Wednesday, November 7, 2012

உடல் எடை அதிகரிக்க

தேவையான பொருட்கள்:
  1. பேரிச்சம் பழம்.
  2. பால்.
செய்முறை:
பேரிச்சம் பழத்தை பாலில் போட்டு காய்ச்சி தினமும் இரவு தூங்கும் முன் குடிக்க உடல் எடை அதிகரிக்கும்.

தேவையான பொருட்கள்:
  1. பேரிச்சம் பழம்.
  2. தேன்.
செய்முறை:
பேரிச்சம் பழத்தை தேனில் ஊற வைத்து  தினமும் சாப்பிட்டு வர உடல் எடை அதிகரிக்கும்.

தேவையான பொருள்கள்:
  1. மாதுளை விதைகள்.
  2. அமுக்கிராங்கிழங்கு வேர்.
செய்முறை:
சம அளவு மாதுளை விதைகள், அஸ்வகந்தா வேர் ஆகியவற்றை தனித்தனியாக இடித்து பொடி செய்து ஒன்றாக கலந்து தினமும் 2 வேளைகள் சாப்பிட்டு 1 டம்ளர் பால் குடித்து வந்தால் உடல் எடை அதிகரிக்கும். உடம் பலம் பெறும்.


தேவையான பொருள்கள்:
  1. பால்.
  2. பாதாம் பருப்பு.
  3. பேரிச்சம் பழம்.
  4. அத்திப்பழம்.
செய்முறை:
1 டம்ளர் பாலில் பாதாம் பருப்பு, பேரிச்சம் பழம் மற்றும் அத்திப்பழம் போட்டு நன்றாக காய்ச்சி வெது வெதுப்பான சூட்டில் அந்த பாலை குடித்து வந்தால் உடல் எடை அதிகரிக்கும்.




No comments:

Post a Comment

முத்துசாமி தீட்சிதர்

மிகபெரும் பக்திமான்களை, நாயன்மார் ஆழ்வார் வழிவந்த அதிதீவிர பக்தர்களை ஒருவலையில் ஞான சித்தர்களை வெறும் சங்கீத மும்மூர்த்திகள் என அடக்கிவிட்ட ...