செல்லும் .மந்திரம் கூறுவது மிக முக்கியமாகும் .
4) இன்பம்,துன்பம்,கவலை தரும் நேரத்தில் உங்கள் மனதை இழுத்து இறைவன் பக்கம் திருப்பி 'ஓம் நமசிவாய 'என்ற மந்திரத்தை கூறி பயிற்சி செய்து பாருங்கள் ஆனந்தம் கிடைக்கும்.
5) பிறகு பிறர் குறையைப் பார்த்து உணர்ந்து ,தன குறையை கண்டு திருத்தி தன்னை நல்வராக்கி கொள்வீர்கள்.இறைவனை நினைக்கும் முயற்சியும் ,தியானப் பயிற்சியும் ஞானக் கல்வி என்பதை மறவாதீர்கள்.
6) தியானப் பயிற்சி கூடக்கூட ,சுய விசாரணை செய்ய ஞானவழிப் பாதையின் மிகப் பெரிய முதல் இரும்புக் கதவை இறைவன் கொஞ்சம் கொஞ்சமாக திறப்பார்.மாயத்திரை எழும் ஒவ்வொன்றாக விலகிச் செல்லும்.
7) இந்த நேரத்தில் மாயை ஆசை,பகைமை ,பயம் என்ற மும் மலங்களை உங்களுக்குள்ளே விஸ்வரூபம் எடுக்க செய்யும்.நமசிவாய மந்திரத்தை உச்சரிப்பதால் வெற்றிப்பாதையில் முன்னேறுவீர்கள்.
இரண்டு பக்கமும் அடிக்கடி உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள். ஒன்று உலக வாழ்க்கை,மற்றொன்று ஞான வாழ்க்கை.
9) வெற்றி என்பது பணம் ,புகழ் சம்பாதிப்பது மட்டுமல்ல.அத்துடன் ஞான குருவின் உதவியால் இறைவனை கண்டு உணர்வது .
10) பலரை வெற்றி பெற்றவர்கள் என்று நீங்கள் நினைத்துக் கொண்டு இருக்கிறீர்கள்.அவர்கள் பலமுறை தோல்வி கண்டவர்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.முயற்சியை கைவிடாதீர்கள்.
11) மற்றவர்கள் புகழ்வதற்காக ஒன்றை செய்வதைக் காட்டிலும் ,பிறர் உயர்வு பெற பனி செய்பவர் இறைவனின் அன்புக்குரியவர்.இவர்களை இறைவன் ஒருபோதும் கைவிடமாட்டார்.நீங்களும் இதில் இடம் பெறுங்கள்.
12) உங்களை உண்மையாக நேசிப்பவர்களின் நலன் கருதுவது ,இறைவனுக்கு தொண்டு செய்வதற்கு சமமாகும்.
13) இறந்த காலத்தின் தவறை நினைத்து பார்ப்பது இன்று நாம் திருந்தத்தான்.ஆனால் அதை நினைத்து வருந்திக் கொண்டிருப்பதற்காக இல்லை.துக்கம் விட்டால் ஞானம் கிடைக்கும்.ஆசை விட்டால் ஆனந்தம் கிடைக்கும்.
14) உங்கள் முன்னேற்றத்திற்கு பிறர் தடையாக இருப்பதாக குறைக் கூறாதீர்கள்.முதலில் உங்களை உற்று நோக்குங்கள் ,பிறகு இறைவனுக்கு உண்மைத் தொண்டராக இருக்க கற்றுக் கொள்ளுங்கள்.ஒருநாள் உண்மையாகிய இறைவனை கண்டடைவீர்கள்.
15) தொடர்ந்த உழைப்பும் ,இறை நினைப்பும் மந்திரம் கூறுதலும் ,தியானமும் உங்களை உயர்ந்த மனிதராக்கும் .பலர் போற்றும் மனிதராக வாழ்வீர்கள்.
16) இதனால் இறை விசுவாசமும் ,குரு நன்றியும் மனதில் மலரும் .செல்வம் தேடி வரும்.
17) உடனே உண்மை உங்களிடம் மேலோங்கும் . அப்பொழுது பரிசுத்தமாவீர்கள்.மனமும் அறிவும் ஒன்று சேரும் .இறைத் தொண்டு செய்ய தயாராவீர்கள்.
18) ஞான குருமார்கள் உங்களை நேசித்து ஆசிர்வதிப்பார்கள்.உங்களிடம் இறைவன் குடி கொள்வார். எதிலும் மயக்கம் இருக்காது. பௌர்ணமி போன்று என்றும் முழுமையாக பிரகாசிப்பீர்கள்.

No comments:

Post a Comment

முத்துசாமி தீட்சிதர்

மிகபெரும் பக்திமான்களை, நாயன்மார் ஆழ்வார் வழிவந்த அதிதீவிர பக்தர்களை ஒருவலையில் ஞான சித்தர்களை வெறும் சங்கீத மும்மூர்த்திகள் என அடக்கிவிட்ட ...