Friday, September 7, 2012

ரத்தக் குழாய் அடைப்பும், இதய நோயும்!

கொலஸ்டிரால் எனப்படும், கொழுப்புப் பொருட்கள் சிறிது சிறிதாக ரத்தக் குழாய்களின் உட்புறம் படிவதனால் ஏற்படும் அடைப்பு ஆகும். எங்கெல்லாம் இப்படிக் கொழுப்புப் பொருட்கள் படிந்து குவிகின்றனவோ, அங்கெல்லாம், ரத்தக் குழாயைச் சுருங்கச் செய்கின்றன. அதன் விளைவாக, இதயத்துக்குச் செல்லும் ரத்தம் குறைகிறது. இப்படி குறைவாக ரத்தம் அளிக்கப்படும் நிலையைத் தான், "இஸ்கெமியா’(ischemia) என்றழைக்கின்றனர்.

அஞ்ஜினா என்றால் என்ன?:
அஞ்ஜினா என்பது, சில நிமிடங்களே நீடிக்கக் கூடிய, ஒரு வகையான நெஞ்சுவலி அல்லது சுகவீனம். அதை, இதயம் அதிக ரத்தம் கேட்டு அழுவதாக எடுத்துக் கொள்ளலாம். இதயத்துக்கு வேண்டிய பிராணவாயு மற்றும் ஊட்டச் சத்துக்கள், தேவையான அளவுக்குக் கிடைக்காமையைக் குறிக்கும், ஓர் அறிகுறி தான் அது. இந்த வலியைப் பொதுவாக, நெஞ்சின் இடது அல்லது வலது புறத்தில் அல்லது நெஞ்சின் முன்புறம் அல்லது கைகளின் மேற்பகுதியில் உணரலாம். குறிப்பாக, இடது மேல் பகுதியில், மேல் முதுகில், தோள்களில், தொண்டையில், முகவாய்க்கட்டை அல்லது தாடையில் அல்லது வயிற்றின் மேல் பகுதியில் உணர முடியும்.
நாம் சும்மா இருக்கும் போது, ஓய்வு நேரத்தில் தோன்றாமலும், மருந்துகளால் கட்டுப்படுத்தக் கூடியதாகவும் இருந்தால், அதைக் கட்டுக்குள் உள்ள (Stable angina) அஞ்ஜினா என்கிறோம். அஞ்ஜினா அளவு அதிகமாகி, அடிக்கடி மற்றும் ஓய்வு நேரத்திலும் வலி தோன்றி, மருந்துகளால் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டால், அதைக் கட்டுமீறிய அஞ்ஜினா (Unstable angina)என்கிறோம். இது, மாரடைப்பில் கொண்டு போய்விடக் கூடும்.
முழு ஓய்விலிருந்தும், மருத்துவ சிகிச்சை மேற்கொண்டும், பலனில்லாமல், வலி தொடர்ந்து நீடித்தால், நோயாளிக்கு அவசரமாக கொரானரி அஞ்ஜியோகிராபியும் (Coronary Angiography)அதைத் தொடர்ந்து, அஞ்ஜியோபிளாஸ்ட்டி (Angioplasty) அல்லது கொரானரி பைபாஸ் அறுவைச் சிகிச்சையும் செய்ய வேண்டியிருக்கும். அஞ்ஜியோகிராபி என்பது, ரத்தக் குழாய்க்குள் ஒரு திரவத்தைச் செலுத்தி, எக்ஸ்-ரே படம் எடுத்தல். அஞ்ஜியோபிளாஸ்ட்டி என்பது, அடைப்பு அகற்றல். பைபாஸ் சர்ஜரி என்பது, ரத்தக் குழாய்களை வழிமாற்றிப் புறவழியில் இதயத்துக்கு ரத்தம் செலுத்துதல்.

No comments:

Post a Comment

முத்துசாமி தீட்சிதர்

மிகபெரும் பக்திமான்களை, நாயன்மார் ஆழ்வார் வழிவந்த அதிதீவிர பக்தர்களை ஒருவலையில் ஞான சித்தர்களை வெறும் சங்கீத மும்மூர்த்திகள் என அடக்கிவிட்ட ...