ஆன்மிக ரகசியங்கள்..........
1 விநாயகரை துளசியால் அர்ச்சனை செய்யக் கூடாது.
(விநாயக சதுர்த்தியன்று மட்டும் ஒரு தளம் போடலாம்)
2. பரமசிவனுக்குத் தாழம்பூ உதவாது.
தும்பை, பில்வம், கொன்றை முதலியன விசேஷம்.
ஊமத்தை, வெள்ளெருக்கு ஆகியனவற்றாலும் அர்ச்சிக்கலாம்.
3. விஷ்ணுவை அக்ஷதையால் அர்ச்சிக்கக் கூடாது.
4. அம்பிகைக்கு அருகம்புல் உகந்ததல்ல.
5. லட்சுமிக்குத் தும்பை கூடாது.
6. பவளமல்லியால் சரஸ்வதியை அர்ச்சனை செய்யக் கூடாது.
7. விஷ்ணு சம்பந்தமான தெய்வங்களுக்கு மட்டுமே
துளசி தளத்தால் அர்ச்சனை செய்யலாம்.
சிவ சம்பந்தமுடைய தெய்வங்களுக்கே வில்வார்ச்சனை செய்யலாம்.
8. துலுக்க சாமந்திப்பூவை கண்டிப்பாக உபயோகப்படுத்தக் கூடாது.
9. மலரை முழுவதுமாக அர்ச்சனை செய்ய வேண்டும்.
இதழ் இதழாக கிள்ளி அர்ச்சனை செய்யலாகாது.
10. வாடிப்போன, அழுகிப்போன, பூச்சிகள் கடித்த மலர்களை உபயோகிக்கக் கூடாது.
11. அன்றலர்ந்த மலர்களை அன்றைக்கே உபயோகப்படுத்த வேண்டும்.
12. ஒரு முறை இறைவன் திருவடிகளில் சமர்ப்பிக்கப்பட்ட மலர்களை எடுத்து,
மீண்டும் அர்ச்சனை செய்யக் கூடாது.
வில்வம், துளசி ஆகியவற்றை மட்டுமே மறுபடியும் உபயோகிக்கலாம்.
13. தாமரை, நீலோத்பலம் போன்ற நீரில் தோன்றும் மலர்களை
எடுத்த அன்றைக்கே உபயோகப்படுத்தவேண்டும் என்பதில்லை.
14. வாசனை இல்லாதது, வாடியது, நுகரப்பட்டது,
முடி, புழு ஆகியவற்றோடு சேர்ந்திருந்தது,
தகாதவர்களால் தொடப்பட்டது;
ஈரத்துணி உடுத்திக் கொண்டு வரப்பட்டது.
காய்ந்தது. பழையது. தரையில் விழுந்தது ஆகிய மலர்களை
அர்ச்சனைக்கு உபயோகப்படுத்தக் கூடாது.
15. சம்பக மொக்குத் தவிர, வேறு மலர்களின் மொட்டுகள் பூஜைக்கு உகந்தவை அல்ல.
16. மலர்களை கிள்ளி பூஜிக்கக் கூடாது.
வில்வம். துளசியைத் தளமாகவே அர்ச்சிக்க வேண்டும்.
17. முல்லை, கிளுவை, நொச்சி, வில்வம், விளா - இவை பஞ்ச வில்வம் எனப்படும்.
இவை சிவபூஜைக்கு உரியவை.
18. துளசி, முகிழ் (மகிழம்) செண்பகம், தாமரை, வில்வம், செங்கழுநீர், மருக்கொழுந்து,
மருதாணி, தர்பம், அருகு, நாயுரவி, விஷ்ணுக்ராந்தி, நெல்லி
ஆகியவற்றின் (இலை) பத்ரங்கள் பூஜைக்கு உகந்தவை.
19. பூஜைக்குரிய பழங்கள் நாகப்பழம், மாதுளை, எலுமிச்சை, புளியம்பழம்,
கொய்யா, வாழை, நெல்லி, இலந்தை, மாம்பழம், பலாப்பழம்.
20. திருவிழாக் காலத்திலும், வீதிவலம் வரும் போதும்,
பரிவார தேவதைகளின் அலங்காரத்திலும்,
மற்றைய நாட்களில் உபயோகிக்கத் தகாதென விலக்கப்பட்ட மலர்களை உபயோகிக்கலாம்.
21. அபிஷேகம், ஆடை அணிவிப்பது, சந்தன அலங்காரம், நைவேத்யம் முதலிய
முக்கிய வழிபாட்டுக் காலங்களில் கட்டாயமாகத் திரை போட வேண்டும்.
திரை போட்டிருக்கும் காலத்தில் இறை உருவைக் காணலாகாது.
22. குடுமியுள்ள தேங்காயைச் சமமாக உடைத்து, குடுமியை நீக்கிவிட்டு
நிவேதனம் செய்ய வேண்டும்.
23. பெருவிரலும் மோதிரவிரலும் சேர்த்துத் திருநீறு அளிக்க வேண்டும்.
மற்ற விரல்களைச் சேர்க்கக் கூடாது.
24. கோயில்களில், பூஜகர்களிடமிருந்துதான் திருநீறு போன்ற
பிரசாதங்களைப் பெற வேண்டும். தானாக எடுத்துக் கொள்ள கூடாது.
25. பூஜையின் துவக்கத்திலும், கணபதி பூஜையின் போதும்;
தூப தீபம் முடியும் வரையிலும் பலிபோடும் போதும்
கை மணியை அடிக்க வேண்டும்.
மணியின் சப்தமில்லாவிடில் அச்செயல்கள் பயனைத் தரமாட்டா
வீட்டில் ஓம் படம் மாட்டி வைக்கவும்.
புராண, இதிஹாஸ, தேவார, திவ்யபிரபந்த நூல்கள் கட்டாயமாக
ஒவ்வொரு இந்துவின் வீட்டிலும் இருக்க வேண்டும்.
அருகிலுள்ள அனாதை இல்லம், முதியோர் இல்லம், கண் பார்வையற்றோர்,
செவிகேளாதோர் சேவை இல்லங்களுக்கு , இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும்.
தினமும் சூரியன் உதிப்பதற்கு முன் படுக்கையிலிருந்து எழுந்திருக்கவும்.
காலையில் எழுந்தவுடனும், நீராடிய பின்னும்,
உணவு கொள்ளும் போதும் இஷ்ட தெய்வத்தைச் சிந்திக்கவும்.
நெற்றியில் இந்து சமயச் சின்னம்
(திருநீறு, குங்குமம், சந்தனம், திருநாமம் - ஏதேனும்) அணியாமல் இருக்கக் கூடாது.
இறைவழிபாட்டுக்கு என, தனியே இடம் ஒதுக்கித்
தவறாது வழிபாடு செய்யவும்.
காலை - மாலையில் விளக்கேற்றி நறுமணப் புகை பரவச் .செய்யவும்.
படுக்கும்போது தெய்வத்தின் நினைவோடு படுக்க வேண்டும்.

No comments:
Post a Comment