Wednesday, September 26, 2012

"மெட்ராஸ் ஐ'



சீதோஷ்ண நிலை மாற்றத்தால், "மெட்ராஸ் ஐ' என்றழைக்கப்படும் கண் நோய், வேகமாக பரவி வருகிறது. முறையாக கவனிக்காவிட்டால், கண்களில் "அல்சர்' ஏற்படும் என, டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.

பொதுவாக ஏப்.,, மே மாதங்களில் நிலவும் கடும் வெயிலின் தாக்கத்தால் "மெட்ராஸ் ஐ' எனப்படும் கண் நோய் உண்டாகிறது. காலநிலை மாற்றத்தால், கோடைகாலத்துக்கு பிறகும், தற்போது வெயில் வாட்டி வதைக்கிறது. இதனால், கோவை, திருப்பூர் மாவட்டங்களில் "மெட்ராஸ் ஐ' வேகமாக பரவி வருகிறது.

 
என்ன அறிகுறி?
"மெட்ராஸ் ஐ' பரவியதும் கண் இமைகள் இரண்டும் ஒன்றோடொன்று ஒட்டிக்கொள்ளும். கருவிழி செயல்பட, போதிய ஈரப்பதம் இருக்காது; கண்ணின் இமைப்பு தன்மையும் குறைந்து விடும். கண் அலர்ஜியும், சோர்வும் ஏற்படும்; நீர் வடிந்து கொண்டே இருக்கும்.
மேலும், விழிப்படலம் சற்று வீங்கி, அடர்த்தியாக காணப்படும். இந்நோய் ஏற்பட்டதில் இருந்து, மூன்று முதல் ஏழு நாட்கள் வரை நீடிக்கும். கண் நோய் பரவியிருப்பது தெரியவந்தால், உடனடியாக, கைகளை நன்கு கழுவி, மிதமான சூடுள்ள தண்ணீரை கொண்டு கண்களை சுத்தமாக கழுவ வேண்டும். இதன்பின், கண் டாக்டரை ஆலோசித்து, உரிய சிகிச்சை பெற
வேண்டும்.
பாதிப்பு வருமா?
அரசு மருத்துவமனை கண் டாக்டர் திருமங்கை கூறியதாவது:
"அடினோ' வைரஸ் மற்றும் "ஸ்ட்ரெப்டோ காக்கஸ்', "ஸ்டைபோ காக்கஸ்', "ஹீமோபிளஸ்' போன்ற பாக்டீரியாக்கள் கண்களை தாக்கு
வதால், இந்நோய் ஏற்படுகிறது. இந்த பாக்டீரியாக்கள், பொதுவாக கோடைகாலத்தில் தான் பல்கிப் பெருகும். அந்நேரங்களில், "மெட்ராஸ் ஐ' அதிகளவில் பரவும். தற்போதும், அதே சீதோஷ்ண நிலை நிலவுவதால், இந்நோய் எளிதாக பரவுகிறது. நோய் தாக்கியதில் இருந்து, மூன்று நாட்கள் முதல் ஒரு வாரம் வரை, இதன் பாதிப்பு இருக்கும்.
லேசான காய்ச்சல், கழுத்தில் நெறிகட்டுதல் போன்றவையும் இருக்கும். கண்ணில் உறுத்தல் இருக்கும்; கண் வீங்கி காணப்படும். இதை
கவனிக்காவிட்டால், கருவிழியில் "டாட்' போன்று ஏற்பட்டு அல்சர் ஏற்படும். இதனால், பார்வைத்திறனும் குறையும். "மெட்ராஸ் ஐ' நோய்க்கு, டாக்டரின் ஆலோசனை இல்லாமல், சுய வைத்தியம் செய்யக்கூடாது.
குழந்தைகள் இருக்கும் வீடுகளில், பெரியவர்களுக்கு இந்நோய் ஏற்பட்டால், கவனமாக இருக்க வேண்டும். பெரியவர்களுக்கு கொடுக்கும் மருந்தை, குழந்தைகளுக்கு பயன்படுத்தக் கூடாது.
இவ்வாறு, டாக்டர் திருமங்கை கூறினார்.தற்போது பரவும் "மெட்ராஸ் ஐ' கண் நோய், மற்றவர்களுக்கு பரவாமல் இருக்க, கருப்பு நிற கண்ணாடி அணிந்து கொள்ளலாம். இந்நோய் ஏற்பட்டவர்கள், மற்றவர்களை தொட்டுப்பேசுவதை தவிர்த்தால் நோய் பாதிப்பில் இருந்து தப்பலாம்.

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...