Friday, December 27, 2013

மஞ்சள்



மங்களகரமானது மட்டுமில்ல... சிறப்பான மருந்து, கிருமிநாசினி என பல பெருமைகளைக் கொண்டது.

பெண்கள் முகத்துல மஞ்சள் பூசினா... வீடே மங்களகரமா இருக்கறது மட்டுமில்ல, அவங்களோட உடல்நிலையும் நல்லா இருக்கும்.

பொதுவாவே, மஞ்சளை நெருப்புல சுட்டோ... இல்ல, நல்லெண்ணெயில முக்கி நெருப்புல சுட்டோ... புகையை சுவாசிச்சா... மூக்கடைப்பு தொடங்கி, தலைவலி, ஜலதோஷம், தும்மல் எல்லாம் சட்டுனு நின்னுரும்.
ஐம்பது மில்லி பால்ல அதே அளவு தண்ணியை சேர்த்து, உறிச்ச வெள்ளைப்பூண்டு 10 பல் போட்டு, நல்லா வேக வைக்கணும். பூண்டு வெந்து, பால் பாதியா வத்தினதும்... மஞ்சள்தூள், மிளகுத்தூள், பனங்கல்கண்டு சேர்த்து அடுப்பில இருந்து இறக்கணும். சூடு ஆறினதும் பருப்பு கடையுற மத்தால கடைஞ்சி குடிச்சா... நெஞ்சுச்சளி, மூக்குல தண்ணி கொட்டுறதுனு சளித்தொல்லை எல்லாம் சரியாகும்.

சிலருக்கு வயித்துப்போக்கு வந்து பாடாபடுத்தும். இப்போ நான் சொல்லப் போற வைத்தியத்தை அந்த மாதிரி நேரங்கள்ல பயன்படுத்தினா, சட்டுனு குணம் கிடைக்கும். அங்குல அளவுக்கு மஞ்சளை எடுத்து, சின்னச் சின்ன துண்டா நறுக்கி, பாத்திரத்துல போட்டு, மஞ்சள்ல தீப்பொறி பறக்கற அளவுக்கு வறுக்கணும். அதுல ஒரு ஸ்பூன் ஓமத்தைப் போட்டு, அது வெடிக்கற நேரத்துல மூணு வெத்தலையை பிய்ச்சுப் போடணும். பிறகு, ஒரு டம்ளர் தண்ணிய ஊத்தி கொதிக்க வைக்கணும். வடிகட்டின அந்த நீரை குழந்தைகளுக்கு ஒரு பாலாடையும், பெரியவங்களுக்கு கால் டம்ளரும் கொடுத்தா... வயித்துப்போக்கு சரியாகும்.
புண் வந்தா மஞ்சள்பொடியை அதுமேல தூவி, அப்பப்போ சுத்தம் பண்ணிட்டு வந்தா... புண் சரியாகிரும்.
மஞ்சளையும், சந்தனத்தையும் சம அளவு எடுத்து இழைச்சு, உடம்புல பூசிட்டு வந்தா வேர்க்குரு, உடம்புல வர்ற எரிச்சல் எல்லாம் சரியாயிரும். சிலருக்கு பொன்னுக்கு வீங்கினு ஒரு வகை அம்மைநோய் வரும். இதை புட்டாளம்மைனும் சொல்வாங்க. இது பொதுவா சின்னப் பசங்களுக்கு வரக்கூடிய ஒரு நோய். கழுத்து, கன்னம், காதை ஒட்டின இடத்துல வரும். இந்த மாதிரி பிரச்னைகளுக்கு மஞ்சளையும், வேப்பிலையையும் அரைச்சி, தினமும் ஒருவேளைனு மூணு நாளைக்கு பூசிட்டு வந்தா... பொன்னுக்கு வீங்கி சரியாயிரும்.

No comments:

Post a Comment

முத்துசாமி தீட்சிதர்

மிகபெரும் பக்திமான்களை, நாயன்மார் ஆழ்வார் வழிவந்த அதிதீவிர பக்தர்களை ஒருவலையில் ஞான சித்தர்களை வெறும் சங்கீத மும்மூர்த்திகள் என அடக்கிவிட்ட ...