Saturday, September 22, 2012

நிலக்கடலை அல்லது வேர்க்கடலை

நிலக்கடலை அல்லது வேர்க்கடலை அல்லது கச்சான் என்பது பலரால் விரும்பி உண்ணப்படும் கொட்டைகளைத் தரும் பருப்பு வகை தாவரம் ஆகும். இது நடு தென் அமெரிக்காவுக்கு பூர்வீகமானது. சீனா, இந்தியா, நைஜீரியா ஆகிய நாடுகள் இதை அதிகம் உற்பத்தி செய்கின்றன.

இது வட்டார வழக்குகளில் வேர்க்கடலை, மணிலாக்கடலை, கடலைக்காய், மணிலாக்கொட்டை (மல்லாட்டை) எனப் பலவாறாக வழங்கப்படுகிறது. நிலக்கடலையை அவித்தோ அல்லது வறுத்தோ உண்ணப்படுகிறது. வெல்லப்பாகுடன் கலந்து கடலை மிட்டாயாக உண்ணப்படுகிறது. பொடித்து இனிப்புருண்டைகளாக தயாரிக்கப்படுகிறது. கடலை காந்தியடிகளுக்குப் பிடித்த உணவாகும்.

எண்ணெய் வித்துக்களில் மனிதர்களுக்கு அதிக அளவில் பயன்படுவது நிலக்கடலை ஆகும். நிலக்கடலையில் ஏகப்பட்ட அளவிற்கு புரோட்டீன் சத்து அடங்கியிருக்கிறது. நாம் உணவு தயாரிக்க பெருமளவில் பயன் படுத்தப்படும் கடலை எண்ணெய் கூட நிலக்கடலையிலிருந்துதான் எடுக்கப்படுகின்றன. கடலை எண்ணெய் பயன்படுத்தினால் அளவிற்கு அதிகமான அளவில் கொலஸ்ட்ரால் உண்டாகின்றது என்பதால் தற்காலத்தில் கடலை எண்ணெ யை பலர் தவிர்க்கின்றனர்.

உடம்பு மெலிதாக இருப்பவர்கள் தினம் சிறிது அளவு நிலக்கடலை பருப்பை சாப்பிடலாம். நிலக்கடலை சாப்பிடும்போது நிறைய உலர்ந்த முற்றிய கடலையை சாப்பிடுதல் கூடாது. ஏனெனில் எண்ணெய் சத்து முதிர்ந்த கடலையில் அதிகம் இருப்பதால் அது வாந்தியையும் உண்டு பண்ணிவிடக் கூடும். நிலக்கடலையிலிருந்து பால் எடுத்து பயன்படுத்தலாம்.

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...