Tuesday, October 9, 2012

நரை (வெள்ளை) முடி வருவதற்கான காரணங்கள் :



வெள்ளை முடி வந்துவிட்டால் உடனே வயதாகி விட்ட தென்ற எண்ணம் அனைவரது மனதிலும் இருக்கிறது. ஆனால் உண்மையில் முடியின் வேர் பகுதியில் உள்ள மெலனின் என்னும் நிறமிப்பொருள், முடியின் நீளத்திற்கு உற்பத்தி செய்ய முடியாததால், முடியின் நிறம் மாறுபடுகிறது. மேலும் கூந்தல் வெள்ளையா வதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.

இத்தகைய காரணங்கள் தெரியாததால், இளமை யிலேயே வெள்ளை முடியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. ஆகவே அத்தகைய காரணங்கள் என்னவென்று சற்று படித்து தெரிந்து கொண்டு, வெள்ளை முடியை தடுக்கலாம்.


மரபணு பண்புகள் :

பெற்றோரின் மரபணுக்கள் மூலமாகவும் வெள்ளை முடிகள் வருகின்றன. அதாவது பெற்றோருக்கு
வெள்ளை முடிசிறுவயதிலேயே வந்தால், அவர்களது குழந்தைகளுக்கும் சிறு வயதிலேயே வெள்ளை முடிகள் வந்துவிடுகின்றன. அவ்வாறு வந்தால், அந்த வெள்ளை முடியை தடுக்க முடியாது.

வைட்டமின்கள் குறைபாடு :

உடலில் வைட்டமின்கள் குறைவாக இருந்தாலும், முக்கியமாக வைட்டமின் பி12 குறைவாக இருந்தால், வெள்ளை முடிகள் வரும். அதற்காகத் தான் வைட்டமின் அதிகம் நிறைந்திருக்கும் உணவுகளை அதிகம் உண்ணச் சொல்கின்றனர். வைட்டமின் குறை பாட்டினால், உடலில் நோய்கள் மட்டும் வருவதில்லை. அதனால் அழகும் தான் கெடும்.

தைராய்டு :

வெள்ளை முடிகள் வருவதற்கு மற்றொரு காரணம், தைராய்டு சுரப்பிகள் சரியாக இயங்காமல், அதாவது அளவுக்கு அதிகமாக அல்லது குறைவாக சுரந்தாலும், வெள்ளை முடி வந்துவிடும்.

மன அழுத்தம் :

பெரும்பாலோனோருக்கு வெள்ளை மற்றும் கிரே கலர் முடிகள், அதிக மன அழுத்தம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை அல்லது பரபரப்பான வாழ்க்கை முறையின் காரணத்தினாலும், வெள்ளை முடிகள் வருகி ன்றன. இதனை அனைத்து அழகியல் நிபுணர் களும் ஒப்புக்கொள்கின்றனர். ஆகவே இவை அனைத்தையும் விட்டு, ஆரோக்கியமான, மன அழுத்த மில்லாத வாழ்க்கை முறையில் வாழ்ந்து வந்தால், வெள்ளை முடி வருவதைத் தடுக்கலாம்.

புகை பிடித்தல் :

வெள்ளை முடிகள் வருதற்கான காரணத்தை கண்டறிய சிகரெட் பிடிப்பவர்களின்மீது மேற் கொண்ட ஆய்வில், புகைப்பிடிப்பவர்களுக்கு வரும் வெள்ளை முடிகள், சாதாரணமாக இருப்பவர்களுக்கு வரும் வெள்ளை முடியைவிட நான்கு மடங்கு அதிகமாக வரும் என்று கண்டறியப்பட்டுள்ளது. ஆகவே சிகரெட் பிடிக்காமல் இருந்தால், வெள்ளை முடிகள் வராமல் தள்ளிப் போடலாம் என் றும் கூறுகின்றனர்

No comments:

Post a Comment

கடவுளைக் கண்ட ஹரி சிங்

ஜெய்ப்பூரில், சுவாமி (சுவாமி விவேகானந்தர்) அரசின் தலைமைத் தளபதியான சர்தார் ஹரி சிங்குடன் மிகவும் நெருக்கமாகப் பழகினார். அவர் ஹரி சிங்கின் இல...