Tuesday, October 9, 2012

குட்டிக்கதை:




ஊருக்கு வெளியே வனப்புறத்தில் இடத்தை தேர்ந்து எடுத்து கெளசிகர் கடும் தவம் புரிந்துவந்தார்..


இவர் தியானத்தில் இருக்கும்போது மேலே பறந்த பறவை எச்சமிட்டது இவர் மேல் விழுந்துவிடுகிறது..


கோபத்துடன் பறவையை அண்ணாந்து பார்க்கிறார்...

இவர் பார்வை பட்டவுடன் எரிந்து கீழே விழுந்துவிடுகிறது...


இவருடைய தவ வலிமை இவருக்கே பெருமைகொள்ளவைக்கிறது...


மதிய உணவுக்காக ஊருக்குள் வருகிறார்...

முனிவர்கள் உணவை பிச்சை கேட்டு உண்பதுதான் அந்த காலத்தில் மரபாக இருந்தது.

கெளசிகர் ஒருவீட்டீன் முன் பிச்சை இடுமாறு குரல்

கொடுக்கிறார்..

''கணவனுக்கு உணவு பரிமாரிக்கொண்டிருக்கிறேன்..காத
்திருங்கள்.''.எனவீட்டின் உள்ளே இருந்து பதில் அளிக்கிறார் வீட்டில் இருந்த பெணமணி..

கெளசிகருக்கு என்னை காத்திருக்க சொல்கிறாயா...கோபம் வருகிறது..


மறுபடியும் குரல் கொடுக்கிறார் முனிவர்..

பெணமணியோ எதற்கும் அசை
யவில்லை..தனது வேலையை முடித்துவிட்டு உணவுடன் வருகிறார்
..
கெளசிகர்'' பெண்ணே..நான் யார் என்று தெரியுமா என்னையே காக்க வைக்கிறாயா..? '' எனகிறார்..

''நீங்கள கெளசிகர் என்று தெரியும்..ஆனால் நான் பறவை அல்ல உங்கள் பார்வை பட்டதும் எரிந்து போவதற்கு.''.எனகிறார் பெண்மணி..


முனிவர் அதிர்ந்துபோகிறார்..வீட்டில் உள்ிள பெணமணீக்கு இவவளவு சக்தியா...?


'' நான் இல்லறத்தில் முழுமையாக இருக்கிறேன்..நீங்கள் தவத்தில் முழுமையே நோக்கி உள்ளீர்கள்..அவ்வுளவுத்தான்..கண
வனுக்கு நான் முக்கியத்துவம் அளிக்கிறேன் ..அதில் முழுமையாக உள்ளேன்..அதன் பலம்தான இந்த ஞானம்''..எனகிறார்..
வியந்து போய் நீதான் எனகுரு என விழுகிறார்...
..............................
..................................................................

புரணக்கதை தான ..ஆனாலும் ஒரு செயலில் முழுமையாக ஈடுபடவேண்டும் எனபதை மட்டும் சொலகிறது..


கணவனாயிருந்தாலும் சரி..

மனைவியாய் இருந்தாலும் சரி.
இந்த உறவில் அர்பணிப்பாக இருங்கள்.
வெளியே நடப்பதை பற்றி கவலை இல்லை..
மழையே பெய் என்றால் கூட பெய்யும்..



No comments:

Post a Comment

முத்துசாமி தீட்சிதர்

மிகபெரும் பக்திமான்களை, நாயன்மார் ஆழ்வார் வழிவந்த அதிதீவிர பக்தர்களை ஒருவலையில் ஞான சித்தர்களை வெறும் சங்கீத மும்மூர்த்திகள் என அடக்கிவிட்ட ...