சிறுதவளை தான்கலக்கிற் சித்திரத்தி னிழன்மறையும்
மறுவாயைத் தான்கலக்கின் மதிமயங்கு மடவனமே.
காற்றின் மரமுறியுங் காட்சியைப்போல் நல்லறிவு
தூற்றிவிடி லஞ்ஞானந் தூரப்போம் மடவனமே.
அக்கினியால் பஞ்சுபொதி அழிந்திட்ட வாறேபோல்
பக்குநல் லறிவாலே பாவம் போம் மடவனமே.
- இடைக்காட்டுச் சித்தர்.
ஓவியத்தின் நிழல் நீரில் தெரியும் போது ஒரு சிறு தவளை கலக்கினாலும் அது மறையும். வானத்தில் மேகம் மூடினால் நிலவு மறையும். காற்றினால் மரங்கள் முறிவதைப் போல் நல்லறிவால் அஞ்ஞானம் மறையும்.
தீப்பொறி பட்டு பஞ்சு மூட்டை அழிவது போல் எதையும் சரியாக பகுப்பாய்வு செய்யும் நல்லறிவால் பாவங்கள் மறையும். ஆகவே பகுத்தறிவு.. பகுத்தறிவு.. என்று பேசிக் காலம் கடத்துவது பகுத்தறிவல்ல. நமக்கு எது தீயது என்பதை சரியாக பகுத்தறிந்து அதை நீக்கும் அறிவே நல்லறிவு

No comments:
Post a Comment