Friday, September 14, 2012

5 லிட்டர் எண்ணெய் அப்படியே உள்ளுக்குள்




தஞ்சாவூர் மாவட்டம் திருநீலக்குடியில் நீலகண்டேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மூலவருக்கு நடைபெறும் நல்லெண்ணெய் அபிஷேகம் மிகவும் சிறப்பு வாய்ந்தது.
அமிர்தம் கிடைப்பதற்காக தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்தபோது, மிகக் கடுமையான ஆலகால விஷம் தோன்றியது. அந்த விஷத்தை சிவபெருமான் உண்டார். அது அவர் வயிற்றுக்குள் செல்லாமல் தடுக்க, உமையவள் சிவனின் கழுத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டதால், விஷம் கழுத்திலேயே தங்கி விட்டது. இதனால் சிவபெருமான், நீலகண்டர் என பெயர் பெற்றார்.
0 R
ஈசன் ஆலகால விஷம் உண்டு தொண்டையில் விஷம் இருப்பதால், அந்த விஷத்தன்மையை குறைக்க வேண்டியே இந்த தலத்தில் மூலவருக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்யப்படுகிறது என்பது ஐதீகம்.
அபிஷேகத்தின் போது பாத்திரம், பாத்திரமாக சுமார் 5 லிட்டர் வரை மூலவரான சிவலிங்கத்தின் மீது நல்லெண்ணெய் ஊற்றி அபிஷேகம் செய்யப்படும். எவ்வளவு எண்ணெய் ஊற்றி அபிஷேகம் செய்தாலும் அத்தனையும் கீழே வழியாமல், சிவலிங்கத்திற்கு உள்ளேயே உறிஞ்சப்பட்டு விடுவது இந்த கோவிலில் இதுவரை நடைபெற்று வரும் ஆச்சரியம் அளிக்கும் அதிசயம். நாள் பூராவும் எண்ணெய் அபிஷேகம் செய்தாலும் அத்தனையும் உறிஞ்சப்பட்டு விடுகிறது.
இதில் மேலும் ஆச்சரியம் என்னவென்றால், அபிஷேகம் செய்த அடுத்த நாள், மூலவரை பார்த்தால் அவரது திருமேனி கிட்டத்தட்ட கடந்த ஒரு வருடமாக எண்ணெயே தடவாதது போல் அவ்வளவு உலர்ந்து காய்ந்து காணப்படும். எண்ணெய் அபிஷேகம் செய்யப்பட்டுக் கொண்டே இருப்பதால் சிவலிங்கத் திருமேனி வழுவழுப்பாக இருப்பதற்கு மாறாக, சொர சொரப்பாகவே இருக்கிறது.
இது தவிர திருநீலக்குடியில் சிவனுக்கு தைலக்காப்பு அலங்காரம் மிகவும் விசேஷமானது. சுவாமியின் கோபத்தை தணிக்க, அம்பாள் தைலம் சாத்தி கோபத்தை தணித்ததாக தல புராணம் தெரிவிக்கிறது. தீராத தலைவலி நீங்க, தைலக்காப்பு பிரார்த்தனை செய்யும் பக்தர்கள் ஏராளம்.
கோவிலின் தல விருட்சமாக வில்வ மரம் உள்ளது. இங்குள்ள வில்வத்துக்கு ஐந்து இதழ்கள் உள்ளன.

No comments:

Post a Comment

முத்துசாமி தீட்சிதர்

மிகபெரும் பக்திமான்களை, நாயன்மார் ஆழ்வார் வழிவந்த அதிதீவிர பக்தர்களை ஒருவலையில் ஞான சித்தர்களை வெறும் சங்கீத மும்மூர்த்திகள் என அடக்கிவிட்ட ...