Wednesday, September 19, 2012

காந்தியின் வஞ்சகமும், சூழ்ச்சியும்


ஐரோப்பிய சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு சுபாஷ் சந்திரபோஸ் 1938 ஜனவரியில் இந்தியா திரும்பினார். அதே ஆண்டு ஹரிபுராவில் காங்கிரஸின் 51வது மாநாட்டில் கலந்து கொள்ள வந்த போஸை 51 காளைகள் பூட்டிய வண்டியில் அழைத்து சென்றனர். இக்காட்சி அவருடைய வளர்ச்சிக்கு அடையாளம் என்பதை பொறுக்க முடியாத காந்தியும், அவருடைய ஆதரவாளர்களும் சுபாஷ் மீது காழ்ப்புணர்ச்சியுடன் இருந்தனர்.

நேருவும், போஸ்சும் இணைந்து காங்கிரஸில் வளர்ச்சிக்காக தீவிரமாக பணியாற்றிக் கொண்டிருந்தனர். 1939ல் கவுகாத்தியில் நடந்த மாநாட்டில் பேரியகத்தில் தேர்தல் வந்தது. தலைவர் பதவிக்கு டாக்டர் பட்டாபி சீதாராமையாவை வேட்பாளராக நிறுத்தினார் காந்தி. எதிர் வேட்பாளர் போஸ். காந்தியின் ஆதரவாளர்கள் சுபாஷை மண் கவ்வ வைக்க வேண்டும் என திட்டம் தீட்டினர். 'தேர்தலில் நானே நிற்கிறேன் என எண்ணிக்கொள்ளுங்கள்' என்றார் காந்தி. ஆயினும், போஸ் தேர்தலில் சீதாராமையாவை விட 2 மடங்கு அதிக வாக்குகளை பெற்று தலைவராக தேர்வானார் .

'காங்கிரஸ் என்றால் காந்தி' என்ற பிம்பத்தை உடைத்தெரிந்து காந்தியின் சரித்திரத்தில் ஒரு கரும்புள்ளியை உருவாக

்கினார் சுபாஷ். அப்போதுதான் சுபாஷின் முழு திறமை பற்றி உலகத்திற்கு தெரிந்தது .

'பட்டாபி தோற்றது நானே தோற்றது போல, இனி எனக்கு இவ்வியக்கத்தில் என்ன வேலை?' என மிரட்டல் விடுத்தார் காந்தி. அவரின் ஆதரவாளர்களும் வரிசையாக ராஜினாமா செய்தனர். இதனால் மனம் வெறுத்துப்போன சுபாஷ் தலைவர் பதவியை ராஜினாமா செய்து தொண்டராக பணியாற்றினார்.

  காந்தியின் ஆளுமை இந்திய சரித்திரத்தில் முக்கியத்துவம் உடையதாக இருக்கும் பிம்பங்களுக்கு பின் இருக்கின்ற சரித்திர நிகழ்வுகள் எப்போதும் மறைக்கப்பட்டே இருப்பதால் காந்தி, 'மகாத்மா' என்கிற புனித அடையாளத்துடனே இன்றும் இருக்கிறார். காந்தியை மறுவாசிப்பு செய்யுங்கள். காந்தியின் வஞ்சகமும், சூழ்ச்சியும் நிறைந்த மறுபுறத்தை பார்க்க முடியும்!

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...