Friday, November 23, 2012

திருமணத்தில் தடையுள்ளவர்கள்-இந்த காதல் கடிதம் படியுங்க..


 இந்த கடிதத்தைப் படித்தால் சிறந்த வாழ்க்கைத்துணை அமையும் என்பது நம்பிக்கை. விதர்ப்பதேசத்தின் ராஜா பீஷ்மகரின் மகள் ருக்மிணி. இவள் கிருஷ்ணரைக் காதலித்தாள். ஆனால், ருக்மிணியின் அண்ணன் ருக்மியோ அவளை சேதி நாட்டு இளவரசன் சிசுபாலன் என்பவனுக்கு திருமணம் செய்ய நிச்சயித்தான். இதை விரும்பாத ருக்மணி, கிருஷ்ணரைத் திருமணம் செய்யும் விருப்பத்தை ஏழு ஸ்லோகங்களாக எழுதி அனுப்பினாள். அவை..
கண்ணபிரானே! தங்களுடைய தகுதியான குணங்களையும், உன்னதமான அழகையும் பற்றி கேள்விப்பட்டு என் மனம் உங்கள் வசம் முழுவதுமாக வந்துவிட்டது.

தங்கள் ஒழுக்கம், குணம், வடிவம், கல்வி, இளமை,தைரியம், தர்மசிந்தனை ஆகியவை யாவும் என்னிடமும் இருப்பதாக நினைக்கிறேன்.
என் ஆத்மாவை, சிங்கம் போன்ற வீரமிக்க உங்களுக்கு என்னை அர்ப்பணித்து விட்டேன்.

உங்களைக் கணவராக அடைவதற்கு, பல ஜென்மங்களாக விரதங்கள், ஹோமங்கள் உள்ளிட்ட சடங்குகளை சரியான முறையில் நிறைவேற்றியிருப்பதாகக் கருதுகிறேன். என்னைத் தாங்களே கைபிடிக்க வேண்டும்.

எனக்கு விருப்பமில்லாத திருமணம் நடப்பதற்கு முதல்நாளே இங்கு வந்து, எதிரிகளைத் தோற்கடித்து, துவாரகைக்கு தூக்கிச் சென்று, விதிகளின்படி திருமணம் செய்ய வேண்டுகிறேன்.

எங்கள் குலவழக்கப்படி, திருமணத்திற்கு முன்தினம் அம்பிகை கோயிலுக்குச் செல்வேன். பூஜை முடிந்து வெளியே வந்ததும் என்னைக் கடத்திச் செல்லலாம்.

யோகிகளாலும் மகான்களாலும் பூஜிக்கப்படும் தங்கள் திருவடிகளை, தினமும் பூஜிக்கும் பாக்கியம் வேண்டும்.

No comments:

Post a Comment

முத்துசாமி தீட்சிதர்

மிகபெரும் பக்திமான்களை, நாயன்மார் ஆழ்வார் வழிவந்த அதிதீவிர பக்தர்களை ஒருவலையில் ஞான சித்தர்களை வெறும் சங்கீத மும்மூர்த்திகள் என அடக்கிவிட்ட ...