தேவையான பொருள்கள்:
செய்முறை:
விளாம் பழத்தின் வெளியிலிருக்கும் ஓட்டை எடுத்து காய வைத்து இடித்து தூள் செய்து 100 கிராம் அளவு எடுத்து இதனுடன் சீகைக்காய் தூள் மற்றும் வெந்தயத்தூள் சேர்த்து கலந்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் வறண்ட கூந்தல் மென்மையாக மாறி பளபளக்கும்.
தேவையான பொருள்கள்:
செய்முறை:
கேரட் சாறு மற்றும் எலுமிச்சை பழச்சாறு இரண்டையும் தேங்காய் எண்ணெயில் கலந்து நன்றாக காய்ச்சி தலைக்கு தேய்த்து வந்தால் தலைமுடி நன்றாக வளரும்.
தேவையான பொருள்கள்:
- ஆலிவ் எண்ணெய்.
- ரோஸ்மேரி எண்ணெய்.
- எலுமிச்சைச்சாறு.
- முட்டை மஞ்சள் கரு.
2 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் மற்றும் ரோஸ்மேரி எண்ணெய்களை எடுத்து அதனுடன் 1 தேக்கரண்டி எலுமிச்சைச்சாறு, ஒரு முட்டையின் மஞ்சள் கரு சேர்த்து ஒன்றாக கலந்து தலையில் தடவி அரை மணி நேரம் ஊற வைத்து பிறகு குளித்து வந்தால் முடி உதிர்வது குறையும்.
தேவையான பொருள்கள்:
செய்முறை:
முட்டையின் மஞ்சள் கருவை எடுத்து நன்றாக கலக்கி உச்சந்தலை மற்றும் முடியில் தடவி அரை மணி நேரம் ஊற வைத்து பிறகு குளித்து வந்தால் முடி உதிர்வது குறையும்.
தேவையான பொருள்கள்:
செய்முறை:
சம அளவு நெல்லிக்காய் சாறு, பாதாம் எண்ணெய் எடுத்து அதில் சிறிது எலுமிச்சைச்சாறு கலந்து இரவு தலையில் நன்றாக தேய்த்து காலையில் தலைக்கு குளித்து வந்தால் கூந்தல் கருப்பாகும்.
தேவையான பொருள்கள்:
- ரோஸ்மேரி இலை.
ரோஸ்மேரி இலைகளை எடுத்து நீர் விட்டு நன்றாக காய்ச்சி பிறகு சிறிது நேரம் வைத்திருந்து வடிகட்டி இந்த நீரை கொண்டு தலையை அலசி வந்தால் முடி உதிர்வது குறையும்.
தேவையான பொருள்கள்:
செய்முறை:
தேங்காய் எண்ணெயில் எலுமிச்சை பழத்தின் தோலை போட்டு 9 நாட்கள் ஊற வைத்து பிறகு எடுத்து அந்த எண்ணெயை தலைக்கு தேய்த்து வந்தால் பொடுகு குறையும்.
தேவையான பொருள்கள்:
- ஆலிவ் எண்ணெய்.
- சீரகம்.
ஆலிவ் எண்ணெயில் 1 தேக்கரண்டி சீரகத்தை இடித்து போட்டு நன்றாக கலந்து தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊற வைத்து பிறகு குளித்து வந்தால் முடி உதிர்வது குறையும்.
தேவையான பொருள்கள்:
செய்முறை:
முசுமுசுக்கை இலைகளை எடுத்து அரைத்து சாறு பிழிந்து அந்த சாற்றை நல்லெண்ணெயில் கலந்து நன்றாக காய்ச்சி பத்திரப்படுத்தி சிறிதளவு எடுத்து தலைக்கு தேய்த்து சிறிது நேரம் ஊற வைத்து குளித்து வந்தால் இளநரை வராமல் தடுக்கலாம். முடி கருமையாகும்.
No comments:
Post a Comment