இங்கிலாந்தில் உள்ள கிராமத்து பண்ணை ஒன்றில் வளர்ந்து வருகிறது, இந்த தலை திரும்பிய ஆடு. வழக்கமான ஆடுகள் மாதிரி இல்லாமல் தலை 150 டிகிரி தள்ளி அதாவது தன்னையே தான் பார்த்தது மாதிரி அமைந்து, மற்ற ஆடுகளிடம் இருந்து இதை வித்தியாசப்படுத்துகிறது.
இது குட்டியாக பிறந்திருந்தபோது இதை எப்படி வளர்ப்பது, இதனால் சரிவர இரையை எடுத்துக் கொள்ள முடியுமா என்று பண்ணையில் உள்ளவர்கள் கவலைப்பட்டார்கள். ஆனால் தன் பிறவி ஊனத்தை இந்த ஆடு சுலபத்தில் வென்று மற்ற ஆடுகள் மாதிரி இயல்பான வாழ்க்கைக்குத் தயாராகி விட்டது. மற்ற ஆடுகள் புல் மேய்வதுபோல் இதனால் மேய முடியாது. இதன் தலை வித்தியாசமாய் ரிவர்சில் வளைந்து இருப்பதால் அந்த கோணத்தில் இருந்தபடியே புல் மேய்கிறது.
இதை பரிசோதித்த கால்நடை டாக்டர்கள் இதன் முதுகுத்தண்டு வளைந்து இருப்பது தான் இப்படி தலையை திருப்பிப் போட்டு இருக்கிறது. ஆனாலும் இயல்பு வாழ்க்கைக்கு அது பழகி விட்டது தான் இதில் மகிழ்ச்சிக்குரியது என்கிறார்கள்.
No comments:
Post a Comment