Tuesday, September 18, 2012

தன்னம்பிக்கை

பேச்சாளார் “உங்களில் ஒருவருக்கு இந்த 500 ரூபாயைத் தருகிறேன் ஆனால் அதற்கு முன்” என சொல்லிஅந்த 500 ரூபாயைக் கசக்கி சுருட்டினார். பிறகு அதை சரி செய்து“இப்போதும் இதன் மீது உங்களுக்கு இன்னும் விருப்பம் இருக்கிறதா?” என்றார்கள்.அனைவரும் கையைத் தூக்கினர்.
200 பேர்கள் கூடியிருந்த அரங்கத்தில் ஒரு பேச்சாளார் ஒரு 500 ரூபாய் நோட்டைக் காட்டி” யாருக்கு இது பிடிக்கும்?” எனக் கேட்டார்.கூடியிருந்த அனவரும் தனக்கு பிடிக்குமென கையை தூக்கினர்.


அவர் அந்த ரூபாய் நோட்டை தரையில் போட்டு காலால் நசுக்கி அந்த அழுக்கான நோட்டை காட்டி“இன்னும் இதன் மேல் உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா? என்றார்அனைவரும் இப்போதும் கைகளை தூக்கினர்.

அவர் தொடர்ந்தார் “கேவலம் ஒரு 500 ரூபாய்தாள் பல முறை கசங்கியும் மிதிப்பட்டும் அழுக்கடைந்தும்அதன் மதிப்பை இழக்கவில்லை. ஆனால் மனிதர்களாகிய நாம் அவமானப் படும் போதும் ,தோல்விகளை சந்திக்கும் போதும் மனமுடைந்து போய் நம்மை நாமே தாழ்த்தி கொள்கிறோம் .
நம்முடைய மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. நீங்கள் தனித்துவமானவர்.

இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொர்ருத் தனித் தன்மை இருக்கும்.அதன் மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. வாழ்கை என்ற பயிர்க்குதைரியமும் தன்னம்பிக்கையும் தான் உரமும் பூச்சிக்கொள்ளிகளும்.
ஆகையால் தன்னம்பிக்கையை இழக்காமல் வாழுங்க..

No comments:

Post a Comment

முத்துசாமி தீட்சிதர்

மிகபெரும் பக்திமான்களை, நாயன்மார் ஆழ்வார் வழிவந்த அதிதீவிர பக்தர்களை ஒருவலையில் ஞான சித்தர்களை வெறும் சங்கீத மும்மூர்த்திகள் என அடக்கிவிட்ட ...