உடலில் இருகின்ற வாயுவை நம்மால் கவனிக்க இயலுமா?, எனவே மூக்கு நுனியில்
வெளியேறும் வாயுவை , உள் இழுக்கப்படும் வாயுவை கவனிக்க வேண்டியதாகும் ,
நீண்ட மூச்சி இழுத்து நிதானமாக வெளிவிட சுவாசப்பை முயற்சி செய்வதை கவனிக்க
வேண்டி உள்ளது . மூச்சி விடுவதை கவனிக்க வேண்டுமென்றால் மனதை சும்மா இரு
என்று அதட்ட வேண்டி உள்ளது .அப்படி கவனிக்க ஒரு தனி இடம் வேண்டி உள்ளது.
அப்படி தேடி போய் உட்கார்ந்து இடையறாது மூச்சை கவனித்து கவனித்து , மூச்சை
கவனிப்பதே மனதின் வேலை ஆகி , அதனால் மனம் அமைதியாகி ,மனம் அமைதியானால்
மனம் மேலும் பண்பட்டு, மனம் பண்பட்டதால் மூச்சி இன்னும் இழை ஆகி, மூச்சி
இழை ஆனதால் மனம் சுருண்டு கிடக்க , நான் என்ற இருப்பு மட்டும் தெரிய வர ...
நான் என்ற இருப்பு தெரிய வரும் போது... உள்ளுக்குள் வேறு ஒரு விசயம் தென்
படும் , சில கணங்கள் சகலமும் நின்று போய் வேறு ஒரு காட்சி தென்பட்டு
மறுபடியும் மூச்சை வேகமாக இழுத்து விடும் போது அது கபாலத்தில் போய்
தாக்கும் . கபாலத்தில் இருகின்ற நந்தி என்கின்ற ஒரு ஆரஞ்சி சுளை நீர்
பையில் பிறன வாயு நிரம்ப , அந்த
இடத்தில்
சக்தி துண்டப்பட , அது விழித்தெழ அந்த சுளையில் இருந்து வழியும் அமுத சுரபி
இதயத்தை தொட , விருத்தரும் மேனியும் சிவந்திடும்.
உருதரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவை
கருதினால் இருத்தியே கபாலம் ஏற்ற வல்லிரேல்
விருத்த தரும் பாலரவீர் , மேனியும் சிவந்திடும்
அருள் தரித்த நாதர் பாதம்அம்மை பாதம் உண்மையே
உருதரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவை
கருதினால் இருத்தியே கபாலம் ஏற்ற வல்லிரேல்
விருத்த தரும் பாலரவீர் , மேனியும் சிவந்திடும்
அருள் தரித்த நாதர் பாதம்அம்மை பாதம் உண்மையே
No comments:
Post a Comment