Saturday, October 20, 2012

தோஷம் நீக்கும் ஆண்டாள் திருமுக்குளம்




ANME05
ஸ்ரீவில்லிபுத்தூரில் புகழ்பெற்ற வைணவ கோவிலாக ஆண்டாள் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமாக திருமுக்குளம் உள்ளது. இந்த குளம் பிரமீடை கவிழ்த்து வைக்கப்பட்டதுபோல் படித்துறைகளும், நடுவில் மண்டபத்துடன் கம்பீரமாக காட்சி அளிக்கிறது. இந்த குளத்தின் உள்ளே இரு சிறு குளங்களும் உள்ளது. இதில் ஒரு குளம் மண் மேவி சரியாக தெரியவில்லை.
இந்த திருமுக்குளம் ஆண்டாள் நீராடுவதற்காக கங்கை, யமுனை, சரஸ்வதி போன்று புண்ணிய தீர்த்தமாக உருவாக்கப்பட்டது. இந்த குளத்தின் அடிபாகத்தில் சுதர்சன ஆழ்வார் உருவம் செதுக்கப்பட்டுள்ள சிலை உள்ளது.
இந்த சிலை தண்ணீரில் இருப்பதால் சுதர்சன ஆழ்வார் திருமஞ்சனம் செய்த நீருக்கான பெருமை அந்த குளத்து தண்ணீருக்கு கிடைக்கிறது. எனவே பாவம் நீக்கும் தீர்த்தமாகவும் விளங்குகிறது.
மேலும் இந்த குளத்தில் இருந்து தான் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ஆண்டாளுக்கு தினமும் திருமஞ்சனத்திற்கு தண்ணீர் எடுத்து செல்லப்பட்டது. இந்த குளத்தின் அருகே நீராட்ட மண்டபத்தில் மார்கழி மாதம் ஆண்டாளுக்கு நீராட்ட உற்சவம் 10 நாட்கள் நடக்கிறது.
மாசி மாதத்தில் தெப்ப உற்சவம் நடக்கிறது. புனித குளமாக கருதப்படும் இந்த குளத்திற்கு செண்பகதோப்பு பேயனாற்றில் இருந்தும், மொட்டப்பத்தான் கண்மாயில் இருந்தும் தண்ணீர் வருகிறது.

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...