Friday, September 7, 2012

சித்தர்களின் விண்வெளிப் பயணம்..!




போகர் அடிக்கடி சீன தேசம் சென்றுவந்தார் என்றும், அவரோடு புலிப்பாணி, கோரக்கர் போன்றோரும் சென்று அங்கு தங்கியிருந்து பின்னர் சதுரகிரி வந்ததாக சொல்லப்படுகிறது. இவ்வாறு பல சித்தர்கள் பல இடங்களுக்கு சென்று வந்தார்கள்.

நவீன வசதிகள் ஏதும் அற்ற காலத்தில் நாட்டுக்கு நாடு எவ்வாறு பயணம் செய்ய முடிந்தது? இந்த வினாவிற்கு போகர் சொல்லும் விளக்கம்.

பதியான தீவு தீவாந் திரங்கள்
. . . . பறக்கவே குளிகையொன்று செய்துகொண்டேன்
நதியான சத்த சாகரமும் கண்டேன்
. . . . நாதாக்கள் இருப்பிடமும் துறையும் கண்டேன்
விதியான சாஸ்திங்கள் மலைபோல் தங்கம்
. . . . விஸ்தாரமாய் இருக்குங் குகையுங் கண்டேன்
மதியன வெள்ளியென்ற காணம் கண்டேன்
. . . . மகத்தான சுரங்கம் முதல் யான் கண்டேன்.

- போகர்.

மலைகள், தீவு, தீவாந்தங்கள் மேல் பறப்பதற்க்கு ஒரு குளிகை செய்து கொண்டேன், அதை வாயில் அடக்கிக் கொண்டு விண்ணில் பறந்தேன் நான் பறக்கும் போது பல நதிகளைக் கடந்தேன், பல ரிஷிகளும், முனிவர்களும் தங்கியுள்ள இடங்களைக் கண்டேன், அவர்கள் வைத்திருந்த நூல்களைக் கண்டேன் குகைகளுக்குள் மலைபோல் தங்கம் இருப்பதைக் கண்டேன், வெள்ளி இருப்பதையும் கண்டேன் பல சுரங்கங்களையும் கண்டேன்.

போகரின் இந்தக் கூற்றிலிருந்து அவர் ஒரு குளிகை செய்து கொண்டு அதன் மூலமாக விண்வெளிப் பயணம் செய்தார் என்பது உறுதியாகிறது.

No comments:

Post a Comment

முத்துசாமி தீட்சிதர்

மிகபெரும் பக்திமான்களை, நாயன்மார் ஆழ்வார் வழிவந்த அதிதீவிர பக்தர்களை ஒருவலையில் ஞான சித்தர்களை வெறும் சங்கீத மும்மூர்த்திகள் என அடக்கிவிட்ட ...